(Reading time: 23 - 45 minutes)

ப்ப அத்தைதான் சொன்னாங்க உன் தப்பு என்ன தெரியுமா…..பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்கன்றத, என்ன சொல்லுவாங்கன்றத பத்தி கவலைப் படாம வந்தது தான்னு. அதுல இருந்து என்னைப் பத்தி யார் என்ன நினைப்பாங்கன்றதே எனக்கு பெரிய பயமா இருக்குது..

அதோட விஷயம் அங்கே முடியலை…அப்புறம் என்னைக்குமே ஒரு ரெண்டு நிமிஷம் நான் லேட்டா வந்தாலும் அடி உதை விசாரணை கமிஷன்னு கதை போய்ட்டே தான் இருந்துது இங்க வர்ற வரைக்குமே….நான் அட்டென் செய்த லாஸ்ட் காம்படிஷன் அதுதான்….ரேயுக்கு மட்டும்தான் அப்புறம் ஸ்போர்ட்ஸ் பெர்மிஷனே….எப்டியோ அதிசயமா இந்த தடவை எங்கப்பா இங்க படிக்க அனுப்பிட்டாங்க……இங்கயும் எதாவது ப்ரச்சனை ஆச்சுன்னா திரும்பி ஊருக்கு கூட கூட்டிட்டுப் போய்டுவாங்க……”

அதே நேரம் இவனது  மொபைல் சிணுங்க அதை கவனித்தவன்

“சாரிடா ஷாலுமா…..என் ஃப்ரெண்ட் விஜய் வந்திருக்கான்….நமக்காக வந்தவன்….ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்லிட்டு வந்துடலாம்….கையிலிருந்த கர்சீஃப்ஃபை அவளிடம் நீட்டிவிட்டு இறங்க தொடங்கினான்.

“நான் எதுக்கு சரன்….?”

அவள் வீட்டில் நெருங்கிய உறவினர்களை தவிர பெண்களை யார் கண்ணிலும் காண்பிக்கும் வழக்கமே கிடையாதே….

அவனோ அவளுக்காக காத்திருந்தான்.

அவசரமாக முகம் துடைத்து கீழே இறங்கி நின்றாள்.

இதற்குள் அந்த விஜய் அங்கு வந்து சேர்ந்தான்.

முதல் வேலையாக தன் நண்பனிடம் ஷாலுவை அறிமுகப்படுத்தி வைத்தான் சரித்ரன்.

அந்த நிமிடம் தன் தந்தைபோல் சந்தேகம் என்ற பெயரில் ஒரு காலமும் கொத்திப் பிடுங்கமாட்டான் சரித்ரன் என்று தோன்றியது ஷாலுவுக்கு. அவளின் அத்தனை நேர புலம்பலுக்கும் வார்த்தையின்றி பதில் தந்திருந்தான் அவன்.

அந்த நாள் ஷாலுவுக்கு சரித்ரன் மேல் மதிப்பை பலப்படுத்தி அவர்கள் உறவுக்கு வழி வகுத்திருந்தாலும் மும்பையில் பிறந்து வளந்திருந்த சரித்ரனின் மனதில் ஷாலுவின் தந்தை ராஜ்குமாரின் மேல் மரியாதை இன்மையை தோற்றுவித்திருந்தது.

வ்வளவு நேரம் அப்பா வந்துவிட வேண்டுமே என்று தவித்துக் கொண்டிருந்தாள் தான் ரேயா. ஆனால் இப்பொழுது காலிங் பெல் சத்தம் கேட்கவும் பயத்தில் மரித்தே போனாள் அவள். காரணம் நிச்சயம் அருகில் நின்றவன் தான்.

பட்டப் பகலில் வெட்ட வெளியில் இவன் பக்கத்தில் பார்த்தால் கூட கொன்று போடுவார் அப்பா…இதில் நடு இரவில் பூட்டிய வீட்டிற்குள்……கிடு கிடுவென ஆடத்தொடங்கின அவள் உள்ளம் உலகம் ஊணுடல்.

“ஹேய் அழுவினி ….அங்கிள் வந்தாச்சுப் போல….” என்று மகிழ்ச்சியாக நிகழ்வை ஏற்ற ஆதிக் இவளது உடல் மொழியைக் கண்டதும்தான் அவள் என்ன நினைக்கிறாள் என புரிந்தவனாக அவளைப் பார்த்தான்.

“உங்கப்பா தப்பா நினைக்கலைனாலும் இப்படி முழிச்சே நினைக்கவச்சுடவ போல….போய் புனிதாவ எழுப்பு…” அவன் சொல்லவும் இவள் அவசரமாக புனிதா இருந்த அறையை நோக்கி ஓடினாள். ஆனால் அழைப்பு மணி ஓசையில் ஏற்கனவே எழுந்து வந்திருந்த புனிதா இவள் முகத்தைப் பார்த்தவள் தானே சென்று கதவைத் திறந்தாள்.

இன்னும் கூட ரேயாவுக்கு நிலமை இயல்பாய் இருப்பதாய் தோன்றவில்லை, ஆனால் கதவை திறந்ததும் கண்ணில் பட்ட புனிதாவைப் பார்த்து உச்சகட்ட நன்றியுணர்ச்சியை மொழியிலும் முகபாவத்திலும் காட்டியபடிதான் ராஜ்குமார் உள்ளே நுழைந்தார்.

“ரொம்பவும் நன்றிமா….தம்பி காரை வெளியே பார்க்கவும்தான் நிம்மதியாச்சு….கஷ்டம் பார்க்காம வந்து இத்தனை மணி வரைக்கும் கூட இருந்ததுக்கு தேங்க்‌ஸ் ஆதிக்….” புனிதாவிடமும் அவளைத் தொடர்ந்து ஆதிக்கிடமும் அப்பா இயல்பாய் நன்றி பாராட்டிக் கொண்டு போக ரேயா குழம்பிப் போனாள் ஒரு புறம் என்றால் மறு புறம் ‘அப்பாவுக்கு ஆதிக்கைப் பிடிக்கும்’ என்ற ஒரு நினைவு அவளுக்கு சிறகிட்டது.

“முதல்ல உட்காருங்க அங்கிள்…..” என்ற ஆதிக்கின் குரலில்தான் இயல்புக்கு வந்தாள் ரேயா. அவனோ அருகிலிருந்த வாட்டர் ஜாரிலிருந்து தண்ணீர் ஊற்றிக் கொடுந்தான் அவளது தந்தைக்கு.

அப்பொழுதுதான் அப்பா எவ்வளவு இளைப்படைந்து இருக்கிறார் என்பதே அவள் கண்ணில் பட்டது. சட்டைவேறு கையில் ஒரு கோடாக கிழிபட்டிருந்தது.

வேக வேகமாக போய் ஒரு டவலை எடுத்து வந்து அப்பாவிடம் நீட்டினாள். “குளிச்சிட்டு வாறீங்களாப்பா பெட்டரா இருக்கும்…”

அப்பா இவள் முகத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு டவலை வாங்கிக் கொண்டார். “ம்…” என்ற ஒற்றை எழுத்து பதில் வந்தது அவரிடமிருந்து. இவளது தாய் மாமா குடும்பத்தினரையும் எப்பொழுதாவது வந்து செல்லும் சித்தப்பா குடும்பத்தையும் தவிர வேறு யார் வீட்டிற்கு வந்தாலும் வரவேற்க கூட அவர்கள் முன் வந்து நிற்கும் பழக்கம் வீட்டில் இரு பெண்களுக்கும் கிடையாது.

இப்பொழுது அப்பா என்ன சொல்லுவார்?

“புனிதாவும் நீயும் தூங்கப் போங்க…நேரமாகுது பாரு….”

புனிதாவுடன் கீழ் தளத்தில் ஏற்கனவே புனிதா முதலில் தூங்கிய அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

ஏற்கனவே தூக்க கலக்கத்தில் இருந்த புனிதா உடனடியாய் நித்திரைக்குள் பயணிக்க,  இவளுக்கு தூக்கம் வர மறுக்கிறது. பைபிளாவது படிக்கலாம் என்றால் அது மாடியிலிருந்த அவளது அறையில் இருக்கிறது.

மாடிக்குச் செல்லவென சத்தமின்றி அறைக்கதவை திறந்தாள்.

 “ ரோடு ப்ளாக்….எப்ப க்ளியர் ஆகும்னு தெரியலை….இவ தனியா இருப்பாளேன்னு மரத்தை தாண்டி நடந்தே வந்துட்டேன்…..கீழ பாபநாசம் வந்து பஸ் பிடிச்சு வர்றேன்…..யாரை கூப்டுறதுக்கும் மொபைல்ல சார்ஜ் இல்லை….அங்க கடை எல்லாம்கூட மூடிட்டாங்க….. மலை பாதையில புலியும் கரடியும் அதிகம்…அதான் கைல ஒரு கம்பு இருக்கனும்னு பக்கத்தில இருந்த புதர்ல குச்சி உடச்சேன்….கையை ஏதோ கிழிக்ச்சுவிட்டுட்டு…” அப்பா ஆதிக்கிடம் பேசிக் கொண்டு இருப்பது கேட்கிறது.

இவளுக்காக புலிகளுக்கு மத்தியில்….

“முன்னமே ஒரு வார்த்தை நீங்க வீட்ல சொல்லி இருக்கலாம் அங்கிள்…..எல்லோருமே டென்ஷன் ஆகிட்டோம்……” ஆதிக் இவள் பெயரை அப்பாவிடம் சொல்ல மாட்டானோ?

“ம்…..சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவேன்னு நினைச்சேன்…இப்டி ஆகும்னு நினைக்கலை….”

“இல்லைனாலும் தினமும் உங்க ஷெட்யூலை வீட்ல சொல்லி வைக்கனும் அங்கிள்… உங்களை கான்டாக்ட் செய்றதுக்காக உங்களை பத்தி டீடெயில் கேட்டால் வீட்ல உங்களைப் பத்தி எதுவுமே தெரியலை…நாளைக்கு வீட்ல உள்ளவங்களுக்கு எதாவது அவசர தேவைனா கூட நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சு இருக்கனும் இல்லையா…?”

அப்பா சில நொடி மௌனமாகிப் போனார். கோபமா அவனை எதுவும் சொல்லிடுவாங்களோ…? ரேயாவுக்கு திக் திக் என்று இருந்தது.

“என்னமோ உங்கட்ட சொல்லாம்னு படுது….” அப்பா ஆரம்பிக்கும் போது எதோ சாதாரண விஷயம் என்று தான் ரேயா நினைத்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.