(Reading time: 17 - 34 minutes)

நாளைக்கு மீட் பண்ணலாமா ?”-தீரஜ்…இதுதான் அவனது குணம்..எதையும் சுற்றி வளைத்து பேச பிடிக்காது அவனுக்கு

..

“ ஏய் மிஸ்டர்..என்ன பேச்சு திசை மாறுது…நீ இப்படி பேசுறது உன் முதலாளி அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்தெரியுமா ?”

“ என்னங்க ஆகும்?”

“யாருக்கு தெரியும்?”என்று முனுமுனுத்தவள் , “உன் சீட் காலி” என்றாள் தோரணையாய்..

“ஹா ஹா..ரிஸ்க்  எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்டுர மாதிரி ம்மா “

“ப்ச்ச்ச்…உன்னோடு எனக்கென்ன வெட்டி பேச்சு நான் ஃபோனை வைக்கிறேன்.. இனி என் நம்பருக்கு கூப்பிடாதே …பை “என்று ஃபோனைவைக்க போனாள் தீப்தி…

“ ஒரு நிமிஷம்….ஒரு  நிமிஷம்…..”

“…”

“ நான் எதுக்கு கால் பண்ணேன்னு சொல்லிடுறேன் “

“ம்ம்”

“ உங்கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு தோணிச்சு….அதுமட்டும் இல்ல”

“ வேறென்ன?”

You might also like - Nesam niram maaruma.. Cute family drama

“ நீ ஹாஸ்டலில் இருக்க…வீட்டை மிஸ் பண்ண  சான்சஸ் இருக்கு… உனக்கு அடிப்படுச்சுன்னு நீ வீட்டுல சொல்லாமல் கூட இருந்திருக்கலாம்… என்னதான் தைரியமான பொண்ணா இருந்தாலும்,ஆறுதல் தேவை பட்டு இருக்கலாம்!அட்லீஸ்ட் வலி எப்படி இருக்குன்னு கேட்ககூட யாரும் இல்லையேன்னு நீ ஃபீல் பண்ணுவன்னு தோணிச்சு… அதான் “

நெகிழ்ந்து போயிருந்தாள் தீப்தி… அவளை பார்த்தாலே,அழகானவள்,  பணம் படைத்தவள், அதனாலேயே திமிர்பிடித்தவளென்று  விமர்சிப்பவர்களின் மத்தியில், அவள் வாய் திறந்து சொல்லாமலேயே அவள் மனம் அறிந்து நடக்கிறான் ஒருவன்…இது அவளுக்கு புதிது…இந்த ஆச்சர்யம் , பதட்டம்,குழப்பம் அதனூடே லேசாய் மகிழ்ச்சி… இதை எல்லாம் நிச்சயம் அவனிடம் காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை..

“ஓஹோ அப்படியா ? ரொம்ப சந்தோஷம்…உன் அக்கறைக்கு நன்றி…நான் யாருடைய அன்பையும் எதிர்பார்த்து இருக்கிற  ஆளு கிடையாது..இப்படி தேவை இல்லாம நீயே கற்பனை பண்ணி டைம் வேஸ்ட்பண்ணாதே …குட் நைட் “ என்று ஃபொனை வைத்து விட்டள் அவள்… மீண்டும் இருமுறை தீரஜ் அழைக்க,அவளிடம்பதில் இல்லை…

“ஹும்கும்….நல்லவேளை  குட் பைன்னு சொல்லாமல்,  குட் நைட்ன்னு சொல்லிட்டா “என்று  வாய்விட்டு சொன்னவன் உல்லாசமாய்  வீட்டிற்குள்  நுழைந்தான்..

தனது அறைக்குள் நுழைந்தாள் தீப்தி …சற்று முன்பு  அவளுக்குள்  இருந்த இருக்கம்,இப்போது இல்லை..தீரஜுடன் பேசியதை  மீண்டும் நினைவு கூர்ந்தவள் அன்றைய தினத்தில் நடந்த அத்தனையையும் நினைவுகூர்ந்தாள்….

எல்லாரும் மேலபாருங்க…. ஆம், இப்போ ஃப்லாஷ் பேக் டைம்!!!

நந்துவின் வார்த்தைகளை கேட்டு மனமுடைந்த  தீப்திக்கு  தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் போல இருந்தது… அதிகாலைஎழுந்தவுடனேயே  தனது தந்தையை ஃபோனில்  அழைத்தாள்… வழக்கம் போல அவளது அழைப்பு எடுக்க படவில்லை.. வழக்கதிற்கு மாறாய் செல்ஃபோனின் அறிவிப்பு மலையாளத்தில் கேட்டது..

“ஓஹோ ,கேரளா போயிருக்கார் போல… என்னிடம் சொல்லனும்னு அவருக்கு தோனவே இல்லையா ? நிஜம்மாலுமே நான் அவரது மகள்தானா ? அவருடைய  ஆண்மைக்கும், என் அன்னை மலடியில்லை என்பதை எடுத்துரைப்பதற்காக மட்டும் தான் நான் பிறந்தேனா ?” எப்போதும் அவளுக்குள் தோன்றும் அதே கேள்வி ..ஆனால்,பதில் சொல்லத்தான் யாருமில்லை … பதில்  உரைக்க வேண்டிய அன்னையோ  இறைவன் அடியில். !

சரி வீட்டுக்காவது போய்விட்டு வருவோமென்று எண்ணி அவளது வீட்டிற்கு புறப்பட்டாள்.. வசதியானவர்கள் குடியிருக்கும் அந்த பகுதியில்  ஆட்டொவில்வந்து  இறங்கினாள் தீப்தி.. அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அந்த வீட்டின் பணியாட்களின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது…அவளை நோக்கி ஓடி வந்தார், அவர்களது குடும்பத்தின் விசுவாசி பரமன் அய்யா…

“ வாங்க சின்னம்மா ..”

“ எப்படி  இருக்கீங்க ?”

“எனக்கென்னம்மா,நல்லா இருக்கேன்… நீங்க ?”

“ ம்ம்ம்ம்ம் ….. அப்பா எங்க ?”

“அய்யா, வேலை விஷயமா வெளிலபோயிருக்காருங்க… நாளைக்கு வந்திருவார்”

“ம்ம்ம்ம்ம்ம் …..”

“உள்ளவாங்கம்மா “  என்றபடி அவளுக்கு வழிவிட்டார்  அவர்.. தனது விதியை  நொந்து  கொண்டாள்  தீப்தி…இத்தனை  நாட்கள் கழித்து வருகிராள்… அவளை அன்புடன் அழைக்ககூடவா  யாருமே  இல்லை ?தனக்கு மட்டும் ஏன் இப்படி  எல்லாம் நடக்கவேண்டும்… யார் கேட்டது இப்படி ஒரு வாழ்க்கை ..பணத்தின் நிழலில்  அன்பையும் அரவணைப்பையும் தொலைத்து, அதை அதிரடியாய் ஆவது பெற்றுவிட வேண்டும் என்று துடிக்க வேண்டிய நிலை தேவைதானா ? அன்பிற்கு யாசகம் கேட்கும் மாடிவீட்டு ஏழை நான்… தன்னைத்தானே நொந்தவளாய்,வீட்டிற்குள்  நுழையாமல் வெளியேறினாள் தீப்தி…கால் போன போக்கில் சாலையில் நடந்தவள் கண் இமைக்கும் நொடியில்  தீரஜ் ஓட்டி வந்த காரின் முன் விழுந்தாள்.

“அச்சச்சோ அடிப்பருச்சா கண்ணா?”என்று பதறி ஓடி வந்தார் சாந்தினி…தீரஜ் ப்ரசாந்த்தின் தாயார்…தீப்தி மறுத்தும் விடாமல் காரில் அவளை ஏற்றி கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றார்.. அவர் குரலிலும் கண்களிலும் தெரிந்த கனிவில், சுற்றத்தை மறந்து அவரையே பார்த்தாள் தீப்தி…அதை இப்போது அசைப்போட்டவள், தீரஜின்முகத்தை  நினைவு கூர்ந்து பார்க்க முயன்றாள்…”அவன் கண்களில் கூட பதட்டம் தெரிந்ததோ?” .. அதை நினைக்கும்போதே மனதுக்குள் பரவும் இதத்தை அவளால் மறைக்க முடியவில்லை.. அவன் முகத்தை அகத்தில் நிரப்பியபடியே புன்னகையுடன் உறங்கியும் போனாள் தீப்தி….

மறுநாள்,

ஆருவின் மெஸேஜில் தான் கண் விழித்தான் வின்ஸ்.. அவளது பெயரை பார்த்ததுமே கண்களை கசக்கி கொண்டு விருட்டென எழுந்து அமர்ந்தான்…பிறகு அவளது மெஸேஜை படித்தவன் கோபமாய் அனுவிற்கு ஃபோன் போட்டான்..

“ ஹேய்….குட் மார்னிங் வின்ஸ்…இருந்தாலும் நீ இவ்வலவு லேட் பிக் அப்பா இருக்கவே கூடாதுப்பா…நான் எப்போதிலிருந்து உன் ஃபோனுக்காக வைட்டிங்க் தெரியுமா ?” என்றாள் அனு உற்சாகமாய்..

“உனக்குகொஞ்சம் கூட அறிவே கிடையாதா அனு ? ஏன் அக்காவும் தங்கச்சியுமாய் சேர்ந்து என்னை படுத்துறிங்க?” என வார்த்தைகளை கடித்து துப்பினான் அவன்…

“ஹேய்….நீ ஒரு மிஸ்டர் கூல்ன்னு நெனச்சேன்..ஆனா நீ ஏன் இப்போ ஃபூல் மாதிரி கத்துற..முதல்ல  உனக்கென்ன ப்ரொப்லம் அதை சொல்லு “

“ப்ச்ச்… ஆரு ஃபோன் ல இருந்து எனக்கு நீ தானே மெஸெஜ் பண்ண?”

“ஹேய்..என்னடா சொல்லுற ஆரு மெஸெஜ் பண்ணினாளா?என்ன  சொல்லிருக்காங்க மேடம் ?” என்று துள்ளினாள் அனு…

“ அனு டொன்ட் பீ சில்லி “

“ சில்லியும் இல்ல வில்லியும் இல்ல…முதல்ல நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு “

“ ப்ச்ச்… என்னை பார்க்கணும்னு சொல்லி இருக்கா “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.