(Reading time: 21 - 41 minutes)

ருவரும் பார்த்து பிறந்த முதல் குழந்தை என்பதால் இருவருக்கும் குழலீ மீது அதீத பாசம். அதுவும் பெண் பிள்ளை வேறு! பெரிய அத்தானுக்கும் குழலீக்கும் பத்து வயது வித்யாசம்... அதனால் வெகு அக்கறையுடன் பார்த்துக்கொள்வான்! ஆனால் செந்திலுக்கும் குழலீக்கும் ஆறு வயதுதான் வித்யாசம் என்றாலும் எப்போதும் ஏட்டிக்கு போட்டி தான்! ஒருவரை ஒருவர் வம்பிழுத்து கொண்டே இருப்பார்கள்! இவர்கள் சண்டையை வெகுவாக ரசிப்பவர்கள் மாமா சம்பந்தம் மாமி வள்ளியும் தான். குழலீயின் ஆறாம் வயதில் விடுமுறைக்காக சித்தியின் வீட்டிற்கு பெங்களூர் சென்றிருந்தனர் இரு குடும்பமும்! அப்போதுதான் மாமாவும் மாமியும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். குழலீயை தங்கள் வீட்டிற்கு மருமகளாக அனுப்ப வேண்டி! பெரியவர்களுக்கு சம்மதம் என்றாலும் இந்த வயதும் நேரமும் பேசுவதற்கு ஏற்றதல்ல என்று ஒத்தி வைத்தனர். இதனால் இன்னும் அதிக அக்கறையுடன் குழலீயை பார்த்தனர் மாமாவும் மாமியும்! அன்று வேறு ஒரு நிகழ்ச்சியும் நடந்தது. விளையாடும் போது தெரியாமல் குழலீ கதவு மூடும் இடத்தில் தன் விரல் வைத்திருக்க இது தெரியாமல் செந்திலும் கதவை சாத்திவிட.. விரல்கள் மாட்டிக்கொள்ள... அடுத்த நொடி வீடே களேபரமானது! அவள் விரல் வீக்கமும் அழுது சிவந்த கண்களும் பார்த்தபோது நான்கு அடி இறங்கியது செந்திலின் முதுகில்! அன்று இரவு வரை யாருமே அவனிடம் பேசவில்லை..

அமைதியான புள்ள டா அது! என் மருமகளை அழவெச்சிட்டியே..' என்றார் வள்ளி.

அவளா அமைதி... ஆக்டிங் மா... அது புலி... பதுங்கறது பாயத்தான்! - செந்தில்

இப்போது அடி விழுந்தது விக்கியிடம் இருந்து!

குழந்தையை பார்த்து என்ன பேச்சுடா இது? தப்பு செய்தது நீ... அவளை போய் ஏன்டா திட்டற? சாரி சொல்லு அவகிட்ட' என்று சொல்ல அவனும் மன்னிப்பு கேட்டான்.

காலம் வேகமாய் சுழல...தந்தைக்கு வேலை மாற்றலாகி திருவனந்தபுரம் சென்றனர் செந்தில் குடும்பம். பிரிந்து சென்றாலும் தொடர்பில் இருந்தனர் குடும்பங்கள். ஆனால் செந்தில் மட்டும் குழலீயிடம் பேசவில்லை. மறுபடியும் அவர்கள் சென்னை குடிபெயர்ந்த போது... குழலீ கல்லூரியில் முதலாம் ஆண்டு! அடுத்த ஆண்டே மாமா இதய நோயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட துவண்டுவிழுந்த மாமிக்கு புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது! அடிமேல் அடி விழுந்ததால் கலங்கியிருந்த குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது! குழலீயை மருமகளாக்கும் முடிவில் உறுதியாக இருந்தனர் பெற்றோர்கள்.

ஆனால் விக்கி தனது காதலை வெளிப்படுத்த அவன் காதலி நதியா வீட்டில் பேசி நிச்சயத்தை முடித்தனர். அதனால் செந்திலுக்கு குழலீயை மணமுடித்து திருமணத்திற்கு பிறகு அவள் படிப்பை தொடரட்டும் என்றும் முடிவு செய்தனர். ஆனால் எதிர்ப்பு வந்தது மூத்த தலைமுறையிடம் இருந்து! குழலீயின் பாட்டியும் செந்திலின் பாட்டியும் இதற்கு சம்மதம் சொல்லவில்லை!

செந்திலுக்கும் குழலீக்கும் பெரிதாக எந்த ஈடுபாடும் இல்லை. குழலீக்கு திருமண வயதும் இல்லை! ஒருவருக்கு ஒருவர் திமிர் பிடித்தவர் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் மாமா மாமியின் உடல் நிலை, விக்கியின் திருமணம் என அனைத்தும் இவர்கள் இருவரை சாமதானப்படுத்த ஈடுபாட்டுடன் வேலைகளை செய்து வந்தனர். குழலீயும் செந்திலும் மணம்விட்டு பேசியதால் தங்களுகிடையே இருந்த கருத்து வேறுபாடு மறைந்து மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். அடுத்த ஆறு மாதத்தில் மாமாவின் திடீர் மரணம்... மீள்வதற்குள் மாமியின் மறைவு என்று குடும்பத்தை நிலைக்குலைய செய்துவிட்டது!

குழலீயின் அப்பாவும் சித்தப்பாவும் முன் நின்று விக்கியின் திருமணத்தை நடத்தி முடிக்க.. அன்றே சபையின் முன் செந்திலின் திருமண பேச்சை எடுத்தனர். அப்போது தான் அவன் தன் முடிவை சுப்ரியாவுடனான காதலைப்பற்றி சபையின் முன் வைத்தான்.. பேச்சும் நின்றது!

பின் குழலீயின் உதவியை நாடி அவள் சென்று செந்திலின் காதலி சுப்ரியாவிடம் பேசினாள். ஏனோ குழலீக்கு முதலில் இருந்தே சுப்ரியாவை பிடிக்கவில்லை. அதை அவனிடமும் கூறினாள். அவனோ குழலீ அவள் அழகை கண்டு பொறாமை கொண்டு பேசுவதாக கின்டல் செய்தான்.

'சின்னத்தான்! சுப்ரியா உனக்கு சரியா வருவாளானு யோசிச்சுக்க! அழகு என்னைக்குமே கூட வராது அத்தான்! பார்த்துக்க! பணம் இல்லனா... அது பாரவாயில்ல... ஆனா உன் மேல் உண்மையான அன்பும் நம்ம குடும்பத்திற்கு ஏற்ற பண்பும் வேணும் அத்தான்!'

புலி! அப்ப அவளுக்கு பண்பு இல்லைனு சொல்லறியா??' என்று சீறினான் செந்தில்.

ஆமாம்...இது எந்த வகையிலும் நம்ம குடும்ப மானத்தை பாதிக்கக்கூடாது! என்னை நம்பிதான் மாமாவும் மாமியும் உன்னை விட்டுடூ போனாங்க! உன் வாழ்க்கை கெடுவதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது!

எனக்கு சுப்ரியா தான் மனைவி! என்ன நடந்தாலும் பரவாயில்லை!' என்றான் கடும் கோபத்துடன்.

இதற்கிடையில் செந்திலின் பழகும் தன்மையினால் ஈர்க்கப்பட்டு அவன் மேல் ஒரு தலையாக காதல் கொண்டாள் செந்திலின் அம்மாவழி முறைப்பெணும் குழலீயின் பள்ளித்தோழியான பொன்மலர். குழலீ செந்தில் என்று இருவரிடமும் தன் எண்ணத்தை கூறினாள். அவன் மனது அறிந்ததுனால் மலரிடம் செந்திலை மறக்குமாறு கூறி அனுப்பிவைத்தாள். 

ஒருவாறு கெஞ்சி பெரியவர்களை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து முன் நின்று மணமுடித்து வைத்தாள். எல்லாம் சரியாக நடந்து கொண்டிருப்பதாக எண்ணினாள். சுப்ரியா செந்தில் மணம் முடிந்து ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில் நதியாவிடம் இருந்து அழைப்பு வந்தது உடனே வருமாறு. அங்கே சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி. கற்சிலை போல் அமர்ந்திருந்தான் செந்தில்.

நதியா கா என்ன ஆச்சு?

அந்த பொண்ணு வேண்டாம்னு எவ்வளவு சொன்னோமில... அவன் ஆசைப்பட்டானு கல்யாணம் செய்து வெச்ச! இப்போ பாரு குடும்ப மானமே போச்சு...' என்று ஒரு காகிதத்தை நீட்டினாள்.

சுப்ரியாவின் கடிதம்! சுருக்கமாக இருந்தது இதுதான். வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்! 'எனக்கு உன்னுடன் வாழ விருப்பம் இல்லை. நீ எந்த வகையிலும் எனக்கு தகுதியானவன் இல்லை. உன்னால் என் வாழ்க்கை தரத்திற்கு ஈடு கொடுக்க முடியாது! அதனால் நான் போகிறேன் என் காதலை தேடி! என்னை தேட வேண்டாம்! பின்குறிப்பு- எனக்காக நீ கொடுத்த எல்லாவற்றையும் எடுத்து செல்கிறேன்!'

அவளுக்காக செந்தில் வாங்கி கொடுத்த நகைகள், வீட்டில் இருந்த இரண்டு லட்சம் ரொக்கம், அவன் பரிசாக கொடுத்த கார், மருமகளுக்காக சம்பந்தம் செய்து வைத்திருந்த ஐந்து லட்சம் டேபாசிட், இரண்டு நாட்களுக்கு முன் அவள் பெயரில் பதிவு செய்யப்பட்ட நில பத்திரம்!' என்று அனைத்தும்!

'என் உயிர் மட்டும் தான் எடுத்துட்டு போகல!' என்று கண்ணீர் வடிக்கும் செந்திலை பார்த்து உடைந்துவிட்டாள் குழலீ!

அந்த கடிதமே சாட்சியாக இருந்ததால் விவாகரத்து பெற்றான். சோகமே உருவாய் நடமாடும் செந்திலை பார்த்த விக்கி மனம் தாங்காமல் குழலீயின் தந்தையிடம் வந்தான்.

மாமா...தம்பியை இப்படி பார்க்க முடியலை! இப்போ அவனுக்கு ஆறுதலா துணையாக ஒருதர் கண்டிப்பா தேவை! இன்னோரு கல்யாணம் செய்துடலாமா?'

எனக்கும் அதுதான் சரினு படுது.. ஆனா பொண்ணு??

தேடுவோம் மாமா! உண்மையை சொல்லுவோம்... அப்புறம் கடவுள் விட்ட வழி!'

சரி பா என்று சொல்லி சிறிது நேரம் யோசித்தவர்... 'ஏம்பா விக்கி...குழலீயையே கட்டி வெச்சா என்ன? என் பொண்ணு செய்த வேலை தானே..அவளே திருத்தட்டும்!'

இந்த முறை யாரும் இவர்களிடம் விருப்பத்தை கேட்கவில்லை. ஆனால் இருவருக்குமே இதில் துளிக்கூட விருப்பம் இல்லை..ஆனால் பெரியவர்களிடம் இதை கூறுவதற்கும் பயமாக இருந்தது. கோவிலில் திருமணம் என்று முடிவு செய்தனர். இருபது வயது கூட எட்டவில்லை குழலீக்கு! பத்து நாளில் திருமணம் என்ற நிலையில் ஒரு நாள் கழுத்தில் மாலையுடன் மணமுடித்து வந்து நின்றனர் செந்திலும் பொன்மலரும்!

எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். குழலீக்கு ஒரு பக்கம் உற்சாகம்... மறுபக்கம் அதிர்ச்சி என்று இருந்தாள். கடனே என்று திருமணம் செய்து கொள்வதை விட மலரின் காதலாவது கனிந்தது! அவள் காதல் நிச்சயமாக செந்திலை மாற்றும்! ஆனால் இந்த அவசர திருமணத்திற்கு செந்தில் சொன்ன காரணம் தான் இவ்வளவு கோபத்திற்கும் ஆனிவேர்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.