(Reading time: 57 - 114 minutes)

சாக்ல்லேட் பையா....ரொம்பவே உங்களை மிஸ் பண்ணேன்...” அவனை துள்ளி அணைக்க துடித்த மனதை சுற்றி இருந்த கூட்டத்தின் காரணமாக கைவிட்டாள்.

“மீ டூ டா....ஹூம்...இந்த ஷாப்பிங்க்லாம் எங்கயாவது அப்ராட்ல செய்திருக்கலாம்....குறஞ்சபட்சம் மும்பைலயாவது....”

“ எங்க வாங்குறோம்...எதை வாங்குறோம்னுலாம் இல்லை வினு...எப்டி வாங்க்றோம்ங்கிறதுதான் எனக்கு இப்போ முக்கியமா தெரியுது...செமயா இருக்குது...”

“இருக்கும்...இருக்கும் மனுஷனை இப்படி காய போட்டுட்டு....செமயாதான் இருக்கும்...”

நாள் 11

“நாளைக்கு உனக்கு அக்கா தங்கைலாம் சேர்ந்து செய்ற அரிசி கூட்டம் உங்க வீட்ல... அண்ணியும் கவினும் செய்யனும்னு முறையாம்....கூடவே எங்க வீட்ல எல்லோரும் கூட வரலாமாம்...அப்டியே நானும் அண்ணியோட கொழுந்தனா வர ட்ரை பண்றேன்...”

“அப்டில்லாம் முறை கிடையாதுன்னு உங்களை யாரும் இந்த பக்கம் விடப் போறது கிடையாது...”

நாள் 12

“ஃபிலடெல்ஃபியால இருந்தும் சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் இருந்தும் அம்மாவோட கசின்ஸ் வந்திருக்காங்க....தாய்மாமா வீட்ல இருந்து செய்ற அரிசி கூட்டதுக்காக...இப்படில்லாம் தூரத்துல இருக்கிறவங்க செய்றது இல்லைனாலும்....நீ ஆசைப்பட்ட ட்ரெடிஷனல் மேரேஜ்க்காக வந்துருக்காங்க...”

“வர சொல்லி இருக்கீங்கன்னு சொல்லுங்க...”

“எக்ஸாக்ட்லி ...நீ ஆசப்பட்ட ஒன்னை செய்யாம விடலாமா....மாமாஸ்க்கும் இது ஃபன்..பைதவே அவங்க பொண்ணைப் பார்க்கன்னு இன்னைக்கு ஈவ்னிங் உங்க வீட்டுக்கு வருவாங்க....கூட அப்டியே நான் வரதுன்னு முடிவு செய்திருக்கேன்...”

“அட சி. பி..... நீங்க அடுத்த தெருல இருக்கிற பொண்ண பார்க்கிறதுக்கு அவங்கள ஆயிரம் ஆயிரம் கிலோமீட்டர் வரவச்சிருக்கீங்க...”

“ஹி..ஹி...வெறும் 14,000 கே. எம் ஒன்லி..”

“அட பாவி”

“ம்ஹூம்....காதல் அப்பாவி”

நாள் 13

“வினு நாளைக்கு ஈவ்னிங் அரச கால் நடுறதுன்னு ஒரு முறை செய்வாங்க....முன்னால மரம் நடுறதா இருந்த பழக்கம் இப்ப வெறும் கம்பை அடையாளத்துக்கு நட்டிட்டு புடுங்கி எறிஞ்சிட்டு போறதா மாறிட்டுபோல...அதான் நம்ம மேரேஜ்க்கு நிஜமா மரம் நடனும்னு சொல்லி இருக்கேன்....நீங்களும் அங்க அப்டியே செய்ங்க.....”

நேத்தே 2 மர கன்னு கொண்டு வர சொல்லிட்டனே...”

நாள் 14

“இன்னைக்கு ஊர் சாப்பாடு....வெளியூர்ல இருந்து வந்திருக்கவங்க...உள்ளூர்காரங்கன்னு அத்தனை பேர் இங்க எங்க வீட்ல....ரியோ கல்யாணம் மொத்த கெஸ்ட்டே இதுல 1/10த் கூட வரமாட்டாங்க போல...செம க்ராண்டா ஃபீல் ஆகுது இது...”

“ம்...இதுக்கே இப்டியா.....? அதே அளவு கூட்டம் இங்க எங்க வீட்லயும்....இங்கயும் ஊர் சாப்பாடு....நாளைக்கு நம்ம இரெண்டு குடும்பத்துகாரங்களும் சேர்றப்ப கல்யாணம் எப்டி இருக்கும்...?”

“சூப்பர் தான்”

“என்ன எல்லோரும் வந்திருக்காங்க...அதனால நீ இன்னைக்கு சாரிதான் கட்டணும்னு சொல்லிட்டாங்க...எப்டியோ சமாளிச்சு ஹாஃப் சாரிக்கு பெர்மிஷன் வாங்கி இருக்கேன்....”

“...............”

“என்ன வினு....பேசிகிட்டு இருக்கப்பவே காலை கட் செய்துட்டீங்க...?.”

“பாவம் பாவாடை தாவணினதும் ஸ்பாட்ல ஃப்ளாட் போல பி.கே.... செல்லபையா சீக்கிரமே இங்க வருவியாம் நீ....”

விருந்தனரில் குழந்தைகளும் வாலிப பெண்களும் சேர்ந்து வீட்டின் பின்னிருந்த அந்த பெரிய திறந்த வெளியில் ஒழிந்துபிடித்து விளையாடிக்கொண்டிருக்க, கிணற்றின் அருகில் இருந்த துணிதுவைக்கும் கல்லின் மீது அமர்ந்திருந்து வியனிடம் பேசியவள், அவன் இணைப்பை துண்டித்ததும் சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள்.

இவள் தங்கி இருந்த வீட்டு மாடு ஒன்று அவிழ்த்துக்கொண்டுபோய் தூரத்தில் இருந்த வைக்கோல் போரை மேய்ந்து கொண்டிருந்தது. வெளிச்சம் குறைவாக இருந்தாலும் போதுமானதாக இருப்பதால் ஒழிந்து பிடித்து விளையாடுவோர் அங்கு மறைய நினைத்து சென்று மாடை பார்த்து மிரளக் கூடும்...

இரண்டு வாரம் தங்கி பழகிவிட்டதால் இந்த மாடு இப்போ எம் எம் ஃப்ரெண்ட்.

போய் கயிறை பிடித்து இழுத்தாள்..

“ட்ரி...ட்ரி....இங்க வா...இங்க வா நீ...”

மாட்டிடம் பேசிக்கொண்டிருந்தவள் இதை கவனிக்கவில்லை.

வைகோல் போர் பின்னிருந்து வெளிப்பட்ட மீசைகார்ர்கள் இருவரில் ஒருவர் அவள் மேல் வலையை வீச, அடுத்தவர் அவள் வாயைப் பொத்த...கைகாலை அசைக்க முடியாதபடி நொடியில் இவளை வலையில் சுற்றி வைக்கோல் போருக்கு பின்னிருந்த இருட்டிற்குள் தூக்கிக்கிக் கொண்டு சென்றனர் இருவரும்....

மொத்த இருள் ப்ரதேசம்.

ஒருவர் கையில் டார்ச்.

மௌனம்....அருகில் ஓடும் நீரோடையின் சத்தம் மட்டும்...

மெல்ல இவளை இறக்கிவிட்டனர்...

ஓடையின் கரையில் மர நிழலில் ஒரு வெண்ணுடை வேஷ்டி உருவம் தெரிகிறது.

“அங்க ஒருத்தர் நிக்றாரே...அவர்ட்ட போய் நீ இப்ப பேசலைனா....வியனுக்கு பெரிய ஆபத்து....”

 “வியனுக்கு ஆபத்துன்னு இன்னொரு தடவை சொன்ன வாய்லயே அடிப்பேன்...”

“அது..”

“வாய்ஸை மாத்தி பேசிட்டா வரிகுதிரைய அடையாளம் தெரியாம போய்டுமா..?”

தூக்கி வந்தவர்களில் ஒருவரின் காதை பற்றினாள்...

“ஏய் வென்யா வரிகுதிரை.....என் கல்யாணத்துக்கு வர்ற நீ முதல்ல என்னைப் பார்க்கதான வந்திருக்கனும்..?”

“அது....கல்யாண வீடுன்னதும் டிரைவர் நேரா அண்ணா வீட்லதான் போய்  காரை நிறுத்தினார்....அண்ணா வேற ஹெல்ப் வேணும்னு கேட்டாரா...அதான்....எப்ப கண்டுபிடிச்ச நீ?”

“ம்...வாயைப் பொத்றப்பவே...”

“நீ அமைதியா வாரப்பவே எனக்கு சந்தேகம் வந்திருக்கனும்....”

“எது எப்டியோ...நீ என் ஆப்போனன்ட் ஆகிட்ட....அதுக்கு பனிஷ்மென்டா...நீ உன்னை அனுப்பினவரை கொஞ்சம் டென்ஷன் ஆக்கனும்...ஏய் லிடி உனக்கு வேற தனியா திருகனுமா காதை...?”

“வேண்டாம் தாயே....உன் ஆள் இதெல்லாம் அனுபவிக்கனும்னு இருக்கு..... அதை யாரு மாத்த?......என்ன செய்யனும் சொல்லு...? லிடியா நொந்து கொள்ள

“வேண்டாமே மிர்னு........அண்ணா பாவம்...ரொம்ப ஆசையா காத்துகிட்டு இருப்பார்...காலம் முழுக்க உன்ட்டதான் மாட்டிகிட்டு முழிக்கப்போறார்ங்கிற காரணத்துக்காகவாவது அவரை இன்னைக்கு  மன்னிச்சு விட்றேன்....” வென்யா கெஞ்சினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.