(Reading time: 40 - 79 minutes)

த்தனை சிச்சுவேஷன்லயும் அம்மா இப்ப சேஃபா இருக்காங்களே…….தட் இஸ் ரியலி பெஸ்ட், சோ விஷ் மீ….”

“………………………..”

“போன தடவை மாதிரி நான் நாளைக்கே வந்து நிக்க மாட்டேன்….இன்னும் 3 வீக்‌ஸ் ஆகும்….”

“…………………….”

“அப்ப வரவும் ஸ்ட்ரெய்ட்டா ஹனிமூன்தான்……அதுக்கு பிறகு  எப்படி என்ட்ட பேசாம இருக்கன்னு நானும் பார்க்கேன்…..”

அவன் சொல்லில் ஒரு ஆனந்த அதிர்வு ஜிவ்வென எழுந்தாலும்..….இவள் திட்டத்திற்கும் அவன் எண்ணத்திற்கும் உள்ள முரண் மிரள வைக்க “அதெல்லாம் வர மாட்டேன்….அம்மா வீட்டுக்கு வரவும் நான் போய்டுவேன்” என்று மனதில் உள்ளதை உருப்படியாய் உளறி வைத்தாள்.

சொன்ன நொடியே ஐயோ கிளம்புறப்ப அவன்ட்ட என்ன சொல்லிட்டேன்…..என பதறியும் போனாள்.

ஆனால் அவனோ இவள் நினைத்தபடியெல்லாம் அப்சட் லுக், ஆங்க்ரி பார்வை, கண்ணீர் கண், கர்ஜனை கவனிப்பு என எதையும் செய்யவில்லை.

You might also like - Katrinile varum geetham... A family oriented romantic story 

சிரித்தான். நன்றாகவே சிரித்தான். “குட் ஜோக்…”

“இல்ல நிஜமா…” இப்பொழுது இவளுக்கே இவள் முடிவின் மீது சிறு சந்தேகம் வந்திருக்கிறது. ஏன் சிரிக்கான்???

“அதெல்லாம் உன்னால முடியாதுடி பொண்டாட்டி….”

“இல்ல ஜோனத் என்னால உங்களுக்கு ப்ரச்சனைதான்…” விளக்கம் சொல்ல முற்பட்டாள்.

“ஆமா…..ரொம்பவே ப்ரச்சனைதான்”  எளிதாய் ஒத்துக் கொண்டான் அவன். இப்பொழுது அவள் தலைக்கு பின்னாக கை கொடுத்து இழுத்து அவள் காதை தன் மார்மீது சாய்த்தான்.

“கேட்குதா? என் ஹார்ட் பீட்..…எவ்ளவு ஃபாஸ்ட்டா இருக்குது பார்த்தியா?.....இப்பல்லாம் நீ பக்கத்துல வந்தாலே இப்படித்தான்…...ஒரே ப்ரச்சனை….”

“இப்படி பிடிச்சு…..”சொல்லிய படி அவள் இடையோடு வளைத்தான்….”இப்படி சேர்த்து” இப்பொழுது முழு அவளையும் தன்னோடு சேர்த்திருந்தான்…”இப்படி பார்த்து” தன் மார்பில் சாய்த்திருந்த அவள் தலையை  சற்று பின்னோக்கி சாய்த்து அவள் உதடுகளைப் பார்த்தவன், “இந்த பொங்கல் ஃபேக்ட்ரில ஸ்வீட் எடுக்கனும்னு” இப்பொழுது சொன்னதை வெகு நிதானமாக செய்து முடித்தவன் “ஒவ்வொரு டைம் உன்னைப் பார்க்கும் போதும் இப்படித்தான் தோணுது……. ஒரே ப்ரச்சனைதான்….”

துளி கூட எதிர்ப்பின்றி அவன் காதலுக்கும் உரிமைக்கும் ஒத்துப் போன அவள் மனமும் உடலும் தன்னவனின் மார் மீது சாய்ந்து, அணைத்திருந்த அவன் கைகளுக்குள் சுக சுகமாய் கண் மூடிக் கொண்டது. சிறிது நேரம் மௌனம்.

“இதை ஒரு செவன் டேஸ் முன்னால செய்திருந்தா ஒத்துப்பியாடி நீ…...நமக்கு நடந்திருக்கிறது மேரேஜ்….அதோட பலம் என்னன்னு தெரியலை உனக்கு….போன தடவை மாதிரி நான் உன்னை எங்கயும் காவல் போட்டு அடச்சு வச்சுட்டுப் போகலை….நவ் யூ ஆர் அ ஃப்ரீ பேர்ட்…..எங்க வேணாலும் போகலாம்….ஆனா நீ என்னை சுத்தி சுத்தி தான் பறப்ப…..”

அவளை தன்னை விட்டு விலக்கி அமர்த்தியவன்….”விட்டுடுட்டுப் போறாளாம் கழுத….” என்றபடி அந்த லேண்ட் ரோவரின் அவன் பக்க கதவை திறக்கப் போனான்.

இப்பொழுது அவள் மனதிற்குள் முன்பு வரை இருந்த பதற்றமும் தவிப்பும் பரிதவிப்பும் பாதிக்கும் கீழாக குறைந்திருந்தது. காரணம் இவள் போறேன்னு சொன்னதை கொஞ்சமும் நம்பாமல் அதற்காக பதறாமல் இவள் மனம் மீதும் இவர்கள் மணம் மீதும் அவன் காண்பிக்கும் நம்பிக்கை….

அதோடு அவன் சொன்னது போல் அவன் மீது அதற்கு முன்பாக காதலே இருந்திருந்தாலும் அவனது இந்த உரிமைக்கும் ஆசைக்கும் அவளது மனம் ஒத்துக் கொள்வது என்பது நிச்சயமாய் இந்த கல்யாண காரியத்தால் தான்…...ஒரு வேளை அவன் சொல்றது போல் ட்யூ டு திஸ் வெட்டிங் இவள் மைன்ட் அவனுக்கு பேவராத்தான் இனி நடந்துக்குமோ..….நாளைப் பின்ன எந்த ப்ரச்சனை வந்தாலும் அவனுக்கு எதிரா எதையும் செய்ய மாட்டாளோ?

‘அப்ப அந்த பன்னீர் செல்வம் இவ அம்மாவை விட்டுட்டுப் போனாரே…..அவங்களுக்கும்தான் கல்யாணம் நடந்திருந்துது’ இவள் மனதில் இப்படி ஒரு கேள்வி ஓடியது.

இறங்க எத்தனித்தவன் இவள் புறமாக திரும்பி “அப்ப மேரேஜுக்கு பிறகு டிவோர்ஸ் செய்றவங்கல்லாம்னு யோசிக்றியா….? அவங்க யாரும் தன் ஸ்பவ்ஸோட அம்மா குட் ஹெல்த்ல இருக்றப்பதான் டிவோர்ஸ் செய்யனும்னு உன்னை மாதிரி வெயிட் பண்றவங்க இல்ல… உன்ட்ட அன்பு இருக்குது….அதுவும் உன் ஹஸ்பண்ட் மேல…. மேரேஜ்ல இருக்ற லவ்….அ ரைட்லி ப்ளேஸ்ட் ஒன்….தட் லவ் ஹோல்ட்ஸ் அண்ட் ஹீல்ஸ்…..பட் நெவர் ஹர்ட்ஸ்….”

கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்திருந்தாள். மீண்டுமாய் மென்மையாய் அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன்….”மனச போட்டு குழப்பிகாத….நான் திரும்ப வர்றப்ப என்னை ரிசீவ் பண்ண நீ தான் வருவ….பை…” என்றுவிட்டு கதவை திறந்து இறங்கினான்.

“டேக் கேர் ஜோனத்…..ஆல் த பெஸ்ட்” மனதிற்குள் மட்டுமாய் சொல்லிக் கொண்டாள்.

“யூ டூ ஸ்வீட் ஹார்ட்…தேங்க்யூ பொண்டாட்டி” அவள் சொன்னது காதில் விழுந்தது போல் பதில் சொன்னவன் கிளம்பிவிட்டான்.

ரவு அரண் வீட்டில் தன்னறையில் படுத்திருந்த சங்கல்யாவுக்கு தூக்கம் வரவில்லை. ஜோனத்தையும் இவளையுமாக பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த உறவில் இவள் என்ன செய்ய வேண்டும்?

முதன் முதலில் அவனைப் பார்த்த அந்த நாள் ஞாபகம். அதற்கும் முன்பாகவே அவன் ஃபோடோஸைப் பார்த்திருக்கிறாள்….. ஏனோ முதல் முறை அவன் புகைப்படத்தை பார்க்கும் போதே அவன் ஏற்கனவே அறிமுகமானவன் என்பது போல் ஒரு உணர்வு வந்தது. பின்னாளில் அவன் அன்பரசியின் மகன் என தெரிய வந்த போது தன் அம்மாவின் சாயல் ஏதாவது அவனுக்கு இருக்கும் அதனால் அப்படி உணர்ந்திருப்பாளாயிருக்கும் என அவள் காரணப் படுத்திக் கொண்டது உண்டு.

ஆனாலும் முன்பு அவனைப் பற்றி நினைக்கும் போதே வரும் ஒருவித இனம் புரியா சிறு டென்ஷனுக்கு என்ன காரணமோ? அடுத்தும் வல்லராஜன் அரண் சுகா ப்ராஜக்டை இவளிடம் சொன்னதும் அவள் அரணை விட ஜோனத்தை எண்ணித்தான் மிரண்டாள். ஏனோ அவனை எளிதாய் ஹேண்டில் செய்ய முடியாது என்பது போல்….அவனிடம் அவள் மாட்டிக் கொள்வாள் என்பது போல்…..அவனிடம் அவளுக்கு பயம் உண்டு. எவனை சந்திக்க கூடாது என நினைத்தாளோ அவனிடமே கொண்டு நிறுத்தினார் அனவரதன்.

அவள் பயந்தது நடந்தே விட்டது. அவள் நினைத்த வகையில் இல்லை எனினும் அவனிடம் மாட்டிக் கொண்டாயிற்று…..அவனை கையாளவும் தெரியவில்லை….இதில் எதிர் பார்க்காத ஒரே விஷயம் அவளிடம் அவனும் மாட்டிக் கொண்டதுதான்……ஏனோ இந்த நினைவில் இதுவரை வராத புன்னகை உதடில் பிறக்க அவன் அணிவித்த அந்த செயினை தன் கழுத்தை தடவி தேடி எடுத்து,  தூக்கிப் பிடித்துப் பார்த்தாள்.

இவள் எண்ணம் இப்படி ஓடிக் கொண்டிருக்க இவளது அறைக் கதவு சத்தமின்றி மெல்ல திறக்கிறது. ஒரு மென் வெளிச்சம் உள்ளே பரவுகிறது. வெளியே லாஞ்சில் லைட் எரிகிறது போலும். தூங்குபவள் போல் அசையாமல் படுத்துக் கொண்டாள் இவள். அந்த மெல்லிய வெளிச்சத்திலும் உள்ளே எட்டிப் பார்ப்பது சுகவிதா என தெரிகிறது.

சுகா அரணுடன் தங்கள் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டதைப் பார்த்துவிட்டுதான் வந்திருந்தாள் இவள்.

சற்று நேரம் நின்று பார்த்து இவள் தூங்குவதை உறுதிப் படுத்திக் கொண்ட பின் திரும்பிச் சென்றாள் சுகவிதா….பகலில் மயக்கத்திலிருந்ததால் இரவில் கதவை உள்ளே பூட்டாதே என இவளிடம் சொல்லி இருந்ததும் சுகாதான்…..எதற்கு இவளைக் கண்காணிக்கவா? அவள் சென்ற சற்று நேரத்தில் இவள் மெல்ல வெளியே சென்று தேடினாள்….அரண் சுகா அறை பூட்டி இருந்தது….லைட்டும் ஆஃப்…..சுகாவை வெளியில் எங்கும் காணவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.