(Reading time: 21 - 41 minutes)

து சரி!' என்றான் ஏளனத்துடன். பிறகு, இவன் ஏன் இவ பின்னாடி சுத்தறான்? இவனோட மத்த ப்ரண்ட்ஸ் மாதிரி கிடையாதே குழலீ? இந்த பொண்ணும் இவன் கூட கோவிலுக்கு வந்திருக்கு?...

சரி சரி. புலம்பாதீங்க! அவளையே கேட்டுடலாம் வாங்க!

அங்கே...

அவளது ஆக்டிவா அருகில் நின்றிருந்தாள் குழலீ. அவன் வரவில்லை. திரும்பி ஆட்டோ ஸ்டாண்ட் சென்று ஆட்டோ பிடித்து 'பெசன்ட் நகர் பீச் அண்ணா.. எவ்வளவு?' என்றாள். அதில் ஏறப்போனவளை ஓட்டமும் நடையுமாக வந்தவன் தடுத்து நிறுத்தி ஆட்டோவை கட் செய்து அனுப்பினான்.

என் மொபைல்...சாவி கொடுங்க.. நான் போகனும்!

கோபமா இருக்கும் போது வண்டி ஓட்டக்கூடாது மேடம் ... அதுவும் வீட்டுக்கு!

நான் வீட்டுக்கு போகலை...

எங்க போற?

உங்ககிட்ட சொல்லனும் னு அவசியம் இல்ல..

கண்டிப்பா இல்ல தான். பட் எனக்கு இருக்கே! என் மாமியார்கிட்ட வாக்கு கொடுத்திருக்கேன்.. பத்திரமா வரோம்னு! உன் மாமனாரும் மாமியாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க வீட்டுக்கு வருவாங்க... சோ...

ஐ வாண்ட் டூ பீ அலோன்...

எஸ் ஷூவர்! எங்கே னு மட்டும் சொல்லு.

பெஸ்ஸி பீச்...

பையை திறந்து அவளது மொபைலை எடுத்துக் கொண்டிருந்தவன் திகைத்து போய் ஒரு நொடி அவளை நிமிர்ந்து பார்த்தான். பின்னர் புன்னகையுடன் அவளது மொபைலையும் ஒரு சாக்லேட்டையும் நீட்டினான். சரி வா போகலாம் என்றான்.

உங்களுக்கு தான் வாங்கினேன் இந்த சாக்லேட் என்று அவனிடமே திருப்பினாள்.

நீ வாங்கின சாக்லேட் இங்க இருக்கு என்று அதை எடுத்து காட்டியவன் 'இது நான் உனக்கு வாங்கி வெச்சிருந்தேன். நிச்சயத்திற்கு அப்புறம் முதல் மீட்டிங் ல அதனால தான் வாங்கிட்டு வந்தேன் எனக்கு பிடித்த சாக்லேட்!

இப்போது அதே அதிர்ச்சி இவள் முகத்தில்! அதற்காக தானே இவளும் வாங்கினாள்!

நான் முன்னாடி போறேன். வழி தெரியும்ல?

பீச்சில் கடல் மணற்பரப்பில் கால்களை கட்டிக்கொண்டு அந்த வங்கக்கடல் அலைகளை பார்த்தவாறு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். மாலை ஆறரை மணி. மனது ஏதோ லேசான உணர்வு!

அருகில் ஏதோ பேசு சத்தம் கேட்க திரும்பியவள் சற்று தொலைவில் நான்கு பேர் அமர்ந்து அங்கிருக்கும் பெண்களைப்பற்றி தவராக பேசிக்கொண்டிருந்தனர். இவளை கைக்காட்டி ஏதோ பேச திரும்பி கடலை பார்த்தாள். அங்கே பிரபு கடலில் கால் நனைத்தவாறு தோள்களில் மோகனும் சக்தியும் இருக்க விளையாடிக்கொண்டிருந்தான். அவனை அங்கே கண்டதில் ஆறுதல். அந்த காட்சியை ரசித்தவாறு இருக்க அருகே மலரின் குரல் கேட்டது.

மலர்... என்று அழைத்து அவளை தழுவிக்கொண்டாள் குழலீ! அருகே செந்தில்!

நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும் குழலீ!- செந்தில்

அவன் பேச பேச அமைதியாக இருந்த குழலீ ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் பொறிந்துத்தள்ளிவிட்டாள்.

வெகு நேரமாய் இதை பார்த்து கொண்டிருந்த பிரபு இனி இது சரி வராது என்று உணர்ந்து, டேய் சித்தி கிட்ட போலாமா டா?' என்று அழைத்து வந்தான்.

மலர் உன் புருஷனை அமைதியா இருக்க சொல்லு!

டேய் பூங்குழலீ!

வேண்டாம் எதுவும் பேச வேண்டாம்! உங்க பக்கத்தை சொல்லிட்டீங்க ல? கிளம்புங்க!

குழல்மா! கொஞ்சம் என்னை பேச விடு!

....

டேய் சக்தி!

வேண்டாம் செந்தில்! அப்படி கூப்பிடாதீங்க!' என்னும் போதே குரல் உடைந்திருந்தது குழலீக்கு!

அதற்குள் குழலீயின் அருகே வந்தமர்ந்திருந்தான் பிரபு. பேசுவதை கவனித்து கொண்டிருந்தான்!

அவளது வலது கரத்தை தன் கைகளுக்குள் வைத்து கெஞ்சிக்கொண்டிருந்தான் செந்தில்!

டேய் புலி..! இங்க பாருடா!

அதை கவனித்த பிரபுவிற்கு மேலும் அதிர்ச்சி! 'நான் வைத்த பெயர் இவனுக்கு எப்படி தெரியும்?'

வேண்டாம் அத்தான்! அப்படி கூப்பிடாதீங்க! உங்களுக்கு அந்த உரிமை இல்லை.. கையை பிடிக்கவும் தான்!' என்ற சொல்லும் போதே உடைந்து அழுதுவிட்டாள்.

தன்னிச்சையாக அவளது கையை அழுத்தி கொடுத்தான் பிரபு. என்ன தோன்றியதோ அவன் கையை பிடித்துக்கொண்டு அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டு தேம்பினாள். தோள்களை ஆதரவாக அணைத்து தலையை தடவிக்கொடுத்தான் பிரபு. 

'பிரபு!' என்று திடுக்கிட்டான் செந்தில். டேய் மற்ற பெண்களை போல் இல்லை டா அவள்... குழலீயை விட்டுடூ!

தெரியும் னா! ஆனா...உனக்கென்ன னா தெரியும் இவளை பற்றி?

எனக்கா?? அவ பிறந்ததிலிருந்து பார்த்துட்டு இருக்கேன் டா இவளை! 

பிறந்ததிலிருந்தா?!

ஆமா... குழலீ என்னோட சொந்த அத்தை மகள்!

ஓ!

அதனால தான் சொல்லறேன் டா!

முடியாதே செந்தில்!

ஆங்ங்...

அதற்குள் குழலீ தன்னை மீட்டுக்கொண்டாள். அவனை விட்டு விலகி அமர்ந்தாள்... ஆனால் அவள் இடது கரம் மட்டும் பிரபுவின் கைபிடியில் இருந்தது.

பிரபு..' என்றழைத்து மலர் ஏதோ சொல்ல தொடங்கும் முன் அவனே தொடர்ந்தான்.

இங்க பாரு குழல்... உங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏதோ பிரச்சனை னு தெரியுது! பேசி தீர்த்துக்கறது பெட்டர்!

புலீ...' என்று கூப்பிட்டு செந்தில் பேச தொடங்கும் முன்னரே கையை உயர்த்தி 'போதும் சின்ன அத்தான்!' என்றாள்.

குழந்தைகள் சற்று தள்ளி ஆனால் கண் எதிரே விளையாடுவதை பார்த்துவிட்டு...'நான் ஏதாவது ஹெல்ப் செய்ய முடியுமா அண்ணி?...என்ன நடந்தது குழல்?'

என்ன நடந்தது???

பூங்குழலீயின் தாய் லஷ்மியின் சொந்த சித்தப்பா மகன் ஞானசம்பந்தம். ஒரே மகன். லஷ்மியின் வீட்டில் ஐந்தும் பெண்கள். அந்த தலைமுறையின் ஒரே ஆண்பிள்ளையானதால் அக்கா தங்கைகள் நடுவே என்றுமே ராஜாதான்! லஷ்மியும் அவர் தங்கையும் வயதில் சிறியவர் என்பதால் ஞானசம்பந்ததிற்கு தனி பாசம் தான். அவருக்கு இரண்டு மகன்கள்... மூத்த மகன் விக்னேஷ்வரன் என்கிற விக்கி...இளைய மகன் தான் செந்தில்வேலன் என்கிற செந்தில்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.