(Reading time: 18 - 35 minutes)

"ரலாம்!"குரல் வந்தது.

கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

மாயா அவளை பார்த்ததும் எழுந்தாள்.

"எங்கேடி கிளம்பிட்ட?"

"என் கேபினுக்கு!"

"இங்கே தான் இரு!"

"சிலரை பார்க்கவே எனக்கு இஷ்டமில்லைடா!எனக்கு உன் மனசு வராது!"-அவனுக்கு நிலைமை அப்போது தான் புரிந்தது!அவள் தீக்ஷாவை வெறுக்கிறாளா?

அவன் கோபமாக எதையோ பேச வந்தான்.

"ராகுல்...அந்த ஆர்டிகல் முடிந்தது!"-என்று அவனை தடுத்தாள் தீக்ஷா!அவன் கேள்வியாக அவளை பார்க்க,அவள் எதையும் கூறாதே என்று கண்களால் சைகை செய்தாள்!!

அவன் மனம் அவனை கொன்றது!!எனக்காக,இவள் பழியை ஏற்கிறாள்!!அவன் இமையசையாது அவளை பார்த்தான்.ராகுலின் கண்கள் கலங்கின.

மாயா வெறுப்போடு தனது லேப்டாப்பில் கவனம் செலுத்தினாள்.

தீக்ஷா கொண்டு வந்த கோப்பை டேபிள் மீது வைத்தாள்!

அப்போது அவளது கரத்தை வருடிய அந்த வளையல்,அவள் கண்ணில் பட்டது.கனத்த மனதோடு அதை பற்றியவள்,

"இது உங்கம்மா அன்னிக்கு கொடுத்தது!நான் அவங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டதா சொல்லுங்க ராகுல்!"-என்று அதை கழற்ற வந்தாள்.

"வளையலை கழற்றாதே தீக்ஷா!"-கோபத்தோடு கேட்டது மதுவின் குரல்.

மூவரும் திரும்பினர்.

கோபமாக மது நின்றிருந்தாள்.அவளது கோபமான பார்வை அங்கிருந்த யாரை தாக்கியது என்பது தெரியவில்லை!!

"மா!"என்று ராகுல் அவள் அருகே வர,மொத்த கோபத்தையும் சேர்த்து அவள் கன்னத்தில் அறைந்தாள்.தீக்ஷா திடுக்கிட்டாள்.

"மா!எதுக்கும்மா ராகுலை அடிக்கிறீங்க?"-மாயா கேட்டாள்.

"இவன் என்ன காரியம் பண்ணான் தெரியுமா?உன்னால அந்த பொண்ணு எல்லார்கிட்டையும் தலைகுனியணுமா?"-என்று தீக்ஷாவை சுட்டினாள்.

"என்னமா சொல்றீங்க?தீக்ஷா தான் ராகுலை வேணாம்னு சொன்னா!"-நண்பனுக்காக சிபாரிசு வந்தாள் மாயா.

"நீ அதை பார்த்தியா மாயா?"-அவள் கோபமாக கேட்டாள்.

"ஆ...ஆன்ட்டி!நான் தான் ராகுலை...பிடிக்கலைன்னு சொன்னேன்!"-அவள் விரும்பவில்லை..ராகுலை தலைகுனிவதை அவள் விரும்பவில்லை.

மது பெருமூச்சுவிட்டாள்.

"பார்த்தியா ராகுல்...உன் மேலே எவ்வளவு காதல் இருந்தா எல்லா பழியையும் இவ தன் மேல போட்டுப்பா!ரவிக்குமார் போன் பண்ணி விஷயத்தை சொல்லி தீக்ஷாக்கூட பேசவே விருப்பம் இல்லைன்னு வருத்தப்பட்டார்!ஒரு அப்பாவையே தன் பொண்ணுக்கு எதிரா திரும்ப வச்சிருக்க!"

"எப்போ நான் கையில வளையல் போடும் போது சந்தோஷப்பட்டவள்!மறுநாறே கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு சொன்னாளோ அப்போவே தெரிந்தது!அதற்கு காரணம் நீ தான்னு!"-ராகுலின் விழி நனைந்தது!!

"உன் அப்பாவை வெறுக்கிற?இப்போ நீ மட்டும் என்ன ஒரு பொண்ணோட உணர்ச்சியோட தான் விளையாடி இருக்க!"-அவன் ஆடிப்போனான்.ராகுலின் இதயம் செங்குருதியை வெளிவிட்டது.

"உன்னால எப்படி இவ தலைகுனிந்து நின்னாளோ அந்த பாவத்தை போக்குற வரைக்கும் என் கூட பேசாதே!!"-தீக்ஷாவின் மனம் செயலிழந்தது!தாய்க்கும் மகனுக்கும் பிரிவினை வந்ததன் காரணம் நீயே!என்றது மனச்சாட்சி!!

"மா!"

"அப்படி கூப்பிடாதே!என் பையன் மற்றவங்களுக்காக வாழுறவன்!ஆனா இன்னிக்கு அவன் தன் சுயநலத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழித்திருக்கிறான்!இன்னொருமுறை உன் தப்பை நியாயப்படுத்த அம்மான்னு கூப்பிட்ட,அது நான் செத்ததுக்கு சமம்!"-ராகுல் மனதளவில் இறந்தே போனான்.

தீக்ஷாவால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை.

மது அவளிடம்,

"என்னை மன்னிச்சிடும்மா!"-என்று கையெடுத்து வணங்கினாள்.தீக்ஷா அவள் கரத்தை பற்றி கொண்டு வேண்டாம் என தலை அசைத்தாள்.

"நீங்களும் கஷ்டப்படுத்தாதீங்க ஆன்ட்டி!"-அவள் பேசிக்கொண்டிருந்த போதே,ராகுல் அந்த இடத்தை தியாகம் செய்து கிளம்பினான்.

தீக்ஷாவிற்கு யாரை சமாதானம் செய்வது!யாரை விடுவது!என புரியவில்லை.இருதலைகொள்ளி எறும்பாய் தவித்தாள்.

பாய்ந்து ஓடும் குளிர்ச்சிமிகு,நதியை எவரேனும் கண்டதுண்டா?அழகான மாலை பொழுதில் நிலத்தோடு அது கொண்ட பந்தமானது மனதை அமைதிப்படுத்தும் சக்தியினை கொண்டது.ஆனால்,நிலத்தோடு ஒன்றி வாழ்ந்த ஜீவ நதியானது கோபம் கொண்டு பெருக்கெடுத்தால் அது அந்த மண்வளத்தையே அழிக்க போரிடும்!!இறைவனின் படைப்பின் ரகசியத்தை அறிந்தவர் ஒருவர் இல்லை!!எப்படி இருப்பர்!!அந்த கபட நாடக வேஷ தாரி மனித வாழ்வையே வினாக்களின் சங்கமத்தில் அல்லவா படைத்துள்ளான்!!!

மதுவால் நிச்சயம் நம்ப முடியவில்லை.

அவள் எவ்வளவு அன்பை தன் மகனின் மேல் வைத்திருக்கிறாள்??

"ஆன்ட்டி!ராகுல் தான் கல்யாணத்தை நிறுத்த சொன்னாருன்னு நீங்க யாரிடமும் சொல்ல கூடாது!சத்தியம் பண்ணுங்க!"-அவள் விரும்பி வாங்கிய வாக்கானது நிச்சயம் அவளுக்காக இல்லை.அவளின் உணர்ச்சிகளோடு விளையாட தான் இவனுக்கு எப்படி மனம் வந்தது???என் வளர்ப்பு தான் தவறாகி போனதா?தாய் மனம் அழுது ஒடுங்கியது.

அவள் வாயை திறவவில்லை.ராகுலிடம் ஒரு வார்த்தையும் அவள் பேசவில்லை.அவன் மனம் தோல்வியை முதன்முறையாய் தாயிடத்தில் தழுவியது.வேறு எதாவது தண்டனையாய் இருந்தாலும் தாங்கியிருக்கும் மனது!!தாயின் இந்த கடும் சாபத்தை தான் தாங்குமா??இல்லை...தாங்கவில்லை.உண்மையில் சதி தான் அவனை காதல் செய்தாளா?உண்மையில் அவள் உணர்ச்சிகளோடு தான் விளையாடி போனேனா??தெரியவில்லை...

டுத்து என்ன செய்வது என்பது புரியாமல் போனது...திக்கெட்டும் சூன்யமாய் போக கண்கள் மூடி சாய்ந்திருந்தான் ராகுல்.

"ராகுல்!"-ஆதித்யாவின் குரல் சிந்தனையை கலைக்க கண்கள் திறந்தான் ராகுல்!!

"அப்பா!"-சரண் அமைதியாக வந்து அவனருகே அமர்ந்தான்.கனிவாக அவனது கரத்தை தன் கரத்துள் அடக்கியவன்..

"உனக்கு என்ன கண்ணா பிரச்சனை?"-என்று வினவினார்.சரணின் அந்த கேள்வி மூடியிருந்த அந்த இரும்புக்கோட்டையை தகர்க்க தான் செய்தது.

"நான் தான்பா கல்யாணத்தை நிறுத்த சொன்னேன்!"

"தெரியும்!"-ராகுல் அதிர்ச்சியாக பார்த்தான்.

"அம்மூ சொல்லலை!தீக்ஷாவும் சொல்லலை!"

"பின்ன...எப்படி?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.