(Reading time: 12 - 23 minutes)

 

தான் முடியாதுனு சொல்லிட்டாங்களே... வேண்டும் னா ஆட்களை குறைச்சிடலாம் அப்பா. 

ஐந்து நிமிடம் அமைதியாக மற்றவர்கள் பேசுவதை உள்வாங்கி கொண்டிருந்தாலும் வேகமாய் யோசித்து வழியை வகுத்துக்கொண்டிருந்தாள்.

நீ என்னமா சொல்லற என்றார் பிரபுவின் அம்மா.

...

செல்லுமா... எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை!

அத்தை... நான் சொன்னா ஏதாவது தப்பா...

சொல்லு பார்க்கலாம் குழலீ - பிரபு

நீங்க யாருக்கு கொடுக்கனும் எங்கே கொடுக்கனும் அப்படி லிஸ்ட் இருக்கா?

இல்லை.. ஆனா போட்டுடலாம்!

சரி எனக்கும் ஒரு லிஸ்ட் இருக்கு. இதில் பொதுவா இருக்க இடங்களுக்கு... அதாவது ஒரே ஏரியாவில் இருவருக்கும் பார்க்க வேண்டிய ஆட்கள் இருந்தால் தனித்தனியே போகாமல்... ஜாயின் செய்து போயிட்டு அங்கிருந்து ஸ்பிலிட் செய்துக்கலாம்... ஏரியாவையும் க்ளப் செய்துக்கலாம்... அப்படியே பர்சேஸ் முடிச்சிடலாம்...' என்று சரமாரியாக பேசிக்கொண்டு அவள் உடனடியாக திட்டங்களை வகுப்பதை பார்த்து ஆச்சரியத்தில் இருந்தனர் பிரபுவின் பெற்றோர்கள். முழு திட்டத்தையும் வகுத்த பின்னர் 'முடியாது' என்று கூறிய விஷயம் எளிதில் முடிந்துவிடும் என்று தெளிவாய் உணர்ந்தனர். 

கண்களில் புரியாத புன்னகையுடன் அவளை பார்த்திருந்தான் பிரபு!

ம்ஹும்... டேய் தம்பி போதும் டா அவளை பார்த்தது.. கண்ணாலேயே முழுங்கிடுவ போல! வெறிக்க பார்க்காதேடா' என்றான் செந்தில் பிரபுவிடம் ரகசியம் போல.

அப்புறம் இந்த மோதிரத்தை மாற்றிடலாமா டா?? என்றார் பிரபுவின் தந்தை.

அப்பா என்று அதிர்ச்சியானான் பிரபு.

என்னாச்சு இவனுக்கு? என்பதுபோல அனைவரும் பார்க்க, இல்லைங்க பா வேண்டாம் இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும் ... திருமணம் முடிஞ்சதும் பார்த்துக்கலாம் டாட்!

நீ அவனை மோதிரத்திற்கான காரணம் கேட்கலையா என்பது போல் பார்த்தார் பிரபுவின் தந்தை. அவள் முகமே இல்லை என்பதை உணர்த்த அவர்கள் தனியே பேச சூழ்நிலையை அமைத்து தந்தார்.

என்ன இந்த மோதிரத்தை மாற்றனுமா?

ஆமாம்... பெரிசா இருக்கு... அதனால... என்று இழுத்தாள் குழலீ.

நூல் சுற்றி போட்டுப்பாங்களே... அப்படி போட்டுக்கோ..

ஏன்? அப்படியும் போட்டுக்கனுமா? அதென்ன 'S'? உங்க பெயருக்கு அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?!

ஆமாம்.. போட்டுதான் ஆகனும்.. நிச்சயமா! அந்த திருமணத்தில் உடன்பாடு நம்பிக்கை இருந்தால் நிச்சயமாய் இது உன் கையில் இருக்கனும்... என் உயிருள்ள வரை!

அதிர்ச்சியில் நீர் திரையிட கண்களை விரித்து நிமிர்ந்து அவனை பார்த்தாள் குழலீ!

அதுவரை கோபமாய் ஒலித்த அவனது குரலில் மென்மை இப்போது!

அந்த 'S' கும் எனக்கும் சம்பந்தம் இருக்கு! என்னை வீட்டில் அழைக்கும் பெயர்... உனக்கு எப்படி 'சக்தி' யோ... எனக்கு பெயர் 'சிவா' என்கிற 'சிவநாதன்'! அது தான் அந்த எழுத்து... இப்போ தொடர்பு இருக்குல??

இதழில் புன்னகையுடன் கண்களில் நீருடன் தலையை உருட்டினாள் குழலீ!

அந்த முகத்தை பார்த்த பிரபுவிற்கு அன்று மட்டுமல்ல திருமணம் வரை வந்த நாட்கள் முழுவதும் தூங்கா இரவானது!!!

தொடரும்...

Episode # 09

Episode # 11

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.