(Reading time: 19 - 38 minutes)

" சித்து .... டேய் சித்து " என்று எப்போதும் போல கணவனை உரக்க அழைத்தாள் ஹரிணி .. சாஹித்யாவும் அருளும் வெவ்வேறு புறம் அமர்ந்திருக்க , அவர்களை சமரசம் செய்ய தெரியாமல் சந்தோஷும் போனில் கேம் விளையாட , அப்போதுதான் சோபாவில் கண் அயரலாம் என்று சாய்ந்த சித்தார்த் , தனது தர்மபத்தினி கொடுத்த மரியாதையில் துள்ளி எழுந்தான்.. அவள் அழைத்த வேகத்திலும் , சித்தார்த் துள்ளி எழுந்த வேகத்தையும் பார்த்த மூவரும் சட்டென சிரித்து விட்டனர் .. சந்தோஷோ

" சூப்பர் மச்சான் , எள்ளுன்னா எண்ணையா நிற்பிங்க போல " என்று கமெண்ட் அடித்தான் ..

" போடா " என்று அருகில் இருந்த குட்டி தலையணையை அவன் மீது வீசிவிட்டு

" வரேன் ஹனி " என்று ஹரிணியை தேடி ஓடினான் அவன் . மூச்சிரைக்க ஓடி வந்த கணவனை மின்சார பார்வையால் ரசித்து பார்த்தாள் ஹரிணி .. அவளது பார்வையிலேயே அவன் குரலில் கிறக்கம் தோன்ற

" என்னடி " என்று குழைந்தான் சித்தார்த் ..

" டேய் .. கொஞ்சம் ரசிச்சு பார்த்தா போதுமே .. இதான் சாக்குன்னு ஜவ்வுமிட்டாய் மாதிரி ஒட்டிப்பியே " என்று சிரித்துக்கொண்டே திரும்ப , அவளை பின்னால் இருந்து இறுக அணைத்தவன் , கன்னத்தோடு கன்னம் இழைத்தான் ..

" நீ என்ன ரசனையாவா பார்த்த?"

" பின்ன ?"

" திங்குற மாதிரி பார்த்த டீ ஹனிகுட்டி " என்றான் சித்தார்த் உல்லாசமாய் ..

" சித்து குட்டி , உன் தம்பி தங்கச்சி எல்லாரையும் வாசலில் வெச்சு கிட்டு இங்க ரொமான்ஸ் பண்ணுறியா ? தப்பில்லையா ?" என்றாள் குறும்பாய் ..

" இப்படி ஜாங்கிரி மாதிரி இருக்கும் பொண்டாட்டியோடு ஜவ்வு மிட்டாய் மாதிரி ஒட்டலனா தான் உலகம் என்னை தப்பா பேசுமடி " என்றவன் அவளை தட்டாமலை தூக்கி சுற்றினான் .. அவனுடன் இணைந்தே சிரித்தவள் , வழக்கம் போல அவனது அடர்ந்த கேசத்தை கலைத்து விட்டு

" அழகன் டா நீ " என்று சிலாகித்தாள் .. பின்பு முகத்தை தீவிரமாய் வைத்து கொண்டு ,

" நாளைக்கு என்ன நாள் தெரியுமா ?" என்றாள் .. அவனுக்கு ஞாபகம் இருந்ததுதான் .. இருப்பினும் வேண்டுமென்றே

" நமக்கு கல்யாண நாளா டி பட்டு ? "என்று கொஞ்சினான் ..

" டேய் சித்தார்த் விளையாடாதே .. எனக்கு கேட்ட கோபம் வந்திடும் " என்றவளை மீண்டும் அணைத்தபடி ,

" எம்மா ..அபிநய சுந்தரி டீ .. ஒரு நிமிஷத்துல எவ்வளவு ரியாக்ஷன் கொடுக்குற நீ ? கொஞ்சம் கோபம், கொஞ்சம் சினுங்கல் நிறைய காதல் .. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் மிஸ்ஸிங் "

" என்ன ?"

" வெட்கம் .. நீ வெட்கபட்டு ரொம்ப நாள் ஆகுது ஹனிகுட்டி " என்று அவன் கிசுகிசுக்கவும் அவன் மண்டையிலேயே இரண்டடி வைத்தாள் ..

" இப்போ ரொம்ப முக்கியம் டா அது "

" ஹே ஆமால , நமக்கு அதுவா முக்கியம் " என்று அவளை மறுபடி நெருங்கவும்

" இப்போ என் பேச்சை நீ கேட்க போறியா இல்லையா ?" என்று குரலை உயர்த்தினாள் ஹரிணி ...

" சரி சரி சொல்லு " என்றான் அவனும் சோகமாய் ..

" நாளைக்கு விநாயகர் சதுர்த்தி .. உனக்கு தான் தெரியும்ல , எனக்கு விநாயகர்ன்னா எவ்வளவு இஸ்டம்ன்னு "

" எனக்கு தெரியாமல் போகுமா டி பட்டு , ஆல்ரெடி நாளைக்கு பூஜைக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டேனே " என்று பெரிதாய் அவன் சிரிக்கவும் திருதிருவென முழித்தாள் ஹரிணி ..

" என்னடா ?"

" போ சித்து , இந்த குரங்கும் கழுதையும் மூஞ்சிய திருப்பிகிட்டு உட்கார்ந்து இருக்குறது நல்லாவே இல்லை .. சோ விநாயகர் சதுர்த்திக்காக திங்க்ஸ் வாங்கனும்னு சொல்லி , சந்தோஷை மட்டும் கூட்டிகிட்டு வெளில போலாம்னு நினைச்சேன் .. நீ என்னன்னா , நான் கோடு போடுறது முன்னாடியே ரோட்டை போட்டுட்டியே " என்றாள் சோகமாய் ..

" அவ்வளவு தானே ? நமக்கு தான் பொய் சொல்றது எல்லாம் பொங்கல் சாப்டுறது மாதிரி ஆச்சே ? நீ ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா .. நான் சந்தோஷை கிளப்புறேன் .. "

" சமத்து சித்து " என்று அவள் கன்னத்தை கிள்ள , அவளது குழி விழும் கன்னத்தில் முத்தம் வைத்தான் சித்தார்த் ..

" சந்தோஷ் , சாஹித்யா எவ்வளவு கோபம்னாலும் அதை சாப்பாடு மேல காட்ட கூடாது .. டைனிங் டேபளில் சாப்பாடு இருக்கு .. திரும்பி நாங்க வரும்போது எல்லாம் காலியா இருக்கணும்.. இல்லை.ன்னு வெச்சிக்க ?" என்று ஹரிணி மிரட்டும்படி ஏதோ சொல்ல வர சித்தார்த் இடைபுகுந்து

" சாப்பாடு காலி ஆகலை , உங்க அண்ணி காளி ஆகிடுவா " என்றான் .. இந்த இடத்தில் இப்படி ஒரு பஞ்ச் தேவையா ? என்று பார்வையாலேயே ஹரிணி முறைக்க ..அந்த அனல் கக்கும் பார்வையை சித்தார்த் காதல் பார்வையாய் மாற்ற முயல , சந்தோஷ் தான்

" அஹெம் அஹெம் " என்று தொண்டையை செருமி கொண்டான் ..அவனை முறைத்து கொண்டே இருவரும் முன்னேற , சந்தோஷ் " எல்லாம் நேரம் டா" என்று மனதிற்குள் சிரித்து கொண்டே அவர்களுடன் சென்று விட்டான் ..

வர்களின் கார் கிளம்பும் வரை அமைதியாய் இருந்தாள் சாஹித்யா .. அவர்கள் சென்றதுமே அருளை நேரடியாய் பார்த்தாள்.. அவன் முகத்தில் மருந்திற்கும் புன்னகை இல்லை .. இடது பக்கமாய் அவன் முகத்தை திருப்பி கொள்ள , அவளும் இடது பக்கம் திரும்பினாள் .. அவன் கன்னத்தில் கை வைத்து கொள்ள , அவளும் கன்னத்தில் கை வைத்தாள்.. அவன் " ப்ச்ச்ச்" என்று சலித்து கொள்ள , அவளும் அதையே செய்தாள் .. அவன் மேஜையில் இருந்த நீரை எடுத்து குடிக்க , அவளும் அதையே பின்பற்றி சிரித்தாள் .. சட்டென அருள்மொழிவர்மன் எழுந்து கொள்ளவும் , அவன் கைகளை பற்றினாள் சாஹித்யா ..

" கைய விடு "

" மாட்டேன் "

" விடுன்னு சொல்றேன் ல "

" முடியாது அருள் "

" என்ன டீ உன் பிரச்சனை ?" என்று அவன் அவளது முகம் பார்க்கவும் ,

" என்னடா , சாரி கேட்கலாம்னு பார்த்தா , ரொம்பதான் ஷோ காட்டுற ? ஒன்னும் வேணாம் போ " என்று திரும்பி நடந்தாள் சாஹித்யா .. ஓர கண்ணால் அவன் வருகிறானா என்று பார்க்க , அவனும் அப்படியே நின்று கொண்டிருந்தான் ..

" குரங்கு குரங்கு ... நல்லா 50 , 60 அடி உயரம் உள்ள மலை மேல உட்கார்ந்து இருக்கான் போல .. இறங்கியே வர மாட்டுறானே " என்று முணுமுணுத்தவள் , வேண்டுமென்றே சோபாவில் இடித்து கொண்டு

" அம்மா ... " என்று அலறினாள் ..

அடுத்த நொடி அவள் முன் வந்து நின்றான் அருள் ..

" என்ன டீ ? என்ன ஆச்சு ? பார்த்து வர மாட்டியா ? கண்ணா தெரியல " என்றவனை பார்த்து கண் சிமிட்டினாள் சாஹித்யா .. அவள் பொய் உரைத்திருக்கிறாள் என்று தெரிந்து அவன்

மீண்டும் கோபம் ஆக போக ,

" டேய் போதும் டா போதும் டா.. எவ்வளவு நேரம் தான் என்னை கெஞ்ச வைப்ப நீ ? என்னை பார்க்க கஷ்டமா இல்லையா அருள் ? உன்கிட்ட பேசணும் டா.. ப்ளீஸ் கொஞ்சம் மலை இறங்கி வாயேன் " என்று கெஞ்சினாள் .. அவளது முகத்தை கூர்ந்து பார்த்தான் அருள் .. நிஜமாகவே என்னதான் இருக்கிறதோ அவள் முகத்தில் , அதுவரை பிடித்திருந்த கோபமெல்லாம் மறைந்துவிட்டு இருந்தது .. லேசாய் புன்னகைக்கவும் செய்தான் அவன் ..அவள் தோளில் கை போட்டு கொண்டே சோபாவில் அமர போக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.