(Reading time: 12 - 24 minutes)

 

ண்ணீரில் குதித்தேன். இயலும் தூரம் வரை நீச்சல் அடிக்க முடிவு செய்தேன். நீச்சல் அடித்து கொண்டே இருந்தேன். என் பின்னால் திமிங்கலம் போன்ற ஒன்று follow செய்வதை கண்டேன்.அது என் பக்கத்தில் நெருங்கியது. என் கால்களை கடிக்க முயன்றது. என்னால் அதற்க்கு மேல் நீச்சல் அடிக்க இயலவில்லை. நான் நீச்சலை கைவிட்டேன். தண்ணீருக்குள் மூழ்கினேன்.

தண்ணீரின் அடியில் சென்று கொண்டிருக்கையில் ஒரு காவி உடை உடுத்திய சாமியார் தண்ணீருக்கு அடி பரப்பில் தவம் செய்து கொண்டிருப்பது மட்டும் கொஞ்சம் வெளிச்சத்துடன் தெரிந்தது. அந்த சாமியாரின் தேஜஸ் அவ்வாறாக இருந்தது. அவர் ஆழ்ந்த தியானத்தில் , உலகத்தை மறந்து சமாதி நிலையில் இருந்தார். (தியானத்தில் இருந்த சாமியாரை எழுப்பியதால் சாபம் வாங்கி யாரோ ஒருவர் நாயாக மாறிய கதையை என் மனம் , அந்த திகிலான நேரத்தில் கூட நினைவு படுத்தியது).

அவர் அருகே ஒரு சுரங்க பாதை இருப்பதை கண்டேன். அதன் உள்ளே சென்றேன். தண்ணீர் அதன் உள்ளே வர முடியாத படி அந்த சுரங்க பாதை வடிவமைக்க பட்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும் சுரங்க பாதையின் முடிவு வந்தது.அதன் விளிம்பில் நான் நின்றேன். அடுத்த அடி வைத்தால் பாதாளத்தில் விழுவது போல் இருந்தது. என்னால் திரும்பவும் தண்ணீருக்குள் செல்லவும் முடியாது என்று உணர்ந்தேன்.வேறு வழியின்றி விளிம்பில் இருந்து குதித்தேன்.

அந்தரத்தில் நான் பறந்து கொண்டிருந்தேன்.கண்களை இருக்க மூடிக்கொண்டேன். இறுதியாக தண்ணீருக்குள் விழுந்தேன். விழுந்ததும் நான் வேக மாக நீச்சல் அடிக்க ஆரம்பித்தேன். இவ்வாறாக நான் அந்த விளக்கு பக்கத்தில் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

தண்ணீரின் கரைக்கு வந்து சேர்ந்தேன். கரைக்கு எதிரில் ஒரு அறை. அந்த அறையினை திறந்து உள்ளே சென்றேன். அங்கும் இங்கும் சில மனிதர்கள் / பேய்கள் இருப்பது போன்று இருந்தது. நான் நேராக சென்று கொண்டிருந்தேன். ஒரு உருவம் என் முன்னால் வந்து நின்றது.

நான் அடுத்த அடி எடுத்து வைக்காமல் நின்றேன். நாம் ஏதும் பேசாமல்/react செய்யாமல் அமைதியாக இருந்தால் பேய்கள் நம்மை எதுவும் செய்யாது என்று என் அம்மா கூறியது என் நினைவிற்கு வந்தது. நான் சிலையாக நின்றேன். சிறிது நேரம் கழித்து அந்த உருவம் விலகி சென்றது. நான் முன்னோக்கி சென்றேன். அந்த விளக்கினை வந்தடைந்தேன். அந்த விளக்கில் எண்ணை இல்லை. ஆகினும் அது பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.

சுற்றி பார்த்தேன். ஒரு கதவு இருந்தது. அதுவே வெளியே செல்லும் வழி என்று நினைத்து கதவை திறக்க போகும் வேலையில், மயங்கி விழுந்தேன். நேரம் கடந்தது. சிறிது நேரத்திற்கு பின் மயக்கம் தெளிந்து எழுந்தேன். அது தூக்கமா இல்லை மயக்கமா என்று புரியவில்லை. மீண்டும் கதவை திறக்க முயன்றேன்.இம்முறை கதவும் திறந்தது. ஆனால் கதவு திறந்த பின் அந்த அரண்மனையே இடிவது போல் சத்தம் கேட்டது. பதட்டத்தில் நான் ஓடினேன். மற்றொரு வாசல் தென்பட்டது. அந்த வாசல் வழியாக வெற்றிகரமாக நான் வெளியில் வந்தேன்.

வெளியே கோவிந்தம்மாள் எனக்காக காத்திருந்தார். பதட்டத்தில் இருந்த என்னை தேற்றினார். நான் அமைதியான பின்பு கோவிந்தம்மாள் என்னிடம் "நன்று. நீ தேறிவிட்டாய். இப்பொழுது வேறொரு சவாலை நீ செய்து முடிக்க வேண்டும்." என்றார்.

"பயபடாதே. நான் இருக்கிறேன். இந்த சவாலை முடித்த உனக்கு. இப்பொழுது நான் கொடுக்க போகும் சவாலையும் முடிக்க முடியும்." என்றார்.

"நீ விருது நகர் அருகாமையில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று அங்கு புதைந்து கிடக்கும் "ராக பாவனா" என்ற புதையலை கண்டு பிடிக்க வேண்டும். அதனை எடுத்து கொண்டு இங்கு இதே இடத்திற்கு வந்து என்னிடம் கொடுக்க வேண்டும்.நீ இங்கு வரும் வரையில் நான் இங்கேயே காத்திருப்பேன். நீ விருது நகர் போவதை பற்றி உன் அம்மாவிடம்  நான் தெரிவித்து விடுகிறேன். நீ கவலை படவேண்டாம்" என்றார்  கோவிந்தம்மாள்.

பிறகு அவர் எனக்கு ஒரு சங்கீத ராகத்தை சொல்லி கொடுத்து , ராக பாவனா என் கைகளுக்கு வந்தவுடன் , அதனை கொடுத்தவரிடம் இந்த ராகத்தை நான் பாட வேண்டும் என்று கூறினார்.

நான் விருது நகருக்கு கிளம்பினேன்.

கதைக்களம் இப்பொழுது "black & white" பதிவுகளுக்கு நகர்கிறது.இந்த "black & white" நிகழ்வுகள் ஒரு தனி "track". மித்ரா ,அஷ்வின் , பைரவி இவர்களின் கதைகளம் ஒரு தனி "track". இந்த இரு "story tracks" ஒரு கட்டத்தில் ஒன்றாக சேரும்.

Black & White Track:

அது ஒரு விசாலமான அரண்மனை. அங்கும் இங்கும் பல ஓவியங்கள் காணப்பட்டன. நடனம் மற்றும் சங்கீத பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. சில பெண் போராளிகள் சங்கீதம் பாடிகொண்டே சண்டையிடும் பயிற்சியும் செய்து கொண்டிருந்தனர். மாசா அன்று முழுவதும் வருத்தத்துடன் இருந்தது பணிப்பெண்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மெதுவாக நடந்து அரண்மனை ஜன்னலோரத்தில் நின்றாள் மாசா. அப்பொழுது அவள் ஒரு காட்சியை கண்டாள். ஆலமரத்தின் கிளையில் புறா கூடு ஒன்று இருந்தது. தாய் புறா தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டிய பின்பு , கூட்டில் உள்ள ஒவ்வொரு குச்சிகளையும் எடுத்து கீழே போட்டது. இவ்வாறாக அது தன் கூட்டை தானே கலைத்தது. குஞ்சுகள் பயத்தில் அலறின. கூடு கலைய கலைய குஞ்சுகள் கீழே விழும் தருவாயில் இருந்தன. அந்த நேரத்தில் , அதீத பயத்தின் காரணமாக எல்லா குஞ்சுகளும் பறந்து விட்டன. பறக்க தெரியாத குஞ்சுகளை பறக்க வைக்கவே தாய் புறா இவ்வாறாக செய்தது. இறுதியாக தாய் புறா தனியாக நின்றது.

இக்காட்சிகளை கண்ட மாசாவிற்கு வாழ்கையின் ஒரு உண்மை புரிந்தது. அது "No Pain.No Gain". வாழ்க்கை எல்லாவற்றையும் கொடுத்துவிடுவதில்லை. ஒன்று வர ஒன்று போகும். இதுவே உண்மை என்று உணர்ந்தாள் மாசா.

அவள் கண்களிலிருந்து சில கண்ணீர் துளிகள் சிந்தின.இதனை கவனித்து கொண்டிருந்த மாசாவின் பணிப்பெண்  கோமதி , நிலைமை மோசமாகிவிட்டதை புரிந்து கொண்டாள்.

அவள் அங்கு இருந்த அனைவரையும் வெளியே அனுப்பினாள். மாசாவும் கோமதியும் மட்டும் தனியாக பேச தொடங்க , அங்கு இருந்த ஜன்னல் வழியாக கதைக்களம் நகர்ந்து இப்பொழுது நிகழ்கால பைரவி நிகழ்வுகளுக்கு வருகிறது.

(Black & White breakpoint).

கோவிந்தம்மாள் கொடுத்த இரண்டவாது சவாலை எதிர்கொள்ள தயாரானாள் பைரவி. அதனை பற்றி மித்ராவிடம் கூறினாள்.

நான் விருதுநகருக்கு புறப்பட்டேன். அடுத்த நாள் மதியம்  2:30 மணியளவில் விருதுநகருக்கு வந்து சேர்ந்தேன்.கோவிந்தம்மாள் கூறிய கிருஷ்ணன் கோவில் விருதுநகரிலிருந்து 60 km தூரத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் உள்ளது. மாலை 5:30 மணிக்கு கிருஷ்ணன் கோவிலை சென்றடைந்தேன்.கோவில் அருகே அந்த காட்டு பகுதியில் மொத்தம் 3 குடிசை வீடுகளே இருந்தன.

அங்கு இருந்தவர்களிடம் பேசினேன். பேசியதில் , கிருஷ்ணன் கோவில் அருகே வாழ்ந்த மக்கள் காட்டினுள்ளே உள்ள வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டாதாக தெரிந்தது. அன்று இரவு அந்த குடிசையிலே தங்கினேன். அடுத்த நாள் காலை 6 மணிக்கு அந்த காட்டு பகுதியை நோக்கி சென்றேன்.

மூன்று மணி நேரம் அந்த காட்டினுள் நான் நடந்தேன். நடந்த களைப்பில் அங்கு ஒரு இடத்தில் இளைப்பாறினேன். திடிரென்று இரண்டு அம்புகள் என்னை நோக்கி வேகத்தோடு வந்தது. நான் சட்டென்று தரையில் படுத்துவிட்டேன். என் தலை தப்பித்தது.

அப்பொழுது புதரிலிருந்து, மூன்று காட்டு வாசி போல் தோற்றம் கொண்ட மக்கள் என்னிடம் வந்து புரியாத பாஷையில் பேசினார்கள். நான் சொல்வதும் அவர்களுக்கு புரியவில்லை.  பிறகு அவர்கள் என்னை  ஒரு குகைக்குள் உள்ள இடத்திற்கு அழைத்து சென்றனர். நான் ஏதும் பேசாமல் அவர்களை பின்தொடர்ந்தேன். ராக பாவனா இவர்களிடம் தான் இருக்கும் என்று என்னுடைய உள்ளுணர்வு கூறியது.

அந்த குகைக்குள் இன்னும் சில 10 காட்டு வாசி மக்கள் இருந்தனர். அதில் சில பேருக்கு தமிழ் தெரிந்திருந்தது. அவர்கள் நான் அங்கு வந்த நோக்கம் பற்றி கேட்டனர். நான் ராக பாவனா பற்றி கூறினேன். அந்த பெயரை கேட்டதும் அவர்கள் நான் அவர்களுடைய ஆசானை பார்க்க வேண்டும் என்றும் அவர் மட்டுமே ராக பாவனா பற்றிய எந்த முடிவையும் எடுப்பார் என்றும் கூறினார்கள். யார் அவர்களின் ஆசான் என்று நான் கேட்டதற்கு , அவர்கள் கூறிய நபரின் பெயர் "முடக்கத்தான்".

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:888}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.