(Reading time: 26 - 51 minutes)

னா உங்க காலேஜ்ல அவளுக்கு அட்மிஷன்க்கு அதுவும் பி ஜி அடிமிஷனுக்கு வர்றப்பதான் நீங்க என் மாமா அவளுக்கு சித்தப்பானுலாம் ரொம்ப தெளிவா முறையெல்லாம் சொல்லிப் பேசுனீங்க….அப்புறம் நான் அங்க எதுக்கு வந்தேனாம்…?”

ஆதிக்கின் முகத்தில் இப்பொழுது அழகான சிரிப்பு வந்திருந்தது. அவன் பார்வையில் ரசனையும் இன்னும் ஏறி இருந்தது…

”அப்பதான் நான் உன்ன ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்…”

அவன் முகபாவமே காட்டியது அவன் முதல் பார்வையே எந்த கோணத்தில் இருந்தது என…காதல் ரசம் கண்முழுவதும்…

“அப்ப நான் ஜஸ்ட் லெவன்த் முடிச்சிருந்தேன்…” ஒருவித சிணுங்கலும் கண்டனுமுமாய் ரேயாவின் குரல்.

“அது…  விளக்கமா சொன்னாத்தான் சரியா இருக்கும். அம்மாவுக்கு தன் மருமக உங்க வீட்ல இருந்துதான்னு ஒரு தாட்….ஒரு பிலீஃப்…..அப்ப எனக்கு எம் எஸ் அட்மிஷன் லாசேஞ்சலிஸில் கிடச்சிருந்துது….அதுக்கு அனுப்ப முன்னால என்ன நினச்சாங்கன்னு தெரியலை…உன் கல்யாணத்தைப் பத்தி எங்களுக்கு இப்டி ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்குது…அதுக்கு ஏத்தபடி நடந்துப்பன்னு நம்புறோம்னு சொல்லி வச்சாங்க…அப்ப எனக்கு ஆக்சுவலி எரிச்சலாத்தான் வந்துது. பட் அன்னைக்கு நீ எங்க காலேஜ் வந்திருந்தியே, அன்னைக்கு நைட் தான் எனக்கு யு எஸ் ஃப்ளைட்…. ஒரு சின்ன வேலைக்காக காலேஜ் வந்துருந்தேன்…..ஜஸ்ட் கிளம்புற டைம் தான் எங்க லேப் வின்டோ வழியா காரிடார்ல நின்ன நீ என் கண்ல பட்ட…..என்னன்னு தெரியலை….அது அந்த ஏஜா…இல்ல அ டிவைன் கைடன்ஸா…வெறும் ஃபீலிங்க்சான்னு அந்த நொடி உன்னை எனக்கு ரொம்ப ஃபெமிலியரா…அஸ் தோ ஐ நோ யு ஃப்ரெம் த பிகினிங்னு ஒரு ஃபீல்…டில் த டெத் சேர்ந்தே தான் இருக்கப் போறோம்ன்ற மாதிரி…யூ ஆர் பார்ட் ஆஃப் மை ஓன் செல்ஃப்ன்ற மாதிரி….பார்த்தா பக்கத்துல ராஜ்குமார் அங்கிள் உட்கார்ந்துட்டு இருக்காங்க…நீ அப்பான்னு கூப்டு ஏதோ பேசிட்டு நான் இருந்த டைரக்ஷனப் பார்த்து வர்ற….எங்கம்மா சொன்ன கல்யாண ப்ளான் வேற பேக் ஆஃப் த மைன்ட்ல….அப்பவே தெரிஞ்சுட்டு ஐ’ம் எங்கேஜ்ட்னு…” அதுவரை அவன் முகம் பார்த்திருந்தவள் இப்பொழுது அவன் பார்வை தாங்காமல்…

“சோ அப்ப இருந்தே மைன்ட்ல அப்டி பதிஞ்சிட்டு….தப்புன்னா என் அம்மாவத்தான் நீ போய் சொல்லனும்…..இன்ஃபாக்ட் அன்னைக்கே விஷயத்த அம்மாட்ட சொல்லிட்டுத்தான் நான் கிளம்பினேன்….அவங்களுக்கு மகா சந்தோஷம்…இதுல விஷயம் என்னன்னா அங்கிள் ஃபோட்டாதான் அதுக்கு முன்ன நான் பார்த்திருக்கேனே தவிர உன்னையவோ அண்ணியவோ ஃபோட்டோல கூட நான் பார்த்தது இல்ல….அங்கிள அப்பானு கூப்டதால நீ அவங்க டாட்டர்னு புரிஞ்சிது….நான் இருந்த இடத்துல இருந்து பார்க்க உன்னையும் அங்கிளையும்தான் தெரிஞ்சிது…அண்ணி கூட இருந்ததே தெரியாது…அதோட நீங்க அங்க எதுக்கு வந்தீங்கன்னும் தெரியாது எனக்கு…சின்ஸ் எங்க ரிலடிவ்ஸ் நிறைய பேர் உங்களுக்கும் ரிலடிவ்ஸா இருப்பாங்க…அந்த வகையில் பொன்ராஜ் மாமாவப் பார்க்க வந்துருக்கீங்கன்னுதான் நினச்சேன்……”

“அது” ரேயா ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போது

“ கரடி வேலை பார்க்கேன்னு நினைக்காதீங்க…உள்ள ஒரு சிங்கம் சீறிக்கிட்டு இருக்கு….இவ்ளவு நேரம் சமாளிக்றதே பெரிய விஷயாமா போச்சு…” சரித்ரன் இவர்களை தேடி வந்திருந்தான்.

தாங்கள் இருவரும் வாசல் அருகில் நின்று பேசிக் கொண்டிருப்பதையே இருவரும் அப்பொழுதுதான் உணர்ந்தனர். பரிதாபமாக சரித்ரனைப் பார்த்தாள் ரேயா….அவளுக்கு இப்போது ஆதிக்கிடம் பேச வேண்டும்…எந்த சிங்கத்தையும் பார்க்க விருப்பம் இல்லை…

“இப்ப உள்ள வந்து உட்காருங்க…..சீக்ரமே சிங்கத்தைப்  பேக் செய்து அனுப்பிட்டு…நீங்க ரெண்டு பேரும் பேசுறதுக்கு நான் அரேஞ்ச் செய்து தாரேன்…ஐ ஓ யு தட்…” சிறு சிரிப்புடன் சூழ்நிலையை சமாளித்துக் கொள்ளலாம், என் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு என உணரவைக்கும் வண்ணம் இயல்பாய் சொன்னான் சரித்ரன்.

“சோ ரேயு என்ன பார்த்தா தான் வாட்டர் டேங்க் ஐஸை உருட்டி உருட்டி குழந்தை மாதிரி லுக் விடுறதுல்லாம் போல…மத்தபடி அண்ணிக்கெல்லாம் என்ன ஹெல்ப்லாமோ செய்து கொடுத்றுப்ப போல….” சரித்ரனின் ஐ ஓ யு வைப் பிடித்துக் கொண்டான் ஆதிக்.

“ஹலோ விஷயம் தெரியாம அவசரப் படாதீங்க….அன்னைக்கு உங்க ஆளு என்ன அடிச்சு துவச்சதுல….4 இடத்துல எனக்கு ஃப்ராக்சர்….இவ சரியான ரௌடி ராக்கு….என்ன அதப் பார்த்து இரக்கப் பட்டு என் ஸ்ரே எனக்கு வாழ்க்க கொடுக்க ஒத்துகிட்டா….அவ நல்லவா… பைதவே ரௌடிக்கு போலீஸ்தான் சரின்னு நினச்சுதான் நாங்க இப்ப இந்த கல்யாணத்துக்கு சப்போர்ட் செய்றதே…. சரிதானே இடி…” சரித்ரன் சொல்ல

ஆதிக் சிரித்தான். ரேயாவோ முறைத்தாள். “ அத்தான் இப்ப கூட ஷாலுவ நல்லவன்றாங்க….நீங்க மட்டும் என்னை ரௌடினு சொன்னதுக்கு கூடச் சேர்ந்து சிரிக்கீங்க…” ரேயா போலியாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

“ஏய் இடி…அவர் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட் போலீஸ்மேன்…அதான் நியாயத்துக்கு சப்போர்ட் செய்றார்…” இன்னுமாய் அவளை சரன் வாற,

“இது வேற ரேயு….ஐ’ம் ப்ரவ்ட் ஆஃப் யூ கைன்ட் ஆஃப் சிரிப்பு…அத்தானா வரப்போறவர்னு கூட பார்க்காம அடிச்சு துவச்சுருக்கியேன்னு ஒரு ஆனந்தம்…அந்த சீன நினச்சுப் பார்த்தேனா….சிரிப்ப அடக்க முடியலை…” இப்பொழுது மூன்று பேரும் சிரித்தனர்.

மொத்தத்தில் யாரும் வந்தனாவின் ஆர்பாட்டத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அவர் சொல்ல வந்ததை கேட்டு முடிக்கும் வரையுமே…. வரவேற்பறையில் ஆதிக்கைப் பார்த்தவுடன் மகா ஆனந்தமாய்  வரவேற்றார் ராஜ்குமார். உபயம் சாட்ச்சாத் சரித்ரனே தான். ராஜ்குமார் அருகில் சரித்ரன் அமர, எதிரிலிருந்த சோஃபாவில் வந்தனா அமர்ந்திருக்க, பக்கவாட்டில் இருந்த சிங்கிள் சீட்டரில் சென்று ஆதிக் அமர, அவனுக்கு அருகில் சென்று நின்று கொண்டாள் ரேயா.

“உட்கார் ரேயா…” வந்தனா தன் அருகிலிருந்த காலி இடத்தைக் காண்பிக்க “இல்ல நான் இங்கயே இருக்கேன்…”  அவர் கருத்தில் தனக்கு ஒப்புமை இல்லை என்பதை தெளிவாக காண்பித்தாள் ரேயா.

அருகில் பூ ஜாடி வைக்கப்பட்டிருந்த ஒரு அலங்கார நாற்காலி இருக்க அதிலிருந்த ஜாடியை எடுத்துவிட்டு ரேயா அருகில் நகர்த்தி வைத்தான் அந்த நாற்காலியை சரித்ரன். ராஜ்குமாருக்கு செய்தி தெளிவாக புரிந்தது. இளையவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் இந்த திருமணத்தை…அந்த முடிவை யாருக்காகவும் மாற்றவும் அவர்கள் தயாராக இல்லை. ஒரு வகையில் அவருக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்களே….அந்த ஒற்றுமை ஆசீர்வாதமல்லவா….??

காலையில் மகளை புடவையில் பார்க்கவும் அவருக்கே ப்ரமிப்பாகத்தான் இருந்தது. தன் கைக்குள் இருந்த மழலை மகள் தானறியாமலே மங்கையாய் எப்போது மாறினாள்? இப்பொழுதோ அவள் பிடிவாதம் பிடிக்கும் முறை சற்று குழந்தைத் தனமாயும் தோன்றியது….ஆனாலும் அவருக்குமே ஐயோ அவ சின்னப் பொண்ணு அவளுக்கென்ன தெரியும்….என்ற பதற்றமெல்லாம் வரவில்லை. மகள் இத்தனை நாள் விஷயங்களை கையாளும் முறையை அருகிலிருந்து பார்த்திருக்கிறாரே….

“இப்போ சொல்லுமா வந்தனா….என்ன விஷயம்…?” அப்பா வந்தனாவைப் பார்த்துக் கேட்க, முதன் முறையாக இந்த வந்தானா அப்பாவுக்கு எப்படி அறிமுகம் என யோசிக்க ஆரம்பித்தாள் ரேயா.

வந்தனாவோ ஆதிக்கை ஒரு பார்வை பார்த்துவிட்டு ராஜ்குமாரிடம் “ இத உங்க வீட்ல உள்ளவங்கட்ட மட்டுமா பேசுறதுதான் சரியா வரும்” என்று தனக்கு ஆதிக் அங்கிருப்பதில் உடன்பாடில்லை என தெளிவு படுத்திவிட்டு….”ஆனா இப்ப சொல்லித்தான் ஆகனும்ன்றதால சொல்றேன்…” என்று ரேயாவை ஒரு கண்டண லுக் விட்டவர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.