(Reading time: 17 - 34 minutes)

ஹோ ..அதான் மேடம்  எங்கிட்ட கூட சொல்லாமல் காலையிலேயே தலைமறைவா ?” என்றாள் அனு சந்தோஷமாய்.. வின்ஸ் அப்போதுதான் கொஞ்சம்  நிதானமாய் சிந்திக்க ஆரம்பித்தான்… ஒருவேளை  நிஜம்மாகவே ஆரூ தான் தன்னை அழைத்தாளோ…

“ அப்போ அது நீ இல்லையா ?”

“ டேய் நீ என்ன வாழைப்பழம் காமிடி மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லுற?நிஜம்மாவே நான் உனக்கு எந்த மெஸேஜும்  அனுப்பல.”

“ச்ச…சொதப்பிட்டேன் ..நீதான்னு நினைச்சு அசால்ட்டா இருந்துட்டேன்”

“அதுக்கான பனிஸ்மெண்ட் கண்டிப்பா உனக்கு உண்டு .. பட்   இப்போ அதபத்தி யோசிக்காம கெளம்பி போ”

“ அவளே என்னை கூப்பிட்டு இருக்கா.. என்ன விஷயம் ? கொஞ்சம்சொல்லு அனு ?” என்று இறைஞ்சினான் வின்ஸ்…

“ என்னை பார்த்து அறிவிருக்கான்னு  கடன் கேட்டியே அதுக்கு இதுதான் பனிஷ்மெண்ட்… நானாய் எதுவுமே சொல்லமாட்டேன் .. போ ..டைம் ஆகுது” கடைசிவரை மனம் இறங்காமல் அவனை அனுப்பி வைத்தாள்  அனு..

“இந்த தடவையாச்சும், இவன் எதையும் சொதப்பகூடாது…கட்டதுரைக்கு கட்டம் சரியா இருக்கான்னு தெரியல..எதுக்கோ எல்லா கடவுளும் அவனுக்கு துணையா இருங்கப்பா “ என்று பெருமூச்சுடன் தனது கடமையை கவனிக்க சென்றாள் .. வேறென்ன? எல்லாம் சாப்பாடுதான் !

அடித்து பிடித்து கொண்டு அரக்க பரக்க ஆரூவின் முன்வந்து நின்றான் வின்ஸ்…அவனுக்காக காத்திருந்து அப்போதுதான் அவள் அங்கிருந்து செல்லலாமென்று முடிவெடுத்தாள்..

“சாரி…சாரி ஆரூ…லேட் ஆகிருச்சு”

“ ப்ச்ச்….நான் கெளம்பறேன்”

“ப்லீஸ்  ஆரூ..நான் எதையும் வேணும்னு பண்ணல…நிஜம்மாவே லேட் ஆச்சு…மன்னிச்சிரு “

“ம்ம்ம்ம்ம்”

“ என்னை பார்க்கனும்னு சொன்னதும் எனக்கு  எவ்வ..”

You might also like - Enna thavam seithu vitten... A family drama

“ நீ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் பேசிடுறேன் … எனக்கு அன்னைக்கு என்ன நடந்ததுன்னு முழுசா தெரியனும்…அதற்காக நான் சமாதானம் பேச வந்திருக்கேன் சோ எதை சொல்லி என் மனசை மாற்றலாம்னு முட்டாள்தனமாய் யோசிச்சு பொய் சொல்ல வேணாம்”

அவனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும் வலியும் அவளது பேச்சை நிருத்தி இருந்தது… அவள்முன்பு  அப்படியே மண்டியிட்டு அமர்ந்து விட்டான் வின்ஸ்!

“ என்ன இது..?????????” திகைத்து அவனை பார்த்தாள் ஆரூ…

“ரொம்ப தேங்க்க்ஸ் ஆரூ…இன்னைகாவது, எனக்கு பேசுறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தியே!”

“..”

“பொய் சொல்லமாட்டென்  ஆரூ… நாம இருக்கிறது ஆண்டவனின் சன்னிதானம்ன்னு மட்டும் இல்லை, என்னை நிற்க வெச்சு கேள்வி கேட்குறது நீ..இந்த  நாளுகாக நான் எவ்வளவு நாளாய் காத்திருந்தேன் தெரியுமா ? அதுக்காகவே  நிச்சயமாய் நான் பொய் சொல்லவேமாட்டேன்..”

மனதிற்குள் இளகித்தான் போனாள்…என்ன காரணம் என்று தெரியும் முன்பே அவனை மன்னிக்க தயாராய் இருந்த மனதை கடிவாளமிட்டு அடக்கியவள் பொறுமையாய் “இம்ம்ம் சொல்லு”என்றாள்..

(அன்று நடந்த நிகழ்வை விரிவாய் அவளுக்கு எடுத்து கூறினான் வின்சண்ட்.. நம்ம ரீடர்ஸ் ஃப்லாஷ் பேக் மறந்திட கூடாதுல….சோ ரொம்ப குட்டியா என்ன நடந்ததுன்னு வின்ஸ் ஐ சொல்ல வெச்சு தெரிஞ்சுப்போம்…)

“ எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஆரூ…உன்னை நான் நேசிக்க தொடங்கிய நாட்கள் அது..இளமையின் வேகமும் துருதுருப்பான சிந்தனையும் என்னை உன்னிடம் காதலை சொல்ல தூண்டியது…என் பிறந்தநாள் அன்னைக்கு காதலை சொல்லனும்னு  நான் காத்திருந்தேன்… என் ப்ரண்ட்ஸ் கும் இந்த விஷ்யம் தெரியும்….உனக்காக காத்திருந்த நேரம் தான் நாங்க ஒரு கேம் விளையாடினோம்… அந்த கேம் படி நான் என் நண்பனுக்கு முத்தம் கொடுக்கனும்…என்னால அது முடியாதுன்னு பின் வாங்கும்போதுதான் , எனக்காக லைட் ஆப் பண்ணுறதாகவும் , அப்போ கிஸ் பண்ணனும்னுசொன்னாங்க…. அப்போதான் நீயும் வந்த…இருட்டுல அவன் தான்னு நினைச்சு தான் நான் ……”என்றவன் கை நீட்டி அவளது பாதங்களில் லேசாய் தொட்டான்… ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவள் இப்போது எழுந்தே விட்டாள் ..

“வின்ஸ் என்னதிது ?”

“ ஒரு பெண்ணின் காலை பிடிச்சு கெஞ்சுறகோழை  நான் இல்லைதான் … ஆனா உன்  நிம்மதியும் சந்தொஷமும் போனதுக்கு நாந்தானே காரணம்?என்னால் எல்லாத்தையும் நியாயப்படுத்த முடியும்… ஆனா ,நான் முத்தமிட தொடங்கியதும் அது நீதான்னு தெரிஞ்சதும் நிதானமாய் உன்னை விடுவிச்சதும் ,என் மனசுக்கு பிடிச்ச பெண்ணுக்கு முத்தமிட்டேன்னு சந்தோஷப்பட்டதையும் எப்படி நியாயபடுத்துவேன் ஆரூ ? அதுக்கு தான் இப்படி” என்றவன் நிமிர்ந்து நின்றான்… ஏதோ பெரிய சுமையை இறக்கி விட்ட தேஜஸ் அவன் முகத்தில் தெரிந்தது..லேசாய் புன்னகைக்கவும் செய்தான்..

“ தேங்க்ஸ் ஆரூ,…னீ  நீ என்னை மன்னிக்கலன்னாலும் கூட பரவாயில்ல… ஆனா ,ஏதோ பாவமன்னிப்பு கிடைச்ச மாதிரி ஒரு அமைதி என் மனசுல இருக்கு ..அதுக்கு நீதான் காரணம்”என்றான்… அவளது முகத்தில் எதை கண்டானோ

“ உனக்கு தனிமை அவசியம்ன்னு தோனுது…நான் கெளம்பறேன்…வா நானே ட்ராப் பண்ணிட்டு போறேன்” என்றான்… அவள் இருந்த மனநிலையில் அவன் பேச்சை மறுக்காமல் பின் தொடர்ந்தாள்..அதன்பின் வின்ஸ் அவளை தொந்தரவு செய்யவும் இல்லை..அவளிடம் பேச முயற்சிக்கவும் இல்லை … அனு கூட இதை பற்றி பேச்செடுக்காமல் இருந்தாள்..இப்படியே ஒரு வாரம் கடந்தே விட்டது!

கண்களை மூடி படுத்திருந்தாள்  சுபத்ரா.. அவள் தனது வீட்டிற்கு வந்தே ஒரு வாரம் ஆகி விட்டது .. உடல் நிலை சற்று மேம்பட்டு இருந்தது .. சந்துருவின் தாயார் பேசியதால் மனம் கூட கொஞ்சம் பண்பட்டு தான் இருந்தது .. நந்துவும் , அடிக்கடி அவளுடன்  போனில் பேசி அவளை தேற்றினாள் .. இத்தனை விஷயங்களிலும்  அவள் அலைகழித்து கொண்டிருந்தது , அவள் வீட்டில் அவனின் புது வரவு .. (ஹையா இன்னொரு ஹீரோவான்னு சந்தோஷப்பட கூடாது .. நம்ம கதை பட்ஜட் படி புதுசா ஹீரோ கொண்டு வர முடியாதாம் ..அதனால பழைய வில்லன்தான் இப்போ கௌரவ தோற்றத்தில் ஹீரோ ஆகிட்டார்.. ஒன்னும் புரியலையா ? எனக்கும்தான் ! வாங்க சுபியை கேட்போம் )

இமைகள் மூடி சாய்ந்து படுத்திருந்தாள்  சுபத்ரா .. நேற்று நடந்தது அணைத்தும்  அவள் கண்முன் படமாய் விரிந்தது .. ஏற்கனவே இருமுறை அவள் தற்கொலை முயற்சி செய்து இருந்தபோதே , அதன் காரணம் , அதற்கு பின் நடந்த நிகழ்வுகளும் அவள் வீட்டில் அனைவருக்கும் தெரிந்து இருந்தது .. அனைவரின் கோபமுமே பிரேமின் மீது தான் ! அதே நேரம் , சுபியை எப்படியாவது தேற்றிவிட வேண்டும் என்றே போராடி கொண்டிருந்தனர் .. நேற்று மதியம் எப்போதும் போல அறையில் முடங்கி இருந்தவள் , அவளது அண்ணனின் கூக்குரலை கேட்டு திடுகிட்டாள் ..

" வெளிய போடா நாயே "

" முடியாது சார் .. சுபியை பார்க்காம நான் போகவே மாட்டேன் "

இது ... இது பிரேமின் குரல் அல்லவா ? வெறுப்புடன் வாசலுக்கு அவள் விரைந்த நேரம், பிரேமின் கன்னத்தை பதம் பார்த்தது  அவளது அண்ணனின் கரம் ..

" அண்ணா "

" சுபி , உள்ளே போ நீ "

" நான் போறது இருக்கட்டும் .. நீ  என்ன பண்ணுற ? அவன்கிட்ட மன்னிப்பு கேளு "

" ஹே "

" அண்ணா , என்னை அதட்டுற  வேலை எல்லாம் வேணாம் .. ஒழுங்கா மன்னிப்பு கேளு "

" சுபி இந்த துரோகியால தான் நீ இப்படி இருக்க "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.