(Reading time: 24 - 47 minutes)

ங்க பாரு குழலீ.. எனக்கு ப்ரியாவை பத்தி தெரியலை ஆனா நான் ப்ரி மேல வைத்த காதல் உண்மை நேசம் உண்மை! தோ ஷீ டம்ப்ட் மீ...இன்னும் கூட ப்ரி மேல் அன்பு இருக்கு! ப்ரி தான் எனக்கானவ னு ஒரு நினைப்பு இருந்துச்சு! ஆனாலும் ப்ரியாகிட்ட அவமானப்பட நான் தயாராயில்லை! உன்னை யாரு உன் கன்டிஷனுக்கு யாரு திருமணம் செய்துபா னு சொல்லிட்டு போனா! அவங்க முன்னே நான் வாழ்ந்துக்காட்டனும்! என்னோட எந்த கன்டிஷனும் மாறவில்லை! அப்படியே தான் இருக்கு..

நீங்க மேரேஜ் செய்துகிட்டாலும் அது ஒரு அக்ரிமன்ட் தானு யாழ்கிட்ட சொன்னீங்க?

புன்னகையுடன், அது யாழினி கிட்ட! இதுவும் ஒரு வகையான அக்ரிமன்ட் தானே! பட் பொம்மை திருமணமோ...பொய்யானதோ இல்லை! எல்லா விதம்லை யும் உண்மை திருமணம்! இதேல்லாம் உனக்கு புரியும் னு நினைக்கிறேன்... தெரிந்து தானே சம்மதம் சொன்ன?

திரு திருவென முழித்தாள் குழலீ! தான் பேச வந்தது என்ன? 'உங்களை பொறுத்த வரை அக்ரிமன்ட் தான்.. ஆனால் எனக்கு உண்மையான திருமணம் தான்..' என்று ஏதேதோ ! ஆனால் அதே வார்த்தைகள் அவனிடமிருந்து!

அவள் உணர்ச்சி மயமாதலையும் பிறகு அதை வெளிக்காட்டமல் அடக்கி முகத்தை துடைத்தார் போல் வைத்துக்கொள்வதையும் எல்லாவற்றையும் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

பிரபு...நான்...இந்த திருமணத்தை எல்லா முறையிலும் உண்மையா தான் நினைக்கிறேன். ஆனா நீங்க ஒன்னு புரிஞ்சிகனும்.. நான் வேலையை விடாமல் உங்களுக்கு துணையா நீங்க ஜெயிக்கறத்துக்கு உறுதுணையாக இருக்கனும் நினைக்கறீங்க! அதேபோல் எனக்கும் சிலது இருக்குனு தெரிஞ்சிக்கனும்! அப்புறமா உங்களுக்கும் சம்மதமானு சொல்லுங்க... நீங்க வெளியில பார்க்க குழலீக்கும் உண்மையான குழலீக்கும் நிறைய வேறுபாடு இருக்கு! எனக்கு னு சில லட்சியங்கள், சில கொள்கைகள், சில கடமைகள், கனவுகள் எல்லாமேயிருக்கு! இதை நான் யார் தலையிலும் சுமத்த விரும்பலை.. சப்போர்ட்டும் எக்ஸ்பேக்ட் பண்ணலை! பட் நீங்க தெரிஞ்சிக்கனும்...பின்னால் என்கிட்ட எந்த விஷயமும் சொல்லலைனு வரக்கூடாது. இதையேல்லாம் தாண்டி ஓப்பனா பேசறதுக்கு முன்னே... எனக்கு சில கன்டிஷன் இருக்கு! நான் சுத்த சைவம். என்னை அசைவம் சாப்பிட சொல்லி சமைக்க சொல்லி கட்டாயப்படுத்தாத வரை ஓகே தான். ரொம்பவே முக்கியமானது... நம்பிக்கை! மதியம் நீங்க பேசினதை பார்த்தா என் மேல் சுத்தமா நம்பிக்கையில்லனு தெரியுது... மேலும் காதல் இல்லாத திருமணத்தில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை! எனக்கு உங்க மேல் காதல் இல்லை! உங்களுக்கு ப்ரியா மேல் காதல்... அது எப்போதும் மாறப்போறது இல்லை னு தெரியுது.. அதனால...

அதனால...?

ஒரு நல்ல தோழியா இருப்பேன்... பட் மனைவியா... மனைவிக்கான எல்லா உரிமையும் வேணும் னா...

வேணும் னா??

இன்னோருத்தியை மனசுல வைத்துக்கிட்டு என்னை எந்த விதத்திலையும் மனைவியா அணுக கூடாது! நான் என்ன சொல்ல வரேன் னு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்!

என்ன சொல்ல வர? வெளி உலகத்துக்கு மனைவி ஆனா அந்தரங்கத்துல இல்லை! அது தானே!?

நீங்க தவறா புரிஞ்சிக்கறீங்க பிரபு! ப்ரியா மனசுல இருக்கும் போது என்னை ப்ரியாவா தான் பார்க்க தோணும்! அது எங்க இருவருக்குமே அவமானம்! இல்லை நீங்க அப்படிதான் எடுத்துகிட்டாலும் பரவாயில்லை... காதல் இல்லாத ஒரு திருமண பந்தம்ல எனக்கு உடன்பாடு இல்லை! இதற்கு சம்மதம் னா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை! நீங்க தான் முடிவு செய்யனும்.. பத்திரிக்கை பார்க்கலாமா வேண்டாமானு?

அப்புறம்... என் மொபைல் உங்க கிட்ட இருக்கிறதா சொன்னான் ராம்... கொஞ்சம் தரீங்களா?

உன் மொபைல் என்கிட்ட இல்லையே! எங்கவிட்ட? இந்தா என் மொபைல்.. கால் போட்டு பாரு!

சரி கொடுங்க...என் அம்மாவுக்கு சொல்லனும்!

அத்தைகிட்ட நான் பேசிட்டேன்! என்கூட தான் நீ இருக்க னு சொல்லிட்டேன்...உன் மொபைலை தேடு..' என்று அவன் கைபேசியை கொடுத்துவிட்டு அந்தபுறம் நகர்ந்துவிட்டான்.

அதை வாங்கியவள் அதன் திரையை பார்த்துவிட்டு சிறிது நேரம் மௌனமாயிருந்தாள். காரணம் அந்த ஸ்க்ரீன் சேவர்! ஞாயிற்றுக்கிழமை நடந்த தாம்பூலம் மாற்றும் வைபவத்தில் குழலீயின் விரலில் அந்த 's' பதித்த மோதிரத்தை பிரபு அணிவிப்பதின் க்ளோஸ் ஆப் ஷாட்... நல்ல போட்டோக்ராப்பிக் எஃபெக்ட்டுடன்!

நம்பரை டயல் செய்தவளுக்கு அடுத்த அதிர்ச்சி... திரை அவள் எண்ணை 'புலி' என்று காட்டியது! அது மட்டும் இல்லாமல் அவளது ரிங்க்டோன் வெகு அருகில் அவனது மடிக்கணினியின் பையிலிருந்து கேட்க... அந்த பையையும் எடுத்துக்கொண்டு அவனை தேடிச்சென்றாள்.

மனதில் 'இந்த பிகே கிட்ட இந்த மோதிரத்தை பத்தி மாமா கேட்க சொன்னார். அப்புறம் எனக்கு எப்படி பெயர் வைத்திருக்கான் பாரு? இது இரண்டுத்தையும் கேட்கனும்!' என்று கூறித்துக்கொண்டாள். கோவில் வாசல் அருகில் ஒரு தம்பதியிடம் நின்று பேசிக்கொண்டிருந்தான் பிரபு. அருகில் செல்லும் போதுதான் அவர்கள் யார் என்பதை கவனித்தவளுக்கு இது பேரதிர்ச்சி!

இன்றைய தினம் இன்னும் வேறு எத்தனை அதிர்ச்சிகளை வரிசையில் வைத்திருக்கிறாய் கடவுளே!' என்று எண்ணியவாறு சற்று முன்னமே நின்றுவிட்டாள். ஆனால் பிரபு அவளை பார்த்துவிட்டு அந்த தம்பதிகளையும் அழைத்துக்கொண்டு அவளருகில் வந்தான்.

என்ன மேடம் மொபைல் கிடச்சிட்டா? எடுத்துக்கிட்டியா? பட் அது கூட இருந்த அந்த சாக்லேட் எனக்கு தானே?!

அவனருகில் இருந்தவர்களை கவனிக்காதவாறு, சாக்லேட் உங்களுக்கு தான்.. என் மொபைலை மட்டும் எடுத்துக்கொடுங்க.. நான் புறப்படுறேன்..

ஹேய்.. வெயிட் வெயிட் குழல் போகலாம்.. பொறுமையா நீயே பையில் இருந்து எடுத்துக்கோ...' என்று திரும்பினான்.

கையில் குழந்தையுடன் நின்றிருந்த அந்த தம்பதியினரும் அதிர்ச்சியில் இருந்ததை அவர்கள் முகமே காட்டிக்கொடுக்க... அனைவரின் முகத்தையும் பார்த்து குழப்பமானான் பிரபு!

இன்றைய தினம் இன்னும் வேறு எத்தனை அதிர்ச்சிகளை வரிசையில் வைத்திருக்கிறானோ!

தொடரும்...

Episode # 07

Episode # 09

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.