(Reading time: 57 - 114 minutes)

வளை வாரி எடுத்தான் தன் கைகளில்.

அவர்களுக்கான படுக்கை அறை நுழைந்தான். அறை முழுவதும்....பூக்கள் பூக்கள் பூக்கள்...

மல்லிகை மஞ்சத்தில் பெண் அவளை வைத்து நிமிர்ந்தான். உயிருள்ள மாலையாக அவன் கழுத்தில் அவள் கரங்கள்.

விழி மூடிய அவள் முகம் அவன் மன நிறம் கொண்டிருந்தது...

ஒலி வடிவம் அனைத்தும் மறந்து போக மௌனராகம்.

மெல்ல மெல்ல வேர்விட்டது திருமண உறவு.

ஒரு வாரத்திற்கு பிறகு

ஒஃபிலியா ஆன்ட்ரூ திருமணம் விமரிசையாக நிறைவேற தம்பதியராக ரியோ டி ஜெனிரோ சென்றனர் அவர்கள்.

1 மாதம் பின்பு

கவினின் ஃப்யூயல் ஃபாக்டரி தன் உற்பத்தியை தொடங்கியது...

3 மாதம் பின்பு

வேரி கவின் தம்பதியருக்கு அழகும் ஆரோக்கியமுமான பெண் குழந்தை பிறந்தது. குடும்பத்தின்  பெண் குழந்தை ஆசையை நிறைவேற்றிக் கொண்டு பிறந்தவள், அத்தனை பேரின் மனதையும் தன் வசப்படுத்தியதாலும் மனோகர் நீலா தம்பதியரின் முதல் பேத்தி என்பதாலும் மனோகரி என பெயர் சூட்டப்பட்டாள்.

1 வருடம் பின்பு

வேரி கிருபவுடன் இணைந்து கண்பார்வை குறைபாடுள்ள குழந்தைகளுக்கென ஒரு பள்ளி தொடங்கினாள். அத்தகைய குழந்தைகள் இயல்பு வாழ்க்கை வாழ உதவும் அறிவியலின் அனைத்து வசதிகளும் அவர்களுக்கு கிடைக்க முனைந்து வேலை செய்தது அப்பள்ளி.

ஆங்...இன்னொரு விஷயம் வென்யா தீபக் ஜோடி கூட இந்த வருஷம் கல்யாணம் செய்துகிட்டாங்க....

4 வருடம் பின்பு

மிர்னா அடுத்த ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றிருந்தாள். இதுவரை 21 முறை  உலக சாதனை நிகழ்த்தி இருந்தாள்.

5 வருடம் பின்பு

வேரி கவினுக்கு மஹிபன் என்ற ஆண்குழந்தையும், வியன் மிர்னாவுக்கு நீல், நிவந்திகா என்று இரட்டை குழந்தைகளும்  பிறந்தனர்.

அதே ஆண்டு மின்மினி விடுதலை ஆனாள். ஆம் அவளே சென்று சரணடைந்தவள் தண்டனை முடிந்து விடுதலையானாள். எல்லோரும் எதிர்பார்த்தது போல் மிஹிர் மின்மினி திருமணம் இந்த ஆண்டு எளிமையாக நடந்தேறியது.

20 வருடம் பின்பு

வேரியும், கிருபாவும், கவின் வேரி தம்பதியரின் மகள் மனோகரியும் உலக அளவில் பிஸிகலி சேலஞ்ச்ட் குழந்தைகளுக்காக செய்த பணிகளின் அங்கீகரமாக சமாதானத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்தனர்.

என்னைத் தந்தேன் வேரோடு, என்னில் நீ வேரோடு என தன்னை தந்திருந்தான் கவின். அவனில் வேர் விட்டிருந்த வேரி மரம் விழுதுகள் வரை ஜெயம் ஜெயமாய்....

24 வருடங்கள் பின்பு

சென்னையில்:

நீல்.....நீல் நீல்...நீல்...

கத்திக்கொண்டு இருக்கிறது கூட்டம்.

கமென்டேடர்: ஆக பேட்டிங் செய்ய கடைசி மனிதன் வந்தாகிவிட்டது. இப்பொழுது பந்தை எதிர்கொள்பவர் நீல். கடைசி ஓவர் பந்துவீசப்போகிறவர் நேதன் ரிச். ஃபைனல் என சொல்ல முழு தகுதியும் உடைய போட்டி இது....13 ரன்கள் தேவை

முதல் பந்து... வைட்..

கமென்டேடர்: கேப்டன் பாப் இப்பொழுது மிகுந்த அழுத்தத்தில் இருப்பார்.....ரிச் ஐ பந்துவீச சொன்ன முடிவு சரியா...? அட்வூட் டை சொல்லி இருக்க வேண்டுமோ...? இல்லை ரிச் சரியான முடிவுதானோ?

இரண்டாவது முதல் பந்து .....

கமென்டேடர்: ஸ்டரைக்கிங் எண்டில் இருக்கிறார் நீல், இந்த மனிதனின் நரம்புகள் எக்கிரும்பால் ஆனவை..கூட்டத்தின் மொத்த கவனமும் இங்குதான். ஓ அவர் பந்தை தவறவிடுகிறார். அம்பயரிடமிருந்து எந்த சைகையும் இல்லை. ரன் ஏதும் இல்லை.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...........

இரண்டாவது பந்து......

கமென்டேடர்: பந்து காற்றில் பறக்கிறது. இது சிக்ஸர். மிகவும் அற்புதமான சிக்ஸர் இது. அப்படியானால் இந்தியா இதை ஜெயிப்பதில் இருந்து இன்னும் ஒரே ஒரு பந்து தொலைவில் இருக்கிறது.

ஹெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.........

கமென்டேடர்:இந்திய ரசிகர்களின் இதயம் லப் டப் லப் டப் லப் டப். இந்தியாவிற்கு 4 பந்துகளில் இருந்து 6 ரன்கள் தேவை. இன்நேரம் நீலின் இதயத்தில் பல பல நினைவுகள் ஓடிக் கொண்டிருக்கும். அடுத்தது ஒற்றை ரன் எடுக்க வேண்டுமா? ஒற்றை ரன் எடுத்தால் அடுத்து ஃபோர் ஒன்றை எடுக்க வேண்டுமோ? அப்படி ஒற்றை ரன் எடுத்தால்  விக்கி அடுத்த பந்தை எதிர்கொள்வார்..

மூன்றாவது பந்து.....

கமென்டேடர்: பந்து காற்றில் பறக்கிறது. ஹார்வியை நோக்கி செல்கிறது பந்து...ஓ இது ஒரு சிக்ஸர்....இந்தியா இந்த உலக கோப்பையை ஜெயித்துவிட்டது.....பெருத்த கொண்டாட்டம் இந்திய ரசிகர்களுக்கு மத்தியில்...நீல் எங்கே செல்கிறார்?

பார்வையாளர்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் நீல்.

போட்டியை காணவந்திருந்த ஒஃபிலியா ஆன்ட்ரூவின் மகள் அதன்யா வின் முன் முழங்காலிட்ட நீல் கேட்டுக்கொண்டிருந்தான்..

“உலகத்துக்காக இறக்க முன் வந்த கடவுள் உலகத்தை நேசிக்கிற மாதிரியும், என் அம்மா அப்பா ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிற மாதிரியும், நான் உன்னை நேசிக்க ஆசைப்படுறேன். ஐ லவ் யூ ..வில் யூ மேரி மீ..?.”

அத்தனை தொலை காட்சிகளிலும் அதன்யாவின் “ஐ வில், ஐ வில், ஐ வில்”

“விளையாடுறதுல மட்டும் தான் என்னை மாதிரி....மிச்ச எல்லாம் உங்க பிள்ளைங்க உங்கள மாதிரியேதான்....” வியனிடம் சொல்லிய மிர்னாவின் குரலில் பெருமிதம்.. பூரிப்பு...

 என்னைத் தந்தேன் வேரோடு என்றவனில் ஒன்றானாள் மிர்னா. இன்று வேரைப் போல விழுதுகளும் பலம் சுகம் ஜெயம் ஜெயம்....

முற்றும்

கடவுளுக்கும், சில்சீக்கும்,  வாசித்தும் வார்த்தையால் ஊக்குவித்தும் வந்த உங்கள் அனைவருக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள். இதை சில்சீயின் 50 வது கதையாக்கிய அத்தனை எழுத்தாளர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

எந்திரமாய் ஓடும் அதிவேக வாழ்க்கையில் சிறுது நேரமாவது கற்பனை உலகில் ஒரு  இலகு சவாரி இன்பமாய் செல்ல என்ற நோக்கோடு எழுதியது இக்கதை. பிழை இருந்தால் மன்னியுங்கள். மகிழ்ந்திருந்தால் தெரிவியுங்கள்.

                                நன்றிகள்!!!! நன்றிகள்!!!

மீண்டுமாய் அடுத்த வாரம், இதே நேரம், வேறு ஒரு கதையுடன் வருகிறேன். வாருங்கள் சந்திப்போம்...

Ennai thanthen verodu - 16

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.