(Reading time: 16 - 32 minutes)

" போதும் மாமா , அவர் கையில காபியை வைச்சுகிட்டு ரொம்ப நேரமா பவ்யமா நிக்கிறார் .. " என்று கணவருக்கு பரிந்து பேசிவிட்டு சென்றார் சாரதா ..

" வா டா .. தை மாசம் காபி கேட்டா , வைகாசியில் தான் காபி கொண்டு வருவியா நீ ? அதை நீயே குடி .. எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது " என்றபடி மகனின் கன்னத்தில் செல்லமாய் தள்ளி விட்டு நடந்தார் தாத்தா ..

" நீ சாப்பிடியா சாரதா ?" - வேணுகோபாலன்

" இனிமேல் தானுங்க ! "

" சரி வா ரெண்டு பேரும்  சேர்ந்தே காபி குடிக்கலாம் " என்றபடி மனைவிக்கும் காபியை எடுத்து வர சென்றார்  வேணு .

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா ?

உன்  கண்களில் என்ன கண்களில் என்ன நீரோடமா ?

பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடு தானா ?

பழம்பாட்டோடு தானா ? அதும் ஏட்டோடு  தானா ?

நாள்தோறும் வாழும் ஊமைகள் தானா ?

தாத்தா எதிரில் நிற்பது கூட தெரியாமல் ஹெட்போனில் பாட்டை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்  விஷ்வாநிகா..

" வினி ... வினிம்மா  " என்று அழைத்தவர் பொறுமையை இழந்து அவளது ஹெட்போனை கழற்ற முயல மெல்ல நிமிர்ந்து அவரை  பார்த்தாள்  அவள் .

நடுத்தர உயரம் , லேசாய் பூசினாற்போல் உடல்வாகு , கலையான முகம் , பார்த்ததுமே ஈர்த்துவிடும் கண்கள் என மிதமான அழகின் மறு உருவாய் இருந்தாள்  அவள் .

" குட் மோர்னிங் தாத்தா " என்றாள்  அவள் லேசாய் வரவழைத்து கொண்ட புன்னகையுடன்.

" அருண்ன்னு கூப்பிடுன்னு எத்தனை தடவை சொல்றது விஷு ? "

" நான் கூடத்தான் என்னை வினின்னு  கூப்பிட சொன்னேன் .,.நீங்க கேட்கலையே !"

" ஹ்ம்ம் பதிலுக்கு பதில் பேசுற , இருக்காதா பின்ன.. என் பேத்தி ஆச்சே ! ஆமா நீ இன்னைக்கு யோகா க்ளாஸ்  போகலையா ?"

" இல்ல தாத்தா "

" ஏன் "

" மூட் இல்லை தாத்தா .. "

" ஹ்ம்ம் அப்போ சகி சொன்னது சரியா போச்சு .. "

" ஏன் ?"

" அவன்தான் சொன்னானே மா .. நீ எந்த விஷயத்தை எடுத்தாலும் பாதியிலேயே நிருத்திடுவன்னு " என்றார் தாத்தா .. சட்டென முகம் இறுக, மெத்தையில் இருந்து எழுந்தவள் , அன்று தயாராவதற்கு உடைகளை எடுத்து வைத்து விட்டு குளிக்க சென்றாள் .. அதற்குமுன் தாத்தாவை பார்த்து

" அவன்கிட்ட சொல்லுங்க , நான் ஒன்னும் அவன் நினைக்கிற மாதிரி இல்லன்னு " என்றபடி முகம் இறுக ,சென்றுவிட்டாள்  விஷ்வாநிகா .. அவளின் கோபத்திற்கு எதிர்மாறாய் தாத்தாவின் முகத்தில் புன்முறுவல் பூத்தது ..

" கிரேட் டா நீ " என்று மனதில் சகியை பாராட்டியவர் அவனக்கு உடனே போன் செய்தார் ..

" ஹே ஹாய் அருண் "

" ஹாய்  தீப்ஸ் "

" ஐயோ தாத்தா , ஒன்னு தீபன்னு கூப்பிடுங்க , இல்லன்னா சகின்னு கூப்பிடுங்க ..அதென்ன தீப்ஸ் "

" இதெல்லாம் ஸ்டைல் தீப்ஸ் .. சரி உனக்கு ஒரு பொண்ணுடைய போட்டோ இமெயில்  பண்ணேனே பார்த்தியா ?"

" பார்த்தேன் ..பார்த்தேன் .. எனக்கு பிடிக்கல அருண் "

" ஏன் மச்சி " ( தாத்தா அப்பப்போ இப்படிதான் பேசுவாரு .. இதயம் பலகீனமா உள்ளவங்க கொஞ்சம் பத்திரமா இருங்க "

" நான்தான் சொல்லி இருக்கேன்ல ...என்னுடைய ஆளை நான் பார்த்தாலே என் மனசுக்குள்ள அந்த பாட்டு தானா கேட்கணும் .. அப்போதான் ஓகே சொல்லுவேன் னு  .. இந்த பொண்ணை  பார்த்தா எனக்குள்ள அந்த ஹம்மிங் கூட வர மாட்டிங்குது தாத்தா "

" அட போடா, நீயும் உன் பாட்டும் .. பேசாம நானே மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் "

" நீங்க பண்ணாலும் பண்ணுவிங்க அருண் .. தாத்தா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் " என்றவன் தான்யாவிடம் பேசியது அனைத்தையும் கூறினான் ...

" நான் பண்ணது தப்பிலையே அருண் "

" ஹ்ம்ம் அந்த பொண்ணு ஹர்ட் ஆகலைன்னா , தப்பில்லைதான் மச்சி .. மத்தபடி உன் தலையெழுத்து என்னன்னு எனக்கு எப்படி தெரியும் "

" இப்படி ஒதுங்கி  நின்னா  என்ன அர்த்தம் ?"

" ஐ பி எல் மேட்ச் விட இண்டரஸ்டிங் மேட்டர் சிக்கிடுச்சு, இனி அருணுக்கு நல்லா பொழுது போக போகுதுன்னு அர்த்தம் " என்று சிரித்தார் அவர் ..

" ஊரு உலகத்துல 10-15 தாத்தா வெச்சு இருக்குறவன் எல்லாம் நிம்மதியா இருக்கான் , ஆனா ஒரே ஒரு அருணை வெச்சுகிட்டு நான் படுற பாடு இருக்கே , அயோயோயோயோயோ " என்றான் சகி ..

" போதும் தீப்ஸ் .. எனக்கு பசிக்கிது .. நான் என்ன உன்னை மாதிரி வெட்டியாகவே இருக்கேன் ? அப்பறமா பேசுறேன் "என்று போனை வைத்தார்  தாத்தா ..அவரிடம் பேசிவிட்ட உற்சாகத்தில் அவனும் அன்றைய வேலைகளை தொடர்ந்தான் ..

எல்லாம் நல்லா போயிகிட்டு இருக்கே .. புவியின் டச் காணோமே அப்படின்னு பீல் பண்ணாதிங்க ப்ரண்ட்  ..முக்கியமா ரெண்டு பேரை இன்னும் பார்க்கலையே நாம .. வாங்க போவோம் !

" அபி சாப்பிட வரலையா சாரதா ?" - வேணு

" அவன் என்னைக்கு சொன்ன நேரத்தில் சாப்பிட்டு இருக்கான் " என்றவர் அவன் அறை  கதவை வெறித்தார் .. அறைக்குள் நடக்கவிருக்கும் பூகம்பத்தை அறியாமல் ..

நெடுமரம் போல உயரம் , அழுத்தமான பார்வை , சுருள் கேசம் , அசரவைக்கும் ஆணழகனாய் கண்ணாடி முன் நின்று தயாராகி கொண்டிருந்தான் அபிநந்தன் .. வேணு- சாரதா தம்பதியரின் முதல் புதல்வன்..

" நந்திதா , என் பைல் இங்க வெச்சேனே பார்த்தியா ?" என்றான் அதை தேடிக்கொண்டே ...

" ம்ம்ம் " என்று உணர்ச்சி தொடைத்த முகத்துடன் வளம் வந்தாள்  அவன் சரிபாதி நந்திதா .. அழகில் அவனுக்கு இணையானவள் .. ஆனால்  குணத்தில் ? அபிநந்தனுக்கு நேரெதிராய் இருந்தாள்  அவள் .. கணவன் கேட்ட பைலை அவன்முன் நீட்டினாள் ..

 " ஹே , தேங்க்ஸ் " என்று அவன் அங்கிருந்து வெளியேற போக , அதே நேரம் அவள் தன்னிடம் ஏதோ சொல்ல விழைவதை உணர்ந்து திரும்பினான்  அபி ..

" ஏதும் சொல்லனுமா உனக்கு ?" என்றான்

" ஆஅம் " என அவள் தலையசைக்கவும்

" பணம் ஏதும் தேவையா ?" என்ற அவனது வழக்கமான கேள்வியில் சலித்து கொண்டாள்  அவள் .

" இல்ல "

" வேறென்ன ?"

" நான் ப்ரெக்னண்ட்  ஆ இருக்கேன் " என்றாள்  நந்திதா .. ஒருநொடி மௌனமானவன்

" ஓ  , கங்க்ராட்ஸ் ... வீட்டுல எல்லாருக்கும் சொல்லிட்டியா " என்றான் ..

அவளது இடத்தில் யார் இருந்தாலும், இவனது பதிலில் அதிர்ச்சி அடைந்து இருக்கலாம் .. ஆனால் இதைவிட அதிகம் பார்த்துவிட்ட அனுபவத்தில்  துளியும் ஆச்சர்யம் கொள்ளாமல் இருந்தாள்  அவள் ..

" இல்லை நான் சொல்லல ..!"

" ஏன் ?"

" எனக்கிந்த குழந்தை வேணாம் " என்றுவிட்டாள்  நந்திதா .. அவள் சொன்ன வேகத்தில் அவனது ஐவிரலும் அவள் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது .

" அபி சாப்பிட வா " என்று வேணு குரல் கொடுக்க , கதவை அறைந்து சாத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான் அபிநந்தன் ..!

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.