(Reading time: 35 - 70 minutes)

ப்பாவா… ரூபி சித்தியோட அண்ணா ஒருத்தங்க மும்பைல இருக்காங்கல்ல அவங்க வீட்ல யாரோ இறந்துட்டாங்களாம்…அப்பா போகனுமாம்….கிளம்பிட்டாங்க…..இன்னைக்கு நைட் நான் மட்டும்தான் வீட்ல….” கொஞ்சம் சுதி இறங்கி சொன்னவள்,

இடைவெளியின்றி

“அதோட உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அப்பா இன்னைக்குகூட என்னை ஆஃபீஸ் போய்ட்டு வரச் சொன்னாங்க…அப்பா இல்லாம இன்னைக்குதான் நான் ஃபர்ஸ்ட் டே ஆஃபீஸ் போனேன்..” பெருமிதமும் சந்தோஷமும் வந்திருந்தது குரலில்.

ஷாலுவுக்கு அப்பா மும்பை போகிறார் என்பதிலேயே தலை சுற்றிவிட்டது. அப்பா சரித்ரன் குடும்பத்தைப் பூரணமாக ஏற்கிறார் என்ற உட்செய்தி உள்ளம் பூரிக்க செய்தாலும், ஜஸ்ட் மிஸ்….அப்பா வரநேரம் நான் அங்கே இருந்திருந்தா…? என்ற நினைப்பு தூக்கி அடித்தது.

சித்தப்பா வழியாக அப்பா விஷயத்தை கேள்விப்படுவது என்பது வேறு. அவரே இவளை அங்கு அறிவிப்பின்றி பார்ப்பது என்பது வேறல்லவா?

அடுத்த செய்தியும் அவளுக்கு அதிசயம் தான் என்றாலும், ரேயாவை சென்னை காலேஜுக்கு அனுப்ப அப்பா மறுத்த பொழுது வந்த கோபம், அதன் பின் தினம் கல்லூரி முடிந்து வரும் தங்கையை அப்பா தன் அலுவலகத்திற்கும் சிறிது நேரம் அழைத்துச் செல்ல தொடங்கியதும் சற்று தணிந்திருந்தது. ஆக இது அதன் அடுத்த கட்டம் போலும்.

தன்னை ஏன் அப்பா இப்படி பிசினசில் சேர்த்துக் கொள்ளவில்லை என்று முதலில் வந்த இனம்புரியா வருத்தம் இப்பொழுதும் ஞாபகம் வருகிறது. கூடவே சரித்ரன் “அப்டி உன்னை பிசினஸ் சைட் கொண்டு போய்ருந்தா நாம எப்டி மீட் பண்ணிருக்றதாம்…நல்லவேளை உங்கப்பா அப்டி எதுவும் செய்யலை” என சொல்லி தெளிய வைத்ததும் தான்.

“படிச்சு முடிச்சதும் உன்ன ஹவ்ஸ் வைஃபால்லாம் வைக்க மாட்டேன்….நம்ம ஆஃபீசை உன் தலைல கட்டிட்டு நான் உன்னைய மட்டும் கட்டிகிட்டு உன்னையவே சுத்தி சுத்தி வருவேன்…” தொடர்ந்து அவன் சொன்னது இப்பொழுது நினைத்தாலும் இனிக்கிறது.

“ஷாலு….ஏன் சைலண்ட்டாய்ட்ட? அப்பா உன்னை மட்டும் கூட்டிட்டு போகாம என்னை மட்டும் செய்றாங்கன்னு ஃபீல் பண்றியா?...” கவலையும் வருத்தமும் தங்கையின் குரலில்.

தான் அமைதியாய் இருந்ததன் பின்விளைவு புரிய. “ஹேய் ரேயு…என்ன நீ கன்னாபின்னான்னு யோசிக்ற…அப்டில்லாம் இல்ல…இது வேற…”

“அப்பா முன்னால மாதிரி இல்ல ஷாலு…இப்பல்லாம் கொஞ்சம் சேஞ்ச்….முன்னாலயும் நம்ம ஸேஃப்டி தான் அவங்க கன்சர்ன்….இப்போ அதை இன்னும் ப்ராக்டிகலா அப்ரோச் செய்றாங்க….தான் இல்லைனாலும் பிள்ளைங்களால சமாளிக்க முடியனும்னு யோசிக்றாங்கன்னு தோணுது…இப்போ நீ இங்க இருந்திருந்தா கண்டிப்பா உன்னையும் கூட்டிட்டுப் போய்ருப்பாங்க…” தன்னால் முடிந்தவரை விளக்கிவிட துடித்தாள் ரேயா.

“அப்பா முழு பிசினஸையும் உனக்கு கொடுத்தால் கூட எனக்கு வருத்தம் இல்லை ரேயு…நீ சந்தோஷமா இருந்தால் அது போதும்…சரி இப்போ சாப்டுட்டு தூங்கு…பார்க்கலாம் பை..”

“பை ஷாலு”

இணைப்பை துண்டித்துவிட்டாள் ஷாலு….அப்பா நம்பர் கால் வெய்ட்டிங்கில் வந்ததே காரணம். அவரும் சித்தப்பாவைப் பற்றி விசாரித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட நிம்மதி ஷாலுவுக்கு.

ஆனால் ரேயாவுக்குத்தான் கஷ்டமாக இருந்தது. அந்த டூர் நிகழ்ச்சிக்குப் பின் ஆதிக் பற்றி எந்த தகவலும் அவளுக்கு கிடையாது. அடுத்த வருடம் அவன் இந்தியா வருவான் என்ற புரிதல் மட்டும் இருந்தது. அப்பாவுடன் அலுவலகம் செல்வது மனதுக்கு பிடித்திருந்தாலும் அந்த சந்தோஷத்தையோ அல்லது இப்பொழுது ஷாலு பேசியதால் வந்த துக்கத்தையோ பகிர்ந்து கொள்ளத்தான் அவளுக்கு யாருமே இல்லை.

ஃப்ரெண்ட்ஃஸ் எல்லோரும் சிட்டி காலேஜ் போயாச்சு..இவள் மட்டும் இங்கே…அதோடு அவர்களிடம் கூட இந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள இவளால் முடியாது…மனம் அவனைத்தான் தேடியது.

தன் கேமிராவில் ஆதிக்கை புகைப் படம் எடுத்தால் அப்பா என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பில் அவள் அவனைப் புகைப் படமாக கூட பதிந்திருக்கவில்லை. ஏங்கினாள்.

மும்பை சென்ற ராஜ்குமாரிடம் அந்த சூழலில் ஷாலு வந்து சென்ற தகவலைப் பேச அவரது தம்பிக்கு மனமில்லை. இறுதி சடங்கு முடியட்டும் நிதானமாக பேசிக் கொள்ளலாம் என நினைத்தார்.

சரித்ரனும் அவனது பெற்றோரும் கூட இதைப் பற்றி அவரிடம் பேசவில்லை. சூழல் அப்படி.

ஆனால் சற்று தூரத்து சொந்தங்கள் “நம்ம சரனோட ஃபியான்சிய வரைக்கும் பார்த்தாச்சு….இனிமே என்ன? ஓல்ட் ஏஜ்ல பெட் ரிட்டனாகி கஷ்டபடாம இப்டி போறது கூட ப்லெஸிங்தான்” னு பேசிக் கொண்டன. அது ராஜ்குமார் காதில் விழுந்து வைத்தது.

“ஆமா எங்கேஜ்மென்ட் சென்னைல வச்சு நடந்துது போல….நான் கூட போட்டோஸ் பார்த்தேன்…...பொண்ணு சரனுக்கு பெர்பெக்ட் மேட்ச், கியூட்டா இருந்தா… ”

“ஹேய்…அந்த கேர்ள் இங்க தான் இருக்கா….நான் பார்த்தேனே….ஹாஸ்பிட்டல்ல வந்து ஆன்டிய பார்த்தா…ஆன்டி லாஸ்ட்டா பேசுனது அவட்டதான்….லவ் மேரேஜ்னு நினைக்கிறேன்…சரன் அவளவிட்டு அங்க இங்க அசையல…”

“இருக்கும்…இவாஞ்சலினும்தான் எத்தனை பொண்ணு பார்த்தா…..தன் ஃப்ரெண்ட் டாட்டரல்லாம் ரொம்ப விரும்பி பார்த்தா…சரன் அசையவே இல்ல….இப்ப இந்த பொண்ணு அவன் சொல்லி பார்த்ததுன்னு கேள்விப் பட்டேன்…”

அந்த உறவினர்களின் உரையாடல் தொடர இவாஞ்சலின் விரும்பிப் பார்த்த ஃப்ரெண்ட் டாட்டர்தான் தன் மகள், ஆனால் அவர்களது மகன் சரன் வேறு ஒரு பெண்ணை விரும்புவதால் அப்பெண்ணுடன் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டார்கள் போலும், விஷயத்தை இவரிடம் எப்படி சொல்ல என நினைத்து சொல்லவில்லை போலும் என புரிந்து கொண்டார் ராஜ்குமார்.

அவருக்கு சற்று வருத்தமாக இருந்தாலும், பெரிதாக அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. இதெல்லாம் சகஜம். தன் பெண்ணுக்கு இன்னும் விஷயமே தெரியாது ஆக இதில் வருத்தப்பட எதுவும் இல்லை, தன் முதல் திட்டப்படி ஆதிக்கை மூத்த மருமகனாக்கிவிட வேண்டியதுதான். தூத்துகுடியிலேயே இரண்டாவது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டார்.

அதே எண்ணத்துடன் தன் தம்பியை தனிமையில் சந்தித்தவர் “என்னடா ஏதோ சரனுக்கு நிச்சயம் செய்த பொண்ணு இங்க வந்தான்னு பேசிக்றாங்களே” என கேட்டார்.

ஷாலு வந்து சென்றதை எப்படி சொல்ல என தயங்கிக் கொண்டிருந்த தம்பியும் அண்ணன் ஷாலுவைப் பற்றித்தான் கேட்கிறார் என நினைத்துக் கொண்டு ” ஆமாண்ணா…..யார்ட்டயும் சொல்லாம சரன் கூட்டிட்டு வந்துட்டான்….உன்ட்ட எப்டி சொல்லன்னுதான்….” என இழுக்க

“ப்ச்…இந்த கால பில்ளைங்க…சரி விடு…” என முடித்துவிட்டார். ஆக சரித்ரன் ஒரு பொண்ணை கூட்டி வந்து இவளைத்தான் கல்யாணம் செய்வேன் என சொல்லிவிட்டதால் வேறு வழி இன்றி இவாஞ்சலினும் அவரது கணவரும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டுவிட்டார்கள் போலும், அவமானமாக உணர்வதால் தன் தம்பி உட்பட யாரும் இதை இவரிடம் பேசவில்லை போலும் என புரிந்து கொண்டார் ராஜ்குமார்.

ராஜ்குமாரின் தம்பியோ ‘ஹப்பா அண்ணன் சண்டை போடாம ஷாலு இங்க வந்ததை ஈசியா எடுத்துக்கிட்டானே..இனி இதைப் பத்தி பேசி அவன டென்ஷனாக்கிடக் கூடாது’ என பெருமூச்சுவிட்டுக் கொண்டார்.

அதோடு போன வேகத்தில் இறுதிச் சடங்கு முடியவும் கிளம்பி வந்துவிட்டார் ராஜ்குமார்.

“ஷாலுமா அண்ணன் என்னமோ ஒன்னும் சொல்லாம ஈசியா எடுத்துகிட்டான்…நீ போய் விளக்கம் சொல்றேன்னு திரும்ப கிளறிடாதமா…” சித்தப்பாவின் அறிவுரையில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.