(Reading time: 17 - 34 minutes)

ங்க எல்லாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு வானதி..ஆனா,அதுக்கு முன்னாடி ஒரு பெரிய வேலை இருக்கு எனக்கு…. தயா,நம்பிக்கையானவன்..எல்லாத்தையும்  அவனேசொல்லுவான்… இப்போதைக்கு வீட்டுல யாருக்கும் இது தெரிய வேணாம்…சத்யாவுக்கும் இங்க சின்ன அக்சிடண்ட்….”

“என்ன சொல்லுறிங்க “

“பயப்பட வேணாம்,என் சஹிக்கு ஒன்னும் ஆகாது…உங்க அருளுக்கும் கூட யெதும் ஆகாது… எதுவா இருந்தாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க…இப்போதைக்கு என்னாலபேச முடியது… டெக் கேர்”  என்று ஃஃபோனை வைத்தான் ஹரி ! வானதியின் பதிலுக்காக காத்திருந்தான் சைதன்யன் .. அவன் பார்வையின் மூலமே அதை புரிந்து கொண்டவள்

" ஐ எம் சாரி மிஸ்டர் சைதன்யன் .. இப்போ என் மனசு முழுக்க அருள் நினைப்பா தான் இருக்கு .. உங்ககிட்ட எந்த உண்மையையும் கேட்டு தெரிஞ்சுக்குற நிலைல நான் இல்லை .. கொஞ்சம் நேரம் எனக்கு டைம் கொடுங்க " என்றாள் ..

" சரிங்க சிஷ்டர் ..தைரியமா இருங்க " என்று ஒரு மரியாதைக்கு புன்னகைத்தவன் கொஞ்சம் தூரத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான் .. வானதியும்  அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள் .." அருள் உனக்கு ஒன்னும் ஆகக்கூடாது " என்றபடி அவன் அணிவித்த சங்கிலியை இறுக்கமாய்  பிடித்து கொண்டாள் ..

You might also like - Nesam niram maaruma.. Cute family drama

ங்கு சாஹித்யாவுக்கு சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது .. டாக்டரிடம் பேசிவிட்டு உடனே அங்கிருந்து சென்றான் சந்தோஷ் ... கால்கள் புயல் போல நடைபோட அவன் கை விரைகள், அந்த எண்ணை  அழைத்து இருந்தது ..

" சார் !"

" சொல்லுங்க ஹரி "

" சார் , நம்ம ஆபரேஷன் பத்தி எல்லா டீடைலும்  உங்களுக்கு அனுப்பிட்டேன் .."

" எஸ் பார்த்தேன் .. சம்பந்தப்படவங்களை  எப்போ அர்ரஸ்ட் பண்ண போறீங்க ?"

" இப்போவே சார் "

" இப்போவேவா ?"

" எஸ் "

அவனது திறமை மீதும் , முடிவின் மீதும் நம்பிக்கை கொண்ட உயர் அதிகாரி அவர் .. அந்த நம்பிக்கையில்

" ஓகே  யங்  மேன் .. கோ அஹெட் ... ஆல் தி பெஸ்ட் " என்றார் ...

" தேங்க்ஸ் சார் " என்றபடி போனை வைத்தவன் அடுத்து சுபாஷை அழைத்தான் ..

" டேய் அண்ணா!"

" சந்தோஷ் ஆயுசு நூறு உனக்கு ..இப்போதான் கால் பண்ணனும நினைச்சேன் .. சாஹித்யாவுக்கு போன் பண்ணேன் எடுக்கவே இல்லையே.. உன் அண்ணி பேசணும்னு சொல்லுறா டா "

" அதுக்கு தான் போன பண்ணேன் .. சத்யா போன் என்கிட்ட தான் இருக்கு"

" டேய் கல்யாணத்துக்கு முன்னாடியே அளவுக்கு மீறி மீட் பண்ணிட்டு இருக்க டா நீ " என்று கேலி செய்தவன் தம்பியின் குரலில் இருந்தஇறுக்கத்தை கவனிக்கவே இல்லை ..

" சுபாஷ் .. ஒரு முக்கியமான விஷயம் கேட்கணும்":

" ஹே சொல்லுடா ..என்ன விஷயம் ?"

" விக்ரம் விஷயத்துல என்ன முடிவு எடுத்து இருக்க ?"

" டேய் சந்தோஷ் .. என்ன விஷயம் டா ?"

" நான் கேட்குற கெள்விக்கி நீ பதில் சொல்லு !" என்றான் சந்தோஷ் .. அருகில் அமைதியாய் இருந்த மனைவியை பார்த்தான் சுபாஷ் .. அவளுக்கு தெரியாமல் விக்ரமை பழி வாங்க வேண்டும் என்று அவன் நினைத்தது என்னவோ உண்மைதான் .. ஆனால் , தாய்மை நிரம்பிய மனைவி அருகில் இருக்கும்போது எந்த கணவனின் மனதில் தான் தேவை இல்லாத கோவமும் குரோதமும் இருக்கும் ? அதனாலேயே விக்ரம் விஷயத்தில் கொஞ்சம் அமைதியாய் இருந்தான் அவன் .. மேலும் , இதனை பற்றி அவன் சந்தோஷிடம் ஆலோசித்தது இல்லை .. ஆனால், சந்தோஷ் அவ்வப்போது தன்னை கவனிப்பதையும் அவன் உணராமல் இருந்தது இல்லை .. நேரடியாய் அவன் எந்த கேள்வியும் கேட்காததால் சுபாஷும் அமைதியாய் இருந்தான் ..ஆனால் இன்றோ வழக்கத்திற்கு மாறாய் கேள்வி கேட்கும் தம்பி  அவனை ஆச்சர்யபடுத்தினான் என்பதுதானா உண்மை ..

" ரெட் கலர் பைல் ஆ ? இரு பார்க்குறேன் டா ? " என்று சம்பந்தம் இல்லாமல் பேசியவன் சைந்தவியிடம் திரும்பி , " ஏதோ பைல் தேடுறான் உன் மச்சினன் ..இரு நான் அவன் ரூம்ல இருக்கான்னு பார்க்கறேன் ..பத்திரமா இரு செல்லம் " என்றபடி அங்கிருந்து சென்றான் ..

அறைக்குள் சென்று கதவை தாளிட்டுவிட்டு சந்தோஷிடம் பேசினான் சுபாஷ் ..

" டேய் என்னடா விஷயம் ? உன் குரலே சரி இல்லையே "

" அண்ணா , விக்ரம் இல்லீகலா நிறைய தப்பு பண்ணுறான்னு உனக்கு தெரியும் .. அதை வெச்சு நீயும் வெற்றியும்  அவனை பிடிக்கணும்னு திட்டம் போட்டதும் எனக்கு தெரியும் "

" சந்தோஷ்  இதெல்லாம் உனக்கு ?"

" எப்படி தெரியும்னு மக்கு மாதிரி கேள்வி கேட்காத .. ! சரி அதைவிடு விக்ரம் விஷயத்துல ஏதாவது முடிவு எடுத்திங்களா  ரெண்டு பேரும்  ?"

" டேய் ...அது வந்து ... குழந்தை பிறந்ததுக்கு அப்பறம் ..."

"குட் ... ஜஸ்ட் தெளிவு படுத்த தான் கேட்டேன் பாய் .."

" டேய் என்னடா நடக்குது ?"

" என்  ப்ராஜெக்ட் முடிஞ்சு போச்சு அண்ணா .. இன்னைக்கே  என்னை பத்தி எல்லாருக்கும் சொல்ல வேண்டியது ஆகிரும் .. 3 மணிக்கு செய்தி பாரு .. உனக்கொரு குட் நியுஸ் " என்றவன் போனை வைத்தான் .. அடுத்த நிமிடங்களில் அவசர மீட்டிங் என்ற பெயரில் , ஹரிஹரன் (சந்தோஷ்)இன்  மொத்த குழுவினரும் அங்கு நின்றனர் .. தனது திட்டத்தை ஒப்பித்தான் சந்தோஷ் ..

"  எதுக்கு ஹரி இப்போவே மீடியாவை கூப்பிடனும் சொல்லுற ?" - என்றான் அவனது நண்பன் தேவகிபாலன் ..

" நம்ம டார்கெட் பண்ணுற எல்லாருமே ரொம்ப பெரும்புள்ளி பாலா .. அதை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை .. சோ அவங்க எந்த விதத்திலும் தப்பிக்க கூடாது "

"சரி, இதுல சம்பந்தபட்டு இருக்குற சிலர் ரொம்ப யங் ! எல்லாம் காலேஜ் பைனல் யெர் படிக்கிறவங்க அண்ட் ஜஸ்ட் காலேஜ் முடிச்சவங்க .. அவங்களை என்ன பண்ண போற ஹரி ?" சந்தோஷின் முகத்தில் கோபம் கொப்பளித்தது .. பற்களை கடித்தவன்

" சம்பந்தப்பட்டவங்களை எல்லாரையும் அர்ரஸ்ட் பண்ணனும்   சஞ்சீவ் ? அதுவும் நானே பண்ணுவேன் " என்றான்  சந்தோஷ் .. அதற்குப்பின் நேரமில்லாமல் பம்பரமாய் வேலையில்  மூழ்கினர் அனைவரும் .. சரியாய் மூன்று மணிக்கு தொலைகாட்சியை திறந்தான் சுபாஷ் .. அவன் மார்பில் சாய்ந்து அப்படியே உறங்கி போயிருந்தாள்  சைந்தவி ..

அயல்நாட்டில் இருந்து இங்கு போதைப்பொருள் கடத்தி ரகசியமாய் விற்பனை செய்த முக்கிய தொழில் அதிபர்கள் கைது ! என தலைப்பு செய்தி வாசிக்கபட்டது .. வெளிநாட்டில் இருந்து கள்ளகடத்தலின் மூலம் , போதைபொருட்கள் கடத்தப்பட்டதும் , விற்பனையானதும்  முக்கிய காவல் துறை , உளவு துறை , மற்றும் போதைபொருள் ஒழிப்புத்துறையால்  கண்டுபிடிக்கப்பட்டது .. சுமார் 3 வருடங்களாக , தகுந்த ஆதாரங்களும் , சாட்சிகளும் திரட்டப்பட்டு  இந்த திடீர் கைது நிகழ்ந்து உள்ளது .. மேலும் ,காலேஜ் மாணவர்களை மூளைசலவை செய்தும், இப்போதைப் பொருட்கள்  விற்பனையாக்க  பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது ..

கைது செய்யபட்டவர்களில்  விக்ரமும் ஒருவனாய் இருக்க , தனது தம்பியின் செயலை எண்ணி பெருமை பட்டு கொண்டான்  சுபாஷ் .. அதே நேரம் சந்தோஷின் களிப்போ ஷீலா , மற்றும் அகில் கைதானதில் தான் .. ஆம், அவர்களும் இதே குற்றத்திற்காக  கைது செய்யபட்டு இருந்தனர் .. காவல்துறையினரை  ஒருவர் பேட்டி  எடுக்கவும் , ஏ  சி பி தேவகிபாலன், சந்தோஷை பற்றி கூறினான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.