(Reading time: 22 - 43 minutes)

" ன் ஆசை கொத்தமல்லிய விட்டுட்டு போக மனசே வரலையே "

" டேய் இந்த ஓகே கண்மணி டைலாக் எல்லாம் இங்க சொல்லாத!"

" ஆஹான் .... ஓகே கண்மணி " என்றவன் அவள் முகத்தில் கைகளில் ஏந்தி பேசுவதில் மட்டுமே தனக்கு சிக்கனம் அதிகம் , முத்தங்களை தருவதில் அல்ல என்பதை செயலில் நிரூபித்தான்..  அவன் காதலில் நனைந்து சிலிர்ந்து மனம் நிறைந்து அவன் மார்பிலேயே தஞ்சம் புகுந்தாள்  சங்கமித்ரா ...

" மிது "

" ம்ம்ம் "

" ஒரு பாட்டு பாடேன் "

" ஏன் ?"

" சும்மாதான் .. "

" நேத்து ஒரு பாட்டு உனக்காக பாடிட்டே இருந்தேன் தெரியுமா மாமா !"

" எனக்கு எப்படி தெரியும் "

" ஆமா நீதான் மக்கு ஆச்சே மாமா "

" ஓஹோ , நான் உன் புருஷன் என்பதை இப்படியும் சொல்லலாமா ?"

" உதைப்பேன் உன்னைய " என்று சொல்லும்போதே லேசாய் சிணுங்கியவள்

" டேய் மாமா , உன் பிள்ளை உன்னை உதைப்பென்னு சொன்னாலே என்னை உதைக்கிது பார் " என்று புகார் கூறினாள் .. முகத்தை சுருக்கி கொண்டு சோகமாய் அவள் சொன்ன விதத்தில் , ஒரு குழந்தை இன்னொரு குழந்தைக்கு தாயாகி விட்டது போல இருந்தது அவனுக்கு ...

" ஹா ஹா , அப்பா செல்லம் , அப்பா சொன்னா கேட்பிங்க தானே டா ? அம்மா பாவம் இல்லையா ..அம்மாவை உதைக்க கூடாது " என்று அவள் மேடிட்ட வயிற்றை  மெல்ல வருடி கதை பேசினான் ஷக்தி .. அவன் முகத்திலும் தான் எவ்வளவு மென்மை  ? தாய்மை என்பது அன்னைக்கு மட்டுமே உள்ள உணர்வு என்றவர் யார் ? தனக்கென கருவறை கொண்டு சுமக்காவிடினும் நெஞ்சினில் கருசுமக்கும் தந்தையின் அன்பிற்கு ஈடு இணை உண்டா ? பார்வையை அவன் சிசுவின் மீது இருந்தாலும் கூட , அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தான் ஷக்தி ..

" பாட்டு பாட சொன்னா , என்னடி லுக்கு விட்டுட்டே இருக்கே ?" என்றான் அவன் ... மெல்ல கை நீட்டி அவனை வாவென்று அருகில் அழைத்து  காதலுடன் அணைத்து  கொண்டு பாடினாள்  சங்கமித்ரா ..

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது

முரடா உனை ரசித்தேன்

தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது

கர்வம் அதை மதித்தேன்

மூடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே

நீயும் போனால் நானில்லையே

நீரடிப்பதாலே மீன் அழுவதில்லையே

ஆம் நமக்குள் ஊடல் இல்லை

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ?

என்று பாடியவளை  கைகளுக்குள் பாதுகாப்பாய் நிறுத்தி கொண்டான் ஷக்தி.. கணவனின் அணைப்பு இன்னும் இறுக, மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதுபோல உணர்ந்தாள்  சங்கமித்ரா.. அவள் உச்சியில் தலை சாய்த்தவனும்  , அவளுக்கும் தந்தையாய்  மாறி போனான் .

சிவகங்கை..!

வழக்கத்தைவிட கொஞ்சம் வேகமாகவே காரோட்டி ஷக்தியின்  வீட்டை அடைந்திருந்தான் மதியழகன். காரை கொஞ்சம் தூரமாய் நிறுத்திவிட்டு உடனே நிலாவை போனில் அழைத்தான் ..( பின்ன அவர் பாட்டுக்கு போன் பண்ண மறந்துட்டா , அம்மணியை யார் சமாதானம் பண்ணுறதாம் ? ) ஒரே அழைப்பில் போனை எடுத்துவிட்டாள்  நிலா ..

" மது "

" தூங்கலையாடா நீ ?"

" ம்ம்ம்ஹ்ம்ம் தூக்கம் வரல !"

" ஏன் ?"

" உனக்கு தெரியாதா ?"

" நீதான் உன் செவ்விதழால் சொல்லேன் "

" திருடா , உன் வாயல சொல்லுன்னு சொன்னா போதாதா? அதென்ன செவ்விதழாம் " என்று மனதிற்குள் சிலிர்த்தவள்,

" இல்ல மது நீ தனியா காரோட்டிகிட்டு போற, அங்க போகிற ஆர்வத்தில் நிச்சயம் வேகமாதான் டிரைவ் பண்ணுவ ..அதான் நீ பத்திரமா வந்து சேர்ந்துட்டன்னு  தெரிஞ்சதும் தூங்கலம்ன்னு இருந்தேன் "

" என்ன மாதிரியான அன்பு இது ? என்னதான் இருந்தாலும் ஆணை விட பெண்ணின் காதலில் பல மடங்கு அழகானது .. ஆண்  தனது மனதில் எவ்வளவு காதல் இருந்தாலும் கடமைக்கு தான் முதலிடம் கொடுப்பான் ..ஆனால் பெண்ணோ , காதல் என வந்துவிட்டால் , தன்னவனை தான் அனைத்திற்கும் முன்வைப்பாள் .. அதுவும் தேன்நிலா  ஒரு மருத்துவர் .. மரணத்தின் விளிம்பையும் பிறப்பின் தொடக்கத்தையும் தினம் தினம் பார்ப்பவள், இருப்பினும் மதியழகன் விஷயத்தில் அவள்  ஓர் அன்னைதான் .. அவன் கண்ணில் தூசி விழுவதாய்  இருந்தால் கூட , இவளிடம் முதலில் அனுமதி வாங்க வேண்டும் ..என்னில் நீ சரிபாதி என்பதை வார்த்தையில் சொல்லாமல் செயலில் காட்டுபவள் என்னவள் " என்று சிலாகித்து கொண்டான் மதியழகன் ..

" யோவ் என்னய்யா ஆச்சு "

" ஐ லவ் யூ டா குட்டிமா " என்றான் மதியழகன் ஆத்மார்த்தமாய் .. ஆழ்ந்திருந்து ஒலித்த அவனது குரல் அவளுக்கு அளவு கடந்த நிம்மதியை தந்தது ..

" மது "

" என்னடா "

" ஒரு பாட்டு பாடி தூங்க வெச்சுட்டு போறியா "

" இப்போவா ?"

" ம்ம்ம்ம் ப்ளீஸ் "

" பித்து பிடித்ததை போல , அடி பேச்சு குளறுதே

வண்டு குடைவதை போல , விழி மனதை குடையுதே

காதலின் திருவிழா , கண்களில் நடக்குதே

குழந்தையை போலவே , இதயம் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன் , மோகத்தில் மிதக்கிறேன்

காதலால், நானும் ஒரு காத்தாடி ஆகிறேன்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..? மனது வளர்த்த சோலையில்

காதல் பூக்கள் உதிருமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.