(Reading time: 20 - 40 minutes)

றுநாள் காலை திருமணத்திற்கு புறப்படும் போது தான் கவனித்தாள். பிரபுவும் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாய் அர்ஜுன் தோள்மீது கைபோட்டு சிரித்துக்கொண்டிருந்தான். இருவரும் ஐ ஃபை கொடுத்து ஏதோ பேசி சிரித்தனர். அவனது சிரிப்பு அவளை மயக்கியது!

சிரிச்சே மயக்கிடுவான்!' என்று ஆழ்ந்த மூச்சு எடுத்து கண்களால் அவனை பருகிக்கொண்டிருந்தாள்.

அண்ணி.. போதும் அண்ணாவை சைட் அடிச்சது!' என்று திவ்யா சொல்லும் போது குழலீயின் முகம் சிவந்துவிட்டது.

திருமணத்தின் போதும் ஒருவரையொருவர் அரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த கேரளா செட் சாரியில் மலையாள குடும்பத்து பெண் போலவே இருந்தவளை பார்த்து ரசித்தான் பிரபு.

உரிமையாக இவள் தோள் மீது கைகளை போட்டுக்கொண்டு மணமக்கள் அர்ஜுன் ப்ரியாவுடன் போட்டோ எடுத்துக்கொண்டான். இருவரும் சேர்ந்து பரிசுகள் தந்தார்கள். 

திருமணம் முடிந்து இவர்கள் புறப்படும்போது இவர்களுக்கு முறை செய்து அனுப்பினார் அர்ஜுன் தந்தை.

அர்ஜுனும் ப்ரியாவும் இவர்களுடனே புறப்பட்டு திருவனந்தபுரம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அரேபிக் கடலின் அலைகளில் சிறிது நேரம் நின்றுவிட்டு புறப்பட்டனர். அதற்குள் ப்ரியாவுக்கும் குழலீக்கும் நல்ல நட்பு உருவானது. திவ்யா, விஷால் மற்றும் ப்ரியாவின் தங்கை என ஒரு கூட்டத்துடன் தான் சுற்றிக்கொண்டருந்தனர்.

ஒருவழியாக சுற்றிவிட்டு விமானத்தில் ஏறியவுடன் சிறிது நேரம் இருவரிடமும் கனத்த மௌனம் நிலைக்கொண்டிருந்தது. அதை கலைத்தது குழலீதான்.

பிரபு... நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசனும்!'

நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்...' என்று கடுகடுத்தான்.

சிறிது நிமிடத்திற்கு பிறகு குழலியிடம் திரும்பி, 'அப்புறம் நேத்தியில அடிச்சா மாதிரி பெயர் சொல்லி கூப்பிடுறத நிறுத்து! நான் உனக்கு தாலி கட்டின கணவன்! வயதில் பெரியவன்...இது நினைவு வைத்துக்கொள்!' என்று அடிக்குரலில் சீறினான்.

நான் என்ன செய்துட்டேன்?? எதுக்கு இவ்வளவு கோபம்? சொன்னா தானே தெரியும்!' என்றாள் குழலீ.

எரித்துவிடுவது போல் ஒரு கனல் பார்வை மட்டுமே பதில்.

இதற்கு விடை கிடைத்தது பூங்குழலீ பிலடேல்பியா திரும்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான். அதுவும் பெங்களூரில் குழலீயின் அக்கா வீட்டில் வைத்துதான்.

அர்ஜுன் திருமணத்திலிருந்து வந்ததலிருந்து இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்ந்துக்கொண்டேயிருந்தது. இருவருமே அதை உணர்ந்து தான் இருந்தனர். யாரும் மௌனத்தை கலைக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தனர். வீட்டினர் முன்பு எல்லாம் சகஜமாய் இருப்பது போல காட்டிக்கொண்டாலும் இருவர் மனதிலும் கேள்விகள் ஆயிரம் இருந்தது.

நான் இப்போ என்ன தவறு செய்துட்டேன் இவ்வளவு சீன் போடறான்? உனக்கே இவ்வளவு இருக்குனா.. எனக்கு எவ்வளவு இருக்கும்!'

என் முன்னாலேயே அடுத்தவனோடு நல்லா சிரிச்சு பேசறா! என்னை பார்த்தா மட்டும் கடுவன் பூனை! நான் என்னடீ செய்தேன்? இவளை போல மனதில் ஒன்று வைத்துக்கிட்டு வெளியில் ஒன்னா பேசறேன்! உனக்கே இவ்வளவு இருக்குனா.. எனக்கு எவ்வளவு இருக்கும்!'

சென்னை திரும்பியதிலிருந்து கால்களில் சக்கரம் கட்டியது போல ஒடியது நேரம். குலதெய்வ வழிபாடு, நேர்த்தி கடன்கள், விருந்துகள் என்று ஒவ்வொரு நாளும் சென்றது. இரவு பிரபு அறைக்கு வருவதற்குள் குழலீ உறங்கியிருப்பாள். இவள் விழித்திருந்தால் அவன் நித்திறையில் இருப்பான். இருவரும் வீட்டில் இருந்தால் இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் வேலையிருந்தது. 

இதற்கிடையில் இருவரும் ஒரு நாள் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. அலுவலகத்தில் இருந்து திரும்பியவன் தான் அவசரமாக பெங்களூரு அலுவலகம் செல்ல வேண்டும் என்று கிளம்பிவிட்டான். அப்போது தான் உள்ளே நுழைந்த குழலீக்கு இது தெரியாது. அவன் புறப்படுவதை பார்த்த குழலீக்கு அதிர்ச்சி... இவளிடம் மருந்துக்கு கூட சொல்லவில்லை என்று!

இதை பார்த்துவிட்ட மாலதி குழலீயிடம் திரும்பி 'ஏன் சக்தி.... உனக்குக்கூட அங்க ஏதோ வேலையிருக்குனு நேற்று சொல்லிக்கிட்டு இருந்தியே? சிவா கூடவே போனா வேலையும் முடியும் அலைச்சலும் இருக்காது.... அப்படியே உன் அக்கா குழந்தையையும் பார்த்துட்டு வாங்களேன் மா?' 

என்ன டா சிவா? சரி தானே.. அப்புறம் உன் மனைவியை ஏன் தனியா அனுப்பி வைத்தீங்கனு என்கிட்ட சண்டை போடுவ! காரில் தானே போற.. அப்படியே சக்தியையும் அழைத்துக்கொண்டு போ!'

மாமியாரையும் மாமனாரையும் மாற்றி மாற்றி பார்த்து மலங்க மலங்க விழித்தாள். இதை பார்த்த பிரபுவிற்கு சிரிப்பு வந்தாலும் தன்னை கட்டுப்படுத்தியவாறு..'சரி சரி இப்படியே பார்த்துட்டு இருந்தா எப்படி? சீக்கிரம் கிளம்பி வா! போகிற வழியிலே சாப்பிடலாம்! நான் அங்கே ஒன் டே தான் ஸ்டே! நீ இன்னும் பேக்கிங் முடிக்கல.. அதை நினைவு வைத்துட்டு கிளம்பு.. ஹம்ம் சீக்கிரம்!

அவசரமாக கிளம்பி காரில் பெங்களூரை நோக்கி புறப்பட்டனர் இருவரும்.

சிறிது தூரம் அதே மௌளம்!

பிரபு! நான் உங்ககிட்ட பேசனும்!

பெயர் சொல்லி கூப்பிடாதேனு சொன்னேன் இல்ல!

வேற எப்படி கூப்பிட?

அதையும் நான் தான் சொல்லிக்கொடுக்கனுமா?

இப்போ எதுக்கு இவ்வளவு கத்திறீங்க?

நான் பேசினா கத்தறது போல தான் இருக்கும்! அந்த திவ்யாவும் விஷாலும் அண்ணி அண்ணினு உருகும் போது இனிமையா இருந்ததா? உனக்கும் அர்ஜுனுக்கும் கல்யாணம் செய்ய வேற அவங்க வீட்டுல ஆசைப்பட்டாங்களாமே!'

அவன் குரலில் தெளிவாய் தெரிந்த பொறாமையை கண்டு குழலீயின் மனம் எக்சைட்டட் ஸ்டேட்டுக்கு சென்றுவிட்டது!! கண்களில் குறும்புடன் சிரித்தவாறே அவனை பார்த்திருந்தாள் பூங்குழலீ!

தொடரும்...

Episode # 15

Episode # 17

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.