(Reading time: 30 - 59 minutes)

ஷ்யூர்…”

“நைட் அம்மாவ உன் கூட வந்து இருக்க சொல்லட்டுமா?”

“இல்ல வேண்டாம்….”

“உன் ஃப்ரெண்ட்ஸ் யாரையவது பார்க்கனுமா உனக்கு…? அரணை ஹெல்ப் பண்ண சொல்றேன்….”

இவளை பீச்சுக்கு கூட்டி வரும் படி ஜோனத் அரணிடம் சொன்னது ஞாபகம் வருகிறது. அதற்காகத்தானே அரண் இவளை கூட்டி வந்தான். எந்த சந்தேகமும் இன்றி.

“உங்களுக்கு அரண் அண்ணா மாதிரி ஃப்ரெண்ட்ஸ்லாம் எனக்கு கிடையாது”

‘கன்ஃபார்மா இவ அரண் விஷயத்துல எதையோ சொதப்பிருக்கா’ அவன் மனதுக்குப் புரிகிறது.

“சரி….எதையும் போட்டு ரொம்ப குழப்பிக்காத நாளைக்குப் பேசுறேன்”

“தேங்க்ஸ்”

“டேக் கேர்…பை.”

“ யூ டூ…பை”

ரண் மீண்டுமாய் உள்ளே வந்து காரை கிளப்பும் வரையும் மட்டுமல்ல அடுத்து அவன் அதை தன் வீட்டில் சென்று நிறுத்தும் வரையுமே கற்சிலை போலத்தான் இருந்தாள் அவள் அசைவற்று.  அடுத்து என்ன என நிச்சயமாய் அவளுக்குப் புரியவில்லை.

“நீ போய் ட்ரெஸ் மாத்திக்கோ லியா….நான் உன்னைப் பார்க்க டாக்டர்க்கு போன் செய்றேன்….வருவாங்க….” அடுத்த நடவடிக்கையாக அரண் சொல்ல

அசந்து போனாள் சங்கல்யா. இவள் என்ன செய்துவிட்டு வந்திருக்கிறாள்? இவன் என்ன பேசிக் கொண்டிருக்கிறான் ?  அந்த மிருகங்கள் தள்ளி இவள் கீழே விழுந்த போது கை கல்லில் இடிபட்டு  சிறு காயம். அதை ஒரு முறைப் பார்த்துக் கொண்டாள். ஒருவேளை நான் அந்த டைரிய எதுக்கு எடுத்துட்டுப் போனேன்னு இவனுக்குப் புரியலையோ?

“அரண் சார்”

அவன் அவளை நெற்றி சுருக்கி தீவிரமாய்ப் பார்த்தான்.

அந்த டைரிய பீபுள் சேனலுக்கு கொடுக்க கொண்டு போனேன்…”

“நீ இது மாதிரி எதுக்கோ தான் டைரிய எடுத்துட்டுப் போயிருப்பன்னு எனக்கும் தெரியும்…முதல்ல போய் ட்ரெஃஸ் மாத்திட்டு வா டாக்டரைப் பார்க்கலாம்.”

நம்பமுடியா பாவத்துடன் நின்றாள்.

“லியா போய் ட்ரெஸ் மாத்திட்டுவான்னு சொன்னேன்…” அவன் குரலில் அழுத்தம் வந்திருந்தது.

அவனை எதிர்க்கும் எண்ணம் எதுவுமில்லை என்பதால் அவளது அறைக்குப் போய்  உடை மாற்றி வந்தாள்.

“உட்கார்”

அரணுக்கு எதிரில் அமர்ந்தாள். அதற்குள் அங்கு ஜீஸ்  மற்றும் பழங்கள் கொண்டு வந்து வைக்கப் பட்டிருந்தது.

“குடி லியாமா”

குடித்தாள்.

அடுத்து ஒரே மௌனம்.

“ப்ரபு மேல என்ன கோபம்?...ஏன் இப்டி செய்த?”

“என்னால காரணத்தை அவங்கட்ட மட்டும் தான் சொல்ல முடியும்”

“ஓ…குட்”

“…………………..”

அந்த நேரம் அரணின் மொபைல் சிணுங்க அதை எடுத்தவன்

“யெஸ் டாட்……டாக்டர் மோனிகா மேம் வர்றாங்க…அவங்க போன பிறகு இந்த போலீஃஸ் கம்ப்ளெய்ன்ட் விஷயத்த பார்த்துகிடலாம்னு நினைக்கிறேன்….ம்…ப்ரபுட்டயும் சொல்லனும்……..”

அவன் பேசிக் கொண்டிருக்க சட்டென பழம் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து  ஓங்கினாள் சங்கல்யா. இதை சற்றும் எதிர் பார்த்திருக்கவில்லை அரண்.

“ஹேய்…” என்றபடி துள்ளி எழுந்தவன் தடுக்கும் முன்பு விழுந்தது முதல் வெட்டு அவள் இடக்கையில்.

“நான் சூசைட்னாலும் பண்ணிப்பேன்…போலீஸ்ட்ட போக  மட்டும் ஒத்துக்க மாட்டேன்…” அப்படி ஒரு அகோர பயம் அவள் முகத்தில். அதற்கு இணையான போராடும் வெறி.

“லியா….யூ காட் மீ ராங்க்லி….அது இல்ல இது….” அரண் அவளுக்கு புரிய வைத்திட துடித்தான்.

“நான் பண்ணது தப்புதான்……ஜோனத் என்ன ஏமாத்திட்டாங்கன்ற கோபத்துல செய்துட்டேன்….இனி நான் அப்டி எதையும் செய்ய மாட்டேன்…ப்ளீஸ் என்னை போலீஸ்ட்ட ஹேண்ட் ஓவர் செய்யாதீங்க….யூ வான்ட் மீ டு பி பனிஷ்ட்….?”

அடுத்த வெட்டு இப்பொழுது சற்று தள்ளி அதே கையில் இறக்கினாள்….. ஆனால் இம்முறை அரண் அவளை தடுத்துப் பிடித்ததோடு மட்டுமல்லாமல் தட்டிவிட்டதில் கத்தி தூரப் போய் தள்ளி விழுந்தது. அவனுக்கு இணையான பலத்தில் அவனிடமிருந்து விடுபட திமிறிக் கொண்டிருந்தாள் அவள்.

“லியா…கூல்…ஒன்னுமே இல்ல…ப்ளீஸ் புரிஞ்சுக்கோ…அட்டெம்ட் ஆஃப் ரேப்னா போலீஸ்ட்ட போகனும்னு நினச்சேன்…நீ வேண்டாம்னு சொன்னா வேண்டாம்…. “

அவள் மீதிருந்த தன் பிடியை விட்டான் அவன். நின்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் பார்வையில் உண்மை இருக்கிறதா? இதை நம்பலாமா? உண்மை இருப்பதாகத் தான் தெரிகிறது.

“இல்ல வேண்டாம்…போலீஸ்ட்டலாம் போக வேண்டாம்…” தெம்பிழந்து போய் முனங்கினாள்.

“ஓகே அஸ் யுவர் விஷ்…..உட்கார் முதல்ல…கைல இருந்து எவ்ளவு ப்ளட் போகுது பாரு….பர்ஸ்ட் எய்ட் செய்யட்டுமா….?”

அவள் எதற்கு எப்படி ரியாக்ட் செய்வாள் என்றே இப்பொழுது இவனுக்கு புரியவில்லையே. எல்லாத்திற்கும் அனுமதி கெட்டுக் கொள்வது நலம்.

இதற்குள் அந்த டாக்டர், மோனிகா அங்கு வந்து சேர்ந்தார். அதன்பின்பு அவளது வைத்திய பொறுப்பை அவர் பார்த்துக் கொண்டார். அவர் கிளம்பிச் செல்லவும் கேட்டான்.

“ரிப்போர்ட்டரா இருந்துட்டு போலீஸ்னா அப்டி என்ன பயம்?”

“அது அப்டித்தான்….”

“நீ உன்னப் பத்தி சொன்னாத்தானே லியா எங்களாலயும் உனக்கு எதாவது ஹெல்ப் செய்ய முடியும்….?”

“உங்கட்ட இருந்து எனக்கு எந்த ஹெல்ப்பும் தேவயில்ல”

“அது எப்டி..? ப்ரபுவோட ஃபியான்சி நீ….அப்டின்னா நீ என் ஃபேமிலி மெம்பர் …என் வீட்ல வேற இருக்ற….நான் எப்டி அப்டி உன்னை கண்டுக்காம இருக்க முடியும்?”

அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

“உங்க பெர்சனல் விஷயம் வெளிய போய்டக் கூடாதுன்னு நீங்க எவ்ளவு எஃபெர்ட் எடுக்கீங்கா…எனக்கு மட்டும் அந்த ஃபீலிங் இருக்காதா?”

“அது வெளியாட்களுக்கு….மீடியாவுக்கு…..பட் அப்பாட்டயோ சுகாட்டயோ ப்ர்புட்டயோ நான் எதையும் மறைக்கிறதே இல்லையே…..இது ஃபேமிலி…..ப்ரபு ஃபியான்சின்னா நீ எனக்கு தங்கை…”

நான் உங்க ப்ரபுவோட ஃபியான்சியே கிடையாதே. உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள் அவனை பதிலின்றிப் பார்த்தாள்.

“சுகவியும் கோபம் வந்தா கொஞ்சம் எக்‌ஸ்ட்றீமாதான் ரியாக்ட் செய்வா…பட் அது முன்னால..அப்ப அவ ஒரு டீனேஜர்….எங்க மேரேஜுக்குப் பிறகு அவளுக்கு எல்லா கன்ஃப்யூஷனும் போய்..அவர் லைஃப் வாஸ் லைக் ஹெவன்… இப்பவும் இந்த ஆக்‌சிடெண்டுக்குப் பிறகும் லவ் ஹோல்ட்ஸ் அஸ் டுகதெர்…..”

அவன் சொல்லத் தொடங்க அவனை இமைக்காது பார்த்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.