(Reading time: 26 - 51 minutes)

ங்க தம்பி அதி இறந்தது சூசைட் கிடையாது…அது மர்டர்…அதை செய்தது இந்த ஆதிக்கோட அப்பா டேவிட் “ என நேரடியாக விஷயத்துக்கு வந்தார். சொன்னது வேறு யாராக இருந்தாலும் ராஜ்குமாரின் ரியாக்க்ஷன் ‘இதென்ன லூசு மாதிரி உளறிகிட்டு’ அப்டின்ற மாதிரிதான் இருந்திருக்கும். பட் இப்போ சொல்றது டி ஜி பி ஆகிற்றே….. கேட்டுத்தான் பார்ப்போம்…வந்தனாவிற்கு எதனால் இந்த தவறான புரிதல் வந்தது என கண்டு அதை சரி செய்ய முடியும் அப்பொழுதுதான்…என்ற ரீதியில் ஓடியது அவர் மனது இப்போது

வந்தனா விஷயத்தை சொல்ல தொடங்கியதும் ஒரு கணம் கொதித்துப் போனான் தான் ஆதிக். எப்பேர்பட்ட பழி அது. ஆனால் அதே நேரம் அருகிலிருந்த ரேயா அவன் கையை இறுக்கிப் பற்றினாள். அப்பொழுதுதான் அவன் சுதாரித்தான். அவனை நம்ப வேண்டியவள் அவனுக்கு துணை இருக்கிறாள். இந்த வந்தனாவோ எதோ டிராமா போடுகிறாள். இவனுக்கு ஏதோ ட்ராப் செட் செய்கிறாள். அது என்னவென தெரியாமல் இவன் ஏன் சென்று மாட்டிக் கொள்ள வேண்டும்.??

விஷயம் வெளியே வரட்டும் அடுத்து இவன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வான். சரித்ரனும் ஆதிக்கைத்தான் சப்போர்ட்டிவாய்ப் பார்த்தான். ஒரு மனுஷனோட காதலுக்கு எந்த வகையிலெல்லாம் ப்ரச்சனை வருது…இப்டி தேடி வந்து கதை சொல்ல ஒரு டி ஜி பி இந்த ஆதிக் கூடவே வரனுமா? என்ற ரீதியில் ஓடியது அவன் சிந்தனை. எல்லோர் பார்வையிலும் தன் வார்த்தைகளின் மீது அவர்களுக்கு துளி கூட நம்பிக்கை இல்லை என தெரிந்தாலும் வந்தனா விஷயத்தை தொடர்ந்தார். கடகடவென டேவிட்  மலர்விழிக்கு அதியின் புகைப்படத்தை மாற்றி அனுப்பியதிலிருந்து நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தார் அவர்.

ஆதிக்கிற்கும் ரேயாவிற்கும் டேவிட் மீது வந்தனாவிற்கு ஏதோ உள் பகை போல அதனால் இப்படி பழி போடுகிறார் என்ற ரீதியில் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

“மலர் போய் உங்க அப்பாட்ட அழுததுல உங்கப்பா அத நம்பி நீங்க ப்ரதர்ஸ் யாரும் வர்றதுக்குள்ள அதி பாடியை பரி பண்ணிட்டாங்க….ஊர்ல எல்லோர்ட்டயும் அது சூசைட்னே சொல்லிட்டாங்க….நாட் ஈவன் அ கேஸ் வாஸ் ரெஜிஸ்டர்ட்…” வலிக்க வலிக்க வந்தனா சொல்லிக் கொண்டிருந்தார்….

வந்தனா சொல்வது போல் வெளியூரிலிருந்து சகோதரர்கள் யாரும் சொந்த ஊரை அடையும் முன் அதியின் உடலை புதைத்திருந்தார் தான் ராஜ்குமாரின் அப்பா. தற்கொலை செய்யும் நபர் அதி கிடையாது, ‘இதை கண்டிப்பா போலீஸ் கேஸாக்கனும்’ என ராஜ்குமார் உட்பட மற்ற சகோதரர்களும் அதியின் சில நண்பர்களும் கேட்டுப் பார்த்ததற்கு முரட்டடியாக மறுத்திருந்தார் ராஜ்குமாரின் தந்தை சகாயநாதன்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சொட்டு கண்ணீர்விடவில்லை அவர் தன் இறந்த மகனுக்காக. இன்று வரை ஞாபகம் வரும் போதெல்லாம் ராஜ்குமார் மனதை உறுத்தும் அந்த நினைவு. வந்தனா சொல்வது போல் மலர் கதை சொல்லியிருந்தால் தன் அப்பா இப்படித்தான் செய்திருப்பார். ராஜ்குமாரின் மனது நடந்தவைகளை கோர்த்துப் பார்க்க துவங்கியது.

“திரும்பி சென்னை வந்ததும் வசிஸ்’ஐ தன் அக்கா ஹஸ்பண்ட் டேவிட்க்கு மாத்தி கொடுத்துட்டு வசீகரன் அவர் வைஃப் மலர்விழியோட அப்ராட் கிளம்பினாங்க…எப்டியோ சமாளிச்சு எனக்கு ஃபோன் செய்து ஏர்போர்ட் வரவச்சு அங்க உள்ள ரெஸ்ட் ரூம்ல வச்சு மலர் என்ன சீக்ரெட்டா மீட் செய்து  இந்த கதைய சொல்லிட்டு வசி சார் கூட கிளம்பினாங்க…..ஷீ ஃபெல்ட் எக்‌ஸ்ட்ரீம்லி கில்டி….மலராலே அதை தாங்கவே முடியலை.. அதோட பியூலா லைஃபை பத்தி கன்சர்ன் வேற அவங்களுக்கு…. நான் பியூலாவோட சிஸ்டர்ங்கிறதாலயும்  மலர்க்கு அப்போதைக்கு இருந்த ஒரே ஃப்ரெண்ட்ங்கிற காரணத்தாலையும் அவங்க என்ட்ட இதையெல்லாம் சொல்லிட்டு கிளம்பினாங்க….கனடா ரீச் ஆனதும் எப்டியும் என்னை காண்டாக்ட் செய்றேன்னு சொன்னாங்க…வசியை பாதிக்காம அதே நேரம் ரியல் கல்ப்ரிட் பனிஷ் ஆகிற மாதிரி செய்யனும்ங்கிறது அவங்க எய்ம். பட் இப்ப வரை அவங்க காண்டாக்ட் செய்யலை….அதைவிட அந்த டேட்ல கனடா கிளம்பின எந்த ஃப்ளைட்டிலும் அவங்க போர்ட் ஆகவே இல்லைனு ரெகார்ட்ஸ் சொல்லுது…. அவங்க கனடால என்டர் ஆனதாவும் எந்த இன்ஃபர்மேஷனும் இல்லை…அவங்களப் பத்தி எந்த டீடெய்ல்ஸும் இல்லை….தே சிம்ப்ளி வனிஷ்ட்…”

ராஜி என்ற ராஜ வந்தனா கதையை சொல்லி முடிக்கும் போது ஆதிக் உட்பட அனைவருமே ஒருவித அமைதி நிலைக்கு வந்திருந்தனர்…..சில தகவல்கள் புதிது என்றாலும் அதில் உள்ள பல தகவல்கள் அவர்கள் அறிந்தது அல்லவா

“இப்போ பியூலா எப்டி இருக்காங்க…?” ரேயாவின் குரலில் ஆழ்ந்த சோகம் ஒலித்தது. நடந்தது என்னவோ? ஒரு வகையில் பார்த்தால் யாரும் உயிருடன் இல்லை என தெரிகிறது….ஆனால் பியூலா?

“அவளும் அதுக்கு பிறகு ஃப்யூ மந்த்ஸ்ல அதிட்ட போறேன்னு…..”  வந்தனாவால் அதற்கு மேல் பேச முடியவில்லை….

“அதி ஃப்ரெண்ட்ஸையெல்லாம் தூண்டிவிட்டு நாங்க சென்னைல ஒரு கேஸ் ரிஜிஸ்ட்டர் செய்ய வச்சோம்…அதை அதி பியூலா சுசைட்….வசிகரன், மலர்  ஆக்சிடெண்டல் டெத்னு சொல்லி  முடிச்சுட்டாங்க……அதுவும் ஆக்சிடெண்ட் நடந்த இடம் பாம்பேனு கொடுத்ருந்தாங்க….பாடீஸ் வேர் ஹேண்ட் ஓவர் டு மிஸ்டர் டேவிட் & கோ ன்றது ரிபோர்ட். காசு பவர்னு என்ட்ட எதுவும் கிடையாது…. என்னமோ அவங்களுக்கெல்லாம்  ஜஸ்டிஸ் வாங்கித் தரனும்ங்கிற எண்ணத்துலதான் நான் இந்த டிபார்ட்மென்ட் எக்‌ஸாம் எழுதி இங்க ஜாய்ன் செய்தேன்…இன்னைக்கு வரை என்னால எதுவும் முடியலை…ஏன்னா மிஸ்டர்.டேவிட் இப்பவரைக்குமே என்னைவிட ரொம்பவே பெரிய ஆள். ”

வந்தனா டேவிட்டைப் பற்றி சொல்லிய விஷயங்கள் ஆதிக்கை நிச்சயமாக கொதிக்க செய்து கொண்டிருந்தாலும், ஒரு வகையான அமைதியில் இருந்தான் அவன். கோப படுறதால எந்த நியாயமும் நடந்துடப் போறது இல்லை…இதுக்கு பதில் செய்ய வேண்டிய விதம் வேற…. ஆரம்பத்தில் அவன் கையைப் பிடித்த ரேயா இப்பொழுது வரை அவன் கையை விடவே இல்லை. அதுவே அவனுக்குச் சொல்லியது அவள் மன நிலையை.

சரித்ரன் எதுவும் சொல்லவில்லை….மற்றவர்கள் மனதை அறிய நினைத்தான் அவன்.

ஆதிக் ராஜ்குமாரைப் பார்த்தான். “அங்கிள் இது உங்களுக்கும் எனக்கும் ரொம்ப டெலிகேட் சிட்ஷுவேஷன்….எனக்கு அப்பா…உங்களுக்கு தம்பி…..என் அப்பாக்காக நான் வாயால வாதட விரும்பலை….ஏன்னா அது வேஸ்ட்…..பட் ஐ’ல் நஅப் த கல்ப்ரிட்….இன் த மீன் டைம்….” சொன்னபடி அவன் ரேயாவைப் பார்த்தான். ஆனால் இருவரும் கோர்த்திருந்த கைகளை விடவே இல்லை. ரேயா விஷயத்தில் ராஜ்குமார் நிலை என்னதாய் இருக்கப் போகிறதாம்? என்பதே அவன் பேச்சின் சாரம்சம்.

ரேயாவோ “எனக்கு டேவிட் அங்கிள் பத்தி பெருசா எதுவுமே தெரியாது. அவங்க அப்டி செய்துருக்க மாட்டாங்கன்னுதான் நான் நம்புறேன்….பட் ஒருவேளை நான் நினைக்ற மாதிரி விஷயம் இல்லைனாலும்…ஆதிக் என்ன தப்பு செய்தாங்க…?அவங்கள ஏன் டார்கட் செய்றீங்க…” கார சாரமாய் கேட்டாள் இக் கேள்வியை அவள் வந்தனாவை நோக்கி.

அவங்க அப்பா தப்பே செய்திருந்தாகூட, நான் ஏன் ஆதிக்கை இழக்கனும்? என்ற மனநிலையில் இருந்தாள் அவள்.

“நீ சின்னப் பொண்ணு புரியாம பேசுற ரேயா…அவ்ளவு ப்ளான் செய்து டேவிட் வசி’ஸ் ஐ எடுத்தது எதுக்கு….? பணம். இப்போ உங்க வீட்ல ரெண்டும் கேர்ள்ஸ் மட்டும் தான்…உங்கப்பா பிஸினஸ் எல்லாமே இப்போ உன் பேர்லதான் இருக்குது…..அப்ப மகன் கூட சேர்ந்து டேவிட் ப்ளான் செய்து, உங்க பிஸினஸை எடுக்க ட்ரை பண்ணலைனு எப்டி நம்புற நீ?” வந்தனா இப்பொழுதாவது ரேயா ஆபத்தை புரிந்து கொள்வாள் என நினைத்தாள்.

ரேயாவோ “ஓ இதுதான் உங்க பயமா…சிம்பிள் சொலூஷன் இருக்குது இதுக்கு…அப்பா இனி பிஸினஸ் எல்லாத்தையும் ஷாலு நேம்க்கு மாத்துங்கப்பா…..எனக்கு எதுவும் வேண்டாம்” தன் தந்தையிடம் சொன்னவள் “இனி நாங்க மேரேஜ் செய்துக்றதுல வேற எந்த அப்ஜெக்ஷனும் உங்களுக்கு இல்லையே” என்றாள் வந்தனாவை நோக்கி.

வாயடைத்துப் போனாள் ஒரு நொடி வந்தனா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.