(Reading time: 4 - 8 minutes)

ஷெஷாங்கன் சினம்

ஷெஷாங்கனைப் பேச

சிறியவளுக்கு உண்டு அதிகாரம்

செங்கோலைப் பேச

தெய்வத்திற்கே உரிமை ஏகபோகம். (22)

 

பதி தாரம்

என்றாலும்

கோல் அதிகாரம்

சொல்லாமல்

அவை முன்

அணங்கு நீ

அரசன்

இவன் முன்

வர

முறை சட்டம்

தடை செய்யும்

தெரிவாய் நீ (23)

 

காதலில்

ஊடல்

சால சுகம்

கணவன் மனைவி

பிணக்கு

பிழையில்லை

என்றாகும்

இணையும்

தருணம் (24)

 

அரசன்

அரசி

உரசல்

இதில்

இல்லை

மீளல்

செங்கோல் செய்யும் ஜெயம்

செத்தொழியும் மணம்

{tooltip}பேதை{end-link}1 முதல் 8 வயது{end-tooltip}  குணம்

மறைந்து

{tooltip}அரிவையாய்{end-link} 19 முதல் 24 வயது{end-tooltip}

அரியணைக்கு இல்லை மனம்

என புரிந்து

வந்தால் வாழ்வோம்

இணைந்து (25)

 

சென்றேவிட்டான்

ஷெஷாங்கன். (26)

 

23ன் விளக்கம்: ஷெஷாங்கன் காலத்தில், மன்னன் அழைக்காமல் அவனிடம் செல்ல மகராணி உட்பட யாருக்கும் சட்ட அனுமதி கிடையாது. பாதுகாப்பு காரணமாய் இருக்கலாம். அப்படி யாராவது சென்றால், சென்ற நபரைப் பார்த்து ஷெஷாங்கன் செங்கோல் நீட்டினால் சென்ற நபர் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டார் என்று பொருள். மன்னன் செங்கோலை நீட்டவில்லை எனில் சென்ற நபருக்கு உடனடியாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும்.

தொடரும்

நறுமீன் காதல் - 05

நறுமீன் காதல் - 07

{kunena_discuss:789}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.