(Reading time: 19 - 37 minutes)

" தில் சொல்லு ஷக்தி ! உன்னால மித்ரா இல்லாமல் சந்தோசமா இருக்க முடியுமா , இங்க இவ எல்லாருக்கும் தெரியுற மாதிரி அழறா , நீ மனசுக்குள்ள அழற அப்படிதானே "

" எப்படி அண்ணா கரெக்டா சொல்றிங்க " என்று மனதில் நினைத்தான் ஷக்தி

" காதலும் சரி, வேறெந்த உறவும் சரி , நாம நினைக்கிற அளவுக்கு அது கஷ்டமானது இல்லை சக்தி .. நாமதான் சின்ன விஷயத்தை அதிகமா யோசிச்சு  மூளையை குழப்பிக்கிறோம் ... பதிலுக்கு கிடைக்கிறது கண்ணீரும் தலை வலியும் தான் !"

" ...."

" டேய் நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் .. நீ தூங்கிட்டியா " என்று மதி கேட்கவும் சட்டென சிரித்தே விட்டான் ஷக்தி .. ரகசிய திருமண ஏற்பாட்டை பற்றியும் சொல்லி அவனது மனதை குளிர்வித்தான் ..

" இதை முன்னாடியே சொல்லி இருக்கலாமே , ஏன் என்னை வெச்சு காமிடி பண்ண நீ " என்றான் மதி பாவமாய் ..

" ஹா ஹா .. அப்படி இல்லை ..எப்பவுமே மிரட்டியே பழகி , மிரட்டபடுறது வித்தியாசமா இருந்துச்சு " என்றவாறு சிரித்தான் .. அதன் பிறகு இருவரும் இன்னும் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைத்தனர் ..

" பாருடா , ரொம்ப இன்டரஸ்டிங் டா .. பட் நான்தான் கொஞ்சம் தூங்கிட்டேன் " என்று சோம்பல் முறித்த மனைவியின் தலையில் தட்டினான் ஷக்தி ..

" லூசு .. போடி "

" கோவமா ஷக்தி மாமாவுக்கு ?"

" இல்ல ரொம்ப சந்தோசம் "

" ஆஹான் .. அப்போ எனக்கொரு ஐ லவ் யூ சொல்லு "

" அய்யே முடியாது போடி "

" டேய் நான் உன் பொண்டாட்டி டா "

" ஆமாவா ? நைஸ் டூ மீட் யூ " என்றான் அவன் கிண்டலாய் ..

" உன்னைய " என்று பற்களை கடித்தவள் அருகில் இருந்த ஆப்பிளை அவன் மீது எரிய எத்தனிக்க

" அடியே எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சோட இருக்கட்டும் " என்று உடனே சமாதானம் ஆனான் ஷக்தி ..

" போடா , உன்னை திட்டுரதுக்கே மனசு வராது .. இதில் எங்க இருந்து அடிப்பேன் "

" இப்போ இப்டிதான் சொல்லுவ, ஒரு மூணு மாசம் போகட்டும் அப்போ பார்த்துக்குறேன் "

' வாயடி டா நீ ..! இவ்ளோ நாளா எங்க வெச்சிருந்த இந்த பேச்சை எல்லாம் ?"

" குரங்குக்கு வாக்கபட்டா மரம் தாண்டனும் .. லாயரம்மவுக்கு வாக்கப்பட்டா வாய் கிழிய பேசணுமே " என்றான் அவன் அசால்ட்டாய்  .. அப்போதுதான் ஒரு விஷயம் சட்டென ஞாபகம் வர பேச்சை தொடங்கினான் ஷக்தி ..

" மிது , எனக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம் தான் .. ஆனா "

" ஆனா "

" ஆனா, உடனே நம்ம லைப் ஸ்டார்ட் பண்றதுல எனக்கு இஸ்டம் இல்லை "

" ஆமா ஆமா முதல்ல லைப் ல நீ செட்டல் ஆகணும் .. வாழ்க்கையில வெற்றிக்கொடி கட்டனும் " என்றாள்  அவள் கனவுகள் மின்னும் விழிகளுடன்

" ஆமா நான் கோடி கட்டனும் அதனால் நீ ஏணி  பிடிச்சிகிட்டு நிற்க போறியா ?" என்று தீவிரமாய் கேட்டான் ஷக்தி

" என்னடா சொல்ல வர ?"

" நீ எதுக்கு  எம் ஏ  பி எல் படிச்ச ?"

" எதுக்குனா ? பிடிச்சிருக்கு படிச்சேன் "

" சரி பிடிச்சதை படிச்சாச்சு .. பிடிச்சவனை கல்யாணம் பண்ணியாச்சு ...அப்பறம் ?"

" அப்பறம் ..."

" என்ன கோழி முட்டை கண்ணு இப்படி விரியுது ?"

" டேய் "

" ஹே , நிஜம்தான் சொல்றேன் . நமக்கு கல்யாணம் ஆச்சு பட் அதுக்காக நீ வெறும் மிசர்ஸ் சக்தியா இருந்தா போதும்னு நினைக்காத "

" ..."

" எனக்கு லாயர் சங்கமித்ராவை பார்க்கணும் .. "

"..."

" கல்யாணம் ஆனா , நெக்ஸ்ட்  ஹனிமூன் , நெக்ஸ்ட் பேபி இப்படி சராசரி பொண்ணா  நான் உன்னை பார்க்க விரும்பல .. "

" ..."

" நீ அதிகம் கற்பனைகள் உள்ள பொண்ணு .. உன் கனவுகள் நிஜம் ஆகணும் .. "

" ...:"

" நம்ம கல்யாணம் உன் லைப்ல அடுத்த ஸ்டேப் ஆ இருக்கணுமே தவிர முற்றுபுள்ளி ஆகா கூடாது "

" ..."

" சோ ஷக்தி மாமா , இன்னும் கொஞ்ச நாள் ஷக்தி மாமா மட்டும் தான் .. ரோமேண்டிக் ஹீரோ எல்லாம் இல்லை " என்று சொல்ல வந்ததை அவள் மனம் கோணாமல் தெளிவாய் சொன்னான் ஷக்தி ..

" இதுதான் என்னவன் ..எனக்காக சிந்திப்பவன் .. அனுதினமும் என்னை காதலிப்பதை வார்த்தையால் சொல்லாமல்  செயலில் உணர்த்துபவன் .. " என்று  மனதிற்குள் சிலிர்த்தாள் மித்ரா .. அவன் போட்டிருக்கும் இந்த கண்ணிய  வலைக்கு தானும் உதவ வேண்டும் என்பதை மனதில் குறித்து கொண்டாள்  மித்ரா . மனதிற்குள் அவன் மீது காதல் பெருகி கொண்டே போனது .. அவன் கழுத்தை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்ச விரும்பிய ஆசையை மறைத்து கொண்டு

" ஹப்பாடி , எங்கேடா நான் டிப்பிக்கல் பொண்டாட்டியா மாறனுமோன்னு  பயந்துட்டேன் .. சூப்பர் டா .. ஒரு ஹை 5 கொடு " என்று கை நீட்டினாள்  மித்ரா .. ஷக்தி அவளையே பார்க்கவும் ,

" ஹையோ ஹை 5 க்கு மட்டும் தான் டச்சிங் டச்சிங் .. என்னை நம்பு " என்று விழிகளை உருட்டினாள்  மித்ரா ..

" ஹாஹஹா  " என்று சிரித்தபடி ஹை  5 கொடுத்தான் அவனும் .. விடிய விடிய கதை பேசினர்  இருவரும் ..

காதல் மட்டும் மனதிற்குள் எல்லை மீற , மோகம் ஏதோ புள்ளியாய் மறைந்து விட, அவன் அருகாமையில் சிறுபிள்ளை போல உறங்கினாள்  சங்கமித்ரா .. அவளது சீரான மூச்சு காற்றை  உணர்ந்தவன் எழுந்து அமர்ந்தான் ..

" தூக்கத்துல எதுக்கு டீ கண்ணாடி போட்டு இருக்கிற லூசு " என்று மனதிற்குள் திட்டி கொண்டே அவளது மூக்கு கண்ணாடியை  கழட்டி வைத்தான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.