(Reading time: 4 - 8 minutes)

சந்திப்பு

தித்தித்தை என தித்தித்து அவன் சித்தம்

நுழைந்தான் முதலிரவில் பெண் அறையில்

தித்தோம் உனை வெறுத்தோம் என செப்பிற்றது மங்கை சீற்றம்

அவள் கையில் குறுவாள்

தை தை என {tooltip}பொருதும்{end-link}போர் செய்யும்{end-tooltip} போர் பல கண்டவன் கோமான்

திகைத்தான் அதிர்ந்தான் அசைய மறந்தான்

ரர ர என அறுக்கும் வாளது அவள் கழுத்தில்

அழுத்தினள் சொன்னனள் மாது

தொட்டால் உன் கைபட்டால் சங்காரம்

நிஜம் அறிவாய் நீ சூது (10)

 

எண்ணி வந்த காட்சி என்ன?

எதிர்பதமாய் ஏந்திழை நிற்பதென்ன? (11)

 

மணந்தவன் சொன்னான்

நிலவே நீ மயங்காதே

நிம்மதி கொள்வாய் கலங்காதே

மாலை தந்தவன் மறக்காதே

மருண்டு நீயும் திகையாதே

காதலன் நான் உன் முன்

கயவன் என காணாதே! (12)

 

மாலையிடப்பட்டவள் சொன்னாள்

மாலையிட்டது நானில்லை நீ

மணமானது எனக்கில்லை உனக்கு (13)

 

பெண் என்பதை மறந்தாய்

பெயருற்ற பதுமை என நினைத்தாய்

உன் சித்தம்

உன் சட்டம்

உன் ஆவல்

உன் காதல்

உன் செயல் (14)

 

இதில் எங்குளேன் யான்?

என் சித்தம்

என் சட்டம்

என் காதல்

என் செயல்

அறிந்தாயா? அறிய முனைந்தாயா? (15)

 

ஷெஷாங்கன் நிலை

பட்டத்து இளவரசன் என்பது பிறப்பு

{tooltip}வைரியின்{end-link} எதிரியின்{end-tooltip} வாள் தவிர எழுந்ததில்லை எதிர்ப்பு

கொடுத்துப் பழக்கமுண்டு மன்னிப்பு

யாசிக்கும் நிலை இன்று இவனுக்கு. (16)

 

மணந்தவன் பதில்

மன்னிப்பாய் மாவிழியே!

முனைந்தேன் நான்

மூடி திரையிட்டாய் நீ

போகட்டும். (17)

 

இன்றும்

என்றும்

என் ஆயுள்

ஒன்றும்

உன்னோடு

இப்பெண்ணோடு  (18)

 

உன்

உள்ளம்

உள்பொருள்

உவகை

உட்கிடக்கை

சொல்வாய்

இப்பொழுது (19)

 

அதன்

பின்னம்

இவ்வன்னம்

மனம்

சீதளம்

செய்வேன்

தப்பாது. (20)

 

நறுமீன் விரக்தி

அக்கினிக்குள்

இழந்ததும்

நான் ஆவல்பட்டதும்

திருப்ப முடியாதது

செங்கோல் நீளத்தால். (21)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.