(Reading time: 16 - 32 minutes)

திர்ந்து போய் நின்றிருந்த மதுரின் தாயார், இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்திருக்கவில்லை போலும்.

“நீ உங்கம்மாவ கூப்டுட்டு இடத்தை காலி பண்ணு….” மதுரைப் பார்த்து உறுமினான்  நிக்கி.

“இதுக்கெல்லாம் உன்ன கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுகிறேன்…” கருவிவிட்டு மதுர் தன் தாயுடன் நடக்க தொடங்கினான்.

“ நீ எதையும் மனசுல வச்சுக்காதமா…இனிமேலாவது சந்தோஷமா இருமா….” சொல்லிக் கொண்டே போனார் மதுரின் அம்மா.

என்ன நடக்கிறது இங்கு?????

அத்தனை ஆண்களும் அவரவர் பிடிக்கு இவளை வளைக்க நினைக்க….கைதான காற்றாய் இவள்….

“ஹேய் எண்ணை…..நீ பழசையே நினைச்சு வாழ்க்கைய அழிச்சு என்ன ப்ரயோஜனம்…? இனியாவது வர்ற வாழ்க்கைய சந்தோஷமா ஃபேஸ் பண்ணு …. கவனிச்ச வரைக்கும் இந்த நிக்கி உனக்கு ஏத்தவர்னுதான் படுது….அதான் கல்யாணம் நடக்கட்டும்னு இருந்துட்டேன்…” இவளை நோக்கி சொன்ன சதீஷ் நிக்கியைப் பார்த்து

“சாரி…. உங்க பெர்மிஷன் இல்லாம உங்க பிரிமிசிஸ்குள்ள வந்துட்டேன்…அடிக்கடிலாம் வந்து டிஃஸ்டர்ப் செய்ய மாட்டேன்….பட் அவளுக்கு ஒரு ப்ரச்சனைனா நான் கண்டிப்பா வருவேன்…திரும்ப நான் பிஃஸ்டல் எடுக்க வேண்டி இருக்காதுன்னு நினைக்கிறேன்…அவள நல்லா பார்த்துக்கோங்க….அவ குழந்தை இனி உங்க குழந்தை….”

“பை எண்ணை” அடுத்த சில நொடிகளில் சதீஷ் வெளியேறி இருந்தான் இவளுக்கு ஒரு வார்த்தை பேச கூட வாய்ப்பு தராது.

நவ்யாவைப் பற்றி என்ன தெரிந்திரிக்கிறது இந்த சதீஷுக்கு? நிக்கிட்ட போய் இனி இது உங்க குழந்தைனு சொல்லிட்டுப் போறானே…இந்த சதீஷ் தனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி வெறும் ஷோ போடதான் லாயக்கு ….ஆனால் உண்மையில இவன் சரியான க்ராக்கு….

“வா உள்ள போகலாம்….” நிக்கியின் குரலில் தான் நடப்புக்கு வந்தாள் இசை.

இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்?

அவன் பின் நடந்து வீட்டிற்குள் சென்றாள்.  வழக்கம் போல மார்டன் பங்களாஸ்கே உரிய ப்ரமாண்டமான ஹால்….இன்ன பிற….மாடி…. அதில் ஒரு அறையைத் திறந்தான். பகலில் அவிவ் அங்கு இருந்ததற்கான அடையாளங்கள் .தெரிந்தன.  பொம்மைகள், டாய் கார், எக்‌ஸற்றா இருந்தது.

அங்கிருந்த படுக்கையில் அவிவை கிடத்தினான். ஏசியை ஆன் செய்து , குழந்தைக்கு இதமாக போர்த்திவிட்டான்.

“மதியமும் இப்பவும் நல்லாவே சாப்டுட்டான்…..மதியம் என் கூட தான் சாப்டான்….இப்போ சிருஷ்டி கூட சாப்டானாம்… இப்ப தூங்கிட்டான்….இனி எழுப்பாத….”

“ம்…”

“ இப்ப என் கூட வா…” வெகு இயல்பாய் நிக்கி அழைக்க உடல் விரைத்து, இசை இதய துடிப்பில் கார் ரேஸ்.

அவள் முகம் பார்த்தவனுக்கு அவள் மனம் புரியாமல் இல்லை.

“ஜஸ்ட் ஃப்யூ மினிட்ஸ் பேசனும்…” அழுத்தம் வந்திருந்தது அவன் குரலில்.  கண்டணமும்.

“உன்ட்ட இதுக்கு முன்ன எப்ப தப்பா நடந்துகிட்டேன்….எதுக்கெடுத்தாலும் என்ன பத்தி கன்னாபின்னானே யோசிக்ற…?” அறையை விட்டு வெளியே வரவும் அடக்கப்பட்ட கோபத்துடன் அடைக்கப்பட்ட அழுதத்துடன் வந்து விழுந்தன வார்த்தைகள் அவனிடமிருந்து..

“நவ்யா…” இவள் பதிலுக்கு வெடிக்க தொடங்க

“நவ்யா நவ்யா நவ்யா….அத தாண்டி எதையும் யோசிக்கவே மாட்டியா……அவிவ் என் சொந்த குழந்தை இல்ல…முதல்ல அத புரிஞ்சுக்கோ நீ…” இவளை விட வேகமாக திருப்பினான் அவன்.

அன்றைய நாளின் அனைத்து அதிர்ச்சிகளுக்கும் மேலான அதிர்ச்சி நிச்சயமாய் இதுதான்.

அரண்டும் மிரண்டுமாய் பார்த்தாள் அவனை. எப்படி ஏமாற்றிவிட்டான் இவன்?

“அன்னைக்கு ஆஃபீஸ்ல வச்சு பேசுறப்ப எனக்கு குழந்தை இருக்குன்னு நீ சொன்ன…..அந்த குழந்தைக்கு நான் அப்பாவ இருப்பேன்னு தான் நான் சொல்ல வந்தேன்….அதுக்குள்ள நீ என் கழுத்தை பிடிச்சுட்ட….மேல பேச விடலை….இன்ஃபாக்ட் நீ இப்டி புரிஞ்சிருக்கியோன்னு கொஞ்சம் லேட்டா தான் நான் கெஸ் செய்தேன்…. இல்லனா அப்பவே க்ளாரிஃபை செய்துருப்பேன்…”

“………………………” ஆக இவள்தான் அறை குறையாய் புரிந்து கொண்டு , அவசரபட்டு இந்த நிலையை இழுத்துவிட்டாளா..?

“இப்பவும் அவிவ்க்காக எதையும் செய்ய நான் ரெடி தான்….ஆனா எனக்கு அவிவ்வ விடவும்  நீ முக்கியம்….என் கைக்குள்ள இருக்கியோ இல்லையோ, என் கண்ணுக்குள்ள நீ இருந்தாகனும்….அதுக்கு வேற வழி தெரியலை….”

“…………………..”

“ஆனா கெஞ்சினா இறங்கி வர்ற ஆளா நீ…?அப்டின்னாதான் எப்பவோ என்னை புரிஞ்சிருப்பியே….அதான் கொஞ்சம் மிரட்ட வேண்டியதாயிட்டு”

“…………………………..”

“அதென்ன…..அன்னைக்கு அவிவ் பத்தி நீ ஆஃபீஸ்ல பேசினயே அந்த  நாள் வரைக்கும் உன்ட்ட எப்பவாவது நான் தப்பா பிகேவ் செய்துருக்கனா? இல்ல வேற எந்த பொண்ணுட்டயாவது  வழிஞ்சுருக்கனா…? எடுத்தவுடனே என்ன எவ்ளவு கீழ்தரமா யோசிச்சுட்ட?” நிக்கி கேட்டுக் கொண்டு போனான். இவள் என்ன பதில் சொல்வாள்?

உண்மையில் ஏன் அப்படி அவசரப் பட்டாள்???

அன்று மதுரனை அப்பொழுதுதான் சந்தித்துவிட்டு வந்திருந்த ஏமாற்றம். காதல் மீதே வந்திருந்த இமாலய நம்பிக்கை இன்மை. ஆண்கள் மீது தோன்றியிருந்த ஆழ வெறுப்பு… அதை இவனிடம் காண்பித்திருக்கிறாள்….

“அப்டி சொன்னேன்ட்டுதான் என்னை இப்டி பழி வாங்குறீங்களோ?”

“உனக்கு ஏன் அறிவுக்கும் மனசுக்கும் இவ்ளவு கேப்…? என்னை நீ போன்னு பேச கூட உனக்கு மனசு வரலை, நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையையும் அப்டியே நம்புற…..ஆனா அதுக்கு சம்பந்தமே இல்லாம வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுற….பழி வாங்க வந்தியான்னு கேட்க…”

இது நிச்சயம் இவள் கவனிக்காத விஷயம் தான்….நிக்கி அவிவ் என் குழந்தை என்று சொல்வதாய் நினைத்தாள். அதை நம்பினாள், அவிவ் கட்டாயத்தில் பிறக்கவில்லை என்றான் நம்பினாள், இப்பொழுது அவிவ் தகப்பன் நானில்லை என்கிறான் அதையும் நம்புகிறாள். எதற்கும் இம்மி அளவு கூட இவள் சாட்சி தேடவே இல்லையே….

“இப்போ முழி…”

“……………………”

“கொஞ்சமாவது மனச திறந்து வச்சி என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு…உன் உள்மனசயே கேளு… நான் உன் மேல வச்சிருக்க அன்பு காதல்லாம் நிஜம்னு உனக்கு அப்ப புரியும்….அதுக்கப்புறம் மத்த எல்லாத்தையும் பார்த்துகலாம்….”

“……………………”

“இப்பவும் சொல்றேன் நான் சொன்ன மாதிரி நமக்கு நடந்தது உண்மைக் கல்யாணம்…என் உரிமைல ஒரு துரும்ப கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்….அதே நேரம் உரிமை கேட்கிறவனுக்கு இருக்கிற கடமைல இருந்து ஒரு புள்ளி கூட விலகவும் மாட்டேன்….உன்னை வெளியிலேயோ வீட்டுக்குள்ளயோ….அவிவ் விஷயம்னு இல்லை எந்த விஷயத்துக்காகவும் அழவிட மாட்டேன்……வீடுன்னா அது பெட் ரூமயும் சேர்த்துதான்….”

அவனை எப்படி நிமிர்ந்து பார்க்கவென்று நல்லிசைக்குத் தெரியவில்லை. இவன் வார்த்தைகளை இவள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?

“இன்னைக்கு அவிவ் புது இடத்துல தூங்குறதால இடையில விழிச்சு உன்னை தேடினாலும் தேடுவான். அப்ப நீ எங்க இருக்கன்னு அவனுக்கு தெரியலைனா கஷ்டம்…..சோ இன்னைக்கு ஒரு நாள் அவன் ரூம்ல இருந்துக்கோ….நாளைக்கு அவன் தூங்குறதுக்கு முன்னால நம்ம ரூம் எதுன்னு அவன்ட்ட சொல்லி கொடுத்துடலாம்…. இப்போ போய் தூங்கு…இல்ல உனக்கு எதாவது வேணும்னாலும் கேளு…”

அன்று இரவு மெத்தையில் போய் விழுந்தாள் இசை. என்னவெல்லாம் நடந்துவிட்டது இந்த ஒரு நாளில்? மனதிற்கு எதற்காகவெல்லாம் எப்படியெல்லாம் உணரவேண்டும் என்றே புரியவில்லை….நிக்கியுடன் திருமணம். மதுரனுடன் ஒரு யுத்தம்.

இந்த நிக்கி நல்லவனா கெட்டவனா?????? மதுரனும் தான் எப்படிப்பட்டவன்??????? சதீஷ் எங்கிருந்து வந்தான்???????

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:878}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.