(Reading time: 40 - 80 minutes)

ட மௌன சாமியார்களா யாராவது வாய திறங்களேன்....நீங்கல்லாம் சீக்கிரம் தோத்தா தானே நான் வாய திறக்க முடியும்....எங்கடாப்பா கடத்திட்டு போறீங்கன்னு கேட்டுக்க முடியும்...

இவளைத் தவிர யாரும் கார் செல்லும் பாதையை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

இதுக்கு மேலயும் வேடிக்கை பார்த்தேன்னா முதல்ல பேசின முத்தழகி நானா தன் இருப்பேன்...விடு ஜூட்.... நோ சைட்...ஐஸ் க்ளோஸ்...

கண்களை மூடிக் கொண்டாள். எப்படி எம் எம்...இந்த நேரத்துல கூட உனக்கு கவிதை வருது..? விடு ஜூட்.. நோ சைட்...ஐஸ் க்ளோஸ்... எங்கேயோ போய்ட்ட நீ

கார் நிற்பதை உணர்ந்து கண் திறந்து பார்த்தால் ஏர்போர்ட். நிஜமாவே கடத்துறீங்களா மௌ.சா க்களா...? என்னது மௌ.சா புரியலையா....மௌன சாமியாரின் ஷார்ட் ஃபாம்.... எப்டீங்க உங்களுக்கெல்லாம் இவ்ளவு நேரம் பேசாம இருக்க முடியுது...?

வியன் இவள் கையை பிடித்துக் கொண்டு உள்ளே நுழைய, மிஹிர் பின் தொடர, அவன் ட்ராலியில் டிக்கியிலிருந்து எடுக்கபட்ட இவளது சூட்கேஸும்....

மாண்புமிகு கிட்னாப்பர்ஸ்....எப்பப்பா சுட்டீங்க....?

 “பை கைஸ்...சி யூ சூன்...நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வா மிர்..பை “ இவளைப் பார்த்து கண்ணடித்து விடை பெற்றாள் ஒஃபிலியா.

ஹே...ஒருத்தங்க அவ்ட்...இன்னும் ரெண்டு பேர்தான்... ஆனாலும் அதுக்குள்ள கண்டம் விட்டு கண்டம் கடத்திடுவீங்க போலயே...

வந்திருப்பது இன்டெர்நேஷனல் ஏர்போர்ட் ஆயிற்றே...

வீட்டிலிருந்து கிளம்பி இப்பொழுதுதான் கால் மணி நேரமாகிறது. இன்னும் ஃபா.............ர்ட்டி ஃபை....................வ் மிமினிட்ஸ்...........

இவள் எல்லாவற்றையும் இழுத்து சொல்லிப் பார்த்து ஏக்க பெருமூச்சு விடும் போதே செக் இன் கவுண்டரில் மிஹிர் போர்டிங் பாஸ் வாங்கினான் மூவருக்கும்...

நம்பி கொடுத்திருந்த பாஸ்போர்ட்டை வச்சு நாகரீகமா கடத்துறீங்களே...ப்ளான் பண்ணி ப்ளாட் பண்ணி மௌத் வாய்க்கு லாக் பூட்டு வேற...நல்லா வருவீங்க நல்லவங்களே....

புலம்பி முடிக்கும்போது தான் உரைத்தது மிஹிர் கவுண்டரிலிருந்தவரிடம் பேசியிருந்தது..

ஹே...ரெண்டாவது ரெங்குடுவும் rally ல காலி...இனி

நீயும் நானுமா...பி கே நீயும் நானுமா...? 

காலம் போயினும்... கடுப்பாய் இருப்பினும்...

திருவாய் திறப்பியா.....?  நீ திருவாய் திறப்பியா?  .....நெவர்...

சும்மாவே நீ மெகா மௌன சாமியார்...தேவைக்கு மேல மில்லி மீட்டர் கூட பேச மாட்ட...அதோட

பொதுவாக என் மனசு தங்கம்....

ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்னு....

ஒரு ஈகோ வேற....நீ எப்ப பேசி....நான் எப்ப ஜெயிக்க.....?            இவ வாய்விட்டு பாடுனா பதில் பாட்டு ப்ளானட் எர்த்ட்ட இருந்து எக்கு தப்பா எகிறி வருமே...அதோட .இப்போ?  போட்டி வேற ஊத்திகிடாதோ...????? சோ ஒன்லி மனசுக்குள் சிங்கிங்...

எல்லா ப்ரொசிசரும் முடிந்து போர்டிங் காக காத்திருக்க தொடங்கினார்கள்.

“நான் துபைல இறங்கிருவேன்....உனக்கு துபைல இருந்து எதுவும் வேணுமா..மிர்.?...”

மிஹிர் இவளை பேச வைக்க முயன்றான்.  சீண்டினான்.

“மாப்ஸ்......நாம மட்டும்தானா....என்ன செய்ய போறோம்...?” சண்டைய சரி பண்றேன்னு சொல்லி...எங்க மம்ஸ்ட கூட்டி போய் விட்டுடாத....உங்க ஊர் பஞ்சாயத்து எதோ பிழச்சு போன்னு விட்டுடாங்க....மாலினி பஞ்சாயத்து மாப்பு இல்லா பஞ்சாயத்து...உன்னை மாப்ள ஆக்காம விடாது...உன்னவிட வசதியா யாராவது ....சே நினைக்கவே பிடிக்கல...”

தவிப்போடு வியன் கண்களைப் பார்த்தாள்.

“உங்க அம்மாட்ட போகலை போதுமா....” அவன் கண்விழியின் மொழி புரிந்தது.

அவன் பதில் தேவைக்கும் அதிகமாய் போதுமானதாக இருந்தது.

சிறிது நேரம் சென்றது. தாங்க முடியவில்லை மிர்னாவிற்கு. ஆனாலும் தோற்பதாவது...தன் வாட்சை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

 “ரொம்ப போரடிக்குதோ மிர்னு?.....” வியன் தான் கேட்டான். பாவம் பேசாமல் இருக்க அவள் படும் பாடு தாங்க முடியாமல் பேசிவிட்டான் வியன்.

“ஹே......நான் தான் ஜெயிச்சேன்....நான் தான் ஜெயிச்சேன்......” வாய் ஆரவரித்தாலும் மனம் சாக்லேட் பையா....விட்டு கொடுத்து ஜெயிக்க வச்சு தோக்கடிச்சியே.......ஐ லவ் யூடா...என்று அவனை கொஞ்சியது.

“எங்கே போறோம்னு சொன்னாதான் வருவியா மிர்னு...?” கனிந்திருந்தது அவன் முகம்.

இது ஒன்னு....நான் ஆயிரம் வார்த்தை பேசி பண்ற டேமஜை....இவன் ஒரு வார்த்தையில பண்ணிடுவான்....மனசுக்கு பண்ற டேமேஜை தான் சொல்றேன்...முழிக்கிறதெல்லாம் பி.கே முழி...ஆனால் செய்றதெல்லாம் ஆர்.ஆர் வேலை...ஆர்.ஆர்ன்னா என்னவா?.....அது....சொல்ல வெட்கமா வருதுல்ல.....ரொமான்ஸ் ராஜா....தான் ஆர்.ஆர்....

“இதே கேள்விய உங்க சிஸ்ட்டர் ஆர் டாட்டர்ட்ட யாராவது கேட்டா என்ன பதில் சொல்லனும்னு நீங்க எதிர்பார்ப்பீங்க...?”

திகைப்பு அவன் முகத்தில்.

எப்பவும் நான் சின்ன பாப்புன்னு நினச்சுகிட்டே பேச கூடாதுல்ல....நானும் வளர்கிறேனே மம்மி....ஆங்....மம்மி இல்ல பி.கே....நானும் வளர்கிறேனே பி..கே

“ஆனால் எனக்காக நீங்க உங்களோட எல்லாத்தையும் விட்டு கொடுத்துருக்கீங்க..... யு ஆர் மை கார்டியன்....இன்னைக்கு வரைக்கும் என்ட்ட மட்டுமல்ல எந்த பொண்ணுட்டயும் நீங்க பேசுறதுல கூட கண்ணியம் தாண்டுனது கிடையாது...எந்த வகையிலும் எந்த லாவையும் நீங்க ப்ரேக் பண்ணதும் கிடையாது....மாடல் சிட்டிசன்....அதனால ஐ ட்ரஸ்ட் யூ அஸ் ஆல்வேஸ்...”

இப்பவே இதெல்லாம் சொல்லி வச்சுடுறேன்....பின்னால இதுக்குல்லாம் நேரம் இருக்குமோ என்னமோ.....

மென் புன்னகையுடன் மிருதுவாயிருந்தது அவன் முகம்.

“திருநெல்வேலி போறோம்...” வியன் சொல்ல மிர்னாவுக்குள் மகிழ்ச்சி வெள்ளம்.

முன்னமே சொல்லி இருக்கலாமில்லையா... வேரிக்கு Rauchkase  சீஸ் பிடிக்கும்...இப்ப வாங்கி கொண்டு போக முடியாதுதான?

“2கேஜி வாங்கி வச்சிருக்கேன்...போதுமா?”

விழி விரிய பார்த்தாள்....”முன்னால கவின்ட்ட பேசுறப்ப அவன் சொன்னான்....நாம ஜெர்மன்ல இருக்கோம்னதும் ஒரு தடவை இதை சொல்லிட்டு இருந்தான்..”

மிர்னாவுக்கு மனதிற்குள் நிறைவு. கவினிற்கும் வேரிக்கும் இடையில் இடைவெளிகள் இல்லை இப்பொழுது என்று தோன்றியது அவளுக்கு.

வின் வேரியின் வீட்டிற்கு வெளியே சற்று தொலைவில் டாக்ஸியை நிறுத்தி இறங்கிவிட்டனர் வியனும் மிர்னாவும்.

கேட்டில் செக்யூரிட்டி மேன் வியனை பார்த்ததும் பரபரக்க  அவன் வாயை அடைத்துவிட்டு இவர்கள் வீட்டின் வரவேற்பறைக்குள் நுழைந்த நேரம் வரவேற்பறையை அடுத்திருந்த டைனிங் ரூமிலிருந்த வாஷ் பேசினில் வேரி ஓங்கரித்துக் கொண்டிருக்க, அவளுக்கு பின் நின்று அவள் தலையை இரு கைகளால் பிடித்தபடி அவள் துன்பத்தை குறைக்க உதவிக் கொண்டிருந்தான் கவின்.

சொல்லாமல் கொள்ளாமல் விஷயம் புரிந்துவிட்டது மிர்னாவிற்கு.

பக்கத்திலிருந்த வியனுக்கு ஓங்கி ஒன்று வைத்தாள் அவன் தோளில்....”இத முன்னமே சொல்லி இருக்கலாமே....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.