(Reading time: 9 - 18 minutes)

ரவிந்த்.... !

தேசத்திற்காக பணிபுரியும் குடிமகன். நாட்டுபற்றை பொறுத்த வரையிலும் அவன் நல்லவனே .. அடிப்படையிலும் அவன் நல்லவந்தான் ..ஆனால் குடும்ப சூழ்நிலை அவனை திருப்பி போட்டது .. சிறுவயதிலேயே தாயை இழந்தான் அவன் .. தன்னுடைய ஆசைக்காக சித்தியை திருமணமும் செய்தார் அவன் தந்தை  .. மூத்தவளின் மகன் இவன் என்ற எண்ணம் அவன் சித்தியின் மனதில் அன்றே பதிந்து விட்டது .. அந்த ஒரு எண்ணமே அவனை ஒதுக்கியும் வைத்து அரவிந்த்தை தாய் பாசத்திற்கு எங்க வைத்தது .. விவரம் புரியும் வயதில் எல்லாம் சித்தியின் நாடங்கங்களை  புரிந்து கொள்ள  தொடங்கினான் ..

ஏதாவது கபடு நாடகம் ஆடி மகன் தந்தை இருவருக்கும் இடையே பிரிவினை அவ்வப்போது உண்டாக்கி கொண்ட இருந்த சித்தியை வெறுத்தவன் ஒரு கட்டத்தை பெண்களையே வெறுக்க தொடங்கினான் .. அவன் வெறுப்பை பொருட்படுத்தாமல் அவன் மீது பாசம் கொண்ட ஒரே பெண் வானதி .. " அண்ணா .. அண்ணா " என்று எப்போதுமே அவளை வளம் வருபவள் அவள் .. அவளிடம் மட்டும் அவனுக்கும் ப்ரியம் உண்டு ..

குடும்பத்தில் அடிப்படை பிணைப்பு இல்லாதவன், நாட்டுக்காக தன்னை அர்பணிக்கவே, இராணுவத்தில் சேர்ந்தான். இயல்பிலேயே பிடிவாத குணமும் இறுக்கமும் கொண்டவன் அரவிந்த் .. நினைத்ததை அடைவதற்காக எதையும் செய்யும் குணம் அவன் கூடவே பிறந்தது ..

இப்படியாய் தான், கவிமதுராவின் வாழ்வினில் வந்தான் அரவிந்த் .. அவளை முதன்முதலில் கண்டவுடனேயே அவள் அழகின் பால் ஈர்ப்பு கொண்டான் .. இரண்டு முறை அவளிடம் பேச முயன்றும் , ஏமாற்றமே மிஞ்சியது .. ஏமாற்றத்தை சந்திக்க விரும்பாதவன் அல்லவா அவன் ? அதற்காகவே அவளை பற்றி ஆராய தொடங்கினான் .. அவள்  திருமணம் நின்றது தொடங்கி , அவளுக்கு இருக்கும் அரசியல் ஆபத்து வரை தெரிந்து கொண்டவனுக்கு அதுவே சாதகாமான விஷயம்தான் ..

கவிமதுராவின் மனம் மசியாது , என்று நன்கறிந்தவன் விமலிடம் பேசினான் .. தன் மனதில் இருக்கும் விருப்பத்தை நயமாய் பேசினான் .. மேலும் , ராணுவ வீரனின் மனைவிக்கு யாராலும் தீங்கு வர வாய்ப்பில்லை என்றும் எடுத்து பேச , விமலுக்கும் அதுவே சரியென்று தோன்றியது ..

நீண்ட போராட்டத்திற்கு பின் நடந்தது அவர்களின் திருமணம் .. முதலிரவு அறையில் மோகத்துடன் அவளை நெருங்கினான் அரவிந்த் ..

" அம்மா அப்பாவுக்காக தான் இந்த திருமணம் .. மற்றபடி என் மனமும் உடலும் இதற்கு உடன்படாது " என்று மிக தெளிவாய்  சொன்னாள்  கவிமதுரா .. ஆனால் உடனே " சரியென்று " தலை அசைக்கவோ

" நான் காத்திருக்கிறேன் " என்று கூறவோ அரவிந்த் கிரிதரன் அல்லவே ! முதல் இரவிலே முதல் அறையை வாங்கினாள்  மாலையிட்டவனிடம் இருந்து .. மேலும் , அவளது மனதை கொன்று உடலை வென்றிருந்தான்  அரவிந்த் ..

தினம் தினம் நேர்ந்தது இந்த கொடுமை .. வெளியில் தாய் தந்தை முன் மகிழ்ச்சியாகவும் , மனதிற்குள் வெந்து கொண்டிருந்தாள் கவிமதுரா .. இத்தனை நாட்கள் ஆகியும் தன் வசம் மனம் சாயாத மனைவி மீது கோபம் வந்தது அரவிந்த்துக்கு .. அடிக்கடி கிரிதரனை பற்றி பேச்செடுத்தான்.. அவளை காயப்படுத்தி ரசித்தான் .. வார்த்தையினாலும் , செயலில் அவளை ரணப்படுத்தினான் .. ஒருநாள், இது வித்யாவிற்கு தெரிந்து விட  இதற்குமேல் அங்கு இருப்பது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தாள்  கவிமதுரா ..

தனது தாயும் தந்தையும் அவசரபட்டு அவளது வாழ்க்கையை முடித்து விட்டனர் என்று அவர்கள் மருகிவிட கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள்  அவள் .. மறுநாளே அரவிந்திடம் பேசி அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினாள்  , புகுந்தவீடு செல்கிறேன் என்ற பெயரோடு .. !

நடந்ததை எல்லாம் நினைத்து பார்க்கும்போதே லேசாய் விடிய தொடங்கியது .. கிரிதரனின் குரலை கேட்டதை கூட மறந்து விட்டாள்  அவள் ..

றுநாள் அனைவருக்குமே இன்பமான நாளாய் விடிந்தது..

" சித்து "

" எஸ் செல்லம் "

" எல்லாம் ரெடியா ?"

" இதோ .. பூஜை அறையில் எல்லாம் ரெடி ... சந்தோஷ் தான் அலங்காரம் பண்ணிட்டு இருக்கான் ..." என்றான் சித்தார்த் ..

" அந்த ரெண்டு குரங்குங்க எங்க ?"  என்றுஹரிணி சாஹித்ய அருளை தேடும்போதே

" அண்ணி , இவன் இப்போவே கொழுக்கட்டையை எடுத்து சாப்பிடுறான் பாருங்க " என்று போட்டு கொடுத்தாள்  சாஹித்யா .. அருளோ வாயில் இருந்த கொழுக்கட்டையை விழுங்காமல்

" ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம் இல்லை " என்று முகத்தை வலதும் இடதும் ஆட்டினான் .. அவன் செய்கையில் மூவருமே குபீரென சிரிக்க ,

" ரொம்ப பசி அண்ணி " என்றான் அருள் ...

" அச்சோ , அஞ்சு நிமிஷம் பொறுமையா இருக்க மாட்டியா அருள் ? சாமிக்கு படைச்சிட்டு  சாப்பிடலாம் வா " என்றாள்  ஹரிணி ..

அவனோ விடாமல்

" குழந்தையும் தெய்வமும் ஒன்னு " என்றான் ..

" டேய் குரங்கு , அது குழந்தைக்கு டா .. நீதான் குரங்காச்சே " என்று அவன் செவியை திருகினாள்  சத்யா ..

" ஹே கழுதை வலிக்கிறது டீ "  என்றே அலறினான் அவன் ..

" ஹே கழுதை குரங்கு ,ரெண்டு பேரும்  சீக்கிரமா வாங்க " என்றான் சந்தோஷ் .. சித்தார்த் ஹரிணியின் கையை பற்றி கொண்டு முன்னே போக  சத்யா அருள் இருவரும் பூஜை அறைக்குள் நுழைந்தனர்  ..  மிதமான அலங்காரத்தை கம்பீரமாய் இருந்தார் ஸ்ரீ கணேஷ்  .. இனி நடக்கும் அனைத்தும் நன்மையாய்  இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டனர் ..

" இனிமேல் தானே திருவிளையாடல் ஆரம்பம் " என்று குறும்பாய் சிரித்தார் அவர் சந்தோஷ் , அருள் , சத்யா மூவரையும் பார்த்து .. !

" அடடே வாங்கோ வாங்கோ " வாயெல்லாம் பல்லாக சந்தோஷமாய் வரவேற்றார் அந்த கோவில் அர்ச்சகர் .. கவிமதுரா குழந்தையோடு நிற்க வானதி வித்யா விமல் அனைவரையும் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தார் அவர் ..

" நல்லா இருக்கியா பொண்ணே  ?" என்றார் கவியை பார்த்தார் ..

" இன்னும் ஞாபகம் வெச்சு இருக்கிங்களா மாமா ?"

" எப்படி அம்மா மறப்பேன் ? இந்த கோவில் உனக்கு வீடாச்சே .. எப்பவும் இங்க தானே இருப்ப நீ ? துருதுருன்னு இருக்குற பெண்ணை யாருதான் மறப்பாங்க .. உன் மகனா ?" என்று ஜீவாவை கொஞ்சினார் ..

" யாரு பேருக்கு அர்ச்சனை ?" என்று அவர் கேட்கவும்

" சாமி பேருக்கே  பண்ணிடுங்க சாமி " என்ற கணீர் குரலுடன் கவிமதுராவின் அருகில் வந்து நின்றான் கிரிதரன் .. அவனை தொடர்ந்து கண்ணன் -மீரா இருவரும் அங்கு நின்றனர் .. காணும்காட்சி நிஜமா என்று விழித்தாள்  மதுரா  ..

அதற்குள் அர்ச்சகர் அர்ச்சனை செய்யும் குரல் கேட்க  அனைவருமே இறைவனிடம் தங்களது கோரிக்கையை வைத்தனர் .. ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வேண்டுதல் .. எதிர்பார்ப்போடு  அவர்கள் இறைவனை பார்க்க, அவரது குறும்பான பார்வையோ வானதி மீது படிந்தது ..அந்த பார்வையின் பின்னணி என்ன ?

தவம் தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.