(Reading time: 57 - 114 minutes)

வ்வளவுதான் கொதித்துப் போனாள் மிர்னா....”தன் தப்புக்கு தன் ஏழ்மையை காரணமா சொன்னா....தன் சொந்த மகளை வச்சு ப்ராஸ்டிடியூஷன் செய்றவ கூட தன்னை நிரபராதின்னு சொல்லிக்க முடியும்....அப்டின்னா வீட்டு வேலை செய்து.... கூலி வேலை செய்து தங்களுக்கு இருக்கிற வசதிக்குள்ள வாழ்க்கை நடத்துறவங்ல்லாம் உங்க அகராதிப் படி வாழவே இல்லையா......? நீங்க அப்பா அளவு வசதி இருக்கவங்களை தான கல்யாணம் செய்தீங்க....ஆனா உங்க பிள்ளைகளை அப்டி ஒரு வீட்டுக்கு கொடுக்க உங்களுக்கு ஆரம்பத்துல இருந்து மனமே இல்லையே........உங்களோட ஆசை பெருசு...அதனால கை இருப்பு சின்னதா தோணிட்டு....வசதி இருந்தா வேரி இப்டி பிறந்திருக்க மாட்டாளா?....அப்டின்னா வசதியான வீட்ல யாருக்கும் எதுவுமே ஆகிறதில்லையா....?.”

“அது இல்லமா...” மாலினி தொடர

“இவ்ளவு நாளும் எங்க ஃபினான்ஸ் எவ்ளவு டைட் தெரியுமா....? ட்ரஸ் கோட்ல காம்ப்ரமைஸ் செய்ய ரெடியா இருந்திருந்தா நிறைய பணம் தர்ற ஸ்பான்ஸர்ஸ் கிடச்சிருப்பாங்க...ஆனா அது எங்க  மனசுக்கு ஒத்துகிடலை.....இன்னைக்கு வரைக்கும்  சமாளிசிருக்கோம்....இத்தனைக்கும் பண கஷ்டம்னா என்னன்னே தெரியாத வியனும் சேர்ந்து கஷ்டப்பட்டிருக்கார்....காசு இல்லனா நியாயத்தை விட்டுகொடுக்கலாம்னு என்ட்ட பேசாதீங்க...”

கட கடவென அறையைவிட்டு வெளியே போய்விட்டாள் மிர்னா.

“கொஞ்ச நேரம் ஆன்டி...இப்ப வந்துடுவோம்...” வியன் மாலினியிடம் சொல்லிவிட்டு மிர்னாவை நோக்கிப் போனான்.

வேக வேகமாக காரிடாரில் அவள் நடந்து செல்வது கண்ணில் பட்டது.....கைமாற்றி தன் இரு தோள்களையும் பிடித்தபடி செல்லும் அவள்...

சுருக்கென்றது வியனுக்கு....

தனித்துவிடப்பட்டதாக உணர்கிறாள். அப்படியானல் அவள் மனதில் இவன் தூரமாகிப் போனான் என்றுதானே அர்த்தம்.

அவசர அவசரமாக அவளை சென்றடைந்தான் வியன்... இதற்குள் லிஃப்ட் அருகில் வந்திருந்ததால், அதற்குள் அவர்கள்.

அவர்களைத் தவிர உள்ளே யாருமில்லை.

அவனை ஒருநொடி நிமிர்ந்து பார்த்துவிட்டு...மீண்டுமாய் லிஃப்டின் கதவின் மேல் கண் நிறுத்தினாள் அவள்.

இழுத்து அணைத்து தன்னுள் புதைக்க வந்த ஆசையை அதன் பின்விளைவை எண்ணி தள்ளிப்போட்டான் வியன்..... இவன் கல்யாணத்திற்கு எதற்காக அவசரபடுகிறான் என அவள் நினைக்கிறாள் என்பதைப் பற்றி அவனுக்கும் ஓரளவு யூகம் இருக்கிறது தானே!

“மினு....”

“ம்”

இதற்குள் தரை தளம் அடைந்து கதவை திறந்தது லிஃப்ட்.....வரவேற்பு ஹாலை தாண்டி நடந்தனர் இருவரும்... முகப்பு வாயிலில் இவர்கள்.

வெளியே மழை.....

“எங்கடா போகனும்...?”

“எங்கயாவது....மனுஷங்களே இல்லாத இடத்துக்கு....ஐ ஜஸ்ட் வாண்ட்......”

 “வாண்ட்....?”

அலோன் என்று சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. அவனுக்கு வலிக்கும்...

மழையின் மீதே நின்றன அவள் கண்கள்.

அவளின் பார்வையோ பதிலோ அவனுக்கு கிடைக்கவே இல்லை.

அவன் மீது குடி வந்திருந்த ஏமாற்றம் காரணம்.

கடந்தது அரை நிமிடம் மௌன யுகமாய்.

“வா....”

ஆளற்ற அந்த சாலையில் நடக்க தொடங்கினான்.....நொடி நேர தாமதித்திற்குப் பின் அவன் பின் அவள்.

“என்னால நீங்க நனஞ்சுகிட்டு..... நான் நனையிறதைப் பார்த்தா மிஹிர்....நீலாம்மா எல்லாரும் திட்டுவாங்க...”

“எல்லா நேரமும் நீ அடுத்துவங்களுக்காக மட்டுமே யோசிக்க முடியாது மிர்னுமா.....யூ நீட் யுவர் ஸ்பேஸ் டூ..”

“.............”

“நான் கூட வர்றேன்னு கூட மறந்துடு.....”

“.........”

“உன்னைய என்னால இந்த டைம்ல தனியா அனுப்ப முடியாது.....இல்லனா...”

அவன் எவ்வளவாய் அவளை  புரிந்து கொள்பவன் என்ற உணர்வலை அவளுள் எழ...

தன்னைத்தானே அணைத்த கைகளை இறக்கி டராக் பாண்ட்ஸ் பாக்கெட்டில்  கை வைத்துக் கொண்டாள்.....

அவள் தனிமை மன அளவில் சற்று குறைவதை புரிய முடிந்தது அவனால்.

ஆளரவமற்ற சாலை...மழை, தூரலாய் மட்டுமாய் மாறிப் போயிருந்தது. வெண் நிற மின் விளக்குகளும்...கழுவபட்ட சாலையும்... அவர்களும்...

சென்றது சில பொழுது...

“சாரி....என்ன இவ தன் அம்மாவைப் பார்த்து இப்படில்லாம் பேசுறான்னு நினச்சிருப்பீங்க....நமக்கு கார் ஆக்சிடெண்ட் நடந்த பிறகு நான் அவங்களுக்கு கால் செய்தப்ப அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா....”

மாலினி பேசியதை சொன்னாள்.

“அதுக்கு கொஞ்சம் முன்னால வரை வேற ஒருத்தரை கல்யாணம் செய்ய சொல்லி என்னை வீட்ல வச்சு பூட்டி சாவியை இடுப்பில வச்சுகிட்டு அலைஞ்சவங்க..... அதுவரைக்கும் அவங்களோட உள்ள உறவை வெட்டிகிடனும்னு எனக்கு எண்ணம் கிடையாது...ஆனா அப்பதான் முடிவு செய்தேன்...இனி இவங்க ஆபத்தானவங்கன்னு....”

“நீ பேசுன எதையும் நான் தப்புன்னு சொல்லலை மிர்னுமா...ஆனா இப்ப அவங்க...”

“இன்னைக்கு அவங்க குறுக்குப் புத்தி ஆசைப்பட்ட மாதிரி வேரி அத்தானோட செட்டிலாயாச்சு....எனக்கு உங்க கூட மேரேஜ் ஆகப் போகுது.....இனி வேறென்ன வேணும் அவங்களுக்கு.....எதையாவது சொல்லி சேர்ந்துகிட்டா...அவங்களுக்கு சீன் போட....காசு சேர்க்க... வசதியா இருக்கும்.....அவங்க சொன்ன திட்டத்தை நான் எனக்கு ஃபேவரா நிறைவேத்திகிட்டேன்னு நம்பிட்டு இருபாங்க உள்மனசுல....”

அருகில் பஸ் ஸ்டாண்ட் தெரிய அங்கு சென்று அமர்ந்தாள் மிர்னா. அவளருகில் வியன்.

“நீ அவங்களை விலக்கிட்டு வெளிய வந்தது தப்பே கிடையாது மிர்னு...ஆனா அத்தனை வருஷம் உன்னை வளர்த்திருக்காங்க அவங்கட்ட ஒரு மாரியாதைக்கு கூட சொல்லிகாம நான் எப்டி உன்னை எனக்கே எனக்குன்னு எடுத்துக்க முடியும்.....?அதான் அவங்கட்ட பேச ஆரம்பிச்சேன்...

ஆரம்பத்துல நீ சொல்ற மாதிரிதான் அவங்க இருந்தாங்க.....பணம் இருந்தால் போதும்...அதுக்காக என்ன செய்தாலும் சரிதான்னு...அப்புறம் ஃபில் தான் தான் எவ்ளவு பெரிய ஹாஃஸ்பிட்டல்ல பிறந்தேன்னும்...இருந்தும் டெலிவரில அவங்க அம்மா இறந்துட்டாங்கன்னும் அவ லைஃபை பத்தி கொஞ்சம் கொஞ்சமா பேச... உங்கம்மா கரெக்டான ட்ராக்ல  யோசிக்க ஆரம்பிசுடாங்க...அதோட அவங்களோட அடிப்படை பாசம்தான் ...ஆனா நியாயத்தோட சேராத பாசம்....மிஹிர் சொன்ன மாதிரி அழுகி நாறிட்டு இருந்தது.....இப்ப பரவாயில்லை....திருந்தி வாழ்றதுங்கிறது ஒரு ஜர்னி....அதுல அவங்க போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்குது...அவங்க பலவீனம் நம்மை பாதிக்காத அளவு  தூரத்துல வச்சுகிடுவோம்...ஓகே வா... “

“ம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.