(Reading time: 22 - 43 minutes)

" சும்மா வாய் பேசாத .. மித்ரா இந்த நிலையில் இருக்கும்போது நீ எப்படி இப்படி விளையாடலாம் .. நீ டாக்டர் தானே  உனக்கு இது கூட தெரியாதா ?" என்றான் .. எல்லாரும் அவர்களையே பார்க்க,

" உன்னைய ... நீ இங்க வா " என்று அவளை அழைத்து கொண்டு அருகில் இருந்த அறைக்குள் சென்றான் மதி ..

" ஐயோ அண்ணா சும்மாதான் " என்று மித்ரா சொல்ல வர ஷக்திதான்  அவள் செவியில் எதையோ கிசுகிசுத்தான் ..

" நிஜம்மாவா மாமா ? "

" ஆமாடி மக்கு " என்று அவன் கண் சிமிட்டினான் .. அறைக்குள் வந்த மதியழகன் தேன்நிலாவை  பார்த்து கண்ணடிக்க, முதலில் என்ன நடக்கிறது என்று புரியாதவள் அவனது இறுகிய அணைப்பில் இருக்கவும் தான் நடந்ததை மீண்டும் அசைப்போட்டு பார்த்தாள் .. அவளை அணைத்து  நின்று கள்ளசிரிப்பொன்றை  உதிர்த்தான் அவன் ..

" டேய் , விடுடா என்னை "

" மாட்டேன் போடி "

" என்னை நீ எப்படி கட்டிபிடிக்கலாம் ? முதலில் என்னை விடு "

" ஓவரா சண்டை கோழியா திமிராதே பேபிம்மா ... மாமன் உனக்காக எவ்ளோ ப்ளான்  எல்லாம் போட்டு இப்படி ரூமிற்கு தள்ளிட்டு வந்திருக்கேன் " என்று கண்ணடித்தான் அவன் ..

" திருடா .. எல்லாரும் நீ உண்மையிலேயே கோபப்பட்டன்னு நினைச்சிட்டாங்க "

" ஹா ஹா .... திருடி ...அப்படி நினைச்சிருந்தா , இந்நேரம் எத்தனை பேரு கதவை தட்டி வந்து காப்பாற்றி இருப்பாங்க " என்று அவன் மீண்டும் சிரிக்க

" அப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குமா ? ஐயோ என் மானமே போகுது .. என்னை விடு மது " என்றபடி அவனுடன் ஒன்றி அணைத்து  கொண்டாள்  நிலா ..

" குட்டிமா , நான் எப்பவோ விட்டுட்டேன் ..நீதான் என்னை பிடிச்சிட்டு நிக்கிற " என்றவன் இன்னும் சிரிப்பு அதிகமாக

" ச்சி  போடா " என்று திணறி விலகினாள்  நிலா ..

" உன்மேல நான் எப்படி கோபப்படுவேன் குட்டிமா ?"

" ஏன் கோபப்பட மாட்டியாம் ? அதெல்லாம் வரவேண்டிய நேரத்தில் வரும் " என்றாள்  அவள் ..

" ஹா ஹா .. உன் முகத்தை நீ கண்ணாடியில் பார்கறதே இல்லையா ?"

" ஏன் அவ்வளவு காமிடியா இருக்கா ?"

" அதை என் வாயல சொல்லனுமா ?"

" மதூ ...!"

" ஹா ஹா .. அடியே ஐஸ் கட்டி மாதிரி குட்டி குட்டி கண்ணு , ஆப்பிள் பழம் மாதிரி ப்ரெஷ் கன்னங்கள் அதில்  அழகாய்  விழுற கன்னத்துகுழி .. எல்லாருக்கும் சிரிக்கும்போது மட்டும்தானே குழிவிழும் ? உனக்கென்ன பேசினாலே குழி விழுது  ?" என்றவன் அவள் கன்னக்குழியில் இதழ் பதித்தான் ..

" என்ன டாக்டர் மேடம் பேச்சு மூச்சே காணோம் ? " என்று அவன் கண்சிமிட்ட

" இங்க வாயேன் " என்று கை காட்டினாள்  அவள் .. அவள் உயரத்திற்கு லேசாய் குனிந்து

" என்னடா ?" என்றவன் கேட்கவும் அவன் இரு கன்னங்களிலும் முத்த மழை பொழிந்துவிட்டு ஓடியே விட்டிருந்தாள்  நிலா ..

அன்பெழிலனை அடிக்கடி பார்த்து கொண்டிருந்தாள் முகில்மதி .. அவன் மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை ..

கண்கள் கலங்கிட அப்படியே அமர்ந்திருந்தாள்  அவள்.. அன்று நடந்த கதைகளை எல்லாம் கலகலப்பாய் பேசி முடித்துவிட்டு அனைவரும் உறங்கிட சென்றனர் ..

" என்னங்க யோசிச்சுகிட்டு இருக்கீங்க ?" என்றார் திவ்யலக்ஷ்மி ..

" எல்லாம் பெரியவனை பத்திதான்  லக்ஸ் "

" ஏன் ?"

" மனைவியை பார்த்துகிறதில் அப்படியே என்னை மாதிரி இல்லை " என்று கண்ணடித்தார் அவர்..

" போதுமே ..பேரப்பிளையை பார்க்குற நேரத்தில் தான் உங்களுக்கு இளமை திரும்புதாக்கும் "

" நீ சந்தோஷமா இருக்கியா லக்ஸ் ?"

" இதென்னங்க கேள்வி "

" பதில் சொல்லாமல் சமாளிக்கிறியே  !"

" இதில் சமாளிக்க என்ன இருக்கு ? தெவிட்ட தெவிட்ட அன்பு தருகிற கணவன், பேர் சொல்லும் பிள்ளையாய் மூணு பிள்ளையாய் .. சொக்க தங்கமாட்டம் மருமகள்க .. நம்ம மதியும் அன்பும் சேர்ந்துட்டா  இன்னும் சந்தோசம் ஆகிடுவேன் " என்றார் ..

" அதென்ன மருமகள்க ..எனக்கு தெரியாமல் சின்னவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டியா ?"

" அடடே அப்படியே ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிப்பிங்களே  ! மனசில் எதுவும் இல்லாமல்தான் காவியாவை நம்ம கூடவே இருக்க சொன்னிங்களா அன்னைக்கு " என்றார் .. அதற்கு பதில் சொல்லாமல் நாராயணனும் சிரிக்க , வாங்க நாம மறுபடியும் ப்ளாஷ்பேக்  போவோம் ..

முகில்மதியின்  தோளில்  கைபோட்டு கொண்டு அங்கு நின்றான் ஷக்தி .. அவன் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து அனைவரும் அவன் முகம் பார்க்க , சுற்றி வளைக்காமல்

" நான் இன்னும் ரெண்டு நாளில் துபாய்க்கு திரும்பி போறேன் " என்றான் ஷக்தி . மித்ரா உட்பட அனைவருமே அதிர்ச்சியாய்  அவனை பார்த்தனர்..

" என்ன சொல்றிங்க அண்ணா ?"

" என்ன கதிர் ? வேலைக்கு திரும்பி போறேன்னு சொல்றேன் ..  "

" நேத்து தானேடா கல்யாணம் ஆணிச்சு ?"

" அது  என் கம்பனிக்கு தெரியாதே அப்பா "

" அதுக்காக இப்படி திடீர்னு  போகனுமா ஷக்தி சார் ?"

" ஆமா சிஸ்டர் போய்தான் ஆகணும் " என்றவன் அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டு மித்ராவையே  பார்த்தேன் .. மீண்டும் அடுத்த கேள்வி தொடங்குமுன்னே ,

" ஏன் இப்படி ஆளாளுக்கு அவனை கேள்வி கேட்கறிங்க ? அவன் அங்கதான் வேலை செய்யுறான் , லீவ்காக இங்க வந்திருக்கான்னும் உங்களுக்கு தெரியாதா ? " என்றாள்  மித்ரா ..

" அப்படி இல்லை மருமகளே .. "

" மாமா , புறப்படும்போது , தடுக்குறது நல்லது இல்லை .. மாமா நீ வா நான் உனக்கு திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணுறேன் " என்றாள்  மித்ரா .. அவள் முகத்தை வைத்து அவள் என்னதான் நினைக்கிறாள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை ...

" இன்னும் ரெண்டு நாள் இருக்கு , உனக்கு எதாச்சும் திங்க்ஸ் வாங்கனுமா டா " என்று கேட்டபடி அவன் உடைகளை எடுத்து அடுக்கினாள்  அவள் .. கையில் கிடைத்த பேப்பர்மெட்டை உருட்டி கொண்டே

" இல்லடி ஒண்ணுமில்ல " என்றான் ..

" நல்லா யோசிச்சுக்க ஷக்தி .. அன்பு இங்கதான் இருக்கான் .. எதாச்சும் ஷாப்பிங்ன்னா  அவன் ஹெல்ப் பண்ணுவான் " என்றாள் ..

" இல்ல அத்தை பொண்ணு ஒண்ணுமில்ல " என்றவனின் " அத்தை பொண்ணு " என்ற அழைப்பில் உயிர்பெற்று மெத்தையில் அமர்ந்தாள்  மித்ரா .. மெல்ல அவள்  தோளை  அழுத்தி

" கஷ்டமா இருக்கா " என்றான் ஷக்தி ..

" ஹே , என்ன உன்னை அப்படியே பேக் பண்ணி அனுப்புறேன்னு நினைச்சியா .. உனக்கு கொஞ்ச நாள்தான் டைம் கொடுப்பேன் .. நீ வரலைன்னா நானே உன்னை தேடி வந்திடுவேன் .. ஏன் ஹீரோ தான் ஹீரோயின்காக நாடு நாடா சுத்தனுமா ? என் ஹீரோகாக நான் கண்டிப்பா வந்திருவேன் .. நீ எங்க இருந்தாலும் உன்னை வந்து அலேக்கா தூக்கிட்டு போயிடுவேன் " என்று சிரித்தாள் அவள் .. கண்கள் விரித்து சிறுபிள்ளைக்கு கதை சொல்வது போல சொல்லி உற்சாகமாய் வழியனுப்பி மனதில் இருக்கும் கவலையை மறைப்பவளை  ரசித்தவன் , தன்னையும் மீறி அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு அறையை விட்டு வெளியேறினான் ..

" இப்போ , இங்க என்ன நடந்துச்சு ? " என்று புரியாமல் சில நொடிகள் சிலையாய் சமைந்து அமர்ந்திருந்தாள்  சங்கமித்ரா ..

நாமளும் அடுத்த எபிசொட் வரை அப்படியே அமர்ந்திருப்போமா ..ஹா ஹா .

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.