(Reading time: 22 - 43 minutes)

" ன்னை பிடித்த நிலவா ? ம்ம்ம்ம் இல்லை மது நீதான் நிலவையே பிடித்த மதி " என்று உளறினாள்  நிலா பாதி  உறக்கத்தில் .. (ஓஹோ இதை கவிதைன்னு சொல்லனுமா ? சரி மதி சார் , மிச்சம் பாட்டை நிறுத்திடாமல் பாடி உங்க தேன்நிலாவை  தூங்க வைங்க )

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ

விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்

நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய் " என்று பாடி முடித்தான் மதி ..

" குட்டிமா " என்று அவன் அழைக்கவும் உறக்கத்தில் " ம்ம் " என்ற முனகல் மட்டுமே பதிலாய் கிடைத்தது ..

" இதெல்லாம் அநியாயம் டா , நான் பாடினாலே நீ நல்லா தூங்கிடுற .. கல்யாணத்துக்கு அப்பறம் நைட் நான் பாட மாட்டேன் போ " என்று காதலுடன் சொன்னவன் அழுத்தமான முத்தங்களோடு போனை வைத்தான் ..

" அப்பா " என்று அழைத்தபடி ஷக்தியின்  வீட்டிற்குள் வந்தான் மதி .. " வாங்க அண்ணா " என்று வரவேற்றான் அன்பெழிலன் ..

" எப்படி இருக்க அன்பா ? "

" எனக்கென்ன அண்ணா , சூப்பர்  .. நீங்கதான் நாளுக்கு நாள் ஸ்மார்ட் ஆகிகிட்டே வர்ரிங்க ? எல்லாம் நிலா அண்ணியின் கவனிப்பா ? " என்று கண் சிமிட்டினான் அவன் ...

" ஹா ஹா .. நிலாவும் ஒரு காரணம் .. அம்மாவும் அப்பாவும் வேற இங்க வந்துட்டாங்களே .. தினமும் அம்மா கையாள சாப்பாடு , அதான் மதியின் பிரகாசத்திற்கு காரணம் " என்று சிரித்தான் ..

" இல்லை அண்ணா , எனக்கென்னமோ , நிலவின் ஒளிக்கு பின்னால் சூரியன் இருக்குற மாதிரி , உங்க தேஜஸ் பின்னாடி நிலா அண்ணி இருக்காங்கன்னு தோணுது " என்றான் எழில் ..

" சரி சரி ..அதான் தெரியுதுல..அப்பறம் ஏண்டா கேட்கற ? நானும் எவ்வளவு நேரம்தான் வெட்கப்படாத மாதிரி நடிப்பது?" என்று சிரித்தான் மதி .

 (அன்பெழிலனை செல்லமாய் அன்பா என்றுதான் நம்ம மதி சார் அழைப்பாராம் .. உங்ககிட்ட சொல்ல சொன்னாரு பா ! )

" அடடே வாப்பா "

" எப்படி இருக்கீங்க அப்பா ? உங்க ஹெல்த் இப்போ பரவாயில்லையா ?"

" ம்ம்ம்ம் அவருக்கென்ன மதி , தினமும் என்னை வம்பு பண்ணிட்டு தான் இருக்கார் " என்று சிரித்துக்கொண்டே அங்கு வந்தார் திவ்யலக்ஷ்மி ..

" என்ன பண்ணுறது மதி .. ஷக்தி, கதிர், முகில்மதி எல்லாரும் சென்னை போயிட்டாங்க ..வீட்டில் எங்களுக்கு பொழுது போக வேணாமா ? அதான் ..என் லக்ஸ்கு  போர் அடிக்க கூடாது இல்லையா " என்று கண் சிமிட்டினார்  நாராயணன் ..

" சூப்பர் அப்பா, இப்போ புரியுது என் தம்பி எப்படி மித்ராவை இப்படி கண்ணுக்குள்ள வெச்சு தாங்குரான்னு .. ! எல்லாம் உங்க வழிதானா ?"

" இருக்கிறதா பின்ன மதி ? நாம ஆண்கள், ஒரு சின்ன வேலை விஷயத்தில் கூட ஒருத்தரை நம்பலாமா வேணாமான்னு ஆயிரம்முறை யோசிக்கிறோம் ... இவங்க பெண்கள், நம்மளை நம்பி அவங்க வாழ்க்கையை தரும்போது அவங்க சந்தோஷத்துக்கு நாம தானே காரணமா இருக்க முடியும் ? சரிதானே ?" என்றார் நாராயணன் மனைவியை பார்த்து கொண்டே ..

மனதிற்குள் நெகிழ்ந்தாலும் அதை முகத்தில் காட்டிகொள்ளாமல் இருந்தார் திவ்யலக்ஷ்மி .. (ஆன்டி ,வெர்றி  பேட்  ! இததான் உங்க முதல் புதல்வனும் செய்யுறார் ..இதற்கு நீங்கதான் காரணமா ? )  இங்கு மூவரும் பேசிகொண்டிருக்க, வைஷ்ணவியின் அழைப்பை பற்றி சொல்ல வந்தார் தேவசிவம் ..

" என்ன அன்பு, மதி தம்பிகிட்ட சொன்னியா ?"

" அய்யோ இல்லைப்பா ..அண்ணாவை பார்த்த சந்தோஷத்தில் சொல்ல மறந்துட்டேன் "

" என்ன விஷயம் அண்ணா ? ​ "- லக்ஸ்மி

" வைஷ்ணவி போன் பண்ணினாம்மா .. நம்மளை உடனே பார்க்கனும்னு சொல்றா "

" ஒன்னும் பிரச்சனை  இல்லையே மச்சான் ?" - என்று பதறினார்  நாராயணன் ..

" அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல மச்சான் .. "

" சரி அவ்வளவு தானே ? நாம வைஷ்ணவியை பார்த்துட்டே போவோம் .. அன்பா , வா டா இருக்குற திங்க்ஸ் எல்லாம் காரில் ஏற்றிடலாம் " என்று வேகமாய் செயல்பட்டான் மதியழகன் .. சொன்னதை போலவே அடுத்த ஒருமணி நேரத்தில் ஆதிஷ்வர்- வைஷ்ணவியின்  எதிரில் இருந்தனர்அனைவரும் ..

" வாங்க சம்பந்தி ..வாங்கப்பா ..எல்லாரும் எப்படி இருக்கீங்க ? " - சங்கர் ..

" எல்லாரும் நல்ல இருக்கோம்ப்பா  " என்று மதி பதிலளிக்க, ஆதியுடன் அங்கு வந்தாள்  வைஷ்ணவி ..

" அம்மா , அப்பா " என்று இருவரையும் பார்த்து அவள் ஓடி வர ,

" பார்த்து டா " என்று பதறினான் ஆதி .. அனைவருமே அவர்களை கேள்வியாய்  பார்க்க , வைஷ்ணவியின் முகத்தில் வெட்க ரேகைகள் ..

" என்னாச்சு மாப்பிள்ளை ?"

" உங்க பொண்ணையே  கேளுங்க மாமா .. " என்றான் ஆதி

" அவரை கேளுங்க மாமா " என்று ஆதியின் தந்தையை வம்புக்கு இழுத்தாள்  அவள் ..

" உங்க பொண்ணு இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கல அத்தை "

" என்னாச்சு மாப்பிள்ளை "

" எனக்கு ஒரே சோகம் மதி ப்ரதர்  !"

" என்ன ஆச்சுன்னு சொல்லுங்கப்பா "

" ஹ்ம்ம் இன்னும் ஒரு வருஷம்தான் நான் மிஸ்டர் ரோமியோ மாதிரி நான் சைட் அடிக்க முடியும் .. அதன் பிறகு முடியாதே " என்று முகத்தை சோகமாய் வைத்துகொண்டு சொன்னான் ஆதி ..அவன் பேச்சில் அனைவரின் முகமும் கலவரமானது .,.. வைஷ்ணவி மட்டும் அவனை குறும்புடன் பார்த்து

" ஏன் அதுக்கு அப்பறமா என்ன ஆகும்னு " கேட்டாள்  ..

" அதுக்கு அப்பறம் , ஜூனியர் ஆதியோ , ஜூனியர் வையூவொ வந்து என்னை பிச்சு எடுத்திருவாங்க " என்று பாவனை செய்து அந்த தித்தபான செய்தியை அனைவருக்கும் கூறினான் ஆதி ..

" சரியான அதிரடி ஆறுமுகம் பாஸ் நீங்க " என்றான் எழில் ..

" ஹா ஹா அதிரடி ஆதின்னு சொல்லு நண்பா " என்றவன் சந்தோஷத்தில் மதி , எழில் இருவரையும் தழுவி கொண்டான் . பெற்றோர்கள் நால்வரும் மனம் நிறைந்து அவர்களை ஆசிர்வதித்தனர்.

" கொஞ்ச நேரத்தில் கலங்க வெச்சுட்டிங்க  மாம்ஸ் .. " என்றான் அன்பெழிலன் ..

" ஹா ஹா ..அரசியல்ல இதெல்லாம் சகஜம் அன்பு .. இதுக்கே இப்படியா ? என்கூட சேர்ந்து இப்போ வையூ எவ்வளோ மாறிட்டா தெரியுமா ?" என்று மனைவியை பார்த்து கண் சிமிட்டினான் ஆதி ..

" அதெல்லாம் நம்பாதே அன்பு .. உங்க மாம்ஸ்க்கு என்னை சீண்டலைன்னா தூக்கமே  வராது " என்று அவனை  செல்லமாய் முறைத்தாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.