(Reading time: 57 - 114 minutes)

டுத்து அவர்கள் கார் சென்றது ஒரு பொட்டிக்கிற்கு....

வழியிலேயே சொன்னான் வியன்....”இங்க மேரேஜ் செய்தாலும் அதை  நாம இண்டியால ரிஜிஸ்டர் செய்தாதான். லீகலி வலிட் ஆகும்....சோ அங்க ஒரு வெடிங் திரும்ப வச்சுகிடலாம்...அதுல எல்லாம் முழுக்க முழுக்க உன் சாய்ஸ்.....இங்க நான் ஆப்ஷன்ஸ் அரேஞ்ச் செய்து வச்சிருக்கேன்...அதுல செலக்ட் செய்துக்கோ மினு...ப்ளீஸ் டைம் இல்ல...”

திரும்பவும் இந்தியாவில் விமரிசையாய் ஒரு திருமண வைபவம் திட்டமிட்டிருப்பதால் இங்குள்ள திருமணத்தில் வெட்டிங் ரிகர்சல், ப்ரைடல் ஷவர் என மேற்கத்திய பாரம்பர்ய வைபவங்கள் எதுவும் வேண்டாமென ஒதுக்கிவிட்டு திருமணத்தை மட்டும் நிகழ்த்தலாம் என முடிவு.

பொடிக்கில் இவளது சைஸிற்கு ஏற்கனவே மெர்மெய்ட் ஸ்டைல், ட்ரைன் ஸ்டைல்...வின்டேஜ் டிசைன், வாக் டிசைன்... ஆஃப் ஷோல்டர்....நெட்டெட் ஷோல்டர்...என சில வகை கவுன்களும்...பஃப்ட் ஸ்லீவ்ஸ்.... லாங்க் ஸ்லீவ்ஸ்.......ஹால்ப்  ஸ்லீவ்ஸ்....என சில வகை ஸ்லீவ்களும் வியன் வேரியின் வேலை காரணமாக ஆயத்தமாயிருக்க.....

அவைகளில் தன் ரசனைக்கேற்ப மிர்னா நெட்டட் ஷோல்டர், அடிப்புறத்தில் ட்ரைனுடன் இருந்த ஸ்லீவ்லெஸ் மெர்மெய்ட் கவுனை தேர்ந்தெடுக்க.... ...சில நிமிடங்களில் இணைக்க வேன்டியவை இணைக்கப் பட்டு....மிர்னாவின் வெட்டிங் கவுன் ஆயத்தமானது.

அதற்கான அக்ஸஸரீஸ்.....மட்டுமல்லாமல் விருந்திற்கான மெனு...வெட்டிங் கேக் ....டெகரேஷன்ஸ்....என எல்லாம் மிர்னாவுடன் சேர்ந்து முடிவு செய்துவிட்டு....வியனும் மிர்னாவும் செல்ல வேண்டிய ஹோட்டலை நோக்கி திரும்பும் போது மறுநாள் மாலை நடக்கவிருக்கும் திருமண நிகழ்ச்சியைத் தவிர மிர்னா மனதில் எதுவும் இல்லை.

ஹோட்டலில் இவர்கள் நுழைந்தால் இருவரது மொத்த குடும்பமும் ஒஃபிலியா, ஆன்ட்ரூ போன்ற நெருங்கிய நண்பர்களும் ஒர் ஹாலில் காத்திருந்தனர்.

இருவருமாக உள்ளே நுழைய ஹேய்ய்ய்ய்ய்ய்......என்ற ஆரவாரம், வரவேற்பு...மழையாய் பொழியும் மலர் இதழ்கள்...

வியன் தன் அம்மாவை அணைத்திருந்தான்...

“ஐ மிஸ்ட் யூ அம்மு...”

பார்க்கவே ஆசையாய் இருந்தது மிர்னாவிற்கு....

இதெல்லாம் நாளை நடைபெற இருக்கும் திருமணத்தால் சாத்தியம்...

திருமண முடிவு முழுக்கவும் சரி...

திருமணத்தைப் பற்றி இவள் விசாரித்த முதல் விஷயமே நீலாம்மா அப்பா எல்லோரும் வர முடியுமா என்பதுதான்...

“உன் விஷயத்தில எங்க ஊருக்கு தேவை நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரனும்கிறதுதான்... பத்திரிக்கை அடிச்சு மணமேடையில வந்து பொண்ணை மாத்தி கல்யாணம் செய்திருக்கோம்னு ஒரு உறுத்தல் அவங்களுக்கு....உன் நிலைமை என்னாகும்னு யோசிச்சிருப்பாங்க....அடுத்து நானும் நீயும் வேற  அன்னைக்கு சேர்ந்து சுத்திகிட்டு இருந்தோமா.....அதான்..

.நாம என்ன காரணம் சொல்லி இருந்தாலும்.... நாம கல்யாணம் செய்ய போறோம்னு சொல்லாத வரை விடமாட்டாங்க...அப்பவே அப்படி சொல்லி இருந்தா அது உன் ஒலிம்பிக்ஸை அஃபெக்ட் செய்யும்னு நான் நினைச்சேன்...உனக்கு எப்டியோ...என் அளவுல ரொம்ப கஷ்டம்....” வியன் அதற்கு சொன்ன பதில் இது.

போடா....அப்ப இருந்தே இதுதானா......

மனதிலிருந்த அவனைப் பற்றிய ஏமாற்றம் அவன் செயல் எல்லாவற்றையும் இதே கோணத்தில் காண தொடங்கியது அவளை அறியாமலே

“அம்மா, அப்பா இதுதான் மிர்னு...உங்க மருமகள்...எப்டி என் செலக்க்ஷன்....?” வியன் முழு உற்சாகத்தில்..

“போடா அறிவு...மிர்னு என் செலக்க்ஷனாக்கும்....” இது நீலா

“டேய் கவின்....கேட்டுக்கோ கேட்டுக்கோ...அம்மா முதல்ல எனக்குத்தான் பொண்ணு கண்டுபிடிச்சிருக்காங்க...இப்போ தெரியுதா...அவங்களுக்கு உன்னைவிட என்னைதான் 1% அதிகமா பிடிக்கும்...”

“ஓவரா சீன் போடுறதை முதல்ல நிறுத்து....முதல்ல எனக்குதான் கல்யாணம் செய்து வச்சிருக்காங்க....உனக்கு இன்னும் அப்படி எதுவும் ஆகலை...”

“ஆமா...எனக்கான விபரீதத்தை கொஞ்சம் தள்ளிப் போடனும்னு ஒரு அக்கறையில விட்டுறுக்காங்க......எல்லாம் பாசம்...பாசம்...”

“அப்படீங்கிற....எனக்கும் உன் மேல பாசம் பாசமாதான் வருதுடா தம்பி........ஓகே மிர்னு.... இன்னும் ரெண்டு ஒலிம்பிக்கு பிறகு இவனை கல்யாணம் செய்துக்கோ.....அவன் விபரீதத்தை ஒரு 8 வருஷம் தள்ளிப் போட்டுடலாம்......என்னமா சரிதானே..” தம்பியிடம் ஆரம்பித்து மிர்னாவிடம் பேசி தன் தாயிடம் கேள்வியாய் முடித்தான் கவின்....

“ஐயோ அத்தான்....”என இவள் அலற அதே நேரம்

“அம்மாக்கு உன்மேல தான்டா அதிகமா பாசம்... “ வியன் சரணடைந்திருந்தான்...

அது இவளது ஒலிம்பிக் வெற்றி மற்றும் அவர்களது திருமண அறிவிப்பிற்காய் ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய பார்ட்டி என்பதால்.....

 இருவரும் காதலில் விழுந்த பொழுதுகளை பகிரச் சொன்னார்கள். வியன்தான் தொடங்கினான்....

“அம்மா இதுதான் நம்ம வீட்டு மருமகன்னு சொன்ன பொண்ணுடா இது..ஆனா அவளுக்கு இஷ்டம் இல்லைனு தெரியாம விஷயத்தை இவ்ளவு தூரம் கொண்டு வந்துட்டோம்...இப்ப அவ மேரேஜ் நிக்குதுன்னா....பாவம் நம்மளால அவ வாழ்க்கை பாதிக்க படும்...ஆனா என்னைய பிடிக்கலைனாலும்...உன் மேல  அவளுக்கு ட்ரஸ்ட் இருக்கிற மதிரி தெரியுது...உங்க ரெண்டுபேருக்கும் இஷ்டம்னா...இந்த ப்ரபோசலை கன்சிடர் செய்னு கவின் சொன்னான்...அதுவரைக்கும் மிர்னு மேல ஒரு பொண்ணா மரியாதை இருந்துது...அதுக்கு பிறகு இது என் ஆள்னு தோணிட்டு...மே பி அம்மா செலக்க்ஷன்...அண்ணா சஜசன்...அடிச்சு தூள் கிளப்புற அவளோட அப்ரோச்...எதுல விழுந்தேன்னு தெரியலை...மிர்னு எம் எச் ஆகிட்டா...”

ஊஊஊஊஊஊஊ

“எம் எச் ஆ....அப்டின்னா ...?”

“ம்...அதுக்கு ஆயிரம் மீனிங் அப்பப்ப வரும்...அதெல்லாம் என் ஆள்ட்ட சொல்லிப்பேன்...பட் முதல்ல இதுதான் என் வைஃப்னு கவின்ட்ட சொன்னப்ப தான் இந்த எம் எச் மனசுல வந்துது....அப்ப அது மிர்னா ஹைனஸ்... “

“அப்பவே கால்ல விழுந்துட்டேன்னு காமிக்க கரெக்டான நேம்தான்...”

கேட்டிருந்த மிர்னாவிற்குள் மழை மழை பெரு மழை இடியும் மின்னலும் இன்பமாகும் சுக நிலை.

மிர்னா மஹராணிய கூட விட்டுவைக்கலையா....இப்டியா எல்லாத்தையும் கண்டுபிடிச்சு வைப்ப...?

பார்ட்டி முடிந்து மற்றவர் அவரவர் அறைக்கு திரும்ப....இவளுக்கான அறைக்கு இவளுடன் வந்து நின்றாள் வேரி.

“இன்னைக்கு ஒரு நாள்...நாளைல இருந்து நீ கூப்டாலும் உன் கூட வரமட்டேன்...” என்றபடி...

அடுத்து வந்தது மிர்னாவின் பெற்றோரும் அவர்களுடன் வியன்....

 மன்னிப்பு கேட்கும் முகமாக மாலினி தன் வறுமைக் கதையை ஆரம்பிக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.