(Reading time: 35 - 70 minutes)

ப்ரவாயில்லை….ஜாமூன் எடுக்கத்தான் வந்தேன்….இத நீங்களே தந்துட்டீங்க….இல்லனா நான் வேற எடுத்துக்கட்டுமா…இத நீங்க வச்சுக்கோங்க….” ப்ரவீன் தான்

“இ…இல்ல…பிரவாயில்ல…” அந்த இடத்தைவிட்டு தப்பித்துக் கொள்ளும் அவசரம் அவளுக்கு. வேகமாக சென்றுவிட்டாள் அவள்.

நடந்தது இவ்வளவுதான்.

குடும்பமே கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்பதால் அடுத்தவர் பார்க்க வயசு பையன்களும் பெண்களும் கூட்டமாய் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் பழக்கம் அங்கு இல்லை என்றாலும்,

அவ்வப்போது அண்ணன் முறை வரும் பையன்களிடம் பெண்கள் பேசிக் கொள்வதும் அப்படி இருவர் பேசும் போது, முறை வரும் பையனும் பொண்ணும் கூட நின்று ஓரிரு வார்த்தை பகிர்ந்து கொள்வதும் அங்கு சகஜம்தான்.

ஆனால் நம் ஷாலு த ஷை க்ரேட் இப்படி எதற்கும் போகாமல் சித்தி முந்தானையிலேயே வாழும் வழக்கம் உள்ளவள் என்பதால் அவள் இன்று ப்ரவீனிற்கு அவளாகவே ஜாமூன் எடுத்துக் கொடுத்துவிட்டு வெட்கப்பட்டு ஓடிய கதை……எஸ் எஸ் அத அப்டித்தான் அவங்கல்லாம் ட்ரன்ஸ்லேட் செய்துகிட்டாங்க….பசங்க மத்தியில் ப்ரவீன் ஷாலு மூவியாகி சரித்ரனை ரவுண்ட் கட்டி அடித்தது.

அதோட நிற்காமல் ப்ரவீனை கலாய்க்க ஒவ்வொரு ஃபங்க்ஷனிலும் இந்த கான்செப்டே கையாளப்பட ஒரு கட்டத்தில் நொந்து நூடுல்ஸான சரித்ரன் சோகத்தில் வேகத்தில் இதை ஷாலுவிடம் புலம்ப

“எல்லாம் உங்களால வந்தது. வந்த இடத்துல கைய கால வச்சுகிட்டு சும்மா இருந்தா இப்டில்லாம் ஆகுமா?” என விளையாட்டாய் ஏறினாள் அவள்.

“ மத்த இடத்துல வச்சு மகராணிய பார்க்க முடிஞ்சா நான் ஏன் இந்த கன்ட்ரி கேங்க்ட்ட வந்து மாட்றேன்…..உன் பக்க ரிலடிவ்ஸ்லாம் அன்சிவிலைஃஸ்ட் அரசர் கால கூட்டம்……..” என்று திருப்பினான் அவன். அவன் சொன்னதும் விளையாட்டாய்தான்.

ஷாலு அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லைதான். அதன் பின்பும் வழக்கம் போல அவள் சரனிடம் பழகியது போல்தான் இருந்தது. ஆனால் அவன் கவனிக்காமல் விட்ட விஷயம் அந்த நாளுக்குப் பின் அவள் பக்க குடும்ப விழாக்களுக்கு வராமலிருப்பதற்கு அவளிடம் எப்போதும் ஏதாவது ஒரு காரணம் இருந்தது.

இது எல்லாவற்றின் வழியாகவும் ஷாலுவின் சித்தப்பா குடும்பத்தினர் தவிர ஷாலுவின் பக்க உறவினர் யாருக்கும் ஷாலுவையும் சரனையும் இணைத்து ஒரு துரும்பளவு கூட செய்தி தெரியாமல் போக, சரித்ரன் குடும்பத்தைப் பொறுத்தவரை இது பறை மட்டும் அறையப்படாத விஷயமாகிக் கொண்டிருந்தது.

என்றைக்கு என்றாலும் ஷாலுதான் சரித்ரன் மணமகள், வீட்டு மருமகள் என்ற முடிவிருந்ததாலும், ராஜ்குமாரும் மகள் படிப்பு முடியவும் திருமணம் என சொல்லி இருந்ததாலும் சரித்ரனின் அம்மா இவாஞ்சலின் அதை தன் பக்க உறவினர் யாரிடமும் மறைக்க முயலவே இல்லை.

மகனின் திருமணத்திற்காக காத்திருந்தவர் அல்லவா, ஆக யார் சரித்ரன் திருமணம் பற்றி பேச்செடுத்தாலும் சந்தோஷமாக “பொண்ணு நிச்சயமாகிட்டு, படிச்சுகிட்டு இருக்கா, அதான் வெயிட் பண்ணிகிட்டு இருக்கோம்” என ஆரம்பித்து அவர்கள் கொஞ்சம் துருவினாலும் ஷாலுவும் சரித்ரனும் இருக்கும் புகைப்படம் வரை காண்பித்து வைத்தார். ஆனால் இவாஞ்சலின் பக்க ஆட்கள் மும்பையிலும், ராஜ்குமார் தென் கோட்டையிலும் இருந்ததால் இது ஒன்றும் ப்ரச்சனை ஆகவில்லை சில மாதங்கள்.

ந்த நிலையில் இவஞ்சலினின் தாயாருக்கு திடீரென மிகவும் உடல் நிலை மோசமாகிப் போனது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். சில மணி நேரம் தாங்கும் அவர் சுவாசம் என்றனர் மருத்துவர்கள். தன் கடைசி மூச்சுக்கு முன், தன் ஒரே பேரனை தம்பதி சகிதமாக காண துடித்தார் அவர். அவர் இன்னும் ஷாலுவை ஒருமுறை கூட பார்த்ததில்லையல்லவா?

“அம்மம்மா போறதுக்குள்ள பிள்ளய (ஷாலு) கூட்டி வந்து ரெண்டு பேருமா ஒரு தடவ என் கண்ணு முன்னால நின்னுட்டு போய்டுங்கப்பா….” விடியோ சாட்டில் மூச்சுக்கு திணறியபடி அவர் சரித்ரனிடம் கெஞ்ச அதன் பின் வேறு எதையும் நினைக்க சரித்ரனுக்கு முடியாமல் போயிற்று. தூக்கி வளர்த்த தோளாயிற்றே…

முதல் காரியமாக மும்பைக்கு அடுத்த ஃப்ளைட்டில் இரெண்டு டிக்கெட் புக் செய்தவன், அவசரமாக் தன்னவளை மொபைலில் அழைத்தான். “ஸ்ரே….சீக்ரமா கிளம்பி இரு…. எமெர்ஜென்சி….ஒரு ஐடி ப்ரூஃப் மட்டும் கைல வச்சுக்கோ….அதோட… ஒரு செட் ட்ரெஸ் வேணாலும் பேக் செய்துக்கோ…நான் வந்துட்டே இருக்கேன்…”

அவளுடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு அவசர அவசரமாக அத்தையை அழைத்து விஷயத்தை சொன்னான். “நான் ஷாலுவோட கிளம்புறேன்….நீங்க இதை மாமாட்ட சொல்லிடுங்க….நான் ஷாலு அப்பாட்ட இப்ப பேசப் போறேன்..பை “

என்றுவிட்டு தன் அத்தைக்கு இதில் சம்மதம் இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், அவர் எதுவும் சொல்ல வருகிறாரா என கூட காத்திராமல் இணைப்பை துண்டித்தவன் ராஜ்குமாரை அழைத்தான் மொபைலில். ஆனால் அவர் எண் தொடர்பு கொள்ளும் எல்லைக்கு அப்பால் இருந்தது.

இத்தனைக்கும் இந்த அழைப்புகளின் மத்தியில் அவன் கையில் கார் பறந்து கொண்டிருந்தது ஷாலுவின் கல்லூரி வளாகத்தை நோக்கி. மீண்டும் மீண்டும் தன் வருங்கால மாமனாருக்கு முயற்சித்துக் கொண்டே ஷாலுவின் கேம்பஸை அடைந்தவன், தலை வால் புரியாமல் வழக்கமாக அவன் அவளை பிக் அப் செய்யும் இடத்தில் நின்று கொண்டிருந்த ஷாலுவை தன் காரில் ஏற்றிக் கொண்டு ஏர்போர்ட்டை நோக்கி விரைந்தான்.

இன்னும் ராஜ்குமார் ரீச்சில் வரவில்லை. இவனும் அழைப்பதை நிறுத்தவில்லை. ஆக ஷாலுவுக்கு இவனுடன் பேசவோ என்ன நடக்கிறது என புரிந்து கொள்ளவோ வழி தெரியவில்லை.

அவன் உடல்மொழியையும் தன்னை அவசரமாக அழைத்துப் போவதையும் பார்த்தவள் தன் தந்தைக்குத் தான் எதுவுமோ என எண்ணி மிரண்டவள் அவசரமாக தன் தந்தை எண்ணை தானும் தொடர்பு கொள்ள முயன்றாள். சரித்ரன் யாரை தொடர்பு கொள்ள முயல்கிறான் என அவளுக்குத் தெரியாதே….

இவளுக்கும் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் ….ஐ வி ஆர் தான் கிடைத்தது. சிறிது நேரம் போராடியவள், வீட்டு லேண்ட் லைனை அழைத்தாள். “அப்பா தூத்துக்குடிக்கு போய்ருக்காங்க ஷாலு கண்ணு….அவ்ளவுதான் எனக்கு விஷயம் தெரியும்” என்றார் வீட்டில் வேலை செய்யும் பானு.

அப்பாவுக்கு எதாவது என்றால் இப்படி இயல்பாக எல்லாம் பானுஅக்கா பேச மாட்டாங்க…சோ அப்பா ஸேஃப்…ஷாலு ஆசுவாசப் பட்டபோது ஏர்போர்ட் வந்திருந்தது.

காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு ஒரு கையில் மொபைலை காதில் வைத்து பிடித்தபடி, அடுத்த கையால் ஷாலுவை இழுத்தபடி அவன் ஏர்போர்ட்டில் கவுண்டரில் செக்கின் செய்தபோதுதான் தாங்கள் மும்பை போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே ஷாலுவுக்குப் புரிந்தது. அப்பாவுக்கு தெரியுமா?

சரித்ரனின் முக பாவம் பார்த்தவள் அவனை தொந்தரவு செய்ய முயலாது தன் சித்தியை அழைத்தாள் விஷயம் அறிய. அவர் எண் பிசி. பின் சித்தப்பாவை முயன்றாள் அதுவும் பிசி. ஓ சித்தப்பா சித்திட்ட பேசிட்டு இருக்காங்க போல.

சரித்ரன் முகம் பார்த்தாள். சோர்வு வலி எல்லாம் தெரிந்தது அதில். இப்பொழுது வேறு வகையான பயம். “அத்தை மாமா எப்டி இருக்காங்க…?” அவனை பதறிப் போய் உலுக்கினாள்.

இப்பொழுதுதான் ஷாலுவுக்கு இன்னும் விஷயமே தெரியாது என உணர்ந்த சரித்ரன் அவள் தன் பெற்றோருக்காக பதறுவதைப் புரிந்து சிறு ஆறுதல் புன்னகையுடன் அவள் தலையில் கைவைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.