(Reading time: 40 - 79 minutes)

ன்னிப்பும் விளக்குமுமாய் ஒரு தொனி அவன் குரலில். இவளை கஷ்டபடுத்தி விட்டதாய் நினைக்கிறான்.

“ஐயோ நான் அப்டில்லாம் எதுவும் உங்களை …… நீங்க எதுவும் என்னை கஷ்ட படுத்திட்டதா நினச்சுடாதீங்கண்ணா……” தவிப்பு வந்திருந்தது இவள் முகத்தில். “ சாரி….இனி எதுனாலும் உங்கட்ட நேர்ல கேட்டுடுறேன்….ஜோனத் வழியா வரப் போய் தான உங்களுக்கு ரொம்ப பெருசா ஃபீல் ஆகுது…”

”இல்ல அப்டில்லாம் நினைக்கலை…. ப்ரச்சனைனதும் நீ அவன்ட்ட சொல்லனும்னு நினைக்கிறதுதான் இயல்பு…. பட் எதாவது எமேர்ஜென்சின்னா அவன்ட்ட பேச முடியுற வரைக்கும் வெயிட் பண்ணாம என்னை கூப்டனும் ஓகேவா…..அவன் தூரத்துல இருக்றான் பார்த்தியா…”

ஆமான்ன….கஷ்டம்னதும் அவன்ட்ட தான சொல்லனும்னு தோணுது…என ஒரு தாட் மைன்டை கிராஸ் செய்தாலும் எதிரிலிருக்கும் அரணிடம் தலையை ஆட்டி வைத்தாள்.

இன்னும் இவளைப் பார்த்துக் கொண்டு நின்றான் அவன். உன் ப்ரச்சனை என்ன என்கிறது அவன் பார்வை. ஆனால் அழுத்திக் கேட்டு அவளை கட்டாயப் படுத்தவும் அவனுக்கு விருப்பமில்லை எனத் தெரிகிறது. இவள் டிஸ்டர்ப்டாய் இருக்கிறாள் என்பது வரை அவனுக்கு தெரிகிறது தானே….மனதில் ஒரு டெம்ப்டேஷன். சுகா விஷயத்தை அரணிடம் சொன்னால் என்ன?

இதற்கு மேல் இவள் ஒருத்தியாய் விஷயத்தை கையாள முடியுமா? இவள் ஆதாரம் சேகரிக்கும் முன் சுகாவும் அனவரதனும் இன்னும் என்னவெல்லாம் செய்து வைப்பார்களோ? இவள் தப்பை கையும் களவுமாக பிடித்த போது கூட அரண் இவள் மீது கோபம் கொள்ளவில்லையே….. கண்டிப்பாய் ஹார்ஷாய் ரியாக்ட் செய்ய மாட்டான்….விஷயத்தை சொல்லியேவிட்டாள்.

இவள் பேசி முடிக்கும் வரை நிதானமாய் கேட்டிருந்தான் அரண்.

You might also like - Unakkaga mannil vanthen - A romantic comedy blended with fantasy... 

“லியா விதுவ எனக்கு ரொம்ப வருஷமா தெரியும்னு உனக்கு தெரியும்……அண்ட் அவ நல்ல ஹெல்த்ல இருக்றப்ப அவ கூட மனமொத்து வாழ்ந்திறுக்கேன்….அவள் கோபம் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்….மனசுல படுறத ஓபனா பேசுவா அவ….மீடியான்னு கூட பார்க்காம சொல்லி வைப்பா….ஆனா திட்டம் போட்டு முதுகுல குத்ற குணம் அவளுக்கு கிடையவே கிடையாது….என்னை லேப்ல வச்சு லாக் பண்ணிட்டு போனான்னு சொல்லிருக்கேன் தெரியுமா….அப்ப கூட என் கண்ணு முன்னால தான் செய்துட்டு போனா…..எல்லாமே டூ த ஃபேஸ் தான் அவளுக்கு….இதெல்லாம் நான் உனக்காக சொல்றேன்…..எனக்காக இல்ல….ஏன்னா எனக்கு நல்லாவே தெரியும் அவளுக்கு முழு அம்னீஷியான்னா கூட என்னை அவளால ஹர்ட் பண்ண முடியாதுன்னு….ஷீ இஸ் இன் லவ் வித் மீ…..”

இதற்கு என்ன சொல்லவென சங்கல்யாவுக்கு தெரியவில்லை.

“அடுத்து அனவரதன் அங்கிள்……” தொடர்ந்தான் அவன்.

“அவங்களும் அப்படியே தான்….க்ரோதத்தை மனசுல வச்சுகிட்டு முகத்துக்கு நேர சிரிக்க அவங்களுக்கு வரவே வராது….கோபமோ சந்தோஷமோ இன்ஸ்டென்ட்டா எக்‌ஸ்ப்ரெஸ் செய்வாங்க……நடிக்க முடியாது அவங்களால….அவங்களுக்கு ரொம்பவும் ஈகோ உண்டு தான்….அது கூட என் கை சுத்த கை…நான் என்ன தப்பு செய்திறுக்கேன்…ஏன் அடுத்தவனுக்கு அடங்கி போகனும்ன்ற செல்ஃப் ரைட்ஷியஸ்னஸ் பேஸ்ல வர்றது தான்…..இப்படி கிரிமினல் வேலைலாம் செய்துக்க மாட்டாங்க….என்ட்ட அங்கிள் நடந்துகிட்டத வச்சு அங்கிள யோசிக்காத லியாமா….அவங்களுக்கு அவங்க பொண்ணுனா பொசசிவ்….அவங்களோட ஆப்பிள் ஆஃப் த ஐ அவ….அதுல போய் நான் கை வச்ச மாதிரி ஆகிட்டு சிச்சுவேஷன்….முதல் இன்சிடென்ட்லயே நான் அவளை அடிக்கப் போய்ட்டேன்…..அது ஒன்னு மேல ஒன்னா பைல் அப் ஆகிட்டு…. அப்ப கூட எங்க வெட்டிங் வரைக்கும் அவள என்ட்ட இருந்து காப்பாத்த ட்ரைப் பண்ணிருப்பாங்களே தவிர….ப்ளான் பண்ணி என்னையோ என் ஃபாக்ட்ரியவோ அடிக்கனும்னுலாம் யோசிச்சது இல்லை..….. அதுக்கும் மேல விது என்னை விரும்புறேன்னு மீடியால சொன்ன பிறகு எங்களை ஒரு வகையிலும் அவங்க டிஸ்டர்ப் செய்ய ட்ரைப் பண்ணவே இல்லையே….எத்தனை தான் அவங்க ஈகோ ஹர்ட் ஆனாலும்  விது லைஃபை கெடுக்க அவங்களால முடியாது……இன்ஃபேக்ட் நான் அவளை ஏமாத்தி விட்டுட்டுப் போய்ட்டேன்னு அவங்க நினச்ச காலத்துல கூட எனக்கு எதிரா அவங்க ஒன்னுமே செய்தது இல்லையே…...எப்படியும் நான் அவ ஹஸ்பண்ட்ற எண்ணம் இருக்கும்…..இப்ப விதுவும் ஹயாவும் என் கூட இருக்காங்க…...இப்ப எதுக்கு அடிக்க போறாங்க….? அதுவும் அந்த ப்ராப்பர்டி எப்படினாலும் ஒரு நாள் ஹயாக்குள்ளதுன்றப்ப….  ”

அரணது அத்தனை கேள்வியும் நியாயமாய் தெரிந்தாலும்…..சங்கல்யாவிடம் இதற்கெல்லாம் பதில் இல்லை என்றாலும் சுகாவின் இன்றைய செயலுக்கும் விளக்கம் இதில் இல்லையே….

“ஆனா நீ சொல்றத வச்சு பார்க்கும் போது உள்ள யாரோ எதோ பெருசா ப்ளாட் பண்றாங்கன்னு தெரியுது…..அதை இன்வெஸ்டிகேட் செய்ய ஆள் அரேஞ்ச் செய்றேன்….வீட்டையும் இன்னுமா சேஃப் கார்ட் செய்ய செக்யூரிட்டி டைட் பண்றேன்……சுகாவோ நீயோ நைட் இனிமே வெளிய போக வேண்டாம்….உனக்கு இன்னும் ஏதாவது தெரிய வந்தா சொல்லுமா…..கேர்ஃபுல்லா இருந்துக்கோ…..தயவு செய்து நான் உன்னை நம்பலைனு நினைக்காதே ப்ளீஸ்…..”

“ஆனா என்னை அனவரதன் அங்கிள் ப்ளான் பண்ணிதானே இங்கே உள்ள அனுப்பினது…?”

“அம்னீஷியால இருக்ற சுகா அவ கரியர காலி செய்து தூக்கி வீசிட்டுப் போன என் கூட இப்ப சேஃபா இருக்காளா? அவ நிலை என்னனு தானே நேர்ல வந்து பார்க்க ஈகோ தடுத்ததால உன்னை அனுப்பி வச்சாங்களே தவிர உன்னை அனுப்புனதுல கூட வேற எந்த இன்டென்ஷனும் கிடையாது அங்கிள்க்கு….”

எது எப்படியோ அரண் சுகாவை நம்பும் விதம் இவளுக்குப் பிடிக்கிறது. அன்பு இத்தனை வலுவானதா? அனவரதனைக் கூட நம்பத் தயாராய் இருக்கும் அரண்….இவளையும் நம்பாமல் மனம் நோகச் செய்யவில்லை அவன்.

அவன் ஆள் வைத்து இன்வெஸ்டிகேட் செய்யட்டும்….இனி சுகாவையும் தனியாக எங்கும் எளிதில் அனுப்ப மாட்டான். ஆக சுகா நினைத்தாலும் புதிதாக எதையும் செய்து வைக்க முடியாது. அது போதும் இவளுக்கு. என்னதான் அரண் சொன்னாலும் ஆதாரம் இல்லாமல் இவள் கண்ணால் பார்த்து காதால் கேட்ட ஒன்றை முழுமையாய் பொய் என புறக்கணிக்க இவளுக்கு முடியாது.

மாலை மூன்று மணி அளவில் வல்லராஜனிடம் இன்ஃபார்ம் செய்துவிட்டு அவரை சந்திக்க கிளம்பினாள் சங்கல்யா. ஜோனத்தின் கார், துணை ஒரு ட்ரைவர்……இன்னுமொரு செக்யூரிடி கார்ட்.

“வாம்மா வா…பேக்கேஜ் பத்தி ப்ராப்ளம் இல்லனதும் உடனே வருவன்னு தெரியும்…” என எரிச்சல் படுத்திதான் வரவேற்றாரே தவிர இவளை ரெசிக்னேஷனைப் பத்தி பேசவே விடவில்லை வல்லராஜன்.

இவள் எகிறும் முன் “ அரண் க்ரூப்ஸ்  ஃபேக்டரி பாம்ப் ப்ளாஸ்ட் செய்தது சுகவிதாவும் அந்த அனவரதனும் சேர்ந்துதான்னு ஒரு சீக்ரெட் இன்ஃபோ கிடச்சிருக்கு….ஆனா அதுக்கு எவிடென்ஸ் எதுவும் கிடைக்கலை” என ஆரம்பித்து இவளது வானத்தையும் பூமியையும் அதிர்ச்சியால் அசைத்தார் எனில்

“அந்த எவிடென்ஸா சுகவிதா அனவரதனோட இந்த ப்ளான் அரண் வீட்ல தங்கி இருக்ற உனக்கு எதேச்சையா தெரிய வந்துச்சுன்னு ஒரு இன்டர்வியூ நம்ம சேனல்ல கொடுத்தன்னா உனக்கு 50 க்ரோர்ஸ் நான் தர்றேன்…” என தலையில் தீ கொளுத்திப் போட்டார்.

“வாட்????”

“50 க்ரோர்ஸ்னு சொல்றேன்…..” அத்தனை நம்பிக்கை அவர் குரலில் இவள் மறுக்க மாட்டாள் என. ஒரு காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் அது தான் பாதுகாப்பான வாழ்வை தரும் என இவள் நினைத்தது உண்டுதான். அது ஒரு வகையில் அவளுள் ஒரு வெறியாக இருந்தது என கூட சொல்லலாம். ஆனால் அது கடந்த காலம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.