(Reading time: 23 - 45 minutes)

ன் 5 வயதில் என் அம்மா இறந்துட்டாங்க…அப்ப இருந்து நான் ஹாஸ்டல்தான்……குடும்பம்னா கிட்டதட்ட எனக்கு என்னனே தெரியாது…படிச்சு முடிச்சுட்டும் ஊரைவிட்டு விலகி இருகனும்ங்கிறதுக்காக எனக்கு போர்ட்ல கிடச்ச வேலையை ஏத்துகிட்டு தூத்துக்குடி  போய்ட்டேன்….எங்க ஊர்ல பொண்ணோட கல்யாண வயசு 13 ல இருந்து 15, பையனுக்கு 17 ல இருந்து 19……ஆனா எனக்கு அதெல்லாம் பிடிக்கலை…இன்பாக்ட் கல்யாணம் செய்யனும்னு ஒரு தாட் கூட கிடையாது….23 வயசு வரை கல்யாணம் செய்யாம இருந்த ஒரே ஆள் அப்போதைகு எங்க ஊர்ல நான்தான். ஆனா என் அப்பா எனக்கு கல்யாணம் செய்து வச்சிடனும்னு ரொம்ப ட்ரை பண்ணிகிட்டு இருந்தாங்க….அப்பதான் ஒரு பொண்ணுக்கு அப்பா இல்லை அம்மாவும் மரண படுக்கைல இருக்காங்க…..குற்றாலம் பக்கம்…தெரிஞ்ச குடும்பம்னு ஒரு ப்ரபோசல் அப்பா சொன்னாங்க…பாவம் பேரண்ட்ஃஸ் இல்லாத பொண்ணு அண்ணா அண்ணிட்ட மாட்டிட்டு கஷ்டபடப்போகுதேன்னு ஒரு தாட்ல கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டேன்…..எங்க ஊர் பக்கம் இல்லைன்றது எனக்கு இன்னொரு வகையில ஏனோ நல்லா தோணிச்சு….அப்டிதான் எனக்கும் தயாளினிக்கும் கல்யாணம் ஆச்சு….மேரேஜுக்கு பிறகுதான் தெரியும் அவ வீட்ல அவ அண்ணன் அண்ணி எல்லோருக்குமே அவ படு செல்லம்னு….பட் எங்க ரெண்டு பேர் லைஃபும் நல்லாவே இருந்துச்சு….அதோட அவ திருநெல்வேலி மெடிகல் காலேஜில் செகண்ட் இயர் மெடிசின் ஃஸ்டூடண்ட்னும் மேரேஜுக்கு பிறகுதான் எனக்கு தெரியும்….அவங்க அம்மாவுக்காக படிப்பை நிறுத்தி இருக்காங்க…..சோ நான் அவளை படிக்க வைக்கனும்னு முடிவு செய்தேன்…என் அப்பா கொஞ்சம் ட்ரடிஷனல் அவருக்கு அது பிடிக்கலை….என் கடைசி தம்பி அப்போ அவனுக்கு 10 வயசுதான்  அவனை கொண்டு வந்து என் வீட்லவிட்டுட்டு நீங்கதான் பார்த்துகிடனும்னு சொல்லிட்டு போய்ட்டாங்க….அப்டின்னா தயா வீட்ல இருந்தாகனுமேன்னு அவருக்கு எண்ணம்…பட் என் தம்பியையும் பார்துகிட்டு….தயா படிச்சு முடிச்சா…..அதோட என் தம்பிதான் எங்க வீட்டுக்கு மூத்த பையன்ங்கிற மாதிரி தயாவுக்கும் சின்னவனுக்கும் இடையில் ஒரு பாசம் வந்திருந்தது…எனக்குமே அப்டிதான்….அவளை அம்மானுதான் கூப்டுவான் அவன்…..பயங்கர கலகல டைப்…தாயாவோட ப்ராட் அப்….எப்பவும் யாருக்கு ஹெல்ப் பண்றதுக்கும் முந்திட்டு நிப்பான்…..இதில் 5 வருஷத்தில் தயா படிப்பு முடிஞ்சதும் ரேயா வந்தா….மகன் மகள்னு குடும்பம் முழுமையா இருக்கிறதா ஃபீல் செய்தோம்…கொஞ்சம் பெரிய மகன்….” மௌனமாகிப் போனார் ராஜ்குமார்.

“உங்க கான்டாக்ட் டீடெய்ல் தேடுறப்ப ரூம்ல ஒரு ஃபோட்டோ பார்த்தேன் அதுதான் உங்க தம்பியா அங்கிள்…படு ஹாண்ட்சம்…”

“ம்…அவனாத்தான் இருக்கும்….அவனோட 18 வயதில் ஆரம்பிச்சது ப்ரச்சனை….அப்போ அவன் மெட்ராஸ்ல மெடிகல் காலேஜ்ல செகண்ட் இயர் போயிருந்தான்…ஒரு ஃபர்ஸ்ட் இயர் பொண்ணை லவ் பண்றதா வந்து சொன்னான்….தயாவுக்கு அந்த வயசுல அது தேவையில்லைனு பட்டுது…பட் அவனை கண்டிச்சு சொல்ற பழக்கம்லாம் வீட்ல கிடையாது….நானும் இது இப்ப தேவையில்லடான்னு சொல்லிட்டு இருந்தேன்…..ஹார்ஷா யாரும் பேசிக்கிடலை…..ஜஃஸ்ட் சஜஷன் மாதிரி கிண்டலா பேசிகிடுறதுதான்….அவன் ஏற்கனவே பயங்கர கலகல டைப்…பதிலுக்கு பதில் கிண்டலா சொல்லிட்டு இருந்தான்….ஆனால் பிடிவாதமா இருந்தான்….உங்க ஊர் ரத்தம்தானேன்னு கிண்டலா தயா சொன்னதுதான்…எனக்கு ஏனோ நம்ம ஊர்ல இந்த வயசுல கல்யாணம்செய்துட்டு நல்லாதானே இருக்காங்கன்னு தோணிட்டு….ஸோ அவன்ட்ட ஓபனா சம்மதம்னு சொல்லலைனாலும்….நோ சொல்றதை  நிறுத்திட்டேன்…. அவனுக்கும் என் சம்மதம் புரிஞ்சிடுது……

அடுத்து அவன் படு சந்தோஷமாத்தான் மெட்ராஃஸ் கிளம்பிப் போனான்…..அங்க போயும் சந்தோஷமா இருக்கிற மாதிரி தான் பேசிட்டு இருந்தான்….திடீர்னு ஒரு நாள் அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் எதோ ப்ரச்சனைல சூசைட் செய்துகிட்டான்னு அவனோட ஃப்ரெண்ட்ஸ் அவனோட பாடியை ஊர்ல அப்பாட்ட கோண்டு வந்து கொடுத்தாங்க…..நானும் தயாவும் ஆடிப் போய்ட்டோம்….நம்ப கூட முடியலை…..நான் ஒரு வழியா அதை தாங்கிகிட்டேன்…பட் தயாவால அதுல இருந்து வெளிய வர முடியலை….அவ வீட்ல செல்லமாவே வளர்ந்தவ….ரொம்ப சாஃப்ட் நேச்சர்ட்…..இத்தனைக்கும் டாக்டர்….பட் ஒரு டெத் ஐ நார்மலா எடுக்க முடியலை…. டிப்ரஷன்…. சாப்டவே மாட்டா….கொஞ்சம் கொஞ்சமா வீக் ஆய்ட்டே போய்ட்டா….இதுல அன் எக்ஸ்‌பெக்டட் செகண்ட் ப்ரெக்னன்சி…..டெலிவரில பிழச்சிட்டாலும்….அடுத்த மூனு மாசத்தில் ஷி வாஸ் நோ மோர்….எனக்கு குடும்பம்னு கிடச்சது மொத்தம் 10 வருஷத்துல இல்லாம போய்ட்டு…. போனவங்க ஒரு வகையில கொடுத்துவச்சவங்க தெரியுமா?.....இருக்கிறவங்க கதி தான் கொடூரம்….” ராஜ்குமாரின் பேச்சு மறுபடியும் நின்று போனது….

“சாரி அங்கிள்…தேவையில்லாம இந்த டாபிக்கை எடுத்துட்டேன்…”

“டோண்ட் பி….நாட் அட் ஆல்….இதை சொல்லனும்னு நினைச்சது நான் தானே….யூ நோ…அப்பியரன்ஸ் வைஸ்  கொஞ்சம், அப்ரோச் கொஞ்சம்னு சம்வாட் யூ ரிமைண்ட் மி ஆஃப்  மை ப்ரதர்….இதையெல்லாம் நான் யார்ட்டயுமே பேசினதில்லை….அவனை திரும்பி பார்த்த மாதிரி தோணவும்…” அப்பா குரல் தடுமாறி இதுவரை ரேயா பார்த்ததில்லை. வீட்டில் ஒன்று பிடிவாதமாய் பேசுவார், இல்லை கர்ஜிப்பார்….நேற்று அந்த குடிகாரனிடம் அவர் பேசியவிதமே இவளுக்கு ஆச்சர்யம் என்றால்…..இது நம்பவும் முடியவில்லை தாங்கவும் முடியவில்லை…..

அப்பாவிடம் போக வேண்டும் போல் இருக்கிறது….ஆனால் அவர் யாரிடமாவது இப்படி மனம்விட்டு பேசுவது கூட நல்லதுதானே…அதை இவளே ஏன் கெடுக்க வேண்டும்?

மெல்ல எட்டிப் பார்த்தாள். ஆதிக் அப்பாவின் கையைப் பிடித்திருப்பது தெரிந்தது.  

“அப்பதான் நான் எவ்வளவு பெரிய தப்பு செய்துருக்கேன்னு புரிஞ்சுகிட்டேன்…..ஆரம்பத்திலிருந்து அதியை கண்டிச்சு வளர்த்திருக்கனும்….. அவன விருப்பப்படி விட்டதால அவனால ஏமாற்ற தாங்கமுடியலை….அதோட காதலிக்கிறது தப்பா இல்லையாங்கிறதைவிட என்னைப் பொறுத்தவரை அந்த டீன் ஏஜ்ல அவங்களுக்கு இருக்கிற உணர்ச்சி வேகம் அளவுக்கு மனபக்குவம் இல்லை…..அவனோட போல்ட்னஸுக்கு அவன் சூசைட் செய்துட்டான்னு நம்பவே முடியலை…..அதுதான் எமோஷனல் இம்மெச்சூர்ட் மைன்ட்…..இதுவும் கடந்து போகும்னு உனரமுடியாத வயசு….இந்த நிமிஷ உனர்வு மட்டும்தான் பெருசா தெரியும்….நாளைக்கு இது நமக்கே வேற மாதிரி தோணும்ங்றதெல்லாம் புரியுறது இல்லை….இன்னைக்கு வலிக்கிற மாதிரியே நாளைக்கு வலிக்காது…மனம் பழையபடி சந்தோஷமாகிடும்னு நினைக்க தெரியாத வயசு…அந்த வயசுல அவனுக்கு நான் காதலுக்கு சம்மதம் கொடுத்து வச்சுருக்கேன்….அவன் காதல் அவனை மட்டுமல்ல எத்தனையோ பேரை அழிச்சுட்டு…ம் ..எல்லாவகையிலும் அழிவை மட்டும்தான் கொண்டு வந்திருக்கு அதியோட காதல்….

எல்லாத்துக்கும் காரணம் நான் அவனை வளர்த்தவிதம் சரி இல்லை….எல்லா சுதந்திரமும் கொடுத்து இருந்தேன்…அதான்…ஒருபக்கம் ரொம்ப வேதனையா இருக்குது மறுபக்கம் இன்னும் நான் மட்டும் தனியா இருந்து வளர்க்க வேண்டிய இரண்டு குழந்தைங்க என் கையில…ரொம்பவும் பயந்துட்டேன்…என் பொண்ணுங்களுக்கும் அந்த நிலை வந்துடக் கூடாது….அதோட தயா வீட்ல மாதிரி இவங்கள ரொம்ப இமோஷனலி பாண்டடா வளர்க்க கூடாதுன்னும் தோணிட்டு. தயா மாதிரியோ அதி மாதிரியோ இவங்களுக்கும் எதுவும் ஆகிடகூடாதேன்னு  பயம்….அதனாலயே என்னை அறியாமலே அவங்களை என்னைவிட்டு விலக்கி நிறுத்தியே பழகிட்டேன் போல….அதுவும் பெரியவ வேற நிறைய அவ அம்மா மாதிரியே….அது என்னை அறியாமலே அவட்ட ரொம்பவும் ஃஸ்ட்ரிக்டா நடந்துக்க வச்சிடும் போல….பிள்ளைங்க ரொம்ப சின்னதா இருந்ததால தான் திருநெல்வேலில இருந்து இங்க மாறி வந்தேன்….தயா ஊர் இது……நான் எல்லா நேரமும் குழந்தைகளை வீட்ல இருந்து பார்துக்க முடியாது இல்லையா…..அதோட என் அப்பா சொத்துகளை பிரிச்சு வேற கொடுத்துட்டாங்க…..அவங்களுக்கும் முடியலை….என்னதான் அதி என் வீட்ல வளர்ந்தாலும் அவருக்கும் அவன் மகன் தானே….தளர்ந்துட்டார் போல…..ஆக அந்த சொத்தையும்  பார்த்தாக வேண்டிய நிலை….அதுக்காகவே போர்ட் வேலையை ரிசைன் செய்துட்டு தூத்துக்குடியில் இப்ப உள்ள  ஷிப்பிங் பிஸினஸ் ஆரம்பிச்சேன்…

 நான் வீட்ல இல்லாத நேரம் குழந்தைகளை ஆள் வச்சுப் பார்த்தாலும், நம்பிக்கையான சொந்தகாரங்க வேணுமே…அந்த ஆட்களை கண்காணிக்கிறதுக்காவது….நான் வர்ற வரை அவ அண்ணங்க வீட்லதான் பிள்ளைங்க இருப்பாங்க…..அவங்களுமே சின்னவ பிறந்ததுலதான் தயா இறந்துட்டான்னு அவட்ட மட்டும் கொஞ்சம் கடு கடுன்னு இருப்பாங்க …..அது என்னை அறியாமலே அவட்ட மட்டும் கொஞ்சம் சாஃப்ட்டா நடந்துக்க வைக்குது போல…இப்ப அப்பப்ப  அடிக்கடி நாம ஏன் இப்டி இருக்கோம்னு யோசிக்க ஆரம்பிச்சதுல கண்டுபிடிச்ச விஷயம் இது…..அதுவும் இன்னைக்கு ரொம்பவுமே யோசிச்சுட்டே தான் வந்தேன்….நேத்து ஒரு கிறுக்கன் வேற வந்து வீட்ல கத்திட்டு போனானா….இவ ரொம்ப பயந்துருப்பாளேன்னு….” அடுத்தும் அவர் எதோ நினைவில் மூழ்கிப் போனார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.