(Reading time: 17 - 34 minutes)

ஹெலொ”

“ஹேய் அருள் எங்க இருக்க ?”

“நீங்க யாருமா ?”

“நீங்க ?”

“ நீங்க  இப்போவே ஹாஸ்பிட்டலுக்கு வாங்க ?”

“ஹாஸ்ப்பிட்டலா ? ஏன் என்னாச்சு ?”

நடந்ததை சுருக்கமாய் கூறி அவளை மருத்துவமனைக்கு வர கூறினார்,அந்த தாதி… “வானதி..என்னம்மா எதோ ஹாஸ்பிட்டல்ன்னு சொன்ன ? என்னாச்சு ?”

“ஒ….ஒன்னுமில்லம்மா….நான் வெளில போயிட்டு வரேன் வந்து சொல்லுறேன்”

You might also like - Ainthu... A horror genre story to scare you...

“வானதி,என்னவோ  சரி இல்லைன்னு தெரியுது…சொல்லு என பிரச்சனை ?”

“ அப்படியெல்லாம் ஒன்னுமில்ல மா… நீ எதுக்கு இப்போ பதருர?பாரு உன்னால அப்பாவும் பயப்படுறார்…யாரோ ஒரு பையனுக்கு எக்சிடன்ட்…ரத்தம் கொடுக்குறதுக்காக அருள் போயிருக்கார்… ப்லட் தந்துகிட்டே அவர்  எப்படி பேசுவார் ?அதான் நர்ஸ் பேசினாங்க …நானே உன் மருமகனை கூட்டிட்டு வரேன் சரியா ?”

“ நீ சொல்லுறது நிஜம்தானே?”

“ பொய் சொல்லி நான் என்னம்மா பண்ணபோறேன் ?”

“சரி,பூஜை  அறையிலே விளக்கு ஏத்தி வெச்சிட்டு போடா…எனக்கு மனசே ஆறல..” என்றார் அவளது தாயார்…வானதிக்குமே அது சரியென படபூஜை அறைக்கு விரைந்தாள்… தடதட துடித்த அவள்  நெஞ்சத்தை  உரசியது, அவன்  அணிவித்த  சங்கிலி..

“ நான் உன்னோடு தான் இருக்கேன்னு இந்த சங்கிலி உனக்கு உணார்த்தும் நதி “ சற்றுமுன் அவன் சொன்ன வார்த்தை  நினைவில் வந்தது…

“ நீ  இருக்க அருள்… நீ என்னோடுதான் இருக்க.. அவ்வளவு சீக்கிரம்விதியால  கூட உன்னை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது !உன் உயிர் போகனும்னு  விதி  இருந்தா, அதுக்கு முன்னாடி என் உயிர் போயாகனும் “ என்று மனதிற்குள் உறுதியாய்  எண்ணியப்படி விளக்கேற்றினாள் வானதி…

ங்கு அருளும்  அங்கு சாஹித்யாவும் கிட்டதட்ட  ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டனர்.. சாஹித்யாவை சிகிச்சை அறைக்குள்  அனுப்பி  விட்டு அங்கிருந்த நாற்காலியில் பொத்தென அமர்ந்தான் சந்தோஷ்… அதே போல  அருளும் சிகிச்சை அறைக்குள்  நுழைவதற்குள் அங்கு வந்திருந்தாள்வானதி… அவனுடைய செல்ஃபோன்,  கைகடிகாரம் என அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டவளின் கண்களில் அந்த புடவை பட்டது… என்ன நினைத்தாளோ சட்டென அங்கிருந்த நர்சிடம்,” ப்ளீஸ் சிஸ்டர், இது மட்டும்  எதாவது லாக்கரில், வெச்சுருங்க…அவன் குணமாகி வருவான்..அப்போதான் இதை நான் தொடுவேன் “என்றாள்… தனியாளாய் அங்கு நிற்பவளிடம் எதிர்த்து பேச மனம் வராமல் அமைதியாய் புடவையை எடுத்து கொண்டு நகர்ந்தார் அவர்..

என்ன செய்வது என்று திட்டம் போட ஆரம்பித்தான் சந்தோஷ்.. கொஞ்சம் மனதை திடப்படுத்தி கொண்டு அருளை ஃபொனில் அழைத்தான்..

“ஹலொ”

“ஹலொ வானதியா?”

“ம்ம்ம் ஆமாசொல்லுங்க  சந்தோஷ்”

“அ….அருள்பக்கத்துல  இருக்கானா ?”

“ அருள் இல்லையே…ஃபோனை என்  கிட்ட கொடுத்துட்டு இப்போதான் பக்கதுல கடைக்கு போனாரு…என்ன விஷயம்”

“ஒ…..ஒன்னுமில்ல சாஹித்யா,ஃபோன் பேட்டரி டெட் ஆச்சு…அவ என்னோடு தான் இருக்கா…சப்போஸ் அருளோ இல்ல,யாரும் தேடினா,  எனக்கு கால் பண்ண் சொல்லுங்களேன்”

“ம்ம்ம்ம் சரி….சந்தோஷ்”

“ம்ம்ம்ம்?”

“ஆர் யூ ஒகே?”

“யா…. நீங்க ?”

“நானும் தான் … “

“சரி ஒகே…எதும் பிரச்சனைன்னா ஃபோன் பண்ணுங்க “ காரணம் சொல்லாமலெ அவன் அப்படி சொல்ல,அவளும்மறுத்து  பேசும் நிலையில் இல்லாமல் “சரி “ என்றாள்…

வானதிக்கு சாஹித்யாவின் நிலை தெரியாமல் போனது என்னவோ உண்மைதான் …ஆனால், சந்தோஷுக்கு அப்படி அல்ல… அவன் ஃபொனை வைத்த சில நிமிடங்களிலேயே அவனுக்கு  அருளின் நிலை தெரிந்து விட்டது… அழைத்து உண்மையை சொன்னவன் அவனது நண்பன் சைதன்யன்..

“ மச்சான்”

“சொல்லு தயா…”

“ ஒரு பேட் நியூஸ் டா…”

“ம்ம்ம்ம்ம் என ?”

“அருளுக்கு…அருளுக்கு எக்சிடண்ட் டா”

“வாட்????? என்னடா சொல்லுற?ஒருதருக்கு மூனு பேரை அனுப்பினேனே? என்னத்தைடா பண்ணிங்க ?”

“ இல்ல சந்தோஷ்… நாங்க அவனை காபாற்ற முயற்சி பண்ணுறதுக்குள்…”

“மண்ணாங்கட்டி..! இப்போ அவன் எங்க இருக்கான் ? எப்படி இருக்கான் ? வானதிக்கு இது தெரியாதா ?”

“ நாங்கதான் டா ஆம்புலன்ச் க்கு கூப்பிட்டோம்,இங்கு வந்து பார்த்தா வானதியும் வந்துட்டாங்க ..”

“வானதிக்கு தெரியுமா ?”

“ஆமாடா “

“ சரி நீ ஹாஸ்பிட்டல்ல தானே இருக்க ? வானதி எங்க ?”

“ஆமாடா,இங்கத்தான் இருக்காங்க….நான் கொஞ்சம் தள்ளி நின்னு வாட்ச் பண்ணிட்டு  தான் இருக்கேன்”

“ஒன்னும் வேணாம்…நீ யாருன்னு அவளுக்கு சொல்லிடு…ஃபோனை  அவகிட்ட கொடு !”

“ டேய் ஹரி ! “

“ஆமா, ஹரிஹரனாய் தான் சொல்லுறேன்…  இதுக்கு மேல,மறைக்கவோ  வைட் பண்ணவோ எதுவும் கிடையாது…இங்க சாஹித்யாவுக்கு  விபத்தாச்சு டா … நான் இனிமேலும் பொறுமையா இருக்க முடியாது…நம்ம ஆபரெஷனுக்கு எண்டு வர போகுது”

“ஆர் யூ சுவர் ஹரி ? “

“ டூ வாட் ஐ சே” உருமினான் சந்தோஷ் என்று அழைப்பட்ட ஹரிஹரன்.. “யெஸ் சார் “ என்று அடுத்த நொடி  மரியாதைக்கு தாவிய சைதன்யன்  வானதியின் முன்னிலையில் நின்றான்… தன் முன்னே நின்ற  புதியவனை கேள்வியாய் பார்த்தாள் நதி..

“ ஐ எம் அசிஸ்டண்ட் கமிஷ்னர் சைந்தன்யன் ! மிஸ்டர்  அருளுக்கும் உங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்குறது என் டியூட்டி … உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் நீங்க எங்க கிட்ட கேட்கலாம்… சார்  உங்ககிட்ட பேசனுமாம் “ என்று ஃபோனை நீட்ட, குழப்பத்துடன் ஃபோனை வாங்கினாள் வானதி..

“வானதி நான் சந்தோஷ்”

“சந்தோஷ்…. உங்களுக்கு அருள் பத்தி ???? இவங்க யாரு “ குழப்பமாய் வினவினாள்  வானதி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.