(Reading time: 24 - 47 minutes)

ல்லை ராம்.. என்கிட்ட கொடு நான் கொடுத்தடுறேன். வந்தது வீணா போச்சு. ஆனா இன்னைக்கு எப்படியும் மீட் செய்வேன்.

ஏதும் பிரச்சனையாக போது பிரபு?

இதுக்கேல்லாம் பயந்தா..வாழ்க்கை முழுவதுக்கும் சமாளிக்கனும் ராம். இன்னைக்கு பத்திரிக்கை எழுதிடுவோம். எப்படியும் சமாளிக்கனும்? பார்க்கலாம்! அவ கேட்டா என்கிட்ட இருக்குனு சொல்லு! என்னை கூப்பிட சொல்லு!

சரி பை! என்று புறப்பட்டான் ராம்.

இப்போதும் சண்டைதான் போடப்போறியா மச்சி??' என்றான் வாசு. சிரித்துக்கொண்டே 'ஆமாம் டா.. வாழ்க்கை முழுவதுக்கும்...ஏனோ உன் தங்கையோடு சண்டை போட மட்டும் ரொம்ப ஆர்வமாயிருக்கு? எனக்கு ஈடுக்கொடுத்து பேசறதினாலேயா? தெரியலை! ஆனா அவளை வம்பிழுக்கிறது ரொம்ப சுவாரஸ்யமாயிருக்கு!'

ஆர் யூ இன் லவ் வித் ஹர்?

இல்லை! ஃபார் ஷுயர் ஐ ம் நாட் இன் லவ் வித் ஹர்!

காதல் இல்லாம..? இந்த திருமணத்திற்கு குழல் எப்படி...? சான்ஸே இல்லை!

சான்ஸ் இருக்கு! பார்க்க தானே போற!' என்றான் பிரபு.

அதற்கடுத்த மூன்று மணி நேரம் எப்படி சென்றது என்பதை உணரும் முன்னமே மணி ஐந்தாகியிருந்தது! அப்பொழுது தான் மொபைலை தேடினாள் குழலீ. ராமிடம் கேட்கலாம் என்று வந்தவளை எல்லோரும் சூழ்ந்துக்கொண்டு வாழ்த்து மழை பொழிந்தனர். மேனேஜர் சாந்தியும் வாழ்த்துக்களை தெரிவித்தார். உபயம் ராம்! பர்மிஷன் எடுத்துக்கொண்டு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு புறப்பட்டாள் அமைதியை நாடி! போகும் போது மொபைலை கேட்க, பிரபு கூறியதை சொன்னான் ராம். சரிடா நான் கோவிலுக்கு போறேன் என்றுவிட்டு புறப்பட்டாள் அவளது ஆக்டிவாவில்!

வண்டியை நிறுத்திவிட்டு அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள். கோவிலை சுற்றிவந்து சுவாமியை தரிசித்து கண்மூடி நின்றாள். குருக்கள் வந்து அர்ச்சனைக்கு சங்கல்பம் என்றழைத்த போது தான் சுய நினைவுக்கு வந்தாள். சுவாமி பெயருக்கு என்று இவள் சொல்ல வரும் போதே வெகு அருகில் குரல் கேட்டது.

ஒரு நிமிஷம்..,அர்ச்சனை பூங்குழலீ பிரபு எங்க இருவர் பெயருக்கும் சேர்த்து.

சரி சொல்லுங்கோ!' என்று அவர் கூறிய போது தயக்கமாய் குழலீயை பார்த்தான் பிரபு. என்ன தோன்றியதோ?? சரியென்று அர்ச்சனைக்காக இருவரின் தேவையான தகவல்களை கொடுத்தாள் குழலீ. இருவரும் ஒன்றாக நின்று தரிசனம் முடிந்து கோவிலை சுற்றி வந்து அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்தனர். குழலீயோ கண்களை மூடி அப்படியே தியானத்தில் அமர்ந்துவிட்டாள். பிரபுவும் அவளை பார்த்தவாறு அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அவனிடம் இருந்த குழலீயின் கைபேசி ஒலிக்க அதை எடுத்துக்கொண்டு நகர்ந்து சென்றான். 

டேய் சக்தி! எங்கடா இருக்க?

டிஸ்ப்ளேயரை பார்த்துவிட்டு 'ஹலோ! அத்தை நான் பிரபு பேசறேன். நாங்க கோவிலுக்கு வந்திருக்கோம்.'

ஓ! அப்படியா மாப்பிள்ளை! அவ இல்லையா? 

உள்ளே சன்னதில இருக்காங்க...

சரிங்க மாப்பிள்ளை! உங்க அம்மாவும் அப்பாவும் வரேனு சொன்னாங்க. அதான் அவளை சீக்கிரம் வர சொல்லாம்னு தான் கூப்பிட்டேன்.

சரிங்க அத்தை சீக்கிரம் வந்திடரோம்! அப்புறம்...' என்று தயங்கினான்.

சொல்லுங்க மாப்பிள்ளை!

இல்ல வேற ஏதோ பெயர் சொல்லி...

சக்தி னு வீட்டுல கூப்பிடற பெயர்.. அவ அப்பா கூப்பிடுவார்..

ஓ! அப்படியா!

சரிங்க மாப்பிள்ளை சீக்கிரம் வந்திடுங்க' என்று வைத்தார்.

யோசனையுடன் குழலீயின் முகத்தை வைத்தக்கண் வாங்காமல் பார்த்து அவள் எதிரில் அமர்ந்திருந்தான். ஒருவாறு மனது சமநிலை அடைந்து கண் திறந்தவளுக்கு பிரபுவின் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் மூச்சடைத்தது!

இவன் பார்வைக்கு அப்படி என்ன சக்தி இருக்கிறது? அப்படியே மயங்கிடாதே குழலீ! இந்த பார்வையிலேயே என் மனது அவன் வசம் சென்றுவிடுமோ? பிடிக்குது ஆனா பிடிக்கலை! எப்படி முடிவு எடுப்பது? எப்படியாவது இன்று தெளிவா பேசிடனும்!' என்று மனது இரு வேடமிட்டு அலைக்கழித்தது.

ஒருவாரு சமன்செய்துக்கொண்டு பிரபுவை பார்த்தாள். இவ்வளவு நேரம் அவள் தவிப்பை மனதுடன் நடத்தும் போராட்டத்தை உணர்ந்து அவனும் அமைதியாகவே இருந்தான்.

'நான் கொஞ்சம் பேசனும்' என்று இருவரும் ஒரு வழியாக வாய் திறந்தனர் ஒரே நேரத்தில்!

சொல்லுங்க!' என்று மறுபடியும் மோதல். 

லேடீஸ் ஃபர்ஸ்ட்! நீயே சொல்லு குழலீ' என்றான் பிரபு.

ஆணுக்கு பெண் சலைத்தவள் இல்லை... எப்போதும் லேடீஸ் ஒரு படி மேல தான்! அதனால எங்களுக்கு கீழே இருப்பவர்களுக்கு வழி கொடுக்கிறதுல சந்தோஷம் தான். நீங்களே சொல்லுங்க!

அப்பா! தெரியாம சொல்லிட்டேன் அதற்கு இவ்வளவு பேசுவியா?

என்னை சீண்டாம இருந்தா அமைதியா தான் இருப்பேன்.

அது கஷ்டமாச்சே!

திகைப்புடன் அவனை ஆழ்ந்து நோக்கினாள். பழகிய பத்து நிமிடங்களில் எதிரில் இருப்பவர் மனதை எளிதாக படித்து அவர்களை பற்றி எடைபோட்டு விடுவாள் குழலீ! ஆனால் இன்று வரை இந்த நிமிடம் வரை பிரபுவின் மனதை படிக்கவும் முடியவில்லை.. அவனை பற்றி முடிவுக்கும் வர முடியவில்லை! அவனிடம் மட்டும் எப்போதும் தோல்வியே! இந்த பாழ் மனம் அவனை இன்றுவரை சுற்றிவர இதுதான் காரணமோ? ஆனால் இது காதல் இல்லை! நிச்சயமாய்!' என்று மனதில் பேசிக் கொண்டிருந்தாள்.

ஹலோ மேடம். இப்படியேல்லாம் என் அழகை பார்த்து ரசிக்கறீங்களா?

ஏதோ தேடுவதுபோல் பாவனை செய்தாள்.

என்ன ஆச்சு? - பிரபு

இல்லை யார் அழகையோ பார்த்து ரசிக்கறேனு சொன்னீங்களே? அவங்களை தான் தேடறேன்.

ஆஹா நல்ல ஜோக்! கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

தாங்ஸ்! இப்போவே ஒத்துகிட்டீங்களே!

என்ன ஒத்துகிட்டேன்?

கழுதைனு!

ஹலோ நான் சொன்னது உன்னை!

கழுதைக்கும் மனுஷனுக்குமா கல்யாணம் செய்ய போறாங்க? அவங்க என்ன லூசா? இல்லையே! கழுதைக்கு ஏற்ற இன்னோரு கழுதைய தானே ஜோடியாக்குவாங்க?

ஏய் என்னையா கழுதைனு சொன்ன?

நான் சொல்லலை! நீங்களே தான் சொல்லிகிட்டீங்க! வாட் யூ கிவ் வில் பீ கிவ்ன் பேக் மிஸ்டர் பிரபு! இப்போ விஷயத்துக்கு வரீங்களா? இல்லை நான் கிளம்பவா?

மேடம் நீங்களும் தான் என்கிட்ட சொல்லனும் னு வந்தீங்க! இட்ஸ் ஓகே! நானே விஷயத்துக்கு வரேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.