(Reading time: 12 - 23 minutes)

ன்ன சொல்லறீங்க? குழலீ நீ நகர்ந்து போ... உன் அத்தான்கிட்ட நாங்க பேசறோம். ஆமா யாரு அந்த அதிர்ஷ்டசாலி குழலீ? அதுவும் எங்களுக்கு தெரியாம? ஐபேடை எடுத்து உன் அத்தான் கிட்ட கொடு.. சார் மாப்பிள்ளை போட்டோ இருந்தா காட்டுங்களேன்..' என்றாள் டீனா.

ஐபேட் நேராக பிரபுவின் கைகளுக்கு சென்றது. அதுவரை கண்களை சுழற்றி குழலீயின் அறையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் பிரபு.

பிரபு.. ஐபேடை குழலீயோட அத்தான்கிட்ட கொடு!

குழலீயோட அத்தான்கிட்ட தானே...அதனால தான் நான் இதை வெச்சிருக்கேன். என்ன அதிர்ஷ்ட்டசாலியா ... இல்லையா னு தெரியல! பட் மாப்பிள்ளையை பார்க்கனும்னு சொன்னீங்களே.. பார்த்துக்கோங்க! என்று தன் முகத்தை அப்படி இப்படி திருப்பி காட்டினான்

விளையாடாதே பிரபு!

நான் எங்க டீனா விளையாடறேன்? மாப்பிள்ளையை பார்க்கனும் னு சொல்லிட்டு என்ன கேள்வி இது? என்றுவிட்டு தன் கன்னத்து குழி தெரிய சிரித்தான்.

அவன் பேசும் போதே 'நினைச்சேன் பிரபு!' என்றான் டேவிட்.

கண்டுபிடிச்சிட்டீங்களா?! டேவிட்?

டேய் நீ தான் மாப்பிள்ளையா? - வெற்றி

நீ நிச்சயமாய் அதிர்ஷ்டசாலி தான் பிரபு! என்று ஒரு சேர கூறினர் டேவிட், டீனா, வெற்றி. யாழினி மட்டும் எதுவும் பேசவில்லை. 

ஹேய் என்ன எல்லோரும் ஒரு சேர கலேக்டர் மேடமுக்கே சப்போர்ட் செய்யரீங்க? என்னை பற்றி யாரும் நாலு வார்த்தை நல்லதா பேச மாட்டாங்களா?

என்ன செய்யறது குழலீ உன் தலையெழுத்து இவ்வளவு தான் போல! என்று சோகம் போல் சொன்னாலும் தன்னையும் மறந்து டீனா சிரிக்க அந்த இடமே கலகலப்பானது.

அண்ணா... வந்திடுவீங்கல? - குழலீ

முடியாதே மா! உனக்கு இந்த விஷயம் தெரிந்த உடனே சொல்லியிருந்தாக்கூட பிளான் செய்திருக்கலாமே! சரி எப்போ மேரேஜ்?

டிசம்பர் 12 அண்ணா..

எனது 12 ஆ... 

ஆமா அண்ணா... அதை விட்டா வேற நல்ல மூஹுர்த்தம் இல்லைனு சொல்லிட்டாங்க.. அதற்கு அடுத்து டிசம்பர் 15 இருந்துச்சு... ஆனா சரிவரலை...

12ம் தேதி தலைவர் பிறந்தநாள் மா.... எவ்வளவு பிஸினு உனக்கு நல்லாவே தெரியுமே! அது மட்டும் இல்லாம அன்னைக்கு வேற ஒரு முக்கியமான ப்ரண்ட் கல்யாணம் வேற இருக்கு! அதனால நாங்க எல்லோரும் அங்க போறோம். இப்போ கான்சல் செய்ய முடியாது மா!

என்னை விட முக்கியமான ப்ரண்ட் யாரு டேவிட் அது?- குரலே அவளது கோபத்தை பறைசாற்றியது. 

உனக்கு அவனை தெரியாது டா... ஆனா எங்க எல்லோருக்கும் நல்லாவே தெரியும்... லோ லோ னு அந்த பொண்ணு பின்னாடி சுத்தி எப்படியோ அவளை கல்யாணத்திற்கு சம்மதிக்க வெச்சிட்டான்!

....

நீ எப்படியும் இங்க தானே வரபோற அப்போ பார்த்துக்குறோம்...

சரி.. உங்க இஷ்டம்! என்றுவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றுவிட்டாள்.

வெளியே அச்சிடப்பட்டு வந்த பத்திரிக்கையை பிரித்து கொண்டிருந்தனர் இவர்கள் பெற்றோர்கள். 

அப்படி இப்படி என்று தேடி பிடித்து தி. நகரில் அந்த பெரிய மண்டபத்தை புக் செய்திருந்தனர். இவளுக்கு தேர்வு மைய்யம் நுங்கம்பாக்கம். மண்டலத்திலிருந்து தேர்வு மைய்யம் எப்படி செல்வது, அன்றைக்கான மற்ற வேலைகளை கலந்து ஆலோசித்து கொண்டிருந்தனர். எப்படி வாழ்வின் இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் நிகழ்த்தி காட்டுவது?! என்று. 

இன்னும் நான்கு நாட்களில் புடவை எடுக்க வேண்டும்... பத்திரிக்கை கொடுக்க வேண்டும்... என்ன தான் வேலையையும் திருமண செலவையும் பகிர்ந்து கொண்டாலும் மணப்பெண் வீட்டுக்கே உரித்தான சில கடமைகள் இருக்க தான் செய்தது! பிரபுவின் வீட்டில் வரதட்சணைக்கு கட்டாய தடை சொன்னாலும்... என் பெண்ணிற்கு நான் செய்வதை செய்தே தீருவேன் என்று அடம்பிடிக்கும் அம்மா...நகை, புடவை... நெருங்கிய சொந்தங்களுக்கு ஆடைகள்... இன்னும் இதர செலவுகள்... அத்தனையும் எப்படி சமாளிப்பது? என்ற எண்ண ஓட்டத்தில் அமர்ந்திருந்தவளை தட்டி இந்த உலகிற்கு கொண்டு வந்தாள் பொன்மலர்!

அப்போது பிரபு கூறியதும் காதில் விழுந்தது... 'உங்க மருமகளை கேட்டுக்கொங்க அம்மா.. என்ன அத்தை நான் சொல்லறது சரியா?' என்றவாறு சிரித்துக்கொண்டிருந்தான்.

இவன் வேற நேர காலமே இல்லாம இப்படி சிரிச்சு வைக்கறானே!? அந்த பக்கம் பாக்காதே குழலீ... அவன் சிரிப்பு உனக்கு பிடிச்சிருந்தா.. இப்படி பார்ப்பியா? இப்படி பார்த்து தான் அவன் நினைப்பில் நீ தாழ்ந்து போய்ட்ட!' என்று மனது ஒரு பக்கம் அவளை கடிந்து கொண்டிருந்தது! அதே நேரம் அவள் அருகில் இருந்த மலரோ அவள் காதுகளில் ரகசியம் போல் 'ஹலோ மேடம்! உங்க ஆளு எங்கேயும் போக மாட்டார்... இன்னும் இரண்டு வாரம் தானே! அப்புறம் இரவு பகல் னு பார்க்காம அவரை சைட் அடிச்சிக்கிட்டே இருக்கலாம்.. என்ன?!'

சைட் எல்லாம் அடிக்கலை!

சரி உன் மாமனார் ஏதோ கேட்கறார் பார். - மலர்

என்னம்மா ஆச்சு? ஏதோ ரகசியம் பேசறீங்க போல??

அதேல்லாம் ஒன்னுமில்லை மாமா... நீங்க என்ன சொன்னீங்கனு கேட்டுட்டு இருந்தேன்' என்றாள் குழலீ தன்னையும் மறந்து. 

அவள் இந்த வார்த்தைகளை கூறிய நொடி கண்களில் மன்னில் பளிச்சிட குழலீயை ஒரு பார்வை பார்த்து திருப்பிக்கொண்டான். அவன் மனதில் ஏதோ இனம் புரியாத மலைச்சாரல் போன்ற இதம்!

அவள் கூறியதை கண்டும் காணாமல் விட்டு தான் சொன்ன விஷயங்களை மறுபடியும் தன் மருமகளுக்காக கூறினார் கனகராஜ்.

என்னம்மா குழலீ... உனக்கு எவ்வளவு பத்திரிக்கை வேணும்... டேய் உனக்கு?

அதுவரை அந்த நிச்சய மோதிரத்தை விரல்களில் உருட்டிக்கொண்டிருந்தவள் சட்டென்று '500 மாமா' என்றாள்.  அவனிடமும் அதே பதில் ஒரே சமயத்தில்!

நீங்களே ஆயிரம் பத்திரிகை கொடுத்த நாங்க என்ன செய்யறது?

இருவரும் மறுபடியும் ஒரே நேரத்தில் பேசி மோதிக்கொள்ள வேண்டாம் என்று அமைதியாக இருந்தனர்.

எனக்கு பிரண்ட் சர்க்கிள் அதிகம்னு உங்களுக்கே தெரியுமே பா...!

முக்கியமான நண்பர்கள் கூட்டம், என் திருமணத்தை ஆவலாக எதிர்பார்க்கும் கூட்டம்னு பார்த்தாலும் ஒரு 150 - 200 பேர் வந்திடுவாங்க மாமா - குழலீ.

நமக்கு நேரமும் இல்லையே டா? மருமக வேற பரிட்சைக்கு தயாராகனுமே டா? அப்போ எப்படி கொடுபீங்க?

அதேல்லாம் பிரச்சனையில்லை மாமா.. பார்த்துக்கலாம்... எப்படியும் சமாளிக்கலாம்! என்ன கொஞ்சம் டைட்டா இருக்கும்.. பட் பரவாயில்லை!

எப்படி சமாளிக்கறது மா? முடியாதே!

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த குழலீயை 'முடியாது' என்ற ஒரு வார்த்தையிலேயே சீண்டி விட்டனர்.

அய்யோ அப்பா இவகிட்ட போய் முடியாது னு சொல்லிட்டீங்களே?!' என்று தலையில் கை வைத்துக்கொண்டான் செந்தில்.

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியானாள் குழலீ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.