(Reading time: 23 - 45 minutes)

ரேயாவுக்கோ அப்பாவுக்கு காதல் என்றால் ஏன் கடும் வெறுப்பு என்று கூட இப்பொழுது புரிகின்றது. அதோடு உணர்ச்சிகரமான பக்குவமற்ற மனம் என்பதும்தான். அதன்பின் ஆதிக்கும் அப்பாவும் எதோ பேசிக்கொண்டே மாடிக்கு செல்கிறார்கள். இவள் காதில் எதுவும் விழவே இல்லை. மனம் முழுவதும் அப்பா சொன்ன விஷயங்களை அலசுவதிலேயே தொலைந்து போயிருந்தது.

மறுநாள் காலை ரேயாவுக்கு விழிப்பு வரும் போது புனிதா இன்னும் தூங்கிக் கொண்டு இருந்தாள்.

இப்பொழுது இவள் மாடியிலிருந்த தன் அறைக்கு சென்றே ஆக வேண்டும். ஆனால் அவன் மாடியில் இருப்பானே…?

தயங்கி தயங்கி மெல்ல படியேறினாள். பட படத்தது இதயம். மாடி லாஞ்சில் நுழைந்தாள். நடுவில் பெரிய ஹாலும் சுற்றியும் அறைகளாயும் இருக்கும் அந்த தளத்தில் எங்கு நின்று இவளை தடதடக்க செய்வானோ..? மொத்தமாய் அவன் ப்ரசன்னத்தில் இருப்பதாய் ஒரு உணர்வு…

முதல் அறை அப்பாவினுடையது… சத்தமின்றி மெல்ல அதைக் கடந்தாள். இன்னும் கதவை திறக்கவில்லை அப்பா. ஆச்சர்யமே…ஆனால் நேற்று மிகவும் களைத்திருந்தார்.ஆதலால் தாமதமாக எழும்புவாராய் இருக்கும்….

அடுத்தது அவள் அறைதான். அவன் வருவதற்குள் உள்ளே நுழைந்துவிட்டால் போதும். சத்தமெழுப்பாமல் ஆனால் வேகமாக ஓடிச் சென்று கதவில் கைவைத்தாள். அது தானாக உள்ளே திறந்து கொண்டது….உள்ளே வெளிச்சம்…..லைட் ஆனிலிருந்தது.

ஸ்ஸ்ஸ்…..இங்கேயா இருக்கான்?.....பச்சை மிளகாய் கடித்ததுபோல் இருந்தது. இவள் அறையை எப்படி வைத்திருந்தாளோ? இவள் மெத்தையிலா அவன்…? நினைவு தொண்டையை அடைக்க எதையோ கொண்டு வந்து சேர்த்தது. மென்று முழுங்கினாள் அவள். இவள் அறையை எப்படி அப்பா அவனுக்கு கொடுத்தார்?

இதற்குள் யாரோ வரும் சத்தம்.  அவசரமாக அவசரமாக அடுத்திருந்த ஷாலுவின் அறைக்குள் நுழைந்தாள்.

போன வேகத்தில் இவள் எதன் மீதோ மோதி தடுமாறி விழ தொடங்கியவள், விழும் முன் சமாளித்து தரையில் ஒருவகையாக அமர்ந்தாள்.  இரு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டு “ சாரி சாரி…சாரி.” என பதற தொடங்கினாள்.

இன்னுமாய் இருட்டுவிலகாத அதிகாலை நேரம்.  

ஆனாலும் எதில் மோதினாள் என்பதற்கு விளக்கம் தேவையாய் இல்லை.

அவள் மோதிய உடலுக்கு சொந்தகாரனோ “ என்ன ரேஸ் நீ….…. இங்க போய்…?” அருகில் நின்றிருந்தவன் தலையில் இருந்து நீர் துளிகள் அவள் மேல் விழுகின்றன. அப்பொழுதுதான் குளித்துவிட்டு வெளி வந்திருக்கிறான் வெற்று மார்புடன் அவன்.

“ஐயோ…இங்க இருந்து போங்களேன்…..” ஏறத்தாழ அவள் அழத்தொடங்கி இருந்தாள்.

இதற்குள் யாரோ அறைக்கு அருகில் வரும் சத்தம்.

“என்னாச்சு ரேயு….இங்க எதுக்கு வந்த? யாராவது பார்த்தால் எவ்ளவு தப்பா தெரியும்..?” சிறு குரலில் கேட்டாலும் அவன் குரலில் இருந்த அடக்கப்பட்ட பரபரப்பு புரியாமல் இல்லை.

“என் ரூம்ல நீங்க இருக்கீங்கன்னு நினைச்சு இங்க வந்துட்டேன்….” அழுகையாய்தான் வருகிறது வார்த்தைகள்.

“ப்ச்…உன் ரூம்க்கு நான் ஏன் போறேன்….?” சரி நீ…” அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே கதவு தட்டப்பட தொடங்குகிறது.

ரேயா கதவை திறந்து  அறைக்குள் உள்வந்தவுடன் பழக்கம் போல் பின் தள்ளியிருந்த கதவு வாசலை மூடி இருந்தாலும் தாழிடாமல்தானே இருக்கிறது.

ஆக கதவை தட்டுபவர் நாகரீகம் கருதி தட்டுகிறார். அடுத்த நொடி திறந்து கொண்டு உள் வரத்தானே செய்வார்?

மெல்ல சத்தமின்றி அக்கதவின் தாழ்பாளை போடுகிறான் ஆதிக். தப்பிக்க நேரம் வேண்டுமே…

மொத்தமாக மூவராக வரவேற்பறையில் பார்க்கும் போது அப்பா இயல்பாக எடுத்துக் கொண்டிருக்கலாம் விஷயத்தை…..ஆனால் அடுத்துமே அவர் இவளை உள்ளே அனுப்பவதில் தானே குறியாக இருந்தார். இப்பொழுதே ஒரே அறையில் இருள் விலகா நேரத்தில்…

நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது…இவள் அப்பா மட்டுமல்ல உலகத்தில் யார் பார்த்தாலும் தப்பாகமட்டும்தானே தோன்றும்?

இன்னும் பலமாக தட்டப் படுகிறது கதவு….

 1990 ஆம் ஆண்டு…..

அமைதியாய் கதவை தாளிட்டவனைப் பார்த்து ஸ்தம்பித்துப் போனாள் மலர்விழி. தங்கை பேசிவிட்டுப் போயிருந்த காரியங்கள் வேறு மனதில் வந்து கன்னாபின்னாவென கற்பனை தந்தது.

உண்மையில் அவன் கணவனின் உரிமையை கையில் எடுத்துக் கொண்டானாகில் இவள் என்ன செய்துவிட முடியும்….?

அவன் அவள் அருகில் வந்து படுக்கையில் அமர்ந்தான்.

“இந்த வீட்ல உன்னை எல்லோருக்கும் ரெண்டாம் பட்சமா தெரியுதுன்னு நினைக்காத மைய்யூ….இங்க வந்த என்னை நல்லா கவனிச்சுகிட்டாதான் என் வீட்ல இருக்கிற உன்னை நான் நல்லா பார்த்துப்பேங்கிற எண்ணத்துல உன் மேல உள்ள பாசத்தைதான் எனக்கு முக்கியதுவமா காண்பிக்கிறாங்க…என்னை எந்த அளவுக்கு கவனிக்கிறாங்களோ அந்த அளவு அவங்களுக்கு நீ முக்கியம்னு அர்த்தம்மா…”

இவள் அவனைப் பற்றி எதை எதையோ எண்ணி திக்கி திணறிக் கொண்டிருக்க…இவளது இப்போதைய எரிச்சலின் வலியின் அடிப்படை காரணத்திற்கு விளக்கம் சொல்லி இவளுக்கு நிம்மதி தர முயன்றான் அவன்.

இப்பொழுது வேறு விதமாக அவள் ஸ்தம்பித்துப் போனது நிஜம். இவள் அவனை நோகடிக்க அவனோ அவள் வலி தீர வழி தேடுகிறான்.

அதோடு அவன் சொன்னதின் உண்மையும் புரிகின்றது. இவள் வீட்டினர் அவனுக்கு ராஜமரியாதை செய்ய காரணம் இவள் மீதுள்ள பாசம் தானே…

“உன் மேல இவ்ளவு பாசம் வச்சிருக்கவங்க உனக்கு பிடிக்காத கல்யாணத்தைவிட்டு கண்டிப்பா பிரியவே கூடாதுன்னு சொல்ல மாட்டாங்க மய்யூ….”

அவன் சொன்னவிதத்தில் அதுவும் ஆம் என்றே தோன்றுகிறது. அப்பா இவள் அழுது தாங்க மாட்டார். உண்ணவும் உறங்கவும் முடியாமல் இவள் படும் தவிப்பை அவர் அறிந்தால் நிச்சயம் அவரே இவளது முடிவைத்தான் ஆலோசனையாய் சொல்வார். மகள் என்றால் உயிர் அவருக்கு.

இவள் கண்ணீர் இவளை விட இவள் தாயுக்கும் தங்கைக்கும் அதிகமா சுடும்.

ஆறுதலாய் இருந்தது. தன்னை சுற்றி இருக்கிற அத்தனை ப்ரச்சனைகளும் இப்பொழுது சிறியதாக தோன்றுகிறது.

“அப்டியே அவங்க ஒத்துகிடலைனாலும் உன் மேல கோபம் கூட படாம அவங்க உன்னை ஏத்துகிடுற மாதிரி செய்றது என் பொறுப்பு….ப்ளீஃஸ் இதுலயாவது என்னை நம்பு…”

இவனை நம்பாமலா…? அத்தனை காதல் என்றானே…..ஒரு சலனப் பார்வை, சிறு தீண்டல் ஏதுமின்றி குழந்தையைப் போல் இவளை பார்த்துக் கொள்ளும் அவனை நம்பாமல் யாரை நம்புவதாம்?

“ஆனா இப்போ கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாரு…..உன் தங்கை கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்குது….அதோட அவளுக்கும் மாப்ப்பிள்ளையை பிடிச்ச மாதிரி இருக்குது….”

தன் திருமணம் பற்றி இவள் தங்கை குறிப்பிட்ட போது அவள் கொண்ட  வெட்கம் கலந்த கர்வ  முகம் மனதில் வருகிறது மலர்விழிக்கு. ஆம் தங்கைக்கு இந்த திருமணத்தில் அதீத விருப்பமே இவளுக்கு அந்த மாயக்கரன் மேல் இருக்கும் காதலைப் போலவே…

“இப்போ நீ டிவோர்ஸ் அது இதுன்னு பேசினால் இந்த கல்யாணம் கலஞ்சிடாதா…? உன் விஷயமே எப்படியும் உன் பேரண்ட்ஸுக்கு ஏமாற்றமாதானே இருக்கும்…அதுல அவளோட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டா அவங்களால தாங்க முடியுமா?”

அவன் சொல்வது 100க்கு நூறு உண்மையென இவளுக்குமே புரிகிறது.

“சோ உன் தங்கை கல்யாணம் முடியுற வரை வெயிட் செய்யேன்.....அப்புறமா நம்ம விஷயத்தை பேசிக்கிடலாம் வீட்ல….”

அவனை விழி கொட்டாமல் பார்த்தாள்.

“என்னால உனக்கு எந்த தொந்தரவும் வராதுமா…..ப்ளீஸ் நம்பு… ஜெயாக்காவ பத்தி கூட யோசிக்காத நாம மெட்ராஸ்ல தனிகுடித்தனம் இப்பவே போய்டுவோம்….யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டாங்க…..”

சம்மதமாக தலை அசைத்தாள் மலர்விழி.

Friends, இந்த எபிசோடில்  நீள விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. அதை நீளமாக இத்தனை விளக்கமாக கொடுக்க காரணம் மலர்விழி வசீகரன் பகுதியுடன் இணைக்கும் இணவு பகுதி இந்த கதைதான் என்பதால். அடுத்த எபிசோடில் இருந்து கதை தன் பழைய பாங்கிற்கு  திரும்பிவிடும். நன்றி

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:876}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.