(Reading time: 19 - 38 minutes)

" சிக்கிறது டா " என்றாள் .. அவனும் சாப்பிடவில்லை என்று அவளுக்கு தெரியும் ..அதனால்தான் பசிக்கிறது என்று கூறவும் இருவரும் சேர்ந்தே உணவு உண்ண சென்றனர் ..

" ஒரு ப்ளேட் போதும் .. எனக்கு நீ ஊட்டி விடேன் " என்று செல்லம் கொஞ்ச

" அய்யே ,போடி ..எனக்கு பசிக்கிது " என்றபடி இருவருக்குமே உணவை பரிமாறினான் அருள் ..

" அதான் இவ்ளோ பசி இருக்கு தானே ? அப்பறம் ஏன் டா உனக்கு இவ்வளவு கோவம் ?" என்று கேட்டாள் அவள் சாப்பிட்டு கொண்டே ..

" நான் என்றாவது , தேவை இல்லாமல் இவ்வளவு கோபபட்டு நீ பார்த்து இருக்கியா சத்யா ?" என்றவன் கேட்கவும் , இடதும் வலதும் தலை ஆட்டினாள் அவள் ..

" தெரியுது இல்லையா ? அப்போ ஏன் எனக்கு இவ்வளவு கோபம் வந்திருக்கும்ன்னு யோசிச்சு பார் " என்றான் .. உடனே அவள்

" நான் என்றாவது , நீ வற்புறுத்தியும் உன் பேச்சை கேட்காமல் இருந்து பார்த்து இருக்கியா அருள் ? என்று கேட்டு அவனையும் வலது இடது என தலையாட்ட வைத்தாள் ..

" தெரியுது இல்லையா ? அப்போ ஏன் நான் வேணாம்னு சொன்னேன்னு நீயும் யோசிச்சு பார் " என்று பதிலடி தந்தாள் ..

" வாயாடி ..வாயாடி .. " என்று அவன் சிரிக்க அவனுடன் இணைந்து சிரித்தாள் சத்யா .. சில நிமிடங்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டே சாப்பிட்டு முடித்தனர் ..

" அருள் வா மாடி ஊஞ்சலில் கொஞ்ச நேரம் ஆடலாம் " என்று சத்யா அழைக்கவும் , அவளுக்கு முன்னதாகவே இரண்டிரண்டு அடிகளாய் எட்டு வைத்து ஓடினான் அவன் .. " டேய் கேடி , நில்லு " என்று அவனை துரத்தி கொண்டு படியேறி இருவரும் ஒரே நேரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து ஹை 5 கொடுத்து கொண்டனர் ..

" அருள் "

" சத்யா "

" வானதி விஷயத்துல நீ என்ன முடிவு எடுத்து இருக்க ?"

" புரியல " என்று கேள்வியாய் பார்த்தவை முறைத்தாள் சாஹித்யா ..

" டேய் குரங்கு , அவ உன்னை லவ் பண்ணுறா ? அது உனக்கு தெரியுமா ?"

" அதென்ன அவ மட்டும் ? நானும் தாண்டி அவளை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் " என்றான் அவன் காதலாய்

" இதுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்லை .. லவ் பண்ணுற சரி .. அதுக்காக நீ அவளுக்குன்னு என்ன செஞ்ச ?"

" எதையும் கொடுத்தா தான் காதலா சத்யா ? அப்படின்னா சந்தோஷ்க்கு நீ என்னத்தை கொடுத்த ? "

" நான் எதையும் கொடுக்கல .. அதே நேரம் நான் அவனுக்கு வலியும் கொடுக்கல "

" அப்போ நான் வானதிக்கு வலியை தரேன்னு சொல்லுறியா "

" உன்கிட்ட நான் அதிகம் பொய் பேசினது இல்லை .. உன் கிட்ட எனக்கு எந்த பயமும் இல்லை .. இதை நான் ஏன் சொல்றேன்னா , நான் சொல்ல போகிற காரணத்தை நீ முழுசா நம்பனும் .. முதல்ல , என் முடிவுக்கும் சந்தோஷ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை .. அதை நீ நம்பனும் .. நாங்க காதலிக்க ஆரம்பிச்சு , இப்போ வரை நான் முடிவெடுத்த பிறகுதான் அவன்கிட்ட சொல்லி இருக்கேனே தவிர , அவனை முடிவெடுக்க விட்டது இல்லை .. " என்றாள் சத்யா தெளிவாய் ..

" ம்ம்ம்ம் சொல்லு " என்று அவளை ஊக்கினான் அவன் ..

" வானதியை விட்டுட்டு இங்க படிக்கணும்னு உனக்கு எப்படி அருள் மனசு வந்தது ? சந்தோஷ்க்கு நான் இல்லைன்னாலும் அவன் தனியாள் இல்லை .. சுபாஷ் மாமா , சைந்து அக்கா அத்தை மாமான்னு எல்லாரும் இருக்காங்க .. ரெண்டு வருஷம் என்பது சந்தோஷுக்கு பெருசு இல்லை .. ஆனா வானதியை நினைச்சு பார்த்தியா ? அவளுக்கு எல்லாமே நீதான்னு உனக்கு தோணலையா டா ? "

" எனக்கு தெரியும் டீ .. அவ என் உயிர் .. அப்படி அவளை தனியா விட்ருவேன் நினைச்சியா ? வானதி என்னை புரிஞ்சுகிட்ட அளவு கூடவா சது உனக்கு புரியல ?"

" சும்மா தாம் தூம்னு குதிக்காத அருள் .. அவ உன்னை புரிஞ்சிகறது இருக்கட்டும் .. முதலில் நீ அவளை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு .. வானதி , பொறுப்பான பொண்ணு ..அதுவும் உன் விஷயத்துல, நீ என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு பின்னாடி நிற்கிற ஆள் .. அவ உன்னை எந்த சூழ்நிலையிலும் புரிஞ்சுப்பா .. ஆனா அதுக்காக நீ புரியாத புதிராய் இருக்கணும்னு அவசியம் இல்லை .. !

அவளுக்கு தெளிவான சிந்தனையும் , எதையும் சுயமாய் சமாளிக்க முடியுற திறனும் இருந்தா , அது அவளுடைய தனி திறமை அல்லது குணம் .. அதுக்காக நீ உன்னை மாத்திக்கணும் , அல்லது அதை பயன்படுத்திக்கனும்னு அவசியம் இல்லை .. ஒரு சராசாரு பொண்ணு காதலில் எதிர்பார்குற , ஊடல் கூடல் , முக்கியாம நேரமும் அரவணைப்பும் நீ அவளுக்கு கொடுத்துதானே ஆகணும் ? ஒருவேளை சந்தோஷ் என்னை தனியா விட்டுட்டு எங்கயாச்சும் போயிட்டா நானும் சோகமாய் இருந்தா , உன்னால பொறுத்துக்க முடியுமா ? "

"... "

" படிப்பு தானே அருள் ? அது எங்க இருந்தாலும் படிக்கலாம் .. ஆனா அவ மனசில் தனிமை உணர்வு வந்திச்சுன்னா , உன்னால அதை போக்கிட முடியுமா ? வானதி அவளது வீட்டில் இருந்திருந்தா , நான் உனக்கிதை சொல்ல மாட்டேன் .. அப்பறம் இன்னொரு விஷயம் " என்றவள் அன்னைக்கு போனில் நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள் ..

" மொத்ததுல , நீ ஒரு நல்ல நண்பனாய் இருக்கணும் என்ற கடமை உணர்வில் , நல்ல காதலனாய் இருக்க மாட்டுற ! எவ்வளவு நாள் தான் உன் நண்பன் என்ற முகத்தையே உலகம் பார்க்குறது ? எங்களுக்காக கொஞ்சம் ரொமாண்டிக் ஹீரோவா மாறுங்க சார் " என்றாள் சாஹித்யா . பெரிதாய் புன்னகைத்தான் அருள் .. அந்த புன்னகையின் பின்னால் நிறைய சிந்தனை இருந்தது .. தனக்காக யோசிக்கும் சத்யா , வானதியின் காதல் மனம் , அவனது சிறு செயலின் பின்னாடி இருக்கும் விளைவுகள் , கூடவே சந்தோஷ் ! சந்தோஷ் இந்த பேச்சில் வரவே இல்லை என்ற பட்ச்சத்தில் , அவன் மிக உறுதியாய் சாஹித்யாவின் விஷயத்தில் ஏன் அப்படி கூறினான் ? தேவை இல்லாமல் அதிகம் சிந்திக்கிறோமோ ? என்றும் கூட யோசித்தான் .. எப்படியோசில நிமிடங்கள் பிரிந்த நண்பர்கள் இணைந்த விட்டனர் .. அடுத்த அத்யாயத்தில் எல்லாரும் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம் ப்ரண்ட்ஸ் ...

தவம் தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.