“சார், என் மகள் தைரியமானவ, தற்கொலை செய்துக்குற கோழை கிடையாது. அவ இறந்து போன விடிகாலைக்கு முந்தின நைட் கூட எங்க கிட்ட பேசினாள். ரொம்ப சாதாரணமா இருந்தாள். அவ கூட நாங்க பிரெண்ட் போல தான் பேசி பழகுவோம். எப்போ எந்த பிரச்சனையா இருந்தாலும் எங்க கிட்ட தைரியமா ஷேர் செய்வா. அன்னைக்கு பேசினப்போ கூட அவ செய்ய போற ப்ராஜக்ட் பத்தி எல்லாம் சொன்னாள்”
“சூசைட் என்பது சில சமயம் ஒரு ஸ்ப்லிட் செகண்ட்ல கூட எடுக்க கூடிய முடிவு சார். ஆனால் இந்த காதல் தோல்வி பத்தி சொல்லுங்க. போலீஸ் பைல விக்னேஸ்வரன்னு ஒரு பையனை உங்க பொண்ணு லவ் செய்ததா பதிவாகி இருக்கு”
“அந்த விக்னேஷ் என் பொண்ணோட பிரென்ட் சார். மத்தபடி அவங்களுக்குள்ள லவ் எல்லாம் இல்லை”
“உங்களுக்கு கட்டாயமா தெரியுமா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
சம் பேசனும்”
“சார் திரும்ப என் மகனை போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லாம் அழைச்சிட்டு போகாதீங்க”
“இல்லை, இது சாதாரண விசாரணை தான் சார். உங்க வீட்டிலேயே ஒரு ரூம்ல பேசிட்டு போறோம்”
விக்னேஷ் கண்ணில் மின்னும் பயத்துடன்,
“இது என் ரூம் சார், வாங்க” என்று அவர்களை அழைத்து சென்றான்