(Reading time: 18 - 35 minutes)

னது கைப்பேசி எடுத்து பார்த்தாள்.

'ராகுல்!'என்று காண்பித்தது.

அவளது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.அவள் அவனை அழைக்கலாம் என்று எண்ணிய போது!அவனே மீண்டும் அழைத்தான்.தயக்கத்தோடு எடுத்தாள்.

"ஹலோ!"-அவளது குரலில் சற்றே தயக்கம் தெரிந்தது அவனுக்கு!!

"ராகுல் பேசுறேன்!"

"சொல்லுங்க!"

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!"

"சொல்லுங்க!"

"பார்க் வருவியா?"-அவள் நேரத்தை பார்த்தாள்.மணி ஏழு!

"இப்போவா?"

"ம்.."

"வரேன்!"-அவள் இணைப்பை துண்டித்தாள்.

"எதற்காகவாம்?இந்நேரத்தில் அழைக்கிறார்?"-அவன் மனம் படபடத்தது.

தீக்ஷா கிளம்பினாள்.

அரை மணி நேரத்தில் அவள் அவன் கூறிய இடத்திற்கு வந்துவிட்டாள்.

அவன் அவளுக்கு முன்பாகவே வந்திருந்தான்.அவன் பின்னால் நின்றவள்..

"ராகுல்!"-என்று இதமான குரலில் அழைத்தாள்.

அவன் திரும்பினான்.

"லேட்டாயிடுச்சா?"

"இல்லை...இப்போ தான் வந்தேன்!"

"என்ன இந்த நேரத்துல?"

"அது...வந்து...நான்...உன்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்தேன்!"

"என்ன?"

"அது...சதி!!"

"சொல்லுங்க!"

"நீ இந்த கல்யாணத்தை நிறுத்தணும் சதி!"-ஆடிப்போனாள் தீக்ஷா!!

"எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை சதி!"-அவள் கண்கள் தன்னிச்சையாக கலங்கின.

"என்னால என் அம்மாவை மீற முடியாது!அதனால தான்...உன்கிட்ட உதவி கேட்கிறேன்!"

"ப்ளீஸ்!"-அவன் யாசகம் கேட்பவனை போல அவளை வணங்கவும் அவள் துடித்துப் போனாள்.

பீறிட்டு வந்த கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டு,

சரி என தலையசைத்தாள்.

"தேங்க் யூ!எங்கே என்னை புரிந்துக்கொள்ளாம போயிடுவியோன்னு பயந்தேன்!"-அவன் முகம் இயல்பானது.

"இதுக்கு போய் ஏன் தயங்குனீங்க?நான் கண்டிப்பா செய்யுறேன்!"

"உனக்கு இதில் வருத்தமில்லையே!"

"இல்லை...நீங்க கவலைப்படாதீங்க!"

"தேங்க்ஸ்!"

"எ...எனக்கு...எனக்கு நேரமாயிடுச்சி!நான் கிளம்புறேன்!"-அவன் தலையசைத்தான்.அவனது சதி திரும்பி நடந்தாள்.அவனது வாழ்வைவிட்டு வெகுதூரமாய்!!!

வீட்டிற்கு கற்சிலையாய் வந்தாள் தீக்ஷா.

"தீக்ஷா!எங்கே போயிட்டு வர?நிச்சயம் ஆக போற பொண்ணு இப்படி கண்ட நேரத்துல வெளியே போகலாமா?"-சம்யுக்தா கோபமாக கேட்டாள்.

"நான் இனி எப்போ வேணாலும் வெளியே போகலாம் அண்ணி!ஏன்னா இந்த நிச்சயம் நடக்க போறதில்லை!"-சம்யுக்தா திகைத்தாள்.

"என்ன?"

"எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை!"அவள் திடுக்கிட்டாள்.

"என்னடி உளர்ற?"

"எனக்கு கல்யாணம் நடக்க போறதில்லை அண்ணி!"

"தீக்ஷா!"

"இதுக்கு மேல எதுவும் கேட்காதே!எனக்கு இதில் விருப்பமில்லை!ரவிக்கிட்ட சொல்லி கல்யாணத்தை உடனே நிறுத்து!"-தீக்ஷா வேறேதும் பேசாமல் அவள் அறைக்கு சென்று கதவை தாளிட்டு கொண்டாள்.

அவள் கண்களில் மது அணிவித்த வளையல் தென்பட்டது.

"இது என் அத்தையோடது!அவங்களுக்கு அப்பறம் எனக்கு வந்தது!இப்போ இதுல ஒரு வளையலை நான் உனக்கு தரேன்!இன்னொறு வளையலை ராகுல் உங்க கல்யாணத்துக்கு அப்பறம் அவனே உன் கையில் போடுவான்!"-அவள் கூறியது நினைவு வந்தது.

'இல்லை நான் இதற்கு தகுதி இல்லாதவள்!என்னால் அவர் இதயத்தில் என்றுமே நுழைய இயலாது!அவரது காதலை பெறும் தகுதியற்று போனேன்!'-வருத்தினாள் அவள்.எனக்கு இவளை பார்த்தால் கீதா தான் நினைவு வருகிறாள்!!அவள் ரகுவிற்காக அழுதாள்.இவள் ராகுலுக்காக அழுகிறாள்!அவள் தன்னவனுக்காக வாழ்வை தொலைத்தாள்.இவள் அவன் மைந்தனுக்காக வாழ்வை தொலைக்கிறாள்!!இவளுக்கும் கீதாவின் நிலை வந்துவிடுமா??தெரியவில்லை...

அன்றைய பொழுது கண்ணீரில் கரைந்தது அவளுக்கு...

றுநாள் காலை...

தீக்ஷா வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.அவள் முகம் புன்னகையை தியாகித்தது!!

அவளிடம் சம்யுக்தாவை தவிர ஒருவரும் பேசவில்லை!!அதன் காரணம் தெரிந்ததே!!

"கல்யாண பந்தம் உனக்கு விளையாட்டா போயிடுச்சா தீக்ஷா?"-கோபத்தோடு ரவி கேட்ட வினாவிற்கு

"ஆமா!எனக்கு விளையாட்டா தான் போச்சு!"-அவள் அளித்த பதிலால் இந்த பிரிவு!!

எல்லாம் இந்த ராகுலால்!!

"நான் கிளம்புறேன் அண்ணி!"-சம்யுக்தாவிடம் மட்டும் கூறிவிட்டு கிளம்பினாள்.அவள் செல்வதையே கவனித்த ரவியின் கண்கள் கசிந்தன.

அலுவலகத்திற்கு வந்தாள்.மாயா அவளை பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள்.

அவளிடம் எதுவும் பேசவில்லை!அவளுக்கு நிலைமை புரிந்தது.

அமைதியாக தன் அறைக்கு சென்று வேலைகளை தொடங்கினாள்.

இனி,பலருக்கு அவள் விரோதியாக தான் தோன்றுவாள் என்பது உறுதி!!!

கவனம் மொத்தத்தை வேறுபக்கம் மாற்ற,முழுமூச்சாய் பணியில் கவனம் வைக்க வேண்டியதாயிற்று!!!

திடீரென அவள் கைப்பேசி ஒலித்தது!!நம்மவர் தான்.

"என் கேபினுக்கு வா தீக்ஷா!"என்றான்.

தீக்ஷா ஒரு பெருமூச்சை விட்டு ஒரு கோப்பினை எடுத்து கொண்டு நடந்தாள்.

மனம் கனத்தது!!

கண்ணீர் தன்னிச்சையாய் சுரந்தது!!மனதில் காதலை அடக்கி கொண்டு,மனம் கவர்ந்தவனிடம் சதியாய் அன்றி வெறும் சகியாய் நடிப்பது எந்த பெண்ணிற்கும் நரக வேதனை தான்!!

கதவை தட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.