(Reading time: 11 - 22 minutes)

"ந்தோஷ் எப்படி இருக்கான்"

"நல்லா இருக்கான். நீங்க என்ன செய்துட்டிருக்கீங்க"

"அக்கௌன்ட்ஸ் பார்க்கிறேன்."

"உங்க ரசிகர் மன்ற தலைவி பேசணுமாம்"

"எப்படி இருக்கீங்க தாத்தா" என்றாள் அஞ்.

"தாத்தாவா??" என்று தோழர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

(என்னது தாத்தாவா. தாத்தாவை  தேவ்ன்னு சொன்னால் நவீன் உன் நிலைமையை நினைத்தால் எனக்கே பக் பக்ன்னு இருக்கு)

"நல்லா இருக்கேன். எப்போ ஊருக்கு வரீங்க"

"நெக்ஸ்ட் ஃப்ரைடே தாத்தா"

"கார் அனுப்பவா?"

"கார் வேண்டாம் தாத்தா. அப்பாகிட்ட சொல்லிட்டேன். நானும் நிஷாவும் எப்பவும் போல் ஹாசியையும் சாதுவையும் பஸ் ஏதிட்டு நாங்க ஒன்ன வரோம்"

"ஓகே. நீ எப்ப பொள்ளாச்சி வருகிறாய்."

"நெக்ஸ்ட் டைம் வருகிறேன் தாத்தா. நீங்க இப்ப கோயம்பத்தூர் வாங்க."

அதற்குள் அவளிடமிருந்து கைபேசியை வாங்கினாள் ஹாசி.

"தாத்தா புனே வருகிறேன்ன்னு சொல்லிட்டு நீங்க இங்க எல்லா ஊரையும் சுத்தறீங்க. டூ பேட்"

"சாரி மேடம். கண்டிப்பா நீ போகும்போது வருகிறேன்"

"ஓகே. பாட்டி என்ன செய்றாங்க"

"கிழவி என்ன பண்ணுவா. கால் வலின்னு பொலம்பறாள்"

"கிழவியா. இருங்க பாட்டிகிட்ட சொல்றேன்.பாட்டி எப்பவும் ஸ்ட்ராங், பொலம்ப மாட்டாங்க"

மறுபடியும் கைபேசி இடம் மாறியது. இப்பொழுது அது சாதனா கையில் இருந்தது.

"தாத்தா. உங்க கல்யாணம் என்ன ஆச்சு. பிளான் என்ன?"

"போமா. திரும்பவும் அவளையே கல்யாணம் பண்ண சொல்றாங்க. அதான் யோசிக்கறேன்"

"என்ன தாத்தா இதுக்கு பீல் செய்யறீங்க. ஐ வில் மேரி யு. நோ வொர்ரீஸ்"

"எனக்கு டபுள் ஓகே. நான் அரேஞ்சு செய்யறேன்"

"கொடுடி. தேவ் வாட் இஸ் திஸ். நம்ம கல்யாணம் எப்போ"

"நீ இங்க வா.  செய்து  வைக்கிறோம்"

"மலர்மா. ஆர் யு ஸூர்"

"அடிங்க. வந்தா நாலு அடி கொடுக்கிறேன்"

"போங்க அம்மா. கண்ணம்மாவே ஒத்துகிட்டாங்க. நீங்க சும்மா திட்டிகிட்டு"

"நீ இங்க வா. பிறகு இருக்கு உனக்கு. எல்லாம் செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்காங்க"

"கூல் அம்மா. அங்க வந்த பிறகு திட்டலாம். நாங்க ஹாஸ்டல் போகணும். பை"

"என்ன ஆண்ட்டி டென்ஷன் ஆகிட்டாங்களா" என்றாள் ஹாசி.

"எப்பவும் போலதான்." என்றாள் நிஷ்.

காலையில் இருந்து சர்வேஷ் மற்றும் ஹர்ஷா மட்டுமே அவர்களின் ஹீரோயினை பார்த்தனர். ஆனால் இப்பொழுதோ மற்ற இருவரும் அவர்களின் ஹீரோயினை கவனிக்க ஆரம்பித்தனர். (கற்பனை குதிரையை ஓட்டாதீங்க. எப்படி பார்த்தாங்கன்னு நோட் பண்ணுங்க​)

நிஷா அவளின் தாத்தாவிடம் பேசிய விதத்தில் நவீன்  கவரப்பட்டான். தன்னால் முடிந்திடாத ஒன்றை மற்றவர் செய்தால் பார்க்கும் பார்வை அது. (ஏன் அப்படிங்கற உங்க கேள்விக்கு பதிலை அவனே நிஷாவிடம் சொல்லும்போது கேளுங்க) 

தன்னிடம் சண்டையிடும் அஞ்சனா மற்றவர்களிடம் (இந்த மற்றவர்களில் வருவது பிரிண்ட்ஸ்,சந்தோஷ்,தாத்தா. இதில் கமலும் அடக்கம்) பழகும் விதத்தில் ஆச்சரியமடைந்தான். அவளை சண்டைகோழியாக பார்த்தவன் அவளின் இந்த முகத்தை எதிர் பார்க்கவில்லை.

"கிளம்பலாம். லேட் ஆகிடுச்சு"

"எப்படி போவீங்க. ஹெல்ப் பண்ணனுமா." என்றான் ஹர்ஷா.

"இல்லை. பக்கத்தில்தான் பஸ் ஸ்டாப். நாங்க கிளம்பறோம்" என்றாள் ஹாசி.

"ஓகே. நாங்க பஸ்ஸ்டாப் வரைக்கும் வருகிறோம்" என்றான் நவீன்.

"ஓகே" என்றாள் அஞ்.

நால்வரும் விடைபெற்று பஸ்சில் கிளம்பினர்.

லாஸ்ட் அப்டேடில் நால்வரின்  (சாதனா, ஹாசினி, ஹர்ஷா, சர்வேஷ்)  தடுமாற்றத்தையும்  இது காதலான்னு  பொறுமையாக முடிவு செய்வாங்கன்னும்  சொல்லியிருந்தேன்  ஆனால்  இந்த அப்டேடில் அங்கே நான்கு ஜோடி கண்களும்  அதன்  வேளையில் செவ்வனே செய்ததுன்னும், அவர்களின் பிரிண்ட்ஸ் கிண்டல்  செய்றாங்கன்னும் நான் சொல்லியது ஏன்னு  உங்களுக்கு தோன்றும். அதை அடுத்த  அப்டேடில்  பார்க்கலாம்

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:855}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.