(Reading time: 18 - 35 minutes)

"நான் உன் அப்பாடா!சின்ன வயசுல நீ அப்பான்னு ரகு பின்னாடி போனதைவிட,ஆதின்னு என் கூட இருந்தது தான் அதிகம்!"

"உனக்கு ஏன் தீக்ஷாவை பிடிக்கலை?"

"எனக்கு அவளை பிடிக்கும்பா..."-ராகுலின் இந்த பதிலில் திகைத்து தான் போனான் சரண்.

"நான் என் அம்மாவை அவ மூலமா பார்த்தேன்!ஒருநாள் அவ ஆபிஸ் வரலைன்னா கூட எனக்கு வேலையே ஓடாது!எனக்கு அவளை பிடிக்கும்பா!"

"அப்பறம்...ஏன்டா?"

"எனக்கு அவளை பார்க்கும் போதெல்லாம்!அப்பா அம்மாக்கு பண்ண துரோகம் தான் அடிக்கடி ஞாபகம் வருது!"-அவனையே அறியாமல் ரகுவை அப்பா என்று அவன் அழைத்ததை சரண் கவனிக்காமல் இல்லை.அப்படி என்றால் தந்தையும் மகனும் சேர்வதற்கு வாய்ப்பொன்று நிச்சயம் உண்டு!!

"தீக்ஷா கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் அம்மா மாதிரியே இருக்கா!எனக்கு நினைு தெரிந்து நான் அவங்களை பார்த்தது இல்லை.ஆனா,அவளை பார்க்கும் போது அம்மாவோட குழந்தைத்தன முகம் தான் உங்க நண்பன் மேல இன்னும் கோபத்தை வளர வைக்குது!"

"நீ தீக்ஷாவை காதலிக்கிறீயா?"

"இல்லை..ஆனா,அவ கூடவே இருக்க ஆசைப்பட்டது உண்மை!"

"இப்போவும் ஒண்ணும் கெட்டு போகலை ராகுல்!நமக்கு இன்னும் அவகாசம் இருக்கு!"

"வேணம்பா!!நான் இப்படியே வாழ்ந்துட்டு போயிடுறேன்!"-தன்னுள் போட்ட கட்டுப்பாட்டை அவன் விலக்கவில்லை.

சரணிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளியானது.

"சரி..உனக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்!ஒண்ணை மறந்துடாதே!!கண் முன்னாடி ஒரு தப்பு நடக்குதுன்னா,அதை கட்டுப்படுத்த நம்ம மனசு செய்திருக்கும் சங்கல்பத்தை உடைக்கறதுல்ல தப்பில்லை!"-சரணின் அறிவுரை புதிர் போடும் படியாய் அமைந்தது.இருந்தாலும் அதற்கு செவி சாய்த்தான் ராகுல்.

அவள் உணவை ஏற்கவில்லை.உறக்கத்தை நாடவில்லை.தன்னையே தன் அறையில் சிறைப்படுத்தி கொண்டாள்.தனது ஆசாபாசங்களை பகிர சில வருடங்கள் முன் தனது அறைக்கு கொண்டு வந்த ஸ்ரீ நாராயணனின் சிலை ஒன்று அவளிடத்தில் இருந்தது.தீக்ஷா லட்சுமிபதியின் சரணங்களை ஸ்பரிசித்தப்படி அவர் பாதங்களில் தன் சிரசை வைத்து கண்கள் மூடி அவரையே தஞ்சம் என புகுந்தாள்.மனம் இலகுவான உணர்வு.

சிறு வயதில்,நினைவு தெரியாத அவளது இளம் பருவத்தில்,

"நீ யாரை மணக்க விரும்புகிறாய்?"என்று கேட்டவர் பலருண்டு!!அறியா பால்ய பருவத்தில்,

"நான் நாராயணரையே மணம் புரிவேன்!"-என்று அவள் பிஞ்சு மனம் கூறிய பொழுதுகளும் உண்டு!!!

இப்போது எண்ணினால் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது!!

'நாராயணரை மணக்க நான் என்ன லட்சுமி தேவியா?அவருக்கு ஏற்றவள் எங்கோ இருப்பாள்!அதனால் தான்,காலம் என் காதலை தோல்வியுற செய்தது!"-தன் மனம் கவர்ந்தவனையே நாயகனாய் ஏற்றது பெண் மனம்.

அவள் இதுவரையில் இருளில் வாசம் செய்ததில்லை.அன்று தன் அறையை இருளுக்கு இரையாக்கி இருந்தாள்.

"இனி காலம் உள்ளவரை என் காதலை மூச்சாக்கி வாழ்வேன்!"-என்று சபதம் ஏற்றது அவள் மனம்.

"காதலித்தவனை நினைத்து ஏக்கமோ?"-ஏதோ ஒரு கேலியான குரல் கேட்க,நிமிர்ந்தாள்.இருட்டில் வந்திருப்பவர் முகம் தெரியவில்லை.

"யாரு?"-அந்த அறையின் விளக்கை எரியவிட்டான் அவன்.

அவனை கண்டவளின் முகம் வெளிறியது.

"ஸ்ரீ..தர்??"-அச்சத்தில் குழறியது அவள் குரல்.

"யா...பேபி!இட்ஸ் ஸ்ரீதர் வைத்தியநாத்!அண்ட் ஐ அம் பேக்!"-அவன் உரத்த குரலில் கூறினான்.

அவவள் அறையில் நுழைந்தவன்,கதவை சாத்தி தாழிட்டான்.தீக்ஷா பயத்தோடு எழுந்தாள்.

கண்களில் சினம் மிக அவளது கேசத்தை பற்றியவன்...

"திரும்பி வந்துட்டேன்டி!அன்னிக்கு அத்தனை பேர் முன்னாடி என்னை அவமானப்படுத்தின நினைவிருக்கா?அதுக்கு பழி வாங்க வந்துட்டேன்!"

"என்னை விட்டுவிடு ப்ளீஸ்!"

"ஆ...இனி உன்னால நிம்மதியா வாழ முடியாது!சாகணும்னு நினைத்தால் மரணமும் வராது!இனி...ஞாபகம் வைத்துக்கொள்!உனக்கு நான்தான் கதி!"

"உயிரோட இருக்கும் போதே உனக்கு நரகத்தை காட்டுறேன்!"தீக்ஷாவின் கண்கள் ஈரமாகின.அவன் அவளது கண்ணீரை ஒற்றை விரலால் தள்ளினான்.

"ஐயோ....பாவம்!!கண்ணீரை சேர்த்து வைத்துக்கொள்!அடிக்கடி தேவைப்படும்!"-என்று அவளை தள்ளினாள்.தீக்ஷா சரியாய் இறைவன் லட்சுமி நாராயணனின் பாதத்தில் விழுந்தாள்.

"ஓ...ஸோ ஸ்வீட்!உன் ட்ரீம் பாய் தானே இது!இனி,அவரே நினைத்தாலும் உன்னை காப்பாற்ற முடியாது!நல்லா சொல்லி அழு!என்னை வந்து கூட்டிட்டு போயிடுன்னு அழு!"-அவன் பலமாக சிரித்தான்.அவன் கூறியது போலவே அவள் அழ தான் செய்தாள்.

பகை கொண்ட மனம் பெண்ணின் கண்ணீரில் நிம்மதி அடைந்தது.ஸ்ரீதர் வெளியே சென்றான்.அவள் மனம் பலவீனமானது.

"ஏன் நாராயணா?என்ன காரணம்?எனக்கு  ஏன் இப்படி எல்லாம் நடக்குது?நான் என்ன தப்பு பண்ணேன்?"-அவளது கேள்விகளுக்கு அவர் புன்னகையையே மௌனமாக தந்தார்.

தீக்ஷா அவர் பாதங்களில் மீண்டும் தன் சிரசை வைத்துக்கொண்டாள்.

"தீக்ஷாவை என் மகனுக்கு கொடு ரவி!"-ஸ்ரீதரின் தாய் ஆர்த்தியின் வாக்கியம் ரவிக்குமாரை திடுக்கிட வைத்தது!!

"என்னக்கா சொல்ற?"

"ஸ்ரீயும்,தீக்ஷாவும் நல்லா தெரிந்தவங்க தானே!யாருக்கோ கொடுக்கறதுக்கு ஸ்ரீக்கு தரலாமே!"

"இல்லைக்கா...தீக்ஷாக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை!"

"பொண்ணுங்களுக்கு காலாகாலத்துல கல்யாணம் பண்ணிடணும்!பேரன் பேத்தி எடுக்க விருப்பமில்லையா உனக்கு?"

"அக்கா..."

"தீக்ஷாக்கிட்டேயே கேளு...விருப்பம் இருந்தா கல்யாணம் பண்ணிக்கட்டும்!இல்லைன்னா...வேணாம்!"-அவர் மௌனமாய் இருந்தார்.

"விடியட்டும் நானே என் செல்லத்துக்கிட்டே கேட்கிறேன்!"-ஆர்த்தியின் கூற்று ரவியை கலங்க வைத்தது.அவருக்கு இதில் விருப்பமில்லை.அவர் மனம் ராகுலை தான் தன் மகளுக்கு துணையாய் வருவித்தது.

"னி உன் தப்பை நியாயப்படுத்த என்னை  அம்மான்னு கூப்பிட்டா அது நான் செத்ததுக்கு சமம்!"-ராகுலின் மனம் இதையே அசை போட்டது.

இனிமையான குழலோசையாய் இருந்த வாழ்வு தடுமாறி போனதன் காரணம் என்ன?சிந்தித்து அவன் இதயம்....

"நீயே அதற்கு காரணம்!"பதில் கூறியது ஆழ்மனம்.

"நானா?"

"ஆம்...உண்மையில் நான் சதியை மனதார விரும்பினேன்!"ஆழ்மனதின் உண்மைகள் அமைதியான சூழலில் வெளி வந்தன.

"அவள் என்னோட இருக்க வேண்டினேன்!ஆனால்,நீ...அவளை எனக்கு தூரமாக்கினாய்!"-புத்திக்கும் மனதிற்கும் இடையே போர் மூண்டது.

"இன்று உன்னால் தான் என்னவள் என்னை நீங்கி சென்றாள்.எதற்காகடா இப்படி ஓர் சங்கல்பம் ஏற்றாய்?உன் சபதத்தை நிறைவேற்ற ஒரு பெண்ணின் உணர்வோடு விளையாடி போனாயே!"-அவன் மனம் பொறுமிய வேளையில் அவன் கண்ணில் பட்டாள் ராதா.மீண்டும் அதே சிலை!!

அவள் தேடிவந்த ஆறுதலை சக்ரதாரி அளித்தார்.சதி தேடிய ஆறுதலை அளிக்காது,வேதனைகளை அல்லவா அவளிடம் தந்தாய்!மீண்டும் கூறியது இருதயம்.

பல போராடடங்களை தாங்கிய மனது இதில் தோற்றுப் போனது.ஏன்??இது மனதோடு கூடிய போராட்டம்.அறிவு இங்கு செயலிழந்து போவது கட்டாயம்!!!

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் அவன்.

"சிறிது காலம் எங்காவது வெளியூர் சென்று தங்கலாமா??"-அறிவு சிந்தித்த வேளையில் மனம் எதற்காகவோ தடுத்தது.

"என்ன மனம் இது?எதற்கெடுத்தாலும் தடங்கல்...."வெறுப்படைந்தான் அவன்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்தப்படி மீண்டும் சிந்தித்தான்.அப்படியே உறங்கியும் போனான்.

வாழ்வில் சில நேரங்களில் இதுபோன்ற இக்கட்டான நிலை நம்மில் பலரை ஆட்கொள்ளும்.திக்கற்ற நிலையில் அது வாழ்வாதாரத்தை அழிக்கவல்லது.அதுபோன்ற சமயங்களில் தயவுசெய்து மௌனம் சாதியுங்கள்.எதையும் சிந்திக்க வேண்டாம்.மனமென்பது ஆறறிவுகளில் ஒன்று மட்டுமல்ல.அது மாபெரும் சக்தி!எந்த நிலையையும் அதனால் சமாளிக்க இயலும்.யாருக்கும் அதனால் பாதுகாப்பளிக்க இயலும்!!மனதின் உறுதி தடைப்பட்டால் அது மனிதன் ஏற்றிருக்கும் சங்கல்பத்தை உடைத்தெறியும் என்பதை மறவ வேண்டாம்!!!

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.