(Reading time: 17 - 34 minutes)

" ண்ணா , சரியோ தப்போ , அவன் என் ப்ரண்டு  ... எனக்கும் அவனுக்கு ஆயிரம் இருக்கலாம் ..அதை கவனியுங்க , இல்ல சரி படுத்துங்கன்னு நான் உங்களை கேட்டேனா ? உங்களுக்கு என்ன உரிமை இருக்கு அவன்மேல கைய வைக்க ?"

தலை குனிந்தான் அவளது தமையன் .. அவனை அப்படி நிற்க வைத்து பார்க்க அவளுக்கும் இஸ்டம் இல்லைதான்..எனினும் ???  விழிகளை சிமிட்டி கண்ணீரை மறைத்து கொண்டாள்  சுபத்ரா.. ஜீவனே இல்லாத குரலில் " ஐ எம் சாரி " என்றுவிட்டு அங்கிருந்து சென்றான் அவளது அண்ணன் .. கை கட்டி கொண்டு பிரேமின் முன் நின்றாள்  சுபி ..

" சுபி "

" என்ன விஷயம் "

".."

" சொல்லுங்க மிஸ்டர் பிரேம் ..எதுக்காக என் வீட்டுக்கு வந்திங்க "

" உனக்கு தெரியாதா ? உன்னை பார்க்க தான் வந்தேன் "

" ஹா .... தேவை இல்லாத அக்கறை .. அன்னைக்கு எல்லாரும் போனதும் , ஹாஸ்பிட்டலயே  உங்களுக்கு தெளிவா சொல்லிட்டேனே , என் கண்ணுல படாதிங்கன்னு ..நீங்க கூட என் அம்மா அப்பா வந்த பிறகு போய்  விடுவதாய் சொன்னிங்க .. இப்போ சொன்ன சொல்லை மீறிட்ட மாதிரி இருக்கே "

" ப்ளீஸ் சுபி நீயும் என்னை கொல்லாத "

" நானும்ன்னா  ? வேற  யாரு உங்களை கொன்னது ? நான் மட்டும் கொஞ்சம் தாமதமா வந்திருந்தா , என் அண்ணா தான் உங்களை கொன்னுருப்பார் .. "

" இப்படி என்னை ஒதுக்கி வெச்சு பேசாத  சுபி ..செத்துறலாம்  போல இருக்கு " என்று கலங்கினான் பிரேம் .. அவன் இறைஞ்சலில் அவளது மனமும் கரையத்தான் செய்தது ..எனினும் காட்டி கொள்ளாமல்

" ஒதுக்கி வைக்கவோ , இல்லை உரிமை பாராட்டவோ , நீங்க யார் சார் எனக்கு ?"

You might also like - Nagal nila... A suspense filled story 

" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் அண்ணாகிட்ட பேசுனியே ..அப்போ தெரியலையா நான் யாருன்னு ? " என்றான்  பிரேம் ..

" ஹ்ம்ம் ,நான் அப்படி பேசலன்னா , என் அண்ணாவின் கோபத்தை கட்டுபடுத்தி இருக்க முடியாது ..அதற்காக .. அதற்காக மட்டும்தான் நான் அப்படி பேசினேன் ..நீங்களே ஏதும் கற்பனை பண்ணிக்க வேணாம் "

" எனக்கு மன்னிப்பே இல்லையா ?"

" மன்னிப்பு கொடுக்குறதுக்கு எனக்கு  உங்கமேல எந்த உரிமையும் இல்லை மிஸ்டர் பிரேம் .. என் அப்பா வர்ற நேரம் .. இங்க இருந்து போயிருங்க " என்று சுபத்ரா சொன்ன நேரம்

" உள்ளே வாப்பா " என்று கணீர்  குரலுடன் வாசலுக்கு வந்தார் அவளது அப்பா ..

" அப்பா "

" நீ போயி ரெஸ்ட் எடு சுபி "

" அப்பா ..இவன் "

" நான் பாத்துக்குறேன் "

" அப்பா ப்ளீஸ் அப்பா "

" நான் தான் பார்த்துக்குறேன்னு சொல்றேனே "

இருவரையும் மாறி மாறி பார்த்து வைத்தாள்  சுபத்ரா .. அடுத்து என்ன நடக்கும் என்று அவளுக்கு புரியவில்லை .. ஆனால் , அவள் பேச்சை கேட்டு பிரேம் திரும்பி போவதாய் இல்லை என்றும் , தனது தந்தையும் அவனை அனுப்ப போவதில்லை இல்லை என்று  புரிந்து போனது ..லேசாய் அவளுக்குள் பயம் பரவியது ..தனது தந்தை அவனை ஏதும் செய்துவிடுவாரோ என்று .. அதே கவலையுடன் பிரேமை பார்த்து வைத்தாள்  .. அவன் முகம் பார்த்ததும் , மீண்டும் எங்கிருந்தோ எரிச்சல் மூண்டது ..

" ச்ச , எப்போ பார்த்தாலும் இவனால் பிரச்சனை தான் " என்று முனுமுனுத்தபடி அறைக்குள் புகுந்து கொண்டாள் ..

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 23

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 25

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.