(Reading time: 16 - 32 minutes)

ரு நிமிஷம்…” அவன் சொல்ல அவன் கண்களை நேர்கோட்டில் கேள்வியாய் சந்தித்தாள் இவள்.

என்ன என்ற கேள்வி அவள் முக பாவத்தில்.

அவன் முகபாவத்தில் எந்த சலனமும் இல்லை.

“நவ்யா….”இயல்பாய் வந்தது அந்த பெயர் நிக்கி வாயில்.

இவளுக்குள் மௌன பூகம்பம்…எப்பொழுது எதைப் பேசுகிறான் அதுவும் எத்தனை இயல்பாய்….?

கேமிராப் பார்வையில் இவனுடன் எப்படி சண்டை போட? அவிவ் நிலையை அது நாளை எவ்விதம் பாதிக்கும்?

அவள் நினைவை தொடரக் கூட முடியவில்லை அவளால் காரணம் அவன் தொடந்து சொன்ன வார்த்தைகள்.

“அவிவ் கட்டாயத்தில பிறந்த குழந்தை கிடையாது….ஹீ வாஸ் பார்ன் அவ்ட் ஆஃப் லவ் ….”

வெட்டும் மின்னலாய் விழி தெறிக்கப் பார்த்தாள் நல்லிசை.

“வா இசை லேட்டாகுது……எல்லோரும் நம்மளயே பார்க்காங்க….” இவள் கை பற்றினான்.

அவனுக்கு இணைந்து நடந்தாள் அவள். வேறு வழி? இயல்பாய் இருப்பதாய் காட்டி ஆக வேண்டுமே?

நவ்யா ஏன் இப்டி செய்தா?  அவிவ் விஷயத்தில் தப்பு யார் பேர்ல…..ஒன்றும் புரியவில்லை.

திருமண உடன்படிக்கை நிகழ்ச்சி தொடங்கியது.

“நவ்….” இவள் கேட்க ஆரம்பிக்க

“லுக் வி ஆர் கெட்டிங் மேரிட்….எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு ஹால்ஃப் அன் அவர் ப்ரசன்டுக்கு வா….” பேச்சை நிறுத்த சொன்னான் அவன்.

நல்லிசைக்கும் அதுதான் சரியாக பட்டது. ஐயோ ஐயோ என தவிப்பதில் ஆய பயன் என்ன? மனமே செத்திரு….திரும்பவும் உயிர்க்காதே….வேறென்ன இவள் கையில் இருக்கிறதாம்?

அவளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இந்த திருமணம் அவிவிற்காக தேவை, மதுருக்காக கூட தேவை. நிக்கியை மணக்க அவளை தடுத்த முக்கிய விஷயமும் இல்லை என்றாகிவிட்டது….

தாங்காமல் கொதித்து, தாறுமாறாய் தவித்தாலும் உன் சத்தம் நான் கேளேன்  பிழை செய்யும் பேதை மனமே….மதுரை நாடினாய், அவன் மரணத்தில் உடைந்தாய், பெற்றவரைப் பிரிந்தாய்….உன் இழுப்பிற்கெல்லாம் வந்தேன் என்னை எங்கு வந்து நிறுத்தினாய்….?

உயிரற்ற பெண்மையாய், உயிருள்ள பதுமையாய், எல்லா ஐ டூக்களுக்கும் பிறகு இப்பொழுது இவர்கள் தம்பதியனராய் அறிவிக்கப் படுகின்றனர். திருமது நல்லிசை நிக்கோலஸ். எந்த வகையிலும் பொருந்தாத இரு பெயர்கள்!!!!!

“அவிவ் எங்க?” நிக்கியைப் பார்த்துக் கேட்டாள்.

ஒரு டேபிளை சுட்டிக் காண்பிக்கிறான் நிக்கி. சர்வனின் மனைவி சிருஷ்டிக்கு அருகில் அவிவ். இவள் அவனைப் பார்த்ததும் “ஹி” என்று ஒரு சிரிப்பு. அவ்வளவே. சிருஷ்டி மகனுக்கு ஏதோ சொல்லிக் கொண்டு இருப்பது நல்லிசைக்கு புரிகிறது. அவர்கள் சொல்வதையெல்லாம் இவன் கேட்கிறானே….

சிறு கூட்டம் தான். சிறு விழா தான். வீட்டின் லானில்தான் திருமணமும் வரவேற்பும்….விழா சீக்கிரம் நிறைவு பெற, வந்தவர்  அனைவரும் விடை பெற, இப்பொழுது அல்மோஸ்ட் இவர்களும் சர்வன் குடும்பமும் மட்டும்தான். சர்வன் தோளில் தூங்கி இருந்தான் அவிவ்.

மகனை தன் தோளுக்கு மாற்றிக் கொண்டான் நிக்கி.

சர்வன் தன் மனைவியுடன் விடை பெற்றான்.

 “இப்பவாவது என்ட்ட தாங்களேன் ப்ளீஸ்….” மகனை தன் கைக்குள் கேட்டாள் நல்லிசை.

“உன் கைல அடிபட்டுருக்கே… உள்ள போகவும் அவன் கூடவே இரு……” தோளில் படர்ந்திருந்த தன் மகன் மீது ஒரு முத்தமிட்டான் நிக்கி.

வெறுப்பு அலை அடிவயிற்றில் இருந்து பரவியது இவளுள். இனி தினம் இந்த கண்ராவியை வேறு இவள் சகித்தாக வேண்டும்.

“டிரிங்ஸ் சாப்டுறவங்க அவனை கிஃஸ் பண்றது எனக்கு பிடிக்காது….”

“எனக்கும் கூடத்தான்….” பதில் வந்தது நிக்கியிடம் இருந்து. “அப்டிபட்டவங்கட்ட குழந்தைய கைல கூட கொடுக்க மாட்டேன் நான்…”

இதற்கு இவள் என்ன சொல்ல?

“ட்ரிங்க்ஸ், டொபோகோ, ட்ரக்‌ஸ்….எந்த பழக்கமும் எனக்கு கிடையாது” இவளைப் பாராமல் அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் கண்கள் அவர்களை நோக்கி வந்த அந்த பெண்மணி மேல் இருந்தது.

அவ்வளவு நேரம் அங்குள்ள ஏதோ ஒரு மேஜைக்கருகில் இருந்திருப்பார் போலும்….நல்லிசை இப்பொழுதுதான் கவனிக்கிறாள்.

வந்தவர் மணமக்கள் இருவர் கையையும் இணைத்துப் பற்றிக் கொள்கிறார்.

அவர் முகம் எங்கோ பார்த்த முகமாக தெரிகிறது நல்லிசைக்கு. தெரிந்தவர் எவரின் சாயலோ…?

“என்ன இருந்தாலும் நீயும் எங்க வீட்டுப் பொண்ணுதான்மா….” இசையிடம் சொன்னவர்

“நீங்க ரெண்டு பேரும் எப்பவும் நல்லா இருக்கனும்….” இருவருக்குமாய் சொன்னார்.

“என் குடும்பத்தை நீ மன்னிச்சுடுமா”  அவர் குரல் தழுதழுக்கிறது.

 ‘யாரிது?’ இவளுக்கு அது யாராய் இருக்கும் என புரிந்த அந்த நொடி

புயலாய் பூகம்பமாய் வந்து நிற்கிறான் மதுர். அவன் முகத்தில் அத்தனை எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது. எப்பொழுது வந்தான்? எப்படி வந்தான்? ஏன் வந்தான்? எப்படியானாலும் இந்த திருமணத்தில் அவனுக்கு நிம்மதி வந்திருக்க வேண்டுமே? இப்பொழுது ஏன் இந்த கோபம்???

“நிக்கி நீ அளவுக்கு மீறிப் போய்ட்ட…..என் அம்மாவை ஹோஸ்டேஜா வச்சு என்னைய வெளிய நிறுத்தி வச்சு கல்யாணமா….? நீ எவளை கல்யாணம் செய்தா எனக்கென்ன…அதுக்கு என் அம்மாவ ஏன் கிட்நாப் செய்த….?” கர்ஜிக்கிறான் அவன்.

ஆக நிக்கி ஒரே நேரத்தில் இந்த திருமணத்திற்காக எத்தனை பேரை கடத்தி இருக்கிறான்??  நல்லிசைக்கு சூழலை முழுவதுமாக உட்கிரகிக்க கூட முடியவில்லை.

“இவ ஒரு ஹீபோக்ரைட்…சைக்கோ….இவங்க அப்பன் ஒரு ஃப்ராடு….இவளக் கல்யாணம் செய்றதுக்கு இவ்ளவு ட்ராமா…” மதுர் இன்னுமாய் என்ன சொல்ல வந்தான் என தெரியவில்லை. நிக்கி உடல் விரைக்க எதிரில் நின்றவனை நெருங்கும் முன், மதுரின் தலையில் வந்து அமர்ந்தேவிட்டது ஒரு பிஸ்டல்.

“சாரி ப்ரதர்…சொன்ன வார்த்தைக்காக இப்ப கூட நீங்க சாரி சொல்லிடலாம் ….ஆனா சுட்ட புல்லட்டுக்காக இதால சாரி சொல்லவே முடியாது.” பிஃஸ்டலை சிறிது அசைத்துக் காண்பிக்கிறான் ஒருவன்.

பிஃஸ்டல் காரன் முகம் தெரியவே இல்லை. அத்தனை புதர்காடாய் தாடி. ஆனால் குரல்??? இத்தனை வருடமானாலும் அந்த குரலில் இருக்கும் எக்கத்தாளமே காட்டிக் கொடுக்கிறது.

“சதீஷ்ஷ்ஷ்ஷ்….” அலறினாள் இசை. ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சி.

“ஹேய் எண்ணை உன் கல்யாணத்துக்கு வருவேன்னு சொன்னேன்ல….” ஏதோ சந்தோஷமும் சம்பூர்ணமுமாய் நடந்த ஒரு திருமணத்திற்கு வந்தது போல் அவன் குரல்….எரிச்சல் வந்தது நல்லிசைக்கு.

இவள் எரிச்சல் அவனுக்கும் புரிந்தது போலும். அவன் விழி மொழியில் மாற்றம். ஏதோ சொல்ல வந்தான் அதற்குள்

“சாரி “என்றான் மதுர். இன்னும் அவன் மீது இருந்ததே சதீஷின் பிஸ்டல்… அந்த சாரிக்குப் பிறகு பிஃஸ்டல் அவன் மீது இருந்து இடம் பெயர்ந்தது.

“சாரிமா….உங்க முன்னால உங்க சன் மேல பிஸ்டல் வச்சது கஷ்டமாதான் இருக்கும்…பட் என் முன்னால என் தங்கச்சிய இப்டி பேசினா நான் எப்டி பார்துகிட்டு இருக்க…? அதுவும்…இவ்ளவு நாளைக்குப் பிறகு இப்பதான் அவளுக்கு ஒரு நல்லது நடந்திருக்கு….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.