(Reading time: 13 - 25 minutes)

"காருண்யா எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. எவ்வளவு நல்ல உள்ளம் உனக்கு...இப்படி ஒருவர் தன் வாழ்க்கையை பயணம் வைக்க மிகப் பெரிய மனம் வேண்டும். நீ ஓத்துக் கொள முடிவு செய்து விடடாய் என்று நான் எனக்கு அதை சாதகமாக எடுத்தி கொள்ள மனம் வரவில்லை".

"ஏன் டியர், இப்படி என்னை பிரித்துப் பார்க்கிறீர்கள். நான் உங்களில் பாதி அல்லவா? உங்களுக்காக இதை நான் செய்யாமல் யார் செய்யக் கூடும். என்று மீண்டும் கண்ணீர் வடித்தாள்.

அவள் கண்ணீரை பார்க்க சகிக்காமல் கரண்,

"அழாதே ...எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது... நான் வீடு செல்ல வேண்டும்... எனக்கு தலை வலிக்கிறது.... நான் கொஞ்சம் யோசித்து என் முடிவை சொல்லுகிறேன்... நீ கொஞ்சம் பொறு" என்று கூறி 'பேரர்' என அழைத்தவன், பில்லை செட்டில் செய்ய கோரி அனுப்பினான்.

பில்லை கொடுத்து விட்டு , காருண்யாவிடம் விடை பெற்று வெளியே வந்தவன், உஃப் என்று ஒரு பெரு மூச்சை விட்டான். தலை வலிக்க ஆரம்பதித்திருந்தது. காரோட்டியை அழைக்கலாமா என்று நினைத்தவன்,மனதை மாற்றிக் கொண்டு, சரணை அழைத்தான். ஒரு பத்து நிமிடத்தில் வருவதாக கூறிய சரணிடம், ஹோட்டல் லாபியில் வெயிட் செய்வதாகவும், வந்தவுடன் ஒரு கால் செய்தால் தான் வெளியே வந்து விடுவதாக சொன்னவன்,

ஹோட்டலின் ஒர் மூலையில் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, தலையை குனிந்தவாறு தன் செல் போனை நோண்டிக் கொண்டிருந்தான். மனம் சஞ்சலமாக இருந்தது.. அப்பொழுது இடையிட்ட கீச்சு குரலில் ஈர்க்கப்பட்டான்.

"ஏய், என்னடி இப்படி சொல்லுகிறாய்...சாகப் போகிறவனையா கல்யாணம் பண்ண துணிந்து விட்டாய்? காருண்யா என்ற பெயருகேற்ப உனக்குள் இவ்வளவு கருணையா?

என்று பேசியவாறு அவன் இருக்கையின் பின் புறம் வந்து அமர்ந்தவர்களில் ஒருவள் பேசினாள்.

உடனே மற்ற குரல், "ஏய், நானென்ன முட்டாளாடி, அவனோ இருக்க போவதே இன்னமும் ஒரு மாசமோ, இல்லை இரண்டு மாசமோ....அதற்குள் கல்யாணம் செய்து கொண்டு விட்டால்?...உனக்கு என்னடி தெரியும் அவன் எவ்வளவு பணக்காரன் என்று? மனைவி என்ற பெயரில் மொத்த சொத்தும் எனக்கு தானே வந்து சேரும்....குழந்தையா குட்டியா? ஒன்றும் இல்லை. அவனுக்குப் பின் நான் நேரடி வாரிசாக அவன் பணம் மொத்தமும் அனுபவிக்கலாமே?...சமயம் பார்த்து என் தாய் ஊரில் வேறு இல்லை....இல்லாவிட்டால் நல்ல ஐடியா கொடுப்பாள்...." என்று பேசியவளின் குரலிலேயே திரும்பிப் பார்க்கமலேயே தெரிந்து போனது ...அது யார் என்று...

ஆத்திரத்தில் எழுந்து சென்று அவளை இப்பொழுதே தலையை பிடித்து உலுக்கு உலுக்கி அடித்து நொறுக்கலாமா எனத் தோன்றியது கரணுக்கு.

ஆனால் சட்டென தன் கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கியவன், ' எவராக இருந்தாலும், இந்த நிலையில் இப்படித்தான் யோசித்திருப்பார்கள். மூழ்கும் கப்பலிலுருந்து தப்பும் எலிகளை போல் ஒன்று ஓடிவிடுவார்கள், இல்லா விட்டால் ஏதாவது ஆதாயம் கிடைக்க கூடுமோ என பீராயத் தொடங்குவார்கள் ... '

'இதை நாம் இப்படியே விட்டு விடலாம்... இவளிடம் சண்டை போட்டு மேலும் அவமானப் பட வேண்டாம்... நமக்கோ இவள் குறித்து தெரியும்... ஏதோ இல்லாத குறை சற்று அளவுக்கு அதிகமாக ஆசை படுகிறாள்....அனுபவித்து விட்டு போகட்டுமே... எனக் கண்டு கொள்ளாமல் விட்டது நம் முட்டாள்தனம்...மனதில் இருப்பது தான் வாயில் வரும் என ...தன் துர் புத்தியை படம் போட்டு காட்டி விட்டாள். அவள் நிலையில் அப்படிதான் யோசிப்பாள்...எனக்கு என்ன பிள்ளையா குட்டியா பங்கு போட என் சிந்தித்தவனை செல்போன் அழைத்தது, சரணின் அழைப்பு,

"இங்கு வந்து விட்டேன். வெளியில் வாடா" என கூப்பிட்ட தம்பியின் அழைப்பை ஏற்று வெளியே சென்றான்.

"கார் வாயிலில் தயாராக இருக்க கண்டவன் ஒர் இறுகிய முகத்துடன் ஏறி அமர்ந்து...போடா"...என சரணிடம் காரை செலுத்தச் சொன்னான்.

இனி....

Episode # 02

Episode # 04

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.