(Reading time: 35 - 70 minutes)

ற்கனவே சரித்ரனைப் பற்றி இதுவரை தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாத அப்பாவிடம் எப்படி இவள் அவனுடன் மும்பை சென்று வந்ததைச் சொல்ல என தவித்துக் கொண்டிருந்த ஷாலுவும், அதுதான் சாக்கென தந்தையிடம் மும்பை விசிட்டைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்து கொள்ள, நடந்த மிஸ்ண்டர்ஸ்டாண்டிங் ஒருவருக்கும் புரியாமல் போனது.

ந்த நிலையில் ஷாலு தன் கோர்ஸை முடித்தாள். நாளை அவள் சென்னையை காலி செய்து தென்கோட்டை கிளம்ப வேண்டும். இனி இங்கு அவள் திருமதி. சரித்ரனாய் தான் திரும்பி வரப் போகிறாள்.

ஷாலு தன் ஊருக்குச் சென்றதும் சரித்ரன் வீட்டிலிருந்து முறைபடி ராஜ்குமாரை அணுகி உடனடியாக திருமணம் முடித்துவிடுவதாய்தான் திட்டம். ஆனால் அதற்கே எப்படியும் மூன்று மாதம் ஆகுமே.

அது வரை அவளை பிரிந்திருக்க வேண்டுமே, இப்பொழுது போல் இவன் இல்லா நேர அவளது வீட்டு விசிட்கள் இருக்காது, சனி ஞயிறு தரிசனங்கள் கட் கட். ஃபோன் கால்கள் லிமிட்டெட். தவித்துக் கொண்டு இருந்தான் சரித்ரன். ஷாலுவும்தான். ஆனால் ஊருக்குப் போனல் தானே திருமணம் நடக்கும். பேக்கிங் முடித்துவிட்டாள்.

நாளை காலை 11 மணி ஃப்ளைட் தூத்துக்குடிக்கு. அங்கிருந்து அப்பா பிக் அப் செய்து கொள்வார். “நான்தான் காரை ட்ரைவ் செய்துட்டு வருவேன்” என ரேயா சொல்லி இருந்தாள்.

இன்று மாலை ஒரு கெட் டுகதர்.

“ஜஸ்ட் என்னோட க்ளோஸ் ஃப்ரென்ட்ஸ் ஃபமிலிஸ் மட்டும்தான்….வெரி ஸேஃப் அண்ட் டீசண்ட் பீபுள்….நம்ம வெட்டிங்கான ஃபர்ஸ்ட் பார்டி…. 7.30குள்ள முடிஞ்சிடும்…… நைட் ஸ்டேக்கு நீ அத்த வீட்டுக்கு போய்டலாம்…” சரனின் இந்த கோரிக்கையை சித்தியிடமும் சொல்லி அனுமதி வாங்கி இருந்தாள் ஷாலு.

கெட் டுகதர் என்றாலும் அது ஒரு பீச் பார்ட்டி . ஈ சி ஆரில் உள்ள ஒரு பீச் ரிசார்ட்டில் ஷி ஷோரில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சரித்ரனின் நண்பர்கள் தங்கள் மனைவியருடன் வந்து சேரவே 7 மணி ஆகியது.

அப்பொழுதே அழைத்து தன் அத்தையிடம் சொல்லிவிட்டான் சரன் “ சாரி அத்த எதிர்பார்த்ததைவிட ஆரம்பிக்கவே டிலே ஆயிட்டுது….கொஞ்சம் லேட்டாகும்….கேரல் ஜான்சன்லாம் கூட இருக்காங்க….ப்ளீஸ் அத்த ஒரு டென் ஓ க்ளாக் வரை டைம் கொடுங்களேன்….ஷாலுவ பத்ரமா கொண்டு வந்து வீட்ல சேர்த்துடுறேன்…”

கேரல் & ஜான்சன் இவனது அத்தைக்கு நெருங்கிய குடும்பம், பின் முப்பது வயதுகளில் இருப்பவர்கள். நம்பிக்கையானவர்கள். அதோடு அந்த ஒரு நாள் வார்த்தைக்குப் பிறகு சரனும் ஷாலுவும் எப்படிப் பழகுகிறார்கள் என அவருக்கும் தெரியுமே.

“சரிப்பா….பத்ரமா பார்த்து வாங்க…” என்று எளிதாக அனுமதி கொடுத்து வைத்தார் அத்தை.

மொத்தம் 7 தம்பதிகள்தான் விருந்தாளிகள். கேரல் ஜான்சன் தவிர யாருக்கும் இன்னும் குழந்தை இல்லை. இளையவர்கள். பெரியவர்களும் குழந்தைகளை கூட்டி வந்திருக்கவில்லை. அனைவரும் தத்தம் துணையுடன் வட்டமாக கடற்கரை மணலில் அமர, ஷாலுக்கு அருகில் சரித்ரன்.

அரேஞ்ச் செய்யப்பட்டிருந்த இசை அருகில் வழிய, பௌர்ணமி நிலா பார்த்திருக்க சில விளையாட்டுகள். பல உணவுகள். எல்லைக்குட்பட்ட இனிய பேச்சு, சிரிப்பு, ஜாலி.

எந்த கேமில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் பனிஷ்மென்ட் உண்டு….சும்மா ஜாலிக்குத்தான். சிம்பிளா டான்ஸ். சாங், மோனாக்ட் என்றுதான் பனிஷ்மென்ட்டும்…பட் முதல் இரண்டாம் இடத்தில் வருவது தம்பதியராய் இருந்தால் கொஞ்சம் ஸ்பெஷல்…

அவங்க ஃபர்ஸ்ட் மீட்….ப்ரபோசல்…..இதுமாதிரி எதாவது ஆக்ட் செய்து காமிக்கனும்… அப்படி ஒரு விளையாட்டில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது ஷாலு சரித்ரன் ஜோடி.

ஃஸ்பெஷல் பனிஷ்மென்ட் கொடுக்க நினைத்த பாபு நிஷா தம்பதி பால் டான்ஸ் ஆடச் சொல்லினர் இருவரையும்…..அவர்களுக்கு அது தவறாக தோன்றவில்லை…..சரித்ரனுக்கும் அப்படியே….ஒரு டான்ஸ்..…ஹார்ட்லி ஃபார் அ மினிட்…அதுவும் எந்த தப்பான இன்டன்ஷனும் இல்லை….வாட்ஸ் ராங்?. பாபு சொன்னதும் மனித வட்டத்திற்குள் சென்று நின்றவன்….ஷாலுவை எதிர்பார்த்தான்.

ஆனால் ஷாலுவுக்கு அது அப்படி சரியான காரியமாய் தெரியவில்லை…..சித்தியின் வார்த்தைகள் சுட சுட ஞாபகம் வந்தது. இவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு தான் பதறுவதை மறைத்து திரும்பிச் சென்ற அப்பாவின் கண்களும் தான்.

“இ..இல்ல…வேண்டாம்…வேற எதாவது….” மறுப்பாய் தன் இடத்திலேயே நின்றபடி சொன்னாள்.

“என்ன நீ…என் கூட தான….வா இங்க…” சரன் தான். இயல்பாய் அழைத்தான்.

“இல்ல….வேண்டாம்….” தன் இயல்பிலேயே மறுத்தாள் ஷாலு.

“கமான் ஷாலு….” அவள் கையைப் பற்றி அழைத்தான் சரித்ரன் சற்றே உரிமையாய்..

“ப்ளீஃஸ் சரன், பப்ளிக்ல டான்ஸ்லாம் அப்பாவுக்கு பிடிக்காது” அவள் முழுமையாய் கெஞ்சினாள். கையைவிட்டுவிட்டான் அவன். கொஞ்சம் மனம் வலித்துவிட்டது அவனுக்கு. ‘அவளை புரிஞ்சிக்காம ஃபோர்ஃஸ் செய்துட்டனோ?’ என்ற நினைவில்.

“பாபு நீங்க வேற எதாவது சொல்லுங்க…” இதற்குள் கேரல் ஷாலுவுக்கு உதவிக்கு வர,

பாபுவின் மனைவி நிஷா சூழ்நிலை இனிமையை பாதுகாக்க “ரெண்டு பேரும் சைல்ட் ஹூட் ஃப்ரெண்ட்ஸ்தானே அப்ப நடந்ததுல அவங்கவங்களுக்கு பிடிச்ச இன்சிடெண்டை ஷேர் செய்ங்க” என கேட்டாள்.

அதன்படி இருவரும் ஷேர் செய்ய சுமுகமாகவே தொடர்ந்தது பார்டி. சற்று நேரத்தில் பார்ட்டி முடிய அனைவரையும் வழி அனுப்பிவிட்டு தனது காருக்கு ஷாலுவுடன் வந்தான் சரித்ரன்.

ரவும் நிலவும், கடலும் மணலும், அவனும் அவளும், அருகில் ஒரு காரும், தூரம் தெரியும் சவுக்கு காடும்….அவ்வளவே சூழல்.

தன் பக்க கதவை திறக்க போனவளை, அவள் பின்னால் வந்தவன் “ஹேய் புதுப் பொண்ணு….இன்னைக்கு கொஞ்சம் ஓவரா பிகேவ் செய்துட்டனோ?” என்றபடி தாண்டிச் சென்று கதவை திறக்கப் போனான் சரன்.

அவன் கேட்டுக் கொண்டதற்காய் அவன் வாங்கிக் கொடுத்த வெள்ளைப் பூக்கள் வரைந்த கறுப்பு நிற காட்டன் மேக்ஸியில் வந்திருந்தவளின் பெர்ஃப்யூம் வாசம் அவன் நாசியில்.

காருக்குள் ஏற குனிந்தவள் “ம்…இந்த அன்சிவிலைஸ்ட் பட்டிக்காட கட்டிகிட்டா இப்டில்லாம் நீங்க அப்பப்ப அனுபவிக்க வேண்டி இருக்கும்” சொல்லிக் கொண்டே ஏறப் போனாள். அவள் குரலின் தொனி….வலி? சுயபச்சாதாபம்…?

சட்டென அவளுக்கும் கதவுக்கும் இடையில் தன் இடக்கையை நீட்டி தடுத்தான். “என்னாச்சு ஸ்ரே…?” அவன் முகம் குரல் எல்லாவற்றிலும் அக்கறை. குறுக்கே வந்த கையின் நிமித்தம் குனிந்தவள் மீண்டுமாக நிமிர்ந்து நின்றாள். நீட்டிய கையை பேலன்ஸிற்காக அவளுக்கு அருகில் கார் மீது ஊன்றிக் கொண்டான் அவன்.

அரை குறை வெளிச்சம். அவனுக்கும் காருக்கும் இடையில் இப்போது அவள்.

“இதெல்லாம் உனக்கும் பிடிக்கும் ஸ்ரீகுட்டி….உங்கப்பா உன்ன கண்ட்ரோல் செய்து செய்து நீ இப்டி ஆகிட்ட….பட் உன் இன்னர் ஹார்ட் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வந்துடும்…நான் வர வச்சுடுவேன்..”

அதிர்ந்து போனாள் ஷாலு. இதற்கு இப்படி ஒரு அர்த்தமா? தன் அப்பாவை அவன் மதிக்கவில்லை என்பது அவளை தவிக்க வைத்துக் கொண்டிருந்தது சிறிது காலமாக.. “மேரேஜுக்கு பிறகு அவ அப்பா கூட சேர விடமாட்டேன்னு அந்த சரன் அவங்க அத்தைட்ட சொல்றத நானே கேட்டேன்” என்று இன்னொரு சித்தப்பா மகன் மனோஜ் சொன்னது மனதை குடைந்து கொண்டிருந்தது அவளுக்கு.

“ உன் ரிலடிவ்ஸ் அன்சிவிலைஸ்ட்…” சரனின் அடுத்த வார்த்தை அவளை பலமாய் காயம் செய்திருந்தது… அவள் அதைத்தான் இப்பொழுதும் குறிப்பிட்டது.

.ஆனால் இப்பொழுது இவன் சொல்வதைப் பார்த்தால்…..அன்று ஒரு உணர்ச்சி வேகத்தில் அவனை அணைக்க அனுமதித்ததால், ஏதோ இவள் எப்படி எல்லை கடக்கவும் தயாராய் இருப்பது போலவும், அவள் அப்பாவுக்கு பயந்து மட்டும் தான் விலகி இருக்கிற மாதிரியும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.