(Reading time: 16 - 32 minutes)

வன் இவ்வளவு பேசியும் தெளியாமல் இருக்க முடியுமா ? ஏன் முடியாது ? என்னால் முடியும் என்று அவள் பதிலிலேயே  உரைத்தாள்  தான்யா ..

" எனக்கு இப்பவும் கூட உன் பார்வையை சரியா ஏற்றுக்க  முடியலை சகி .. நீ சொல்லுற மேஜிக் எல்லாம் கொஞ்ச காலம்தான் .. எவ்வளவு பேரு காதலிச்சு அதுக்காக கல்யாணமும் பண்ணி , டைவர்ஸ் பண்ணிடுறாங்க ? எந்த உறவுக்கும் புரிந்துணர்வு இருந்தா போதும் .. இந்த மழைக்காலம் பனிக்காலம் வசந்த காலம் இதெல்லாம் முக்கியமே இல்லை .. சரி அர்ரெஞ்  மேரேஜ் பண்ணுறவங்களை எடுத்துக்க , மாப்பிளை பெண்ணும் பேசிக்கிற அந்த பத்து நிமிஷத்தில் எல்லாருமே அந்த மேஜிக் ஐ உணர்ந்திடுறாங்களா  ? கண்டிப்பா இல்லை தானே ? ஏதோ கடமைக்காக கல்யாணம் பண்ணி பிறகு தானே வாழ்க்கையை ஆரம்பிக்கிராங்கா ?"

" நோ ... நிச்சயத்துல இருந்து கல்யாணம் முன்னாடி இருக்குற அந்த சிறு காலகட்டமே அவங்களின் வாழ்க்கையை அழகாக்குது .. "

" சரி , அந்த சிறு காலகட்டத்துல ரெண்டு பெரும் என்ன பண்ணுறாங்க ? டெய்லி  டுயட்டா பாடுறாங்க ? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுறாங்க .. அவ்வளவுதானே ? யாரோ ரெண்டு பேரு நிச்சயத்திற்கு பிறகு ஒருவரை ஒருவர் புரிஞ்சுகிட்டு கல்யாணம் பண்ணிக்க முடியும்ன்னா , எப்பவுமே புரிஞ்சுகிட்டு இருக்கற நாம ஏன் கல்யாணம் பண்ணிக்க முடியாது ?"

" அப்படி இல்லை தனு .. அவங்க அப்படி பழகும்போதே உனக்கு நான் எனக்கு நீ என்ற உணர்வில் தான் ஒருவரை ஒருவர் புரிஞ்சுப்பாங்க " என்று விளக்கினான் சகி ..

" இட்ஸ் ஓகே சகி .. உனக்கு உன் பார்வை சரியாக இருக்கட்டும் ..எனக்கு என் பார்வை சரியாக இருக்கட்டும் .. நீ சொன்னதுபோல நான் என் லைப்ஐ ப்ளான்  போட்டு வாழுறதை கொஞ்ச நாள் தள்ளி வைக்கிறேன் .. சரியாய் ஒரு வருஷம் கணக்கு வச்சிருப்போம் .. இந்த ஒரு வருஷத்தில் நீ சொல்றது சரின்னு பட்டா நான் மாறிடுறேன் ... இதுவே நீ  மனசு மாறினா ?"

" மனசு மாறிட்டா , என் நண்பன் என்ற வேலையை ரிசைன் பண்ணிட்டு புருஷனா  பொறுப்பு எடுத்துக்குறேன் " என்றான் சகிதீபன் நம்பிக்கையுடன் .. ஏதோ பெரிய வாதத்தை முடித்தது போல இருவருக்குள்ளும் பெருமூச்சு எழுந்தது ..

தன்னுடைய எதிர்ப்பார்ப்பு என்ன , என்பதில் தெளிவாய் இருந்தாள்  தான்யா .. அதனால் அவளுக்கு சகியுடன்  இயல்பாய் பேசுவதில் தடையேதும் எழவில்லை .. அதேபோல சகியும் தன் மனதை எடுத்து கூறிவிட்ட நிம்மதியில் இருந்தான் .. அதன் பிறகு நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டு இருந்தனர் ..

" ஆமா , உன்கிட்ட ஒன்னு கேட்கணுமே ! என்னமோ என் முகபாவனையை வெச்சு என் மனசில் லவ் இல்லன்னு கண்டுபிடிச்சதா சொன்னியே , அது எப்படி டா ?" என்று கன்னத்தில் கை வைத்து கொண்டு கதை கேட்டாள்  தான்யா ..

" ஹே மைதா மாவு , காதல்ன்னு வந்துட்டா, பேபி ஷாலினியா இருந்தாலும் சரி கோவை சரளாவாகவும்  இருந்தாலும் சிநேகிதனை அப்படின்னு பாடி லுக்கு விடுவாங்க ... உன்னை மாதிரி கொலை குற்றம் பண்ணின மாதிரியா நடுங்குவாங்க ... நல்லா வந்து வாய்ச்சிருக்க  பாரு ப்ரண்டு ன்னு ! " என்று அவன் அலுத்துகுள்ள கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரித்தாள் தான்யா ..

அழகெல்லாம் முருகனே ...

அருளெல்லாம் முருகனே

தெளிவெல்லாம் முருகனே ...

 தெய்வமும் முருகனே

தனது இனிய குரலால், பாடி  பழனிமலை  முருகனை தனது வீட்டு பூஜை அறைக்கு வரவேற்று கொண்டிருந்தார் சாரதா .. " உங்க அழகின் ரகசியம் என்ன " என்று பலரும் கேட்கும் அளவிற்கு கலையான தெய்வீகமான வதனம் .. அபிநந்தன், சகிதீபன் , விஷ்வாநிகா மூவருக்கும் இவர் தாயார் என்று கூறினால் யாரும் நம்ப முடியாத அளவிற்கு செயலிலும் சிந்தனையிலும் தோற்றத்திலும் இளமையானவர். இங்கு பூஜை அறையில் முருகருக்கே , அவரது கடமைகளை சாரதா பட்டியலிட்டு கொண்டிருந்தாலும் தூரத்தில் இருந்து ஒலித்த  மாமனாரின் குரலையும் அவரால் செவிமடுக்காமல் இருக்க முடியவில்லை .. அதன் பிரதிபலிப்பாய்  அவர் இதழிலும் புன்முறுவல் பூத்தது ..

பின்ன, 50 வயதாகிவிட்ட கணவரை அவர் " தத்தி தத்தி " என திட்டினால் இவருக்கு புன்னகை வரமால் போகுமா.. இருந்தாலும் சாரதா ஆன்டி முருகர் உங்களையே பார்த்துட்டு நிற்கிறார் .. அவர் வள்ளி தேவானை கூட டுயட் பாடணுமாம் அதனால் நீங்க அவரை கவனிங்க .. நாங்க அருணாச்சலம் தாத்தாவை பார்த்துட்டு வரோம் ..

அந்த வீட்டு வரவேற்பறையில் இருக்கும் தொலைகாட்சிக்கு கைகள் இருந்திருந்தால் கூட தன் செவிகளை மூடி இருக்கும் .. அந்த அளவிற்கு உச்சஸ்தாயியில் மகனை திட்டி கொண்டிருந்தார் 79 வயதை நெருங்கி கொண்டிருக்கும் நம்ம கதாநாயன் ..மன்னிக்கவும் .. கதாநாயகர் அருணாச்சலம் .. நம்ம அருணாச்சலம் படத்தில் வேதாச்சலம் கேட் அப் ல தலைவர் வருவாரே அதே போல தேஜாசான முகம் , ஆனால் மாஸ் படம் சூர்யா மாதிரி நடை உடை பாவனையில் கலக்கினார் தாத்தா .. அவருடைய தற்போதைய இலக்கு , மாஸ்ல வருகிற ஷக்தி மாதிரி ஹேர் ஸ்டைல் வைக்கணுமாம் .. நீங்க கலக்குங்க அருண் .. அட அருணாச்சலம் ரொம்ப நீளமா இருக்குறதுனால அவரே தனது பெயரை அருண்னு  சுருக்கி வைச்சுக்கிட்டார் .. தாத்தா நீங்க கொடுத்த கடலைமிட்டாய்க்கு  இவ்வளவுதான் இன்ட்ரோ  கொடுக்க முடியும் .. சோ, அடுத்த முறை எனக்கு அதிரசம் வேணும் .. சரி வாங்க இப்போ பஞ்சாயத்துக்கு வருவோம் .

" தத்தி , தத்தி ஏழு கழுதை வயசு ஆகிடுச்சு .. கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா டா உனக்கு ? யாரை கேட்டு வேலையை விட்ட நீ ? வீட்டுல ஒரு யூத் இருந்தா போதும்ன்னு தான் பெரியவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன் .. சின்னவனை வெளி நாட்டுக்கு அனுப்பினேன் .. இப்போ நீ எனக்கு போட்டியா ?  " என்று மகனை முறைத்தார் அருணாச்சலம் ..

தந்தையின் முன்னே கை கட்டி நின்றார் வேணுகோபாலன் .. தந்தையின் மறு உருவாய் அதே சாயலில் இன்னும் கொஞ்சம் யாங் அருண் மாதிரி இருந்தார் அவர் . பலபேரின் துயர் தீர்க்கும் உளவியல் மருத்துவர், இப்போது தந்தையின் முன் சிறுபிள்ளையாய் கை கட்டி நின்றார்.

" அது இல்லபா .. அது வந்து "

" நீ வரவும் வேணாம் போகவும் வேணாம் .. போ போயி எனக்கு காபி கொண்டு வா " என்று மகனை மிரட்டினார் தாத்தா .. அவரும் தந்தைக்கு காபி கொண்டு வர சமையலறை போக , தீபாதாரனை காட்ட வந்த மருமகளிடம்

" உன் புருஷன் எப்படித்தான் இப்படி உலகம் அறியாதவனா இருக்கான் தெரிலம்மா " என்றார் ..

" என்ன பண்ணுறது மாமா , காலம் கடந்துதான் உங்களுக்கு இது புரியுது " என்று வாரினார் சாரதா ..

" ஆமா , வினி எங்கம்மா ?"

" இன்னும் எழுந்திரிகல மாமா ... "

" அவளுக்கு இன்னைக்கு யோகா கிளாஸ் இருக்கே "

" நேற்றே போகலைன்னு சொல்லிட்டு இருந்தா மாமா "

" ஏனாம் .."

" புடிக்கலன்னு ஒரே வார்த்தைதான் வந்திச்சு மாமா "

" இவளை அடக்க இருந்த ஒருத்தனும் , படிக்கிறேன்னு ஓடி போயிட்டான் .. இப்போ பாரு எல்லாம் என் தலையில் தான் விழுது " என்று அலுத்து கொண்டவரை பார்த்து புன்னகைத்தார் சாரதா .. மருமகளையே சில நொடிகள் கூர்ந்து பார்த்தார் அருண் . இந்த வீட்டிலும்தான் எத்தனை வித கதாபாத்திரங்கள் , எத்தனை பிரச்சனைகள் ..எனினும் அதையொரு குறையாய் கூறி  இதுவரை அவர் கண்ணீர் விட்டதே இல்லை. பெண்களின் மனதிலும் செயலிலும் சக்தியின் உருவம் . அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு ; பாதிப்பும் உண்டு . அதனாலோ என்னவோ , காரணம் இருந்தாலும் கூட, கண்ணீர் வடிப்பதில் நியாயமில்லை என்று நினைப்பார் சாரதா ..

" என்ன மாமா என்னையே பார்த்துகிட்டு இருக்கீங்க ?"

" உங்க அத்தையை கல்யாணம் பண்ணினதுக்கு பிறகு நான் எடுத்த சிறந்த முடிவு , உன்னை மருமகளாய் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுதான்மா " என்றார் அருண்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.