(Reading time: 21 - 41 minutes)

'ம்பா இதை முன்கூட்டியே சொல்லியிருந்தா நாங்களே செய்து வெச்சிருக்க மாட்டோமா? இப்போ பாரு உன் தாய் மாமன் வந்த இங்க கத்திகிட்டு இருக்கான்!'

நீங்க உங்க பெண்னை தானே கட்டி வைக்க பார்த்தீங்க? எனக்கு அவளை பிடிக்கலை!

நீங்க நல்ல ப்ரண்ட்ஸ் தானே டா? அவகிட்ட இதை சொல்லிருக்கலாமே?என்றான் விக்கி.

ப்ரண்ட்ஸ் னா? கல்யாணம் செய்துக்கனுமா? குழலீ எனக்கு மனைவியா வர தகுதியானவள் இல்லை! எனக்கு எந்த வகையிலும் ஏற்றவள் இல்லை! அவகிட்ட சொல்லி அவ செய்து வைத்ததால் தானே நான் இப்படி இருக்கேன்! அவகிட்ட சொல்லாமல் அவ தலையீடு எதுவும் இல்லாமல் இருக்கனும் னு தானே நாங்களே முடிவு செய்தோம். இது என்னோட வாழ்க்கை தலையிட யாருக்கும் உரிமையில்லை... மலர் சம்மதிச்சு தான் கல்யாணமும் நடந்துச்சு. அதனால் நான் யாருக்கும் எதற்காகவும் பதில் சொல்லனும் னு அவசியமில்லை! விருப்பம் இருந்தா இங்க இருங்க.. இல்லைனா கிளம்பி போய்டுங்க! உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது!'

எல்லா தவறும் குழலீது என்று குற்றம் சாட்டப்பட.. சரமாரியாக பேச்சு, கேள்வி, திட்டு என்று அவளையே சாட மனம் ஒடிந்தாள் குழலீ! இவளால் தந்தைக்கு அவமானம். இவர்கள் பேச்சற்று வெளியேற... செந்தில் குடும்பத்துடன் தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாய் விட்டுப்போனது! பாட்டி, சித்தப்பா, அப்பா என யார் மறைவுக்கும் சொல்லியனுப்பியும் யாருமே வரவில்லை!'

கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து இன்று தான் பார்கிறாள் இவர்களை. அவன் குழந்தையை பார்த்தவுடன் பழைய அன்பு துளிர்விட்டாலும்... அவன் வார்த்தைகள் மனதை ரணமாக்கியது.’

இதுகா இவ்வளவு டேன்ஷன்? கோபம்? - பிரபு

திரும்பி அவனை முறைத்தாள் குழலீ.

அப்படியே கண்ணை விரிச்சி முறைக்காதே! இந்த முறைப்பேல்லாம் உன் அத்தான் கிட்ட செல்லுபடியாகும்... என்கிட்ட இல்லை!

...

கேட்ட கேள்விக்கு பதில் வேணும் எனக்கு!

டேய் நீ என்ன டா புலியையே திட்டுற? தப்பு என் பக்கம் தான். எதை செய்தாலும் அவகிட்ட சொல்லிட்டு தான் செய்வேன்... இது ஒன்னு மட்டும் அவளுக்கு நல்லது செய்யறதா நினைத்து அவளை காயப்படுத்திட்டேன்!

நீ சும்மா இரு செந்தில்....எல்லாரும் அவளுக்கு கட்டுப்பட்டு இருக்கனும் னு நினைப்பு!

இங்க பாரு பூங்குழலீ... உனக்கு நல்லது செய்ய போய் தான் நாங்க கல்யாணம் செய்துகிட்டோம்! உன் தகுதிக்கு அவர் ஏற்றவர் இல்லைனு அவர் நினைச்சார்.. உன்கிட்டையோ அப்பாகிட்டயோ சொன்னா ஒத்துக்க மாட்டீங்க... உன் செயல், எண்ணங்கள், கனவுகள், லட்சியங்கள் எல்லாமே அவருக்கு தெரியும். அவரை திருமணம் செய்தா அவருக்காக நீ இதை எல்லாத்தையும் விட்டு பிரச்சனைக்கு காரணம் நீ தானு நினைச்சு முடங்கி போயிருப்ப...அதனால தான் அத்தான் என்கிட்ட வந்து பேசினார். 'குழலீக்கும் எனக்கும் திருமணம் நடந்தா நாங்க இரண்டு பேரும் திருப்தியா வாழாமல் வேதனையோட இருப்போம். இதனால உனக்கும் வேதனை தான். அதனால என்னை கல்யாணம் செய்து குழலீயையும் என்னையும் இந்த இக்கட்டிலிருந்து காப்பாத்து. காதல் மனைவியா இல்லைனாலும் நான் பட்ட வேதனையை உனக்கு தரமாட்டேன் னு' சொன்னார். எனக்கு நீங்க இரண்டு பேரும் ரொம்ப முக்கியம். அதனால தான் ...'

நீ இப்போ அனுபவிக்கும் கஷ்டத்திற்கு எல்லாம் நானும் ஒரு வகையில் கரணமாயிட்டேன்! மாமா இல்லாத இடத்தில நான் இருந்து பார்த்திருக்க வேண்டியது... நீ பொறுப்பு எடுத்து செய்துட்டு இருக்க... எந்த முகத்தோட வந்து உன்னை பார்க்கனு தான் நாங்க வரவேயில்லை. 

இதை எல்லாம் என்கிட்ட நேரடியா சொல்லிட்டே செய்திருக்கலாமே அத்தான்? மறைத்து செய்னும் னு அவசியம் இல்லையே... சொல்லியிருந்தா நானே ஏதாவது உதவி செய்திருப்பேனே! ஒரு ஹின்ட் கொடுத்ததை இப்படி பிடிச்சிக்கிட்டு வேலை செய்திருக்கல... கோடிட்டு காட்டின எனக்கு ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்? ஏதாவது நான் முன் ஏற்பாடாவது செய்திருப்பேன்! திடீர்னு வந்தது அப்பா மனசு ரொம்ப உடைஞ்சிட்டார்... அது தான் எனக்கு வருத்தமே!'

ஆங்ங்!' என பிரபுவும் மலரும் இவளை பார்த்து திகைத்தனர்.

நீயா?? எப்போ கொடுத்த? என்றான் செந்தில்.

பின்னே... நீயா இவகிட்ட போய் ஐடியா கேட்டியா என்ன? சொல்லு பார்க்கலாம்... எப்போ உனக்கு தோணி நீ போய் இவளை சந்திச்ச? இந்த மரமண்டைக்கு என்னைக்கு உறச்சுது?!

ஏய் என்ன டீ அவரை திட்டற?

பார்டா! அவரை சொன்னா உனக்கு வலிக்குதோ? இதற்கு பேர் தான் லவ்வா அத்தான்?

ஆமாம்.. என்னங்குற? நீ மொதல்ல சொல்லு அப்புறமா கின்டல் செய்யலாம்!

நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவேயில்லையே?

ஆமாம்... ஏதோ சொன்ன... 'ஊருக்காக கல்யாணம் பண்ணாத... நீ விரும்புறவங்களை விட உன்னை நேசிப்பவரை கட்டிக்கோ. எனக்கு உன் மேல காதல் கத்திரிக்காய் எல்லாம் வராது.. ஆனா உன்னையே நினைச்சுக்கிட்டு ஒருத்தி இருக்கா..நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும் னு அவ மனசு உனக்காகவே துடிக்குது..' இப்படி ஏதேதோ சொன்ன?!

என்கிட்டயும் இப்படி தான் ஒரு நாள் வந்து புலம்புனா...'அவனை கட்டுறதுக்கு பதில் நான் சன்யாசியாகலாம்... அவன்லாம் ஒரு ஆளு... கண் முன்னமே இருக்கறது தெரியாம.. பறக்கிறதுக்கு ஆசைப்பட்டானு... 'இன்னும் ஏதேதோ சொன்னாளே! - பொன்மலர்

சிறு மௌனத்திற்கு பின்...

ஹேய் நீ எங்க இரண்டு பேரையும் ஏதோ சொல்லி கோர்த்துவிட்டு வேலை பார்த்திருக்க! இது தெரியாம நாங்களும் நடந்திருக்கோம்! கடைசியில் உன் ப்ளான் படி தான் நடந்திருக்கோமா?? முட்டாளாக்கிட்டியே குழல் எங்களை!

அப்பாடா! ஒரு வழியா தெரிஞ்சுக்குட்டீங்களே... நீங்க முட்டாள்னு! என்ன அதிசயம்? என்னமோ எனக்காக தான் நீங்க இருவரும் மணம் செய்தேன்ல சொன்னீங்க... அப்போ அவங்க இரண்டு பேருக்கும் என்ன அர்த்தம் அத்தான்??' என்று யோசிப்பது போல் செந்திலை பார்த்து கண் சிமிட்ட... அவன் எழுந்து அவள் காதை திருக...

ஆ..அத்தான்... வலிக்குது! விடுங்க! வாழ்க்கைக்கும் ஒரு தண்டனை ஏற்பாடு செய்தாலும் உன் திமிர் அடங்கவே மாட்டுது பாரு!' என்று வாய்விட்டுச் சிரித்தாள்.

டேய் புலி! உன்னை இப்படி சிரிச்சு பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு டா! இந்த சிரிப்பு, குறும்பு எப்போதுமே அப்படியே இருக்கனும் உன் முகத்தில்! அப்படியே இருக்கிற மாதிரி பார்த்துக்க ஒரு காவலனை தான் தேடனும்..

சட்டேன சுருங்கிவிட்டது குழலீயின் முகம்.

டேய் புலி! என்ன ஆச்சு?

அப்படி கூப்பிடாதீங்க செந்தில்!

ஏன்? என் அத்தை பெண்ணுக்கு நான் வைத்த செல்ல பெயர்... நான் யாருக்கு பயபடனும்?

எனக்கு!' என்றான் பிரபு.

என்னது?? போடா இவனே! டேய் நானும் கேட்கனும் னு நினைச்சேன். உனக்கு எப்படி இவளை தெரியும்? பட் நான் சொன்னது போலவே இவ உன்னோட மற்ற கர்ள் ப்ரண்ட்ஸ் மாதிரி இல்ல டா.. நீ ஆப்பீஸ் ல அடிச்ச லூட்டி எல்லாம் இங்க செல்லுபடியாகாது தம்பி! புலி டா! பேரு சும்மாவா வெச்சேன்..

ஆமா ஆமா.. கரேக்ட் தான்!

அதனால தான் சொல்லறேன்.. கேட்டுக்கோ! என் அத்தை பொண்ணு டா அவ... வம்பு பண்ணாதே சரியா?

முடியாதே னா! எனக்கும் அத்தை பொண்ணு தானே மேடம்!

ஆங்ங்? உனக்கா?? என்ன டா உளரல்?

உனக்கு எப்படி இவரை தெரியும் செந்தில்? - அது வரை அமைதியாக இருந்த குழலீ.

இவன் என்னுடைய பழைய கம்பெனியில் என் கீழே என் டீமில் வேலை பார்த்த பையன் டா. கிட்டத்தட்ட ஆறு வருட பழக்கம் அதனால வந்த நட்பு.. வேலைல இருக்கும் போது பெயர் சொல்லி கூப்பிடுவான்..மற்றபடி அண்ணா தான்! ஏனோ என்னை மட்டும் தான் அப்படி கூப்பிடுறான்! எனக்கும் தம்பி இல்லையா அதனால ஒரு தனி பாசம் னு வையேன்! இந்த பொண்ணு சக்தி மேல இவனுக்கு அவ்வளவு பாசம்! இவளும் பிரபுபா னு இவனையே சுத்தி வருவா.. இரண்டு பேரும் அடிக்கிற லூட்டி இருக்கே...! சரி நீ ஏதோ சொன்னியே பிரபு? என்னது?

இந்த விஷயம் உங்களுக்கு தான் முதல்ல சொல்லனும் னு இருந்தேன்... நானே உங்களை இன்னிக்கு கூப்பிட்டலாம் னு இருந்தேன்... நீங்க ரொம்ப நாளாக எதிர்பார்த்த சேதி!

டேய் பிரபு! கல்யாணமா?? யாரு டா அந்த அதிர்ஷ்டகார பொண்ணு?

வர டிசம்பர் 12 எங்களுக்கு அதாவது எனக்கும் பூங்குழலீக்கும் திருமணம்!

என்னது?!' என்றனர் பொன்மலரும் செந்திலும்.

தொடரும்...

Episode # 08

Episode # 10

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.