(Reading time: 17 - 34 minutes)

" ந்த திட்டம் மொத்தம் போதைப்பொருள்ஒழிப்பு துறையை சேர்ந்த மிஸ்டர் ஹரிஹரனுடையது தான் .. உளவுதுறை அதிகாரிகளின் உதவியோடும் , ஹரிஹரன் சாருடைய திட்டதொடும்தான் இதை நாங்க சாத்தியப்படுத்தினோம் .. " அனைவரின் கேள்விகளும் சந்தோஷின் பக்கம் திரும்ப , கம்பீரமான குரலில் பேசினான்  அவன் ..

" எல்லாரையும் மாதிரி தான் நானும் படிப்பு முடிஞ்சதும் , வெளிநாட்டுல படிச்சிட்டு அங்கேயே செட்டல் ஆகணும்னு நினைச்சு அங்க போனேன் .. அப்படி நான் போன நாட்டுல , இதே மாதிரி போதைபொருள் கடத்தலுக்காக  நடந்த  கலவரமும் , அதன் பின்னணியும் தான் என்னை சிந்திக்க வெச்சது ..இதை பற்றி அதிகம் தெரிஞ்சுக்கணும்னு நான் முடிவெடுத்தது தான என்னுடைய வாழ்க்கை குறிக்கோளையே மாத்தினது .. ரொம்ப வெளிப்படையா தெரியலைன்னாலும் , போதைபொருளுக்கு  அடிமையாகி சீரழியரவங்க எண்ணிக்கை நம்ம நாட்டுல அதிகம் ஆகிக்கிட்டே போகுது .. மனஉளைச்சல் , தோல்வி , உடல் எடையை குறைக்கிறது , தன்னுடைய சக்திக்கு மீறி  எக்டிவ் ஆ இருக்கணும் இப்படி பல காரணங்களினால் போதைப்பொருள் நம்ம இளைஞர்கள் பாதிக்கபடுரத என்னால உணர முடிஞ்சது .. அதற்காகத்தான் இந்த திட்டம் !  "

" போன தலைமுறையை விட நாம இன்னும் புத்திசாலியா இருக்கோம் , நம்ம சிந்திக்கும் ஆற்றல் அதிகமாய் இருக்கு , இப்படி பல வாய்ப்புகள் இருக்கும்போது அதை சரியான பாதையில கொண்டு போகவேண்டிய பொறுப்பு நம்ம எல்லாருகிட்டயும் இருக்கு .. நன்றி " ...இத்தனை நாட்கள் போட்ட திட்டம் வென்றுவிட்ட களிப்பு கொஞ்சமும் இல்லாமல் காரில் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தான்  சந்தோஷ் .. அதற்குள் , அவனை டிவியில் பார்த்த அர்ஜுன் , ரவிராஜ் , சுமி , சுஜா நால்வரும் அவன் வீட்டை தொடர்பு கொண்டனர் ..

You might also like - Vasantha bairavi... A neat family story...

ருத்துவமனை !

இரண்டு நாட்கள் கடந்திருந்தது !  தனக்கு தெரிந்த நண்பர்களின் மூலம் , அருளையும் அதே ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தான் சந்தோஷ் .. மொத்த குடும்பமும் கண்ணீரில் இருந்தது .. சந்தோஷிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் , அவர்களது குடும்பத்தின் இரு கண்களுமே கண் மூடி இருக்க, யாருக்கும் கேள்வி கேட்க மனமில்லை ..

உண்மை அனைத்தும் தெரிந்தவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இல்லை  மயக்கத்தில் இருந்தாள் ... பிறக்கும்போது அவனுக்கு நண்பனாய் அவதரித்தவன் போல , அருளும் அவளைப்போலவே அதே மயக்க நிலையில் இருந்தான் .. இருவருமே கண்விழிக்க வேண்டும் என்று  மொத்த குடும்பமும் கண்ணீருடன் அமர்ந்து இருந்தனர் ..

அங்கு இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான் சந்தோஷ் ..

" சஹி .. என் கண்மணி .. ப்ளீஸ் டீ .. என்னை விட்டுடடு  போகாதே ... உனக்காக நான் இங்க தவியா தவிக்கிறேன் உனக்கு புரியலையா ? எங்க கண்ணீர் உனக்கு புரியலையா டீ ? உன் நண்பன் மட்டும் போதும்னு நினைச்சு அவனை கூட்டிகிட்டு தூரமா போகாதே டா .. ஒத்துக்குறேன் , உங்க நட்பு தான் எல்லாத்துலயும் சிறந்தது .. அதை நீ இப்படி நிறுபிக்காதே  கண்மணி .. அருளை கூட்டிட்டு நீயும் வந்திடு டா " சூடான கண்ணீர் அவன் கன்னங்களில் இறங்கியது ...

" டேய் ஹரி !" என்றபடி அவன் தோளில்  கை வைத்தான் சைதன்யன் ..

" .."

"வீட்டுக்கு போடா ... "

" சாப்டாம , குளிக்காம , இப்படியா இருப்ப நீ  ? சிஸ்டர் கண்ணு முழிச்சு நீ இருக்குற கோலத்தை பார்த்தா பயந்துருவாங்க டா ... "

"வேணாம்தயா "

" சொன்ன பேச்சை கேளு  டா .. சுபாஷ் வேற புலம்பிட்டே  இருக்கார் .. சைந்தவி, சாஹித்யாவின் நிலமைய பார்க்க கூடாதுன்னு நீங்க அவங்களை வர வேணாம்னு சொல்லிட்டிங்க ... அட்லீஸ்ட் அவங்களை  போயி பார்த்துட்டு வா  .. பயப்படுறாங்க டா .. ப்ளீஸ் .. உன் அண்ணிக்காக போ .. " என்றான் சைந்தன்யன் ..

சந்தோஷுக்குமே  அது சரியென்று தோன்ற , வீட்டிற்கு கிளம்பினான் .. அவன் கார் முன்னேறி செல்ல , அவனது நினைவுகளோ , மூன்று வருடங்களை பின்னோக்கி சென்றது !

தவம் தொடரும்

Episode # 21

Episode # 23

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.